ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பு விலையும் உயர்வு

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பு விலையும் உயர்வு

ஈரோடு ஸ்டோனி பாலம் கருங்கல்பாளையம் காவிரி சாலையில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்கால், தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் 25 டன்கள் மீன் வரத்தாகி இருந்தது. இந்த வாரம் மேலும் மீன்கள் வரத்து அதிகரித்து 40 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஆடி மாதம் முடிவடைந்ததையொட்டி, மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட மீன் வரத்து அதிகமாக இருந்ததால், மீன் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

இன்று (25ம் தேதி) விற்பனையான மீன்களின் விலை கிலோ ரூபாயில் பின்வருமாறு, வஞ்சரம்-ரூ.1,100, விலாங்கு-ரூ.500, தேங்காய் பாறை-ரூ.550, சங்கரா-ரூ.400, வெள்ளை வாவல்-ரூ.850, கிளிமின்-ரூ.650, சீலா-ரி.550, மயில் மீன்-ரூ.400, ப்ளூ நண்டு-ரூ.700, சாதாரண நண்டு-ரூ.400, கடல் இறால்-ரூ.750, கடல்பாறை-ரூ.550, கனவா-ரூ.450, நெத்திலி-ரூ.350, கொடுவா-ரூ.850.
நிலதரகு செய்யும் செய்யும் தொழிலாளர்களை அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கத்தில் இணைக்க முழு மூச்சுடன் செயல்படுவேன். சேலத்தில் நடைபெற்ற தமிழக நிலத்தரகர்கள் நல சங்க மகாசபை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் திட்டவட்டம்.

நிலதரகு செய்யும் செய்யும் தொழிலாளர்களை அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கத்தில் இணைக்க முழு மூச்சுடன் செயல்படுவேன். சேலத்தில் நடைபெற்ற தமிழக நிலத்தரகர்கள் நல சங்க மகாசபை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் திட்டவட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

நிலத்தரகு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், சேலத்தில் நடைபெற்ற தமிழக நில தரகர்கள் நலச் சங்கத்தின் மகாசபை கூட்டத்தில் தீர்மானம்.....

தமிழக நிலத் தரகர்கள் நல சங்கத்தின் மகாசபை கூட்டம் சேலம் தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. தமிழக நிலத்தரகர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த மகா சபை கூட்டத்தில் தமிழ்நாடு  கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரும் கட்டுமான மனை கூட்டமைப்பு தலைவருமான பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அந்த சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் நிலத்தரகர்களின் நலன் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்திற்கான வரவு செலவு கணக்குகள் குறித்து ஒப்பு வைக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 
குறிப்பாக பத்திர பதிவுத்துறையில் பிரதானமாக வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாமல் ஏழை எளிய பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நில வழிகாட்டி மதிப்பு அவ்வப்போது உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும் என்றும் நிலத்தரகு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் மற்றும் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவினை கடந்த 6.4.2016 அன்று சென்னை அறிவாலயத்தில் தற்போதைய தமிழக முதல்வராக இருக்கும் போற்றுதலுக்குரிய மு க ஸ்டாலின் அவர்களிடம் வழங்கிய போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசளித்து நிறைவேற்றி தருமாறு இந்த சங்கம் தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நில தரகு செய்யும் தொழிலாளர்களின் நலனை காக்கும் விதமாகவும் அவர்களை பாதுகாக்கும் விதமாகவும் நிலத்தரகு செய்யும் தொழிலாளர்களை அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்று தரும் என்று நம்புவதாகவும் இதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் பொன்குமார் தெரிவித்தார். 
இதற்கு தங்களது நீண்ட நெடிய கோரிக்கையான அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் நிலத்தரகர்களின் இணைக்க வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையினை பொன் குமார் அவர்கள் நிறைவேற்ற முனைப்புடன் பாடுபடுவேன் என்று தெரிவித்து சென்றது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்த மகா சபை கூட்டத்தில் தமிழக நில தரவர்கள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான வரதராஜன் நமச்சிவாயம் நடராஜன் கணேசன், சிவகணேசன் ஜபருல்லா ஈரோடு புருஷோத்தமன் தர்மபுரி ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இயன்றதை உதவுவோம் இயலாதவர்களுக்கு என்ற தாரக மந்திரத்துடன் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா தேமுதிகவினரால் உற்சாக கொண்டாட்டம்.

இயன்றதை உதவுவோம் இயலாதவர்களுக்கு என்ற தாரக மந்திரத்துடன் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா தேமுதிகவினரால் உற்சாக கொண்டாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தேமுதிக தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா... சேலம் கிழக்கு மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடிகளை ஏற்றி ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தேமுதிகவினர்  உற்சாகம்...

