புதன், 28 ஆகஸ்ட், 2024

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செவித்திறன் குறை உடையோர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செவித்திறன் குறை உடையோர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு இன்று ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட செவித்திறன் குறையுடையோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செவித்திறன் குறை உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான சைகை மொழி,மொழிபெயர்ப்பாளர் பணி நியமம் செய்ய வேண்டும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நிபந்தனை தளர்த்தி கடன் வழங்க அறிவுறுத்த வேண்டும், கிருஷ்ணகிரி,நாமக்கல்,தூத்துக்குடி சென்னை,மதுரை, சேலம் போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்களில் செவிதிறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் வழங்குவது போல ஈரோடு மாவட்டத்திலும் ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும்,ஈரோடு மாவட்டத்தில் சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாத செவித்திறன் குறைவு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற அனுமதிக்க வேண்டும்.

கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கண்டறிந்து அக்குறையை உடனடியாக தீர்க்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்ட வருடங்களாக தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கான தீர்வு கிடைக்காததால் தற்போது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருப்பதாக செவி திறன் குறையுடையோர் நலச் சங்கத்தினர் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிபட்டி ஊராட்சியை சேலம் மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம். தவறும் பட்சத்தில் மத்திய மாநில அரசுகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஆசிரியரும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை.

அதிகாரிபட்டி ஊராட்சியை சேலம் மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம். தவறும் பட்சத்தில் மத்திய மாநில அரசுகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஆசிரியரும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

அதிகாரிபட்டி ஊராட்சியை சேலம் மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம். தவறும் பட்சத்தில் மத்திய மாநில அரசுகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஆசிரியரும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை. 

ஊர் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசிய போராட்டத்திற்கு, ஊர் பொதுமக்கள் சார்பாக சத்யா தலைமை தாங்கினார். 
தொடர்ந்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அதிகாரி பற்றி ஊராட்சி மிகவும் பின்தங்கிய ஊராட்சி என்றும் சுமார் 1600 குடும்பங்கள் உள்ளது. இதில் 1238 பெண்கள் ஊரக வேலை திட்டத்தில் பணி செய்து வருகின்றனர் இன்னும் இந்த பகுதி மக்கள் நிலையான வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர் மாநகர் மக்கள் போல தங்களது பகுதி மக்கள் வாழ போதிய பொருளாதார வசதி இல்லை இந்த ஊராட்சியை மாநகரத்துடன் இணைத்தால் இங்குள்ள தொழிற்சாலைகள் வெளியேறும் மேலும் இங்குள்ள ஆண்கள் தொழிற்சாலையில் பணி செய்யும் வேலை பறிபோகும். அதுமட்டுமில்லாமல் மாநகரத்துடன் இணைத்தால் தங்களது வாழ்க்கை தரும் மேம்பட போவதும் இல்லை. இதுபோன்று ஏராளமான பிரச்சனைகள் உள்ள இந்த ஊராட்சியில் தற்பொழுது சுகாதாரம் குடிநீர் தெரு விளக்கு கழிப்பறை வசதிகள் ஏதும் இல்லை. மாநகரத்துடன் இணைத்தால் தங்களது சூழ்நிலை மேலும் மோசமாக மாறிவிடும். 
இதுபோன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் நிறைய உள்ள நிலையில்தான் தங்களது பகுதியை மாநகரத்துடன் இணைக்க வேண்டாம் என்று இந்த போராட்டத்தில் வாயிலாக நாங்கள் தெரிவிக்கிறோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். 
தங்களது கோரிக்கையை ஏற்க மறுத்து மாநகரத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கிய ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை ஆகியவற்றை தமிழக அரசிடம் திருப்பு ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விறுத்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருமா சுந்தரம், ரமேஷ் முரளிதரன் உட்பட கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில்  முதலாம் ஆண்டு வகுப்புகள் 2024 துவக்க விழா.....

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் 2024 துவக்க விழா.....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 
 முதலாம் ஆண்டு வகுப்புகள் 2024 துவக்க விழா

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு வகுப்புகள் 2024 துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா  முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தலைவர் திரு.வள்ளியப்பா தலைமை வகித்தார். விழாவில் தலைமை விருந்தினராக பெங்களூர் டோரி ஹாரிஸ் நிறுவனத்தின் விநியோக தலைவர் நிரஞ்சன தேவி, கெளரவ விருந்தினர்களாக சோனா கல்லூரியின் முன்னாள் மாணவர்களான சென்னை கேப்ஜெமினி நிறுவனத்தின் வன்பொருள் வடிவமைப்பு இயக்குனர் கேசவன் மற்றும் புது டெல்லி லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கணேஷ் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 
துறைத்தலைவர் மற்றும் அட்மிஷன் டீன் சத்தியபாமா விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள், கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி  விழாவை தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து பேசிய கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா மற்றும் தியாகுவள்ளியப்பா ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். 
பின்னர் தலைமை விருந்தினர் நிரஞ்சனா தேவி, பேசும் பொழுது, மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் முக்கியத்துவத்தையும், தனித்துவத்தையும் இழந்து விடாமல் இருக்க  வேண்டுமென்றும் இதற்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மிக அவசியம் என்றார். இதனை தொடர்ந்து கெளரவ விருந்தினர்கள் கேசவன் மற்றும் கணேஷ் மூர்த்தி பேசும் பொழுது சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல பேராசிரியர்கள், மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் அகில இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது என்றும் இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் நீங்கள் பெருமை பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.  
சோனா கல்வி குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது, வாழ்வின் முக்கியத்தருணமான இந்த காலக்கட்டத்தில் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மாணவர்கள் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள், பல்வேறு கல்வி உதவித்தொகை, பிற வசதிகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வது பற்றி கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் எடுத்துரைத்தார்.
இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், காதர்நவாஷ், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை துறைத்தலைவர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக எம்.பி.ஏ துறைத்தலைவர் அஞ்சனி நன்றியுரையாற்றினார்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி, கோனேரிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (29ம் தேதி) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

