சனி, 5 அக்டோபர், 2024

ஈரோட்டைச் சேர்ந்த இருவரிடம் ஆன்லைனில் ரூ.40 லட்சம் மோசடி: கேரளா வாலிபர் கைது

ஈரோட்டைச் சேர்ந்த இருவரிடம் ஆன்லைனில் ரூ.40 லட்சம் மோசடி: கேரளா வாலிபர் கைது

ஈரோடு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் ஆன்லைன் வழியாக முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ரூ.23 லட்சத்தை இழந்தார். இதே போல் ஈரோடு சம்பத்நகரை சேர்ந்த ராம்குமார் ஆன்லைன் வழியாக முதலீடு செய்து ரூ.17 லட்சத்தை இழந்தார்.
இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், இவ்விரு வழக்குகளின் முக்கிய குற்றவாளி கேரள மாநிலத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க, காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் பாரதிராஜா, காவலர்கள் கவுரிசங்கர், புவனேஷ்குமார், பூவழகன் ஆகியோர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவினர் கேரள மாநிலத்துக்கு விரைந்து சென்று மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியை சேர்ந்த ஜாகீர்கான் (வயது 32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், ஆன்லைன் மூலம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் நாளை (6ம் தேதி) 6 மணி நேரம் மின்தடை

ஈரோட்டில் நாளை (6ம் தேதி) 6 மணி நேரம் மின்தடை

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 6) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இதனால், நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலைய ஆட்சியர் அலுவலக மின் பாதை (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை):- 

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:- டீச்சர்ஸ் காலனி பேருந்து நிறுத்தம், பெருந்துறை ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட நீதிமன்ற அலுவலக வளாகம் மற்றும் தியாகி குமரன் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 3.57 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில் 53 பேருக்கு புற்றுநோய்

ஈரோடு மாவட்டத்தில் 3.57 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில் 53 பேருக்கு புற்றுநோய்

தமிழ்நாடு அரசின் சட்டமன்ற அறிவிப்பின்படி ஈரோடு மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் பொதுவான புற்றுநோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய மூன்று விதமான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை குறைத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உறுதுணை புரிவதே ஆகும்.

18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனையும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனையும், பொது மக்கள் பணிபுரியும் இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் அரசு மருத்துவ குழுவினர், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாக முகாம் அமைத்து அரசால் இலவசமாக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மையங்கள் உட்பட 198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவசமாக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி முகாம்களுக்கு மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி சென்று அனைவரையும் முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.

பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அரசு மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளிலும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படுகின்றனர். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 4,23,478 நபர்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனைக்கும், 2,21,765 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கும். 2,21,816 நபர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 2,08,699 நபர்களில் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு, இதில் 22 பேருக்கு வாய் புற்றுநோயும். 86,063 பேருக்கு மார்பக புற்றுநோய்க்காக பரிசோதனை செய்யப்பட்டு, இதில் 22 பேருக்கு மார்பக புற்றுநோயும், மேலும், கர்ப்பப்பை புற்றுநோய்க்காக 62,880 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 9 பேருக்கு நோயும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோய் வருவதற்கு புகையிலை பழக்கம், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு பார்சல் செய்யப்பட்ட சூடான உணவுகள் உட்கொள்ளுதல், பயன்படுத்திய எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்கள், வேதிப்பொருள் பயன்பாடுகளாலும், நுண்கதிர் வீச்சு படுதல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களாலும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மருத்துவ முன்பரிசோதனைகள் மற்றும் மனஅழுத்தம் இல்லா வாழ்வியல் முறை, சரியான உணவுப் பழக்கவழக்கம், யோகா போன்றவை கடைபிடிப்பது அவசியமாகும். உணவுப் பழக்க வழக்கங்களில் அதிகமாக காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொது மக்களும், இல்லம் தேடி வரும் மருத்துவப் பணியாளர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை பெற்று தங்கள் பகுதிக்கு அருகில் நடைபெறும் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை திட்ட மையங்களை அணுகி, புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இப்பரிசோதனைகளை மேற்கொண்டு தங்கள் இன்னுயிரை புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை திட்டத்தின் கீழ் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை பெற்று வரும் லட்சுமி (வயது 60) தெரிவித்துள்ளதாவது.

நான் ஈரோடு மாவட்டம், செங்கோடம்பாளையத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு நீண்ட நாட்களாக கை வலி இருந்து கொண்டே இருந்தது. கை தூக்குவது கூட சிரமமாக இருந்தது. இதனால் எனது அன்றாட வேலைகளை செய்வது கூட இயலாமல் இருந்தது. இந்நிலையில் எங்கள் பகுதியில் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சென்று எனது பிரச்சனைகளை கூறினேன். உடனடியாக மருத்துவர்கள் எனக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் எனக்கு மார்பக புற்றுநோய்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்து, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைந்தனர். அங்கு மீண்டும் எனக்கு பரிசோதனை செய்து, மார்பக புற்றுநோய்க்கு இருப்பதை உறுதி செய்தனர். மேலும், தற்பொழுது புற்று நோய்க்கான சிகிச்சையினை மேற்கொண்டு வருகிறேன். நீண்ட நாட்களாக எனக்கு இருந்த தொந்தரவிற்கு மருத்துவமனைக்கு செல்வதற்கே தயக்கமாக இருந்தது.

இந்நிலையில் நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கே வந்து மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, மேல்சிகிச்சைக்கான வழிமுறைகளை அளித்து, தயக்கங்களை போக்கி நோய் தொற்றின் வீரியங்களை உணர்த்தும் வகையில், இதுபோன்ற திட்டங்களை வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
OCT-2, காந்தி பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

OCT-2, காந்தி பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 


OCT-2, காந்தி பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி. 

ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் தேதி  தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா ஒரு வார காலம் சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நாள் தோறும் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்று வந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை விமர்சனம் செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 
சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ராஜாஜி திருவுருவ சிலை அருகே நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மற்றும் அமைதி பேரணிக்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் மௌன ஊர்வலம் ஆனது செவ்வாய்பேட்டையின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக செவ்வாய்பேட்டை தேர்வு நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திரு உருவ சிலை அருகே நிறைவு பெற்றது. இதனை எடுத்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலரும் மகாத்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இந்த அமைதி பேரணியை நிறைவு செய்தனர். 
இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் சாரதா தேவி, மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன், மாநகர துணை தலைவர் திருமுருகன் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் எஸ்சி துரை விஜய் ஆனந்த் மாநகர பொது செயலாளர் கோபி குமரன் குமரேசன் மொட்டையாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பச்சைப்பட்டி பழனி வசந்தம் சரவணன் விவசாயப் பிரிவு தலைவர் சிவக்குமார் மண்டலத் தலைவர்கள் சாந்தமூர்த்தி நிஷார் அஹமது கோவிந்தராஜ் ராமன் நாகராஜ் நடராஜ் கந்தசாமி மோகன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
புரட்டாசி 3-வது சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு  சிறப்பு ராஜ அலங்காரம்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு சிறப்பு ராஜ அலங்காரம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

புரட்டாசி 3-வது சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு  சிறப்பு ராஜ அலங்காரம்.

தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி மாதம் திருவேங்கடமுடையானுக்கு உகந்த மாதம் ஆக கருதப்படுகிறது. இதனை ஒட்டி தமிழ் மாதங்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை ஆனது இன்று  சேலம் அருகே உள்ள பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி இரண்டாம் வார சிறப்பு பூஜைகள் பக்த கோடிகள் ஆசீர்வாதத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. 
3-வது சனிக்கிழமையை  ஒட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் உற்சவருக்கு மங்களப் பொருட்களைக் கொண்டு அதிகாலை முதலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கு 
சிறப்பு ராஜ அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 
தொடர்ந்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை சிறப்பு பூஜையில் பெரிய புதூர் சின்ன புதூர் அழகாபுரம் நான்கு ரோடு 5 ரோடு உள்ளிட்ட சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். சேலம் பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது சனிவார பூஜையில் டிரஸ்ட் நிர்வாகிகள், சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக அரசு மிக விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் வாயிலாக யாருக்கு எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு என்பதனை நிர்ணயிக்க வேண்டும். சேலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் பேட்டி.

தமிழக அரசு மிக விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் வாயிலாக யாருக்கு எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு என்பதனை நிர்ணயிக்க வேண்டும். சேலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் பேட்டி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக அரசு மிக விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் வாயிலாக யாருக்கு எவ்வளவு சதவிகித இட ஒதுக்கீடு என்பதனை நிர்ணயிக்க வேண்டும். சேலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் பேட்டி.

ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கடந்த 2009 ல அருந்ததியர் மக்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு மூன்று விழுக்காடு வழங்கி அது இன்று வரைக்கும் நடைமுறையில் இருந்து கொண்டிருப்பது அதை எதிர்த்து ஒரு சிலர் வந்து வழக்கு தொடர்பாக  மன்றத்துக்கு போனார்கள். அந்த வழக்கு தமிழ்நாட்டு உடைய உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் ஏழு பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது செல்லும் மாநில அரசுக்கு உள்ளிட ஒதுக்கீடு  வழங்குவதற்கான அதிகாரம் இருக்கிறது.  இன்னும் கூடுதலாக நல்ல தரவுகளை சேகரித்து இன்னும் பின்தங்கியுள்ள ஒரு சில சமூகங்களுக்கும் அப்படிப்பட்ட உள்ளிட ஒதுக்கீடுகளை வழங்கலாம் என்று தீர்ப்பு கொடுத்தது என்று அதியமான் தெரிவித்தார்.
அதேபோல கடந்த கடந்த காலத்தில் கொடுக்கப்பட்ட அந்த தீர்ப்பு செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி வந்த பிறகு கடந்த 30ஆம் தேதி அன்று தமிழ்நாட்டினுடைய விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமாவளவன் அவர்கள் அதை எதிர்த்து ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தான் அந்த தீர சீராய்வு மனுவுக்கு,  நேற்றைக்கு அதையே வந்து அந்த சீராய்வு  மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தினுடைய அதே அமர்வு நேற்றைக்கு தீர்ப்பு வழங்கிருக்கிறது. ஆக தமிழ்நாட்டு தந்தை பெரியார் அவர்களுடை சமூக நீதியின் உடைய பாதையில இந்த தீர்ப்பு என்பது ஒரு உண்மையிலே விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றார். அதே நேரத்தில் அவர்களோடு உரிமை நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்பதை தான் இந்த தீர்ப்பு இன்றைக்கு தீர்ப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டுல கடந்த பத்தாண்டுகளாக மேடைகளிலே சமூக நீதியை பற்றியும் அதேபோல விழிப்பு நிலை மக்கள் பற்றியும் இன்னும் பல்வேறு விதைகளும் மேடையிலே சமூக நீதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்த சில தலைவர்களுடைய உண்மையான முகம் என்னவென்று இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் விளிம்பு நிலை மக்களுக்கு சாதகமாக இல்லை அவர்கள் ஆதிக்க தலித் மக்களுக்காக