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான காலம் சென்ற கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா இயன்றதை உதவுவோம் இயலாதவர்களுக்கு என்ற தாரக  மந்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய சேலத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள் வழங்கி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். 
இதன் ஒரு பகுதியாக சேலத்தை அடுத்துள்ள மஜ்ரா கொல்லப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேமுதிக ஒன்றிய செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளரும், தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினருமான  ஏ.ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றி ஏற்றி வைத்து, பல்வேறு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன் மறைந்த விஜயகாந்த்திற்கு புகழாரம் சூட்டி சிறப்புரையாற்றினார். 
இதனை அடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதே போல அயோத்தியாபட்டணம் வெளியிருந்த ஒரு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகளும் காலை உணவு வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து எருமை பாளையம் வாழப்பாடி ஆத்தூர் செந்தாரப்பட்டி தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானமும் வழங்கப்பட்டது. இதுபோக இன்று மாலை சின்ன சேலத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவை தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் சுந்தர், புவனா செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தங்கம், ஒன்றிய பொருளாளர் கார்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரமிளா அன்பழகன், மகேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், செல்வம் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சனி, 24 ஆகஸ்ட், 2024

சேலம் மேச்சேரியில் தவறான பொய்யான தகவலின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை துறையினர் தனது கடையை தடை செய்துள்ளனர் என பாதிக்கப்பட்ட சுப்ரமணி மனு..!

சேலம் மேச்சேரியில் தவறான பொய்யான தகவலின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை துறையினர் தனது கடையை தடை செய்துள்ளனர் என பாதிக்கப்பட்ட சுப்ரமணி மனு..!

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேச்சேரியில் தவறான பொய்யான தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை 2011 விதி 234 - ன் கீழ் தனது கடையை தடை செய்து சட்டத்திற்கு புறம்பானது. மேல் முறையீடு விதி 2 1 12 கீழ் ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட சுப்ரமணி மனு.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள சீராமணியூர் மணியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அதே பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி சிறிய அளவில் பெட்டிக்கடை ஒன்றை பல ஆண்டுகளாக நடத்தி வரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். கிராம மக்கள் பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களை மட்டும் விட்டு வாழ்வாதாரம் செய்து வருகிறார். இவர் தனது கடையில் எந்த காலத்திலும் உணவு கட்டுப்பாடு பாதுகாப்பு துறை அறிவுறுத்திய தடை செய்யப்பட்ட எந்த உணவுப் பொருட்களையும் விற்பனை செய்தது இல்லை. உள்ளூர் சிலை பொறாமை குணம் கொண்ட சிலரால் தவறான தகவல் சுப்பிரமணி மீது அளித்துள்ளனர். கடந்த 27 5 24 அன்று பொய்யான தகவல் அடிப்படையில் சுப்ரமணியன் கடையில் தொடர் ஆய்வு செய்த போது எந்த விதமான தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களையும் கைப்பற்றவில்லை. மேலும் மேச்சேரி காவல் நிலையத்தில் பொய்யான முதல் தகவல் அறிக்கை எண் 289 பதிவு செய்தும் இந்திய  அரசியல் சாசன சட்டப்படி FIR நகல் அல்லது தகவல் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிக்கு அளிக்கப்படவில்லை. 
இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி அறிவுறுத்தலின் பேரில் அந்த பொய்யான தவறான சட்டத்திற்கு புறம்பான முதல் தகவல் அறிக்கையை உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் சேலம் மாவட்டம் அவர்கள் அளித்துள்ள தடை ஆணையின் 2169 / அ2 / 2024 உணவு பாதுகாப்பு அலுவலர் முற்றிலும் தவறானது. எனவே கடையின் ஆய்வின்போது ஒரு துரும்பு தடை செய்யப்பட்ட பொருளும் கண்டறியாத போது எடுக்காத போதும் எப்படி தவறாக முதல் அறிக்கை தகவல் மேச்சேரி காவல்துறை பதிவு செய்தது. ஏழை குடும்பம் ஒரு சிறிய பெட்டிக்கடையை வைத்து பிழைப்பு செய்யக் கூடாது என்ற சமூக தடை செய்யும் சிலரின் தவறான பொய்யான ஆதரமற்ற தகவலை வைத்து தடை செய்வது சமூக நீதிக்கு எதிரானது. ஆகவே சுப்பிரமணியம் அவரது கடையை நடத்திட தடை செய்யும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆணையை திரும்ப பெற வலியுறுத்தி இந்த மேல் முறையீடு மனுவை சுப்பிரமணி அழைத்துள்ளார். இந்த மேல் முறையீடு மனுவை ஆய்வு செய்தும் பொய்யான ஆதாரமற்ற தகவலை வைத்து தனது சிறு கடையை நடத்திட தடை செய்யும் ஆணையை ரத்து செய்து நீதி வழங்கிட சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களை வலியுறுத்தி இந்த மனுவை அளித்துள்ளார் சுப்பிரமணி. சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த புகார் மனுவின் நகல் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பெருந்துறை அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பட்டகாரன்பாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் வி.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோ என்கிற சண்முகம் (வயது 35). இவர், வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை அ கிராம நிர்வாக அலுவலர் ரதிபிரியாவிற்கு தகவல் கிடைத்தது. 

