ஞாயிறு, 20 ஜூலை, 2025

ஆடி கிருத்திகை ஒட்டி சேலம் பள்ளப்பட்டி பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆசிரமத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

ஆடி கிருத்திகை ஒட்டி சேலம் பள்ளப்பட்டி பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆசிரமத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

ஆடி கிருத்திகை ஒட்டி சேலம் பள்ளப்பட்டி பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆசிரமத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். 

தமிழ் கடவுள் ஆன முருகப் பெருமானுக்கு உகந்த தினமாக கிருத்திகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆடி மாதத்தில் வரும் முதல் கிருத்திகை நாளான என்று சேலம் பள்ளப்பட்டியில் உள்ள பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆசிரமத்தில் எம்பெருமான் முருகப்பெருமானுக்கு இன்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன 
 குறிப்பாக பால் மஞ்சள் குங்குமம் இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து எம்பெருமான் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு ராஜ அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடி முதல் கிருத்திகை நாளில் வழிபாடு மேற்கொண்டனர். இதனை அடுத்து ஆசிரமத்தின் சார்பில் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் ஆசிரம நிறுவனர் முருகனடியார் பாபு உட்பட நிர்வாகிகள் சுப்ரமணியம், கேசவமூர்த்தி, வசியா, வாசுகி மற்றும் கிருபா உள்ளிட்டோர் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சேலம் அன்னதானப்பட்டி ஸ்ரீ காவல் முனியப்பன் திருக்கோவில் ஆடி திருவிழா. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி அழைப்பு.

சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலைய குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காவல் முனியப்பன் திருக்கோவில் பதினெட்டாம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 16ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் முகூர்த்தக்கால் நடுக்களுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு ஸ்ரீ முனியப்பனுக்கு ஸ்ரீ செல்லியம்மனுக்கு ஸ்ரீ கன்னிமார் சுவாமிக்கு பூச்சாற்றுதல் விழாவும் அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சக்தி அழைப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் இருந்து சக்தி அழைப்பு தொடங்கியது இதில் பெண்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர். அந்த பகுதியில் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற இந்த சக்தி அழைப்பு ஊர்வலமானது திருக்கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து பொங்கல் வைத்தல் வைபவம் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ காவல் முனியப்பனுக்கு மகா தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சக்தி அழைப்பு விழாவில் அன்னதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முனியப்பனை வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து நாளை ஸ்ரீ காவல் முனியப்பனுக்கு தெரிவிது விழா புறப்பாடு சதாபரணமும் தொடர்ந்து இருபத்திரண்டாம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவமும் மறுபூஜையும் நடைபெற்று விழா இனிதே நிறைவடைய உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் துரை என்கின்ற வெங்கடேஸ்வரன் சந்துரு பிரபு மணிமாறன் பாலசுப்பிரமணி சிங்காரம் புலித்தோர் சிறப்பாக செய்திருந்தனர்.

வெள்ளி, 18 ஜூலை, 2025

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ந்த  காங்கிரஸ் மூத்த தலைவர் கே வி தங்கபாலு.

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே வி தங்கபாலு.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ந்த  காங்கிரஸ் மூத்த தலைவர் கே வி தங்கபாலு.

கல்வி கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா மற்றும் மகாத்மா காந்தி சிலை அமைத்து ஐம்பதாவது ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 28, 48,  மற்றும் 49 வது கோட்டங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு வேஷ்டி சேலை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் 2000 பேருக்கு நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சேலம் அன்னதானப்பட்டி காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவிற்கு சேலம் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமை தாங்கினார். சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் மற்றும் சேலம் மாநகர காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் மிட்டாய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டூர் முன்னிலை வகித்த விழாவில், முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவருமான கேவி தங்கபாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வேஷ்டி சேலை நோட்டு புத்தகங்களை வழங்கி மகேந்திரா. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பச்சைப்பட்டி பழனிச்சாமி கோபி குமரன் 29 வது கோட்டை மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன் மொட்டையாண்டி சாந்தமூர்த்தி பர்வேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆடி முதல் வெள்ளியையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

ஆடி முதல் வெள்ளியையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

சேலம்.
S.K.சுரேஷ்பாபு.

ஆடி முதல் வெள்ளியையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலையங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஆடிபெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தில் ஆடி-1, ஆடி-18, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என அடுத்தடுத்து விஷேசங்கள் வரும். இதுபோன்ற நாட்களில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதம் நேற்று  தொடங்கியது. ஆடி மாதத்தில் இன்று முதல் வெள்ளி என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக சேலத்தில் உள்ள 8 பட்டிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும், சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு உகந்த வெள்ளி என்ற ஐதீகம் உள்ளதால் இன்று காலை முதல் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாட்டு சென்றனர்.
வரும் 22-ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் ஆடிபெருவிழா தொடங்க உள்ளதென்பதும், வரும் 29ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடுதல் விழா நடைபெற உள்ளது என்பதும், அதனைத் தொடர்ந்து சக்தி அளித்தல் பொங்கல் வைபவம் மாவிளக்கு எடுத்தல் உருளுதண்டம் நிகழ்வுகளுடன் திருக்கோவிலுக்கு புதிதாக கட்டப்பட்ட திருத்தேரோட்டம்  முதன் முறையாக அடுத்த மாதம் 8ம் தேதி இடம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.