திங்கள், 16 செப்டம்பர், 2024

ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 210 மனுக்கள்

ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட 210 மனுக்கள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. 

வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உட்பட, 210 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, ஈரோடு காமாட்சிக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வி நந்திதாவுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், டிஆர்ஓ சாந்த குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் செல்வராஜ் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் சேலம் லோக்கல் சென்டர் சார்பில், பொறியாளர்கள் தினத்தை ஒட்டி 60 நபர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி.

இந்திய இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் சேலம் லோக்கல் சென்டர் சார்பில், பொறியாளர்கள் தினத்தை ஒட்டி 60 நபர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

இந்திய இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் சேலம் லோக்கல் சென்டர் சார்பில், பொறியாளர்கள் தினத்தை ஒட்டி 60 நபர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி.
ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி பாரத ரத்னா ஸ்ரீ விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாள் விழா பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சேலத்தில் இந்திய இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் சேலம் லோக்கல் சென்டர் சார்பில் 57வது பொறியாளர் தினத்தை முன்னிட்டு சேலம் சிவில் இன்ஜினியர் அசோசியேஷனில் நடைபெற்ற விழாவிற்கு அந்த அமைப்பை சேர்ந்த தலைவர் டாக்டர் தங்கராஜ் மற்றும் செயலாளர் டாக்டர் திருமதி தவமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் சேலம்  மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் தொழிலதிபர் ரவிச்சந்தர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை ஏற்றிவைத்தும் பாரத ரத்னா விஸ்வேஸ்வரய்யா அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியும் விழாவினை துவக்கி வைத்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் விழாவை நடத்திய அமைப்பின் சார்பில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 60 சிறந்த பொறியாளர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த சங்கத்தின் தலைவர் தங்கராஜ் செய்தியாளரிடம் கூறுகையில் தமிழக அரசு பொறியாளர்கள் சமுதாயத்திற்கு பல்வேறு சலுகைகளும் நான் முதல்வன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை வழங்கி உள்ளது என்றும் இந்த திட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாகவும் இதற்கு தமிழக அரசு தங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் கோப்பைக்கான கோ-கோ போட்டியில் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம். கேரம் போட்டியிலும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை.

முதலமைச்சர் கோப்பைக்கான கோ-கோ போட்டியில் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம். கேரம் போட்டியிலும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை.




சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

முதலமைச்சர் கோப்பைக்கான கோ-கோ போட்டியில் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம். கேரம் போட்டியிலும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை.

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கோ-கோ போட்டிகள் சூரமங்கலம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து 56 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாடினர். இறுதிப் போட்டியில் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், கே.கே நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியது. இதில் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சர்வேஷ், நந்தா ஆகியோர் இரண்டாம் இடமும், 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தினேஷ்,தருண் ஆகியோர் மூன்றாம் இடமும் பிடித்தனர். தடகள போட்டியில் குண்டு எறிதலில் 12 ஆம் வகுப்பு மாணவன் தாமரைச்செல்வன் முதலிடமும், வட்டு எறிதலில் மூன்றாம் இடமும் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.ஒசூரில் நடைபெற்ற சேலம் மண்டல அளவிலான(சேலம், நாமக்கல்,தருமபுரி,கிருஷ்ணகிரி,ஓசூர்ஆகிய கல்வி மாவட்டம் ) SGFI கோ-கோ தெரிவுப்போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் கபிலன்,காசியப்பன்,   விக்ராந்த், 10 ஆம் வகுப்பு மாணவன் தீபக் , 8 ஆம் வகுப்பு மாணவன்  நாகராஜ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் அரசுப் பள்ளிகளில் அதிக வெற்றிகளை வலசையூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இப்பள்ளி 46 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தலைமையாசிரியர் ஜெயலேந்திரன் தலைமையேற்று நடத்தினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி.பி வைத்திலிங்கம் வாழ்த்துரை வழங்கி பரிசளித்தார்.இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் யோகநாதன் , ஸ்டாலின், அன்பன் டேனியல், ஆசிரியர்கள் ரவி,மணமல்லி மற்றும் இருபால்ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

இன்று ஈரோடு உதயமான தினம்: 153வது பிறந்தநாள் கொண்டாடும் ஈரோடு

இன்று ஈரோடு உதயமான தினம்: 153வது பிறந்தநாள் கொண்டாடும் ஈரோடு

மஞ்சள் மாநகரம் என்றழைக்கப்படும் ஈரோடு 153வது பிறந்தநாளை இன்று (16ம் தேதி) கொண்டாடுகிறது. இந்த நாளைப் போற்றும் வகையில், ஈரோடு பற்றிய சில சுவாரசியமான செய்திகளை பார்ப்போம்.
ஈரோடை ஈரோடாக மாறியது:- 

