புதன், 31 ஜூலை, 2024

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மின்மோட்டார்களுடன் ஐந்து குடிநீர் தொட்டிகள், மயான சுற்றுச்சுவர் மற்றும் கான்கிரீட் சாலை... பாமக MLA இரா. அருள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மின்மோட்டார்களுடன் ஐந்து குடிநீர் தொட்டிகள், மயான சுற்றுச்சுவர் மற்றும் கான்கிரீட் சாலை... பாமக MLA இரா. அருள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.


சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மின்மோட்டார்களுடன் ஐந்து குடிநீர் தொட்டிகள், மயான சுற்றுச்சுவர் மற்றும் கான்கிரீட் சாலை... பாமக MLA இரா. அருள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். 

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நான்காவது கோட்டம் குற்ற தெரு பகுதியில் இல்லம் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்வின் போது தங்களது பகுதிக்கு குடிநீர் டேங்க் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கூட்டத்தெரு பகுதியில் மூன்று இடங்களில் குடிநீர் டேங்க் மற்றும் அதற்கான மின் மோட்டார் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதே போல மூன்றாவது கோட்டத்திற்கு உட்பட்ட வன்னியர் நகர் பகுதியில் இரண்டு இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு மின் மோட்டார் களுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அர்ப்பணித்தார். 
இதனை அடுத்து மூன்றாவது கோட்டம் ரெட்டியூர் பகுதியில் உள்ள மயானம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுசுழற் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மயானத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் இரும்பு கேட் அமைத்து பொது மக்களை சந்தித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஒப்படைத்தார். 
பின்னர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 86 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஐந்தாவது கோட்டம் பிடாரியம்மன் கோவில், வன்னியர் நகர், பெரிய புதூர் பள்ளி அருகில், மிட்டா புதூர் மற்றும் குட்ட தெரு ஆகிய ஐந்து இடங்களில் கொடியேற்று விழாவில் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கலந்து கொண்டு கட்சி குடியினை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதனை அடுத்து சாமி நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் இல்லம் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்வின் போது பொது காலனி பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை மிகவும் பழுதடைந்தும் குருகளாக உள்ளதாகவும் குடிநீர் குழாய் உடைந்து உள்ளதாகவும் புதிய கான்கிரீட் சாலை அமைத்து தரவேண்டும் என்று கேட்டிருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் சாமி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை அவர்கள் முன்னிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அர்ப்பணித்து வைத்தார். 
சட்டமன்ற உறுப்பினரின் இந்த நிகழ்வுகளின் போது முக்கிய நிர்வாகிகள் சத்திரிய சேகர், ராஜேந்திரன் சிட்டி வேல்முருகன் கலை சரவணன் இளவரசன் கோவிந்தராஜ் கிருஷ்ணம்மாள் நடராஜன் பாஸ்கர கணேஷ் ராஜகணபதி சுரேஷ் பாலாஜி பெருமாள் ராஜேஷ் அய்யனார் ஆறுமுகம் ரத்தினவேல் வைரம் ராஜா மற்றும் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 30 ஜூலை, 2024

நீதிமன்றத்திற்கு சென்று கொண்டே போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுப்போம் என  SDCBA தலைவர் அறிக்கை வெளியீடு...

நீதிமன்றத்திற்கு சென்று கொண்டே போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுப்போம் என SDCBA தலைவர் அறிக்கை வெளியீடு...



சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஒரு மாத கால போராட்டங்களுக்கு பிறகு SDCBA வழக்கறிஞர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப முடிவு...நீதிமன்றத்திற்கு சென்று கொண்டே போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுப்போம் என  SDCBA தலைவர் அறிக்கை வெளியீடு...

முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி நீதீமன்ற புறக்கணிப்பு,  ஆர்ப்பாட்டம்,  சாலை மறியல்,  விமாண நிலைய தர்ணா,  ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்தியும் தமிழகத்தில் இருந்து பாரளுமன்றத்தில் அண்ணன் எழுச்சித்தமிழர் மட்டுமே குரல் கொடுத்தார்,  மத்திய சட்ட அமைச்சரை நமது federation தலைவர் அண்ணார் திரு.மாரப்பன் அவர்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். நமது சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்கும் பணியை மூத்த வழக்கறிஞர் திரு.பிரசாந்த் பூசனிடம் ஒப்படைத்துள்ளது.
நம்முன் தற்போது 1. நாளையில் இருந்தே நீதிமன்றம் செல்லலாம் அல்லது 2.கால வரையற்ற வேலை நிறுத்தம் என்கிற இரண்டே தீர்வு உள்ளதால் நமது சங்க வழக்கறிஞர்களின் நலன் கருதி நாளை 1-8-24 ம் தேதி முதல் நமது சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் நீதிமன்றம் செல்லலாம் என முடிவெடுத்துள்ளோம். நீதிமன்றத்திற்கு சென்று கொண்டே போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுப்போம் என SDCBA தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். 
ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் வைபவம்.. சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..

ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் வைபவம்.. சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ
கோட்டை பெரிய  மாரியம்மன் திருக்கோவிலில் கம்பம் நடும் விழா..... ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்...

சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். மேலும் சேலத்தில் எட்டு பேட்டைகளையும் கட்டியாளும் அம்மனாகவும், நவகிரக நாயகியாகவும் வீற்றிருக்கும்  கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திகழ்கிறது.  இந்நிலையில் கோட்டை மாரியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் நடுதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக  நடைபெற்றது.
விழாவையொட்டி உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 
அம்மனின் கணவரான சிவ பெருமானாக கருதப்படும் திருக்கம்பம் சேலம் மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் வளாகத்தில் அம்மனுக்கு நேர் எதிரே நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் வளாகத்தில் நடப்பட்ட திருக்கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். இந்த கம்பம் நடும்  விழாவில், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, மற்றும் அறங்காவலர்கள்  கலந்து கொண்டனர். மேலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கம்பம் நடும் உற்சவத்தை  தொடர்ந்து சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில், தாதகாப்பட்டி கேட் சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், சின்னக்கடை வீதி சின்னமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன் உள்பட 8 பேட்டை மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் நடுதல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
கோட்டை மாரியம்மன் கோவிலில் வருகிற 5-ம் தேதி சக்தி அழைப்பும், 7,8 மற்றும் 9-ம் தேதிகளில் பொங்கல் வைத்து பக்தர்கள் உருளு கண்டம் இடும் வழிபடு நிகழ்ச்சியும், 11-ம் தேதி சத்தாபரணி நிகழ்ச்சியும், 13-ம் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவையும், விழாவின் நிறைவாக வரும் 16-ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் விளையாடி உற்சவத்துடன் ஆடித்திருவிழா இனிதே நிறைவடைய உள்ளது நடைபெறுகிறது. மேலும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் பூஜைகள் தீபாரதணைகள் நடைபெற இருக்கிறது.


வயதான தம்பதியினரை கொலை செய்த கும்பல் கைது: மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி

வயதான தம்பதியினரை கொலை செய்த கும்பல் கைது: மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி

கடந்த 2022ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே விவசாய தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் கடப்பாரை மற்றும் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளை கடந்தும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

காவல்துறை விசாரணை குறித்து பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வந்த சூழ்நிலையில் தற்பொழுது இந்த வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகளில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த கொலை வழக்கு காவல் துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிசிடிவி கேமரா எதிலும் சிக்காமல் இருப்பதற்காக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு கீழ்பவானி பாசன கால்வாயில் இறங்கி அதன் வழியே நடந்து வந்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடைய கை ரேகையோ முகம் மற்றும் அடையாளமோ தெரிவதில் தங்களுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது. எனவே தான் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதில் மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

தங்களுக்கு கிடைத்த மிகச் சிறிய தடயத்தை கொண்டு மிகப் பெரிய அளவில் துப்பு துலக்கி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வதாகவும் கூறினார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 25 க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், மேற்கு மண்டலத்தில் போதை பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பது குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மேற்கு மண்டல டிஐஜி சரவண சுந்தர், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்


ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (30ம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூடுதல் ஆணையருமான (வருவாய் நிருவாகம்) ஜி.பிரகாஷ் தலைமை தாங்கினார். 

