செவ்வாய், 24 செப்டம்பர், 2024

அகில பாரதிய வித்யாத்ரி பரிசத்  ABVP சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்  யுவராஜ் மற்றும் மாநில இணைச் செயலாளர் எழில் வேந்தன் ஆகியோர்  கலந்துக்கொண்ட செய்தியாளர் சந்திப்பு சேலத்தில் நடைபெற்றது.

அகில பாரதிய வித்யாத்ரி பரிசத் ABVP சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் யுவராஜ் மற்றும் மாநில இணைச் செயலாளர் எழில் வேந்தன் ஆகியோர் கலந்துக்கொண்ட செய்தியாளர் சந்திப்பு சேலத்தில் நடைபெற்றது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

அகில பாரதிய வித்யாத்ரி பரிசத் ABVP சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்  யுவராஜ் மற்றும் மாநில இணைச் செயலாளர் எழில் வேந்தன் ஆகியோர்  கலந்துக்கொண்ட செய்தியாளர் சந்திப்பு சேலத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், சேலத்தில் நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 75 ஆண்டுகளாக கல்வித்துறையில் தேசிய மறுமலர்ச்சி கொள்கைகளை முன்னிறுத்தி அகில பாரத அளவில் இயங்கி வரும் தேசிய மாணவர் அமைப்பு. தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் ABVP கிளைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் ABVPயின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும், இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ தலைவர்கள் பல்வேறு வளாகங்களின் பிரதிநிதிகளாக கலந்துகொண்டு தமிழகத்தில் நிலவிவரும் கல்வித்துறை மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மாநில அளவில் ABVPயின் கூட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக மாநில செயற்குழுகூட்டம் கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மாநில செயற்குழு கூட்டம் - 2024 வருகின்ற செப்டம்பர் 28 & 29 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர் மரவனேரி பகுதியில் அமைந்துள்ள மாதவம் மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ தலைவர்கள் தமிழகத்தின் கிட்டத்தட்ட 100 கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டு தமிழகத்தில் நிலவிவரும் கல்வித்துறை, போதைப்பொருள் புழக்கம் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து மூன்று விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநிலச் செயற்குழு கூட்டத்தில் ABVPயின் தேசிய இணை அமைப்புச் செயலாளர் திரு. S. பாலகிருஷ்ணா  அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். இரண்டு நாள் நடக்கவுள்ள இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதுடன் அமைப்புரீதியாக அடுத்து வரவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை கொண்டு வந்தால், அமல்படுத்த தயார்: அமைச்சர் முத்துசாமி

மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை கொண்டு வந்தால், அமல்படுத்த தயார்: அமைச்சர் முத்துசாமி

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் ஈரோடு மாநகராட்சியும், ஈரோடை அமைப்பும் இணைந்து  படர்ந்து உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணியை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி இன்று (24ம் தேதி) தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதுக்கடைகள் மூட வேண்டும் என்ற கொள்கையில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

ஆனால் மது விற்பனை அதிகரித்து வருவதாக தமிழக அரசு மீது தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நடைமுறையில் ஒரே நாளில் மதுக்கடைகளை பிரச்சனை ஏற்படும். மதுக்கடை மூடிய பிறகு அருகில் உள்ள மற்றொரு மது கடைக்கு மது குடிப்பவர்கள் செல்வதால் விற்பனை அதிகமாக உள்ளது. இதுகுறித்து துறை ரீதியாக விழிப்புணர்வு, ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது. கண்டிப்பாக செய்வோம். கிராமங்களில் மதுக்கடைகள் வேண்டாம் என கிராம மக்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 

அகில இந்திய அளவில் மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை கொண்டு வந்தால் அதனை செய்ய தயாராக இருக்கிறோம். அதற்கு முன்பு முதல்வர் மதுக்கடைகள் மூடுவது குறித்து கணக்கு கேட்டு வந்துள்ளார். மதுக்கடைகள் மூடுவது குறித்து கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம். விரைவில் பட்டியல் தெரியப்படுத்துவோம். பள்ளியில் மது குடிப்பது தவறான பழக்கம். இது குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறோம்.

வீட்டுமனைகள் வரைமுறை படுத்த போதுமான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கால அவகாசம் வழங்கப்படாது. சென்னையில் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது. 

வீடுகள் தேவை பொறுத்து தான் வீடுகள் கட்ட கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.5 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆகாமல் உள்ளது. தரமற்றது, விலை உயர்வு போன்ற காரணங்களால் வீடுகள் விற்பனை ஆகாமல் தான் உள்ளது. 

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை திருட்டுத்தனமாக எடுப்பது குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்து திமுக தலைவரும்,முதலமைச்சருமான ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார் என கூறினார்.

உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் மரு.மனீஷ், ஈரோடை அமைப்பின் தலைவரும், சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் கே சுதாகர், துணை மேயர் வே.செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

திங்கள், 23 செப்டம்பர், 2024

கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் முடிவை கைவிட கோரி ஆட்சியரிடம் மனு

கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் முடிவை கைவிட கோரி ஆட்சியரிடம் மனு

கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு கொடுத்தனர்.