கோனேரிப்பட்டி துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், கேசரிமங்கலம், பூதப்பாடி, குட்டைமுனியப்பன் கோவில், சிங்கம்பேட்டை, கல்பாவி, காடப்பநல்லூர், சின்னப்பள்ளம், குறிச்சி மற்றும் ஆனந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விபத்து மற்றும் திருட்டு சம்பவங்கள் ஏற்படுகையில் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்கு தொடுக்க உதவியாக பலவேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்தக் கேமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோபியில் உள்ள அனைத்து வியாபாரிகளின் ஒத்துழைப்பினை வேண்டும் விதமாக அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோபி காவல் நிலையத்தில் நடைபெற்றது.
கோபி காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உதவி மற்றும் சிறப்பு ஆய்வாளர்கள் ஜெகநாதன், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு கடைவீதி மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில், கோபி நகரின் முக்கிய வணிக நிறுவனங்களை சேர்ந்த உரிமையாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிய நிறுவனங்களில் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது? விவரத்தை அரசு வெளியிட வேண்டும்

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிய நிறுவனங்களில் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது? விவரத்தை அரசு வெளியிட வேண்டும்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தனியார் துறை மூலம் தொழில் தொடங்க முதலீடு பெறுவதாக கூறிக்கொண்டு தமிழக முதலமைச்சர் அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு வருகிறார். ஒரு முதல்வரே மாநிலத்தின் வளர்ச்சிக்காக முன்னின்று இது போன்ற பயணங்கள் மேற்கொள்வது, முன்னாள் முதலமைச்சர்கள் வழியில் தமிழக முதல்வர் முதலீட்டாளர்களை ஈர்க்க மாநாடு நடத்தி அதன் மூலம் முதலீட்டை பெருக்குவது என்பது வழக்கமான ஒன்றாகும்.   

கடந்த 2022 ஆம் ஆண்டு துபாய்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் போது ரூ.6,100 கோடி ரூபாய்க்கு முதலீடுகளும், அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. சென்னையில் கடந்த 2024 ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 6,64,180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் என முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்கிறது, ஆனால் அங்கு ஈர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை, பாதியளவு கூட செயல்பாட்டுக்கு வராத நிலையில் முதலமைச்சரின் தொடர்ச்சியான வெளிநாட்டுப் பயணங்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன.

முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் புதிதாக எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது? என்பதோ அதன் மூலம் எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்? என்பதோ விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. எவ்வளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வந்து தொழில் தொடங்கியுள்ளன? எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது? தற்போதுவரை எந்த நகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன? என்ற விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அறிவிப்புகள் தான் வருகின்றனவே தவிர, அந்த அறிவிப்பு எந்தளவுக்கு அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கத் தொடங்கியது என்பது பற்றி தகவல்கள் இல்லை அது ஏன்? வெளிநாட்டில் இருந்து தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவது அவசியம். வெளிநாட்டு முதலீடு குறித்த தகவல்களை அடிக்கடி வெளியிடுவதால் மட்டுமே, மக்கள் மனதில் இடம்பிடித்துவிட முடியாது.

அவற்றின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் எந்த அளவுக்கு உருவாகி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்யவேண்டும். இல்லையென்றால் இது வழக்கம் போல் திமுக மக்களை ஏமாற்றுவது போல் தொழில் முதலீட்டாளர்கள் விஷயத்திலும் மக்களை ஏமாற்றுவதாகவே அர்த்தமாகும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்காக அல்ல, தமிழ்நாட்டுக்காக: ஈரோடு எம்பி பிரகாஷ்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்காக அல்ல, தமிழ்நாட்டுக்காக: ஈரோடு எம்பி பிரகாஷ்

இதுகுறித்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. இளைஞர் அணி மாநிலத் துணைச்செயலாளருமான கே.இ.பிரகாஷ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இம்மாநாடு ஓட்டுக்காக நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். இதை தமிழ் மக்கள் அனைவரும் திட்ட வட்டமாக மறுப்பார்கள். எந்த காலத்திலும் திமுக மதத்தை அரசியலுக்காக பயன்படுத்தியது இல்லை. அண்ணாவின் கொள்கையை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதாகும் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை தான் நடத்தியுள்ளது. அரசு நேரடியாக நடத்தவில்லை.