இக்கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சமத்துவபுர குடியிருப்புகள், குடிநீர் விநியோகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, தூய்மை பாரத இயக்கம் 2.0 உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையிலும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் இருக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் நர்னரே மனிஷ் சங்கர்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பிரேமலதா (நிலம்), செல்வராஜன் (வளர்ச்சி), ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) அம்பிகா உட்பட அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


முழு கொள்ளளவான 120 அடியை தொடும் நிலையில் மேட்டூர் அணை

முழு கொள்ளளவான 120 அடியை தொடும் நிலையில் மேட்டூர் அணை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி வருகிறது.
இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, அந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மளமளவென அதிகரித்தது. 

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (30ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 62,870 கன‌ அடியாக இருந்த நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 54,459 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று (29ம் தேதி) மாலையை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீர்வரத்து குறைந்துள்ளதால், அணை நிரம்புவது சற்று தாமதமாகி உள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 119.43 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது.

அணை நிரம்பும் பட்சத்தில் உபரிநீர் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் நிலத்தில் அத்துமீறி தகரக் கொட்டாய் அமைத்து ஊர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சிவலிங்கம் என்பவர் மீது கோட்டாசியர் விசாரணைக்கு உத்தரவிட என வலியுறுத்தல்.. மல்லமூப்பம்பட்டி கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.

திருக்கோவில் நிலத்தில் அத்துமீறி தகரக் கொட்டாய் அமைத்து ஊர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சிவலிங்கம் என்பவர் மீது கோட்டாசியர் விசாரணைக்கு உத்தரவிட என வலியுறுத்தல்.. மல்லமூப்பம்பட்டி கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.


சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

திருக்கோவில் நிலத்தில் அத்துமீறி தகரக் கொட்டாய் அமைத்து ஊர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சிவலிங்கம் என்பவர் மீது கோட்டாசியர் விசாரணைக்கு உத்தரவிட என வலியுறுத்தல்.. மல்லமூப்பம்பட்டி கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு. 

சேலம் அருகே உள்ள மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மூலக்கடை பிரதான சாலையில் தங்கள பங்காளிகளின் அனுபவத்தில் உள்ள கருப்புசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் அதே பகுதியை சேர்ந்த எல் ஐ சி நிறுவனத்தில் பணியாற்றும் சிவலிங்கம் என்பவர் தங்களுடைய அனுமதி இல்லாமல் அத்துமீறி திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கலவரம் தூண்டும் வகையில் மிரட்டி வருகிறார் எனக் கூறி அந்த பங்காளிகளில் ஒருவரான செந்தில்குமார் என்பவர் அவரது வகையறாக்கள் ஆகியவருடன், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளருமான சரஸ்ராம் ரவி ஒருங்கிணைப்பின் பேரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக இன்று வந்திருந்தனர். 
அந்த மனுவில் சிவலிங்கம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்தது குறித்தும், திருக்கோவிலுக்கு சொந்தமான வாத்தியமுடைய பங்காளிகளை மிரட்டி வருவது குறித்தும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சேலம் மாவட்ட முதன்மை உரிமைகள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தங்களது பங்காளிகளின் கருப்புசாமி கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எங்களது பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், எதிரியான எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சிவலிங்கம் என்பவர் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கில் அத்துமீறி கோவில் பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல் கூடாரம் போட்டதை அப்புறப்படுத்தி பொது அமைதிக்கு வழி வகுக்க வேண்டும் எனவும் கோவில் பொது இடத்தை கோட்டாட்சியர் அவர்கள் நேரடி பார்வையிட்டும் விசாரணை நடத்தியும் நீதி வழங்கிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 
அதுமட்டுமல்லாமல் அந்த இடத்தில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் எல்ஐசி ஊழியர் சிவலிங்கம் மீது கோட்டாட்சியர் விசாரணை செய்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்த அத்துமீறல் அபகரிப்பு குறித்து பங்காளிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இணைந்து ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.