இதுதொடா்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.மாணிக்கம் ஆகியோருடன் கவுந்தப்பாடி ஊராட்சியை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) அளித்த மனு:-

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கவுந்தப்பாடி கிராம ஊராட்சி. இங்கு சுமார் 6,000 விவசாய தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை அட்டை பெற்றுள்ளனர். நிலையில் இந்த கிராம ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட விவசாய தொழிலாளர்கள் தங்களது கிராம ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்த கூடாது என வலியுறுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். மேலும் வீட்டு வரி சொத்து வரி குடிநீர் வரி உயர்வில் இருந்து தங்களை விடுபடும் வகையில் பேரூராட்சி ஆக்கும் முடிவை கை விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

அருந்ததியர் உள்ளோதிக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் உட்பட எதிராக செயல்படும் தலித் தலைவர்களை கண்டித்து சேலத்தில் அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

அருந்ததியர் உள்ளோதிக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் உட்பட எதிராக செயல்படும் தலித் தலைவர்களை கண்டித்து சேலத்தில் அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அருந்ததியர் உள்ளோதிக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் உட்பட எதிராக செயல்படும் தலித் தலைவர்களை கண்டித்து சேலத்தில் அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம். 

அருந்ததியர் 3% உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் இட ஒதுக்கீட்டு உரிமையில் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கின்ற வகையிலும் உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுசேராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை கண்டித்தும், இதற்கு எதிராக செயல்படும் தலித் தலைவர்களை கண்டித்தும், அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
அமைப்பின் வழக்கறிஞர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பிரதாபன் முனுசாமி உள்ளிட்டர் முன்னிலை வகித்தனர். 
அருந்ததியர் இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்ப நீ ரத்து செய்ய வலியுறுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், மறுசீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். 
இந்த போராட்டம் குறித்து அருந்ததியர் மக்கள் இயக்க பொதுச் செயலாளரும், அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்தவருமான  வழக்கறிஞர் பிரதாபன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் முதற்கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்தபடியாக மாநில அளவில் அருந்ததியர் மக்களை திரட்டியும், அருந்ததியர் மக்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் காந்தி, ரவி சின்னதுரை இளையராஜா செல்வராஜ் ஜெயக்குமார் சரவணபிரபு உலகநாதன் சித்தேஷ் துரை மாதேஷ் கல்யாணசுந்தரம் சதீஷ்குமார் தாரணி முகிலன் தூயவன் பாலகிருஷ்ணன் விக்னேஷ் வழக்கறிஞர்கள் திரளானூர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.24) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.24) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் சிப்காட் -I, பூனாச்சி துணை மின் நிலையங்களில் நாளை (செப்டம்பர் 24) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பெருந்துறை அருகே உள்ள சிப்காட் -I துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், திருவேங்கிடம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானிரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர் மற்றும் மாந்தம்பாளையம்.

பவானி அருகே உள்ள பூனாச்சி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஊஞ்சப்பாளையம், செல்லிக்கவுண்டனூர், மூணாஞ்சாவடி, முளியனூர், பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர், நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு, தோப்புதோட்டம், தோப்புகாட்டூர், கொண்டையன்கொட்டாய், பெத்தகாபாளையம், ஒலகடம், எட்டிகுட்டைபாளையம், ஒட்டபாளையம், கே.கே.பாளையம், குங்குமப்பாளையம், வெடிக்காரன்பாளையம், கூச்சிகல்லூர், செம்படாபாளையம், தர்கா, குறிச்சி, பழனிவேல்புரம், குருவரெட்டியூர், அம்மாபேட்டை, பூசாரியூர், முகாசிப்புதூர், சமயதாரனூர், கெம்மியம்பட்டி, ஆனைக்கவுண்டனூர், பி.கே.புதூர், தண்ணீர்பந்தல் மற்றும் செம்முனிசாமி கோவில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 17 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 74 போலீசார் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 17 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 74 போலீசார் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் போலீசார் விருப்ப பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி, 17 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 32 தலைமை காவலர்கள் மற்றும் முதல்நிலை காவலர்கள் உள்பட மொத்தம் 74 போலீசாரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோடு சூரம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், ஆசனூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் சத்தியமங்கலம் கண்காணிப்பு கேமரா அறைக்கும், தாளவாடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் பவானிசாகர் காவல் நிலையத்துக்கும், கருங்கல்பாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நாராயணசாமி ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல், அறச்சலூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குப்புசாமி மலையம்பாளையம் காவல் நிலையத்துக்கும், தாளவாடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன் பர்கூர் காவல் நிலையத்துக்கும், ஈரோடு நகர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மோகன்ராஜ், செந்தில்குமார் ஆகியோர் மலையம்பாளையம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல், ஈரோடு தாலுகா சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜகாங்கீர் பாஷா ஈரோடு வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும், கருங்கல்பாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமார் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும், பவானிசாகர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூர்ணசந்திரா சித்தோடு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும், கவுந்தப்பாடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூபாலசிங்கம் பர்கூர் காவல் நிலையத்துக்கும், ஈரோடு சூரம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன் மொடக்குறிச்சி காவல் நிலையத்துக்கும், ஈரோடு தாலுகா சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனலட்சுமி ஈரோடு மகளிர் காவல் நிலையத்துக்கும், ஈரோடு சூரம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அம்பிகா சிவகிரி காவல் நிலையத்துக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல், மாவட்டத்தில் 32 தலைமைக் காவலர்கள் மற்றும் முதல்நிலை காவலர்கள் உள்பட மொத்தம் 74 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.