திங்கள், 12 மே, 2025

6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம்.

6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம்

ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் விஜயபானு தலைமை வகித்தார். கூட்டமைப்பின்  செயலாளர் பாஸ்கர் மற்றும் கொளத்தூர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கிரஷர் உரிமையாளர்கள் கட்டுமான தொழிலை சீரழிக்கும் வகையில் அநியாயமாக உயர்த்தியுல்ல எம்.சாண்ட், பி. சாண்ட்,  ஜல்லி கற்கள் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், கல்குவாரிகளை அரசுடைமையாக்கவும் பொது மக்களுக்கு தரமான கல்குவாரி பொருட்கள் நியாயமான விளைவில் கிடைத்திடவும் அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆரம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, சேலம் பெஸ்ட் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன், ஆத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், CREDAI சேலம், CRIC கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு, சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் நீர்வள ஆதாரத்துறை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம், சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களும் நலச்சங்கம், சேலம் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் சங்கம், சேலம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் மற்றும் சேலம் கட்டிட மேஸ்திரிகள் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 11 மே, 2025

கொளுத்தும் கோடை வெயில் : ஈரோட்டில் நேற்று 104.36 டிகிரி வெயில் பதிவு

கொளுத்தும் கோடை வெயில் : ஈரோட்டில் நேற்று 104.36 டிகிரி வெயில் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் துவக்கத்தில் இருந்து வெயில் கொளுத்தியது. அதைத் தொடர்ந்து, வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றின் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை திசை மாறியதால் கடந்த சில நாட்களாக காலை முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 103.28 டிகிரியாக இருந்த வெயில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 104.36 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்தது. இந்தாண்டு கோடை வெயிலில் இதுவே அதிகபட்ச வெயிலாகும்.

தொடர்ந்து, நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.13) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.13) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சிறுவலூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுவலூர் மின்பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, மந்திரிபாளையம், சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், நெசவாளர் காலனி மற்றும் மடத்துப்பாளையம், 
சேலம் குகை ஸ்ரீ அம்பலவாணர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம் குகை ஸ்ரீ அம்பலவாணர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் குகை ஸ்ரீ அம்பலவாணர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். 

குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சித்திரை 11ஆம் தேதி ஆன இன்று பிற்பகல் 1 10 மணி அளவில் பயிற்சி அடைந்தார். இதனை ஒட்டி சேலம் குகை லைன் ரோடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பலவாணர் திருக்கோவில் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வேத விற்பனர்கள் புடை சூழ சிறப்பு யாகம் இன்று காலை 10:30 மணி அளவில் துவங்கியது. 12:30 மணிக்கு குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு குரு பெயர்ச்சி நடைபெற்ற காலகட்டமான 1 10 மணி அளவில் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றன.
இந்த சிறப்பு யாக பூஜை மற்றும் குரு பெயர்ச்சி பூஜையில், திமுக பிரமுகர் அறிவு என்கின்ற அறிவழகன் உட்பட சேலம் குகை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது ராசிகளுக்கு சிறப்பு பிரார்த்தனைகளையும் மேற்கொண்டு குருபகவானை வழிபட்டு சென்றனர். இந்த பூஜைகள் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டன. திருக்கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா சௌந்தரராஜன் மற்றும் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் குருக்கள்  சந்திரசேகர் உள்ளிட்டோர் சிறப்பு யாக பூஜைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

சனி, 10 மே, 2025

ஈரோடு மாவட்டத்தில் 70 கிராம ஊராட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் 70 கிராம ஊராட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 70 கிராம ஊராட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கவுள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3ம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரக பகுதிகளில் 15 அரசுத்துறைகளை சேர்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 70 கிராம ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 70 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்கள் வரும் மே 13ம் தேதி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 29ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பவானி அருகே பாரில் பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் 2 பேர் கைது!

பவானி அருகே பாரில் பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் 2 பேர் கைது!

பவானி அருகே பாரில் அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மூலப்பாளையம் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 49). இவர் பவானி லட்சுமிநகர் பகுதியில் ஓட்டல் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார் (மதுக்கூடம்) நடத்தி வருகிறார். 
இந்த நிலையில் இவர் சித்தோடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த 7ம் தேதி பாருக்கு போன் செய்த ஒருவர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவை சேர்ந்த சாதிக் பாஷா (வயது 39) என கூறினார்.

நாற்காலி பத்திரிக்கை திண்டுக்கல் மாவட்ட நிருபர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மடத்துக்குளம் சட்டமன்ற பொறுப்பாளராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, பாரில் அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்து வருவது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.3 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டினார்.

மேலும், தாராபுரம் அருகே உள்ள புஞ்சைதலையூர் கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 37) திருப்பூர் கிழக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயலாளராக உள்ளார். அவரிடம் பணத்தை கொடுத்துவிடுமாறு கூறினார்.

பின்னர், மாலை நேரத்தில் மீண்டும் வாட்ஸ்அப் அழைப்பில் வந்து பணம் கேட்டு மிரட்டினார் என்று அந்த புகாரில் அவர் கூறி இருந்தார். அதன்பேரில் பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு ரத்தினகுமார் ஆலோசனையின் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் தெரிவித்த முகவரிக்கு சென்ற போலீசார், சாதிக்பாட்ஷா, சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோபு என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் பெயிண்ட் லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திரா மாநிலம் விஜயநகரில் இருந்து மதுரைக்கு பெயிண்ட் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரிரநாயகிபுரத்தை சேர்ந்த சையது ஷேக் முகைதீன் (வயது 50) என்பவர் ஓட்டினார். கிளீனராக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெடுவாசல் கீழ் பாதியை சேர்ந்த காளிதாசன் (34) என்பவர் இருந்தார். 

இந்த நிலையில், லாரி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் இன்று (மே.11) காலை வந்து கொண்டிருந்தது. அப்போது, வரட்டுப்பள்ளம் அணை காட்சி முனை பகுதி அருகே வந்த போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து இடது புறமாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர், கிளீனர் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.