ஈரோட்டில் பெரும் ஓடைகளாக விளங்கும் பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை ஆகிய 2 ஓடைகளின் நடுவே அமைந்த ஊர் ஈரோடு என்பதும், ஈரோடை என்று அழைக்கப்பட்ட பகுதி பிற்காலத்தில் மருவி ஈரோடு என ஆனதாகவும் காரணப்பெயர் கூறப்படுகிறது. சோழர் காலக் கல்வெட்டு ஈரோடான மூவேந்த சோழச் சதுர்வேத மங்கலம் என்று, ஈரோடு மறந்தை, உறந்தை, மயிலை, கபாலபுரி என்ற பெயர்களையும் பெற்றதை தலபுராணம் கூறுகிறது.

பண்டைய கோட்டை, பேட்டை என்று 2 பகுதிகளை கொண்டிருந்த ஈரோடு, கிழக்கு பகுதி பேட்டை, மேற்கு பகுதி கோட்டை என்று அழைக்கப்பட்டது. பண்டைய ஈரோடு கொங்கு 24 நாடுகளில் ஒன்றான பூந்துறை நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. 1804ல் கோயம்புத்தூர் மாவட்டம் உருவானபோது பெருந்துறை தாலுகாவுக்கு சேர்ந்த ஒரு கிராமமாக ஈரோடு இருந்தது . பின்னர், 1868ல் ஈரோடு தாலுகா ஏற்பட்டு தாலுகா தலைநகரானது.

ஈரோடு நகரம் பிறந்தது:-

1871ம் ஆண்டு ஈரோடு நகரம் தனித்துவம் பெற்றது. ஏ.எம்.மெக்ரிக்கர் என்பவர் தலைமையில் ஈரோடு நகர பரிபாலன சபை 1871ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதியன்று உருவாக்கப்பட்டது. ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு விதை நடப்பட்ட நாளாக நகர பரிபாலன சபை உருவாக்கப்பட்ட இந்த நாள் ஈரோடு நகரின் பிறந்த நாளாக பதிவானது. நகர பரிபாலன சபையின் முதல் தலைவர் ஏ.எம்.மெக்ரிக்கர் உடன் 7 நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

பின்னர் பல்வேறு தலைவர்கள் ஈரோடு நகரின் வளர்ச்சிக்கு உரமூட்டினார்கள். 1904ம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகள் அந்தோணி வாட்சன் பிரப் ஈரோடு நகர பரிபாலன சபை தலைவராக இருந்த போது, மாட்டு வண்டி பாதைகளாக இருந்த ஈரோட்டின் முக்கிய சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டு பெரிய ரோடுகளாக மாற்றப்பட்டன.

ஈரோடு நகருக்கு மாநகராட்சி என்ற கனவை விதைத்தவர் தந்தை பெரியார். அவர் 3 ஆண்டுகள் (1917 முதல் 1920) ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்தபோது ஈரோட்டையும், வீரப்பன்சத்திரத்தையும் இணைத்து மாநகரமாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். அவரது கனவை 90 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நனவாக்கினார். 2009-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக ஈரோடு உள்ளது. தற்போதைய ஈரோடு மாநகரம் 110 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
மஞ்சள் மாநகர்:-

ஈரோடு மஞ்சள் மார்க்கெட், இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜவுளி உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது. விசைத்தறியில் முன்னணியில் உள்ளது. மத்திய, மாநில உதவியுடன் ஆசியாவிலேயே மிகப் பெரிதாக ஈரோடு சித்தோட்டில் கட்டப்பட்டுள்ள டெக்ஸ்வெலி ஜவுளி விற்பனை மையம் ஈரோட்டில் உள்ளது. எண்ணெய் உற்பத்தி, லாரி போக்குவரத்தும் சிறப்பாக நடக்கிறது. தோல் தொழில் பெரிய அளவில் நடக்கிறது. புகழ் பெற்ற பெரிய பல்துறை மருத்துவமனைகள் பல ஈரோட்டில் உள்ளன.