முதல்வர் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்கான அரசு தான் இது எனக் கூறியுள்ளார். எனவே அரசியல் அமைப்பு அடிப்படையில் கூட ஆன்மீக பெருமக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது இந்த அரசின் கடமையாகும். இதில் எந்த விதத்திலும் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு இல்லை. மாறாக பாஜக தான் மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு பிரதமர் மோடி அயோத்தி ராம பிரச்சனையை கையில் எடுத்து முன்பு வெற்றி கண்டார்.

தொடர்ந்து பாஜக இப்பிரச்சினையை எழுப்பி வளர்ந்தது. அதேபோன்று கடந்த தேர்தலில் ஜெய் ஸ்ரீ ராம் என கூறியவர் ஓட்டுக்காக ஒரிசாவுக்கு சென்று ஜெய் பூரி ஜெகன்நாதர் என முழக்கமிட்டார். ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ சாவி தமிழகத்தில் உள்ளது என்று குற்றம் சாட்டினார். இந்துக்களிடையே பேசும்போது உங்களிடம் உள்ள இரண்டு பசுக்களில் ஒன்றை பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள். வீடுகளில் ஒன்றைப் பிடுங்கி முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

முஸ்லிம்களை வந்தேறிகள் என்றும் குறிப்பிட்டார்.மத உணர்வை தூண்டி தொடர்ந்து அரசியல் நடத்துவது பாஜக தான். ஆனால் பெரியார் மற்றும் அண்ணா கலைஞர் வழியில் வந்த திமுக என்றும் மத உணர்வை தூண்டி அரசியலை நடத்தியதில்லை.திமுகவின் முன்னோடியான நீதி கட்சி ஆட்சியில் தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. கலைஞர் ஆட்சியில் பல ஆண்டுகள் ஓடாத திருவாரூர் தேர் இயக்கப்பட்டது.

பெரியபாளையம் அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான கோயில்களுக்கு அவரது ஆட்சிக்காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பூசாரிகளுக்கு நல வாரியம், பென்ஷன் வழங்கப்பட்டது. திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் கொண்டுவரப்பட்டது. திருக்கோயில்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன. அவரது பராசக்தி படத்தில் கூட கோயில்கள் கூடாது என்பதல்ல கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக கூடாது என்பதே எங்கள் கொள்கை என்று பேசினார்.

அவரது வழியில் முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது ஆலயங்களை புனரமைப்பு கும்பாபிஷேகம் பல கோயில்களில் நடக்கின்றன. கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று 1400 கோவில்களுக்கு மேல் இந்த கடந்த மூன்று ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சுமார் 6000 கோடிக்கு மேல் திருக்கோயில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஆட்சியிலும் செய்யாத ஒரு புரட்சியாகும் இது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் யார் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் என்பதை மக்களுக்கு தெரியாமல் இருந்தது ஏனென்றால் ஒன்றும் நடக்கவில்லை.

ஆனால் தற்போது அமைச்சர் சேகர்பாபு அனைவரும் மகிழும் வண்ணம் இந்த மாநாட்டை நடத்தியுள்ளார். அவர் வந்த பின்பு இப்படிப்பட்ட ஒரு துறை இருக்கிறது என பலருக்கும் தெரிய வந்துள்ளது. கடந்த முறை மலேசியாவில் இந்த மாநாடு நடைபெற்ற போது தமிழ் கடவுள் முருகன். அதனால் தமிழகத்தில் மாநாடு நடைபெற வேண்டும் என்று பல பக்தர்கள் விரும்பினர். அதன் அடிப்படையில் பழனியில் மிகச் சிறப்பாக இந்த மாநாடு நடைபெற்றது.

பல ஆன்மீக பெரியவர்கள் மடாதிபதிகள் முருக பக்தர்கள் என உலகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். மலேசியா சிங்கப்பூர் இலங்கை பிஜி தீவுகள் ஜப்பான் போன்ற பல நாடுகளிலிருந்தும் முருக பக்தர்கள் மற்றும் பல இஸ்லாமியர்கள் வந்து முருகனின் பெருமையை உலகம் எங்கும் கொண்டு சென்றுள்ளனர். 130 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது எல்லாம் தமிழ் பண்பாடு கலாச்சாரம் தொன்மை போன்றவர்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உதவும்.

இதில் எந்த அரசியலும் இல்லை. முருக பக்தர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இன்னும் வாழும் ஆன்மீக பெருமக்கள் இம் மாநாட்டை போற்றுகின்றனர். ஆனால் வழக்கம் போல் பாஜகவினர் இதிலும் அரசியல் செய்ய முனைகின்றனர். அவர்களுக்கு மதத்தின் மீது ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. மது வெறி இந்துராஷ்டிரம் இந்துத்துவா, சனாதனம் ஆகிய கொள்கையின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. இந்த வெறுப்புணர்வு கொள்கைகள் மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியாகும். அதற்கு தமிழக மக்கள் எப்போதும் இணங்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறினார்.