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், போலீசார் இளங்கோ வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, பட்டாசு தயாரிப்பதற்கான வெடிபொருட்களை வைத்து இளங்கோ சட்டவிரோதமாக வான வேடிக்கை பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து, போலீசார் இளங்கோவை கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து களிமண், 7.800 கிராம் பாஸ்பரஸ், 3.250 கிராம் அலுமினிய பவுடர், வெள்ளை உப்பு 2 கிலோ, 2.250 கிராம் சரடு வெடி, தகரத்தினலான வான கூடு 20, இரும்பு அவுட் பைப், இரும்பு எடை நியாய தரசு, மருத்துகள் நிரப்பப்படாத காலி கூடு, பேப்பர் பசை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இளங்கோ மீது ஏற்கனவே திங்களூர் காவல் நிலையத்தில் வெடிபொருள் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்
ஈரோட்டில் ரூ.1.01 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய மூவர் கைது

ஈரோட்டில் ரூ.1.01 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய மூவர் கைது

ஈரோடு அடுத்த பி.பெ.அக்ரஹாரம் நஞ்சப்பாநகரை சேர்ந்தவர் அபிபுல்லா (வயது 51). இவருக்கு சொந்தமான இரும்புக்கடை ஈரோடு - சத்தி சாலையில் தண்ணீர்பந்தல்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் (22ம் தேதி) இரவு அபிபுல்லா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று (23ம் தேதி) காலை கடையை திறக்க வந்த போது, கடையை சுற்றி போடப்பட்டிருந்த தகர கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த ரூ.1.01 லட்சம் மதிப்பிலான 13 இரும்பு டையிங் கட்டிங் பிளேட்டுகள் காணாமல் போனது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து அபுபில்லை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் அபிபுல்லா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இரும்பு டையிங் கட்டிங் பிளேட்டுகளை திருடியதாக ஈரோடு கனிராவுத்தர்குளம், சாஸ்திரி நகரை சேர்ந்த முருகன் (வயது 23), சின்னசேமூர், பள்ளிக்கூட வீதியை சேர்ந்த ஹக்கீம் (வயது 23), கனிராவுத்தர்குளம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பூபாலன் (வயது 22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து 13 இரும்பு பிளேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில், முருகன் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான ஜி எஸ் டி யை திரும்ப பெற வேண்டும் ......காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட மாநாட்டில் அகில இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்  பொருளாளர் பி.எஸ். ரவி பேச்சு ....

ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான ஜி எஸ் டி யை திரும்ப பெற வேண்டும் ......காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட மாநாட்டில் அகில இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொருளாளர் பி.எஸ். ரவி பேச்சு ....


சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான ஜி எஸ் டி யை திரும்ப பெற வேண்டும் ......
காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட மாநாட்டில் அகில இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்  பொருளாளர் பி.எஸ். ரவி பேச்சு ....

எல் ஐ சி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட மாநாடு ஐந்து ரோடு பகுதியில் உள்ள குஜராத்தி மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் ஆர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். நடைபெற்ற மாநாட்டில் இன்சூரன்ஸ் துறையிலே அந்நிய முதலீட்டை மேலும் உயர்த்த கூடாது. இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியினை முற்றிலுமாக விளக்கி இன்சூரன்ஸ் பரவலாகத்திற்கு வழி வகுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான வன்முறைகளை கண்டித்தும்,இதை தடுக்க வலிமையான சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை மத்திய அரசாங்கம் மேலும் விற்பனை செய்யக்கூடாது. சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக அமைந்திருக்கும் புதிய தொழிலாளர் நல சட்டங்களை மீண்டும் மாற்றி அமைக்க கூடாது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நடைபெற்ற மாநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் இணை செயலாளர் எஸ் ரமேஷ் குமார் பேசும்போது, நாடு முழுதும் உள்ள எம்பிக்களுக்கு காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட மகாஜனர் அடிப்படையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியும் மருத்துவ காப்பீட்டிற்கான ஜிஎஸ்டியை விளக்கிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார் இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு நிர்வாகம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது காப்பீட்டு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான ஜி எஸ் டி யை திரும்ப பெற வேண்டும் அதனை ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்து அறிவிக்க வேண்டும் அப்படி ஜிஎஸ்டி திரும்ப பெறாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்துவோம் அது தொடர்பாக சென்னையில் வரும் டிசம்பர் மாதம் நடக்கும் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் இதுபோக பொது காப்பீட்டு நிறுவனங்களைஒன்றிணைக்க வேண்டும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் போது இதையும் அரசால் செய்திட இயலும் எனவே அந்த கோரிக்கையையும் ஒன்றிய அரசுக்கு நாங்கள் முன் வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.