வியாழன், 12 செப்டம்பர், 2024

சேலம் மாவட்ட குற்றவியல்  வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் வழக்கறிஞர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம். நீதிபதி துவக்கி வைத்த இந்த முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் பயன் பெற்றனர்.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் வழக்கறிஞர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம். நீதிபதி துவக்கி வைத்த இந்த முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் பயன் பெற்றனர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட குற்றவியல்  வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் வழக்கறிஞர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம். நீதிபதி துவக்கி வைத்த இந்த முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் பயன் பெற்றனர்.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கான இலவச கண் சிகிச்சை மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும்
லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. 

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர்  வழக்கறிஞர் இமயவரம்பன்  தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் செயலாளர் முருகன், மற்றும் பொருளாளர் கண்ணன்  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி.சுமதி அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்து தனது கண்களை பரிசோதித்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில், கண் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கண் தொடர்பான அத்தனை பரிசோதனைகளும் வழக்குரைஞர்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இது போக சேலம் பாலி கிளினிக் சார்பில் பெண்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் உண்டான பொது மருத்துவ முகாமும் நடைபெற்றன.
இந்த இலவச கண் பரிசோதனை மற்றும் முழு உடற்பயிற்சி சோதனை முகாம் குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இனிவரும் காலங்களில் வழக்கறிஞர்களின் நலன் கருவியும் அவர்களின் குடும்பத்தாரின் நலனைப் பேணியும் அனைத்து விதமான மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த சிறப்பு முகாமில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


தமிழ்நாடு மின்.வாரியம், சேலம் மாவட்டத்தில் அதிகாரிகளின் SC/ ST ஊழியர்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்.

தமிழ்நாடு மின்.வாரியம், சேலம் மாவட்டத்தில் அதிகாரிகளின் SC/ ST ஊழியர்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழ்நாடு மின்.வாரியம், சேலம் மாவட்டத்தில் அதிகாரிகளின் SC/ ST ஊழியர்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்.

சேலம் மாவட்டம்  முழவதும் TNEB ல் பணி புரியும் SC/ ST ஊழியர்களுக்கு  அச்சுறுத்தல் & பணி பாதுகாப்பு இல்லை. SC/ ST ஊழியர்களை பழி வாங்கும் நோக்கத்தில் அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகள் அன்றாடம் செய்யும் ஊழல்/அதிகார துஷ்பிரயோகம்/ வரைமுறை மீறல்கள். வீராணம் மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும்  AE சிவராமன் என்பவர் ஒரு ஊழியர் மீது விஜிலென்ஸ் புகாரை விசாரணை செய்ய மேல் அதிகாரி ரகசிய ஆணை கொடுத்தால் அதை வரன்முறைகளை கடந்து சம்பந்தபட்ட ஊழியரிடமே புகார் அளித்தவர் குறித்து தகவல் பெற மிரட்டுவது. கிராம  நிர்வாக அதிகாரியிடம்  புகார் அளித்தவர் அந்த பகுதியில் இல்லை என அறிக்கை பெற்று வர சொல்லி அச்சுறுத்துவது என தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் SC / ST கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி தெரிவித்துள்ளார்.
மேலும், இதையெல்லாம் கவனிக்காத மேல் நிலை அதிகாரிகள், இத்தகைய நிலையை SC/ ST ஊழியர்கள் மீது பொய் புகார்களை ஏற்பாடு செய்து அதன் மூலம் SC/ ST ஊழியர்களை மிரட்டும் ஆபத்தான சூழ்நிலையை விசாரணைக்கு TNEB தலைமை நிலை அதிகாரிகளை வலியுறுத்த தேசீய தாழ்த்தபட்டோர் ஆணையம் சாஸ்திரிபவன் சென்னை முன் வர வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் TNEB சேலம் கண்காணிப்பு மேற் பொறியாளர்  அலுவலகம் முன் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் எஸ்சி / எஸ்டி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதில் முதல்வருக்கு சிறிதும் விருப்பமில்லை; அமைச்சர் தகவல்

டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதில் முதல்வருக்கு சிறிதும் விருப்பமில்லை; அமைச்சர் தகவல்

ஈரோடு மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 புதிய பேருந்துகளின் இயக்கத்தை வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

 ஈரோடு மண்டலத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தில் நாளொன்றிக்கு 3 லட்சம் மகளிர் தினசரி கட்டணமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது விளம்பரத்திற்காக திட்டம் அல்ல. சிஎன்சி கல்லூரியை அரசிற்கு மாற்ற குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளாகியும் தற்போது அனுமதி வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

கல்லூரி அரசிற்கு மாற்றம் செய்யப்படும் பட்சத்தில் அங்கு மிகப்பெரிய நூலகம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நிறைவேற்றப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்துவதில் எள்ளளவும் விருப்பமில்லை. என்றைக்காவது ஒரு நாள் மூடப்பட வேண்டும் என்பது தான் அவரின் எண்ணம்.

ஆனால், உடனடியாக மூடினால் எந்த நிலைமை ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே, அப்படிப்பட்ட கடுமையாக சூழ்நிலையை நிதானமாக அணுக வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். நிச்சயமாக ஒரு காலத்தில் மக்களை மதுவில் இருந்து வெளியே கொண்டு வர கொண்டு வர டாஸ்மாக் கடைகள் குறைத்துக் கொண்டே வரும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, இங்குள்ள நிலைமையை ஆலோசித்து சூழ்நிலையை பார்த்துத் தான் நடவடிக்கை எடுக்க முடியும். விசிக கொள்கை ரீதியான முடிவிற்காக மாநாடு நடத்துகின்றார்கள். இதில் எந்த தவறு சொல்லமுடியாது. ஆனால் அரசாங்கத்தையோ முதல்வரையோ எதிர்த்து மாநாடு நடத்துகிறார்கள் என்பது அல்ல.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுகவை கூட்டணிக்கு அழைப்பு விடுத்தையடுத்து அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என பேச்சுக்கள் எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு, கல்யாணத்திற்கு அழைப்பு கொடுப்பதால் அனைவரும் ஒன்றாக இருப்பதாக அர்த்தம் இல்லை எதிரிக்கும் அழைப்பு கொடுக்கின்றனர்.

ஒரு அழைப்பு கொடுத்ததற்கே அதிமுகவினர் இப்படி ஆட்டம் போடுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு அ.தி.மு.க உள்பட பொது அழைப்பு விடுத்தது தவறில்லை. முதல்வர் வெளிநாடு சென்றிருந்தாலும் தமிழ்நாட்டை தினந்தோறும் கவனித்துக் கொண்டிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை அரசியலாக்க முயல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
மொடக்குறிச்சி அருகே 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது

மொடக்குறிச்சி அருகே 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர், செல்லாத்தா பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (44). எழுமாத்தூரில் சரஸ்வதி ஆட்டோ கேர் என டூவீலர் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பள்ளிபாளையத்தில் இருந்து எழுமாத்தூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

 வெண்டிபாளையம் மின் கதவணை அருகே சென்ற போது 30 வயது மதிக்கத்தக்க நபர் சாலையின் குறுக்கே நின்று பாலுசாமி மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின் அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி பாலுசாமி பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டார். பாலுசாமி கூச்சலிட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு வந்தனர். 

இதைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். 
இது குறித்து பாலுசாமி மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழிப்பறி தொடர்பாக வெண்டிபாளையம், பால தண்டாயுதம் வீதியைச் சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரனை (33) என்பவரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. 

பிரபாகரன் மீது வழிப்பறி, அடிதடி என பல்வேறு போலீஸ் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் பிரபாகரனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.