புதன், 16 ஜூலை, 2025

தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி 350 பயனாளிகளுக்கு தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்த ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழுவினர்.

தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி 350 பயனாளிகளுக்கு தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்த ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழுவினர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி 350 பயனாளிகளுக்கு  தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்த ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழுவினர். 

தமிழ் மாதங்களில் அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. ஆடி முதல் நாள் அன்று இந்துக்கள் அனைவரும் தேங்காய் சுட்டு இறைவனுக்கு படைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி ஆடி முதல் நாளான இன்று தேங்காய் சுடும் பண்டிகை சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் கலை கட்டியது. இதனிடையே சேலம் ஜான்சன் நகர் ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழுவின் சார்பாக ஆண்டுதோறும் ஆடி முதல் நாள் அன்று தேங்காய் சுடுவதற்கு மூலப்பொருட்களான தேங்காய் மற்றும் தேங்காய் குச்சி இது தவிர தேங்காய் உள்ளே செலுத்தும் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவது வழக்கம். அதன்படி ஐந்தாம் ஆண்டு நிகழ்வாக சேலம் ஜான்சன் நகரில் உள்ள நண்பர்கள் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தலைவர் தேவதாஸ் முன்னிலையில் செயலாளர் சண்முகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு 350 பயனாளிகளுக்கு தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்ததோடு, ஆடி மாத வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் ஏழுமலை, போத்தா, தமிழ்மணி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆடி முதல் நாளையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலையங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஆடிபெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தில் ஆடி-1, ஆடி-18, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என அடுத்தடுத்து விஷேசங்கள் வரும். இதுபோன்ற நாட்களில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஆடி-1 என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆளையங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக சேலத்தில் உள்ள 8 பட்டிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும், சேலத்தில் பிரசித்திபெற்ற காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அம்மனுக்கு உகந்த மாதம் என்ற ஐதீகம் உள்ளதால் இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாட்டு சென்றனர். வரும் 22-ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் ஆடிபெருவிழா தொடங்க உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகல கொண்டாட்டம். திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் குடும்பத்தாருடன் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்.

ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகல கொண்டாட்டம். திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் குடும்பத்தாருடன் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்.

சேலம்,
S.K.சுரேஷ்பாபு.

ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகல கொண்டாட்டம். திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் குடும்பத்தாருடன் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்.

ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் திருவிழா சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. அதற்மத்துக்கும், தற்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் முதல் தேதி தொடங்கி  18 நாட்கள் நடைபெற்று ‘‘ஆடி-  18 அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி முதல் நாள்  மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள்.இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஆண்டாண்டு காலமாக அந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகருமான தெய்வலிங்கம் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுடன் தேங்காய் சுட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 
இதேபோல  அரிசிபாளையம், கோட்டை அண்ணா நகர், அம்மாபேட்டை,சாமிநாத புரம், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இன்று  தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகளின் உற்சாகத்துடன் வீடுகள் தோறும் கொண்டாடப்பட்டது. துளையிட்ட தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் அந்த தேங்காயை சொருகுவார்கள். பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி,அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவர். ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின் அதை அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த கலவை உணவை உற்றார், உறவினர்களுடன் உண்டு மகிழ்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. சிலர் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு முன்பு படைத்து, பூஜைகள் செய்துவிட்டு சாப்பிடுவார்கள்.
இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும். ருசி பார்த்தவர்கள் இதனை உணர்வார்கள்.

14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி. முதன்முறையாக சேலம் மாவட்ட அணியினர் முதல் பரிசை வென்று சாதனை.

2025-2026 ஆம் ஆண்டிற்கான 14 வயதுக்குட்பட்ட மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் 
கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன. இதன் இறுதிப்
போட்டியில் சேலம் மாவட்ட அணியும் காஞ்சிபுரம் மாவட்ட அணியும் மோதின. சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேலம் மாவட்ட அணி முதன் முதலாக கோப்பையை வென்றது. முதலில் விளையாடிய சேலம் மாவட்ட அணி 1st Innings 239-7 ( 90 Overs ) காஞ்சிபுரம் மாவட்ட அணி 70-10 (43.2 Over) 2nd Innings சேலம் மாவட்ட அணி 156-1 DEC ( 26 Overs ) காஞ்சிபுரம் மாவட்ட அணி 96-9 (40 Overs). கோப்பையை வென்ற சேலம் மாவட்ட அணி வீரர்கள் சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை வரவேற்க மாவட்ட செயலாளர் பாபு குமார் தலைமையில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தலைவர்: திரு. R பிரகாஷ் செயலாளர்: திரு. V பாபு குமார் துணை செயலாளர்: திரு. M ராஜு துணைத் தலைவர்: திரு. M.V ராஜ்குமார் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு. D.S. சந்தோஷ் குமார திரு. M.V. ராஜ்குமார் திரு. D. சுதர்சன்
திரு. வசந்த் ராஜ் திரு. துரை
தேர்வாளர்கள் திரு.குமார் திரு.முரளி திரு. சங்கரநாராயணன்
திரு.சரவணன் பயிற்சியாளர்கள்
திரு. சாரதி திரு. ரமேஷ் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு வெற்றி பெற்ற சேலம் மாவட்ட அணி வீரர்களை வாழ்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.