ஈரோடு தினம்:-

இப்படி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த ஈரோடு மாநகரின் நகர பரிபாலன சபை உருவாக்கப்பட்ட செப்டம்பர் 16ம் தேதி ஈரோடு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்பது மறைந்த கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராகவின் ஆசையாகும். அதன்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 16ம் தேதியை பல்வேறு பொது அமைப்பினர் ஈரோடு தினமாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி, இன்று (திங்கட்கிழமை) ஈரோடு தினமாகும்.
116வது பிறந்தநாள்: ஈரோடு நினைவகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ஆட்சியர் மரியாதை

116வது பிறந்தநாள்: ஈரோடு நினைவகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ஆட்சியர் மரியாதை

ஈரோடு மாநகராட்சி பெரியார் வீதியில் உள்ள பெரியார்- அண்ணா நினைவகத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் பெரியார் வாழ்ந்த இல்லம் நினைவகமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பெரியார்-அண்ணா நினைவகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள் மற்றும் அன்பளிப்பு நூல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெரியாரின் பத்திரிக்கை நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா பணியாற்றிய போது அவருக்கு பெரியார் இல்லத்தில் பேரறிஞர் அண்ணா, தங்குவதற்கு இடம் அமைத்து கொடுத்திருந்தார். அண்ணா ஈரோடு மாவட்டத்தில் இருந்த காலத்தில் வாழ்ந்து வந்த அந்த இல்லமானது பெரியார் நினைவு இல்லத்துடன் சேர்ந்தே உள்ளது.

அந்த இல்லத்தில் அண்ணா எழுதுவதற்கு பயன்படுத்திய மேசை, நாற்காலி, அரிக்கேன் விளக்கு, அந்த வீட்டின் சமையற்கூடம் ஆகியவை அதே நிலையில் பாதுகாப்பாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும், செப்டம்பர் 15ம் தேதி தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று (15ம் தேதி) பெரியார்- அண்ணா நினைவகத்தில் நடைபெற்ற அண்ணா 116வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ்.என், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், ஈரோடு மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பி.கே.பழனிசாமி, தண்டபாணி, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கலைமாமணி, உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அந்தியூரில் காரை விற்று போலி சாவி மூலம் திருடிய புரோக்கர் உள்பட 2 பேர் கைது

அந்தியூரில் காரை விற்று போலி சாவி மூலம் திருடிய புரோக்கர் உள்பட 2 பேர் கைது


ஈரோடு மாவட்டம் அந்தியூர் பி- பிளாக் காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர் சபி (வயது 38). இவர், அண்ணாமடுவில் இரும்பு மற்றும் ரோலிங் சாட்டர் செய்யும் இன்டஸ்டிரியல் கடை நடத்தி வருகின்றனர். இவர், பைனான்ஸ் மூலம் வாங்கிய காரை கடையின் முன்பு கடந்த 12ம் தேதி இரவு நிறுத்தி வைத்திருந்தார். 13ம் தேதி காலை சென்று பார்த்தபோது, அந்த கார் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். 

பின்னர், இதுகுறித்து அவர் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், பவானி உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி, காரில் இருந்த 2 பேரை பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர். 

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் குந்துபாயூரைச் சேர்ந்த காதர் பாட்சா (வயது 40), நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையைச் சேர்ந்த ரசித் (வயது 29) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும், இதில் காதிர் பாட்சா சபிக்கு காரை விற்க புரோக்கராக செயல்பட்டதும், போலி சாவி மூலம் திருடியதும், ரசித் இதற்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.


சனி, 14 செப்டம்பர், 2024

சேலத்தில் தனது வீட்டின் அருகே நடைபெறும் வார்டு கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் தனது வீட்டின் அருகே நடைபெறும் வார்டு கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

வீட்டின் அருகே நடைபெறும் வார்டு கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சேலம் மாநகராட்சி 15 வது வார்டு கூட்டம் இன்று நடைபெற்றது. பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் இல்லத்திற்கு அருகாமையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று கூட்டத்திற்கு சென்று கண்டனம் தெரிவித்தார். அப்போது மாநகராட்சி ஊழியர்களை தன்னை ஏன் அழைக்கவில்லை மக்கள் பிரச்சனையை பேச நான் வரக்கூடாதா என்று கண்டித்தார்
இதனிடையே கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் திமுகவை சேர்ந்த உமாராணி அருள் கேள்வி எழுப்பியதற்கு மறுப்பு தெரிவித்து பேச தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போகவே அருள்  தரையில அமர்ந்து போராட்டம் நடத்தினார். மக்கள் பிரச்சனையை தீர்க்க அனைவரையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம் ஆனால் முதலமைச்சரை அவமதிக்கும் நோக்கத்தோடு திமுகவினர் செயல்படுவதாக அருள் குற்றம் சாட்டவே இது என்னடா வம்பாப்வே போய்விட்டது என்று சுதாரித்துக் கொண்ட உமாராணி தானும்  அருளுடன் தரையில் அமர்ந்து குரல் எழுப்பினார்
இதானால் கூட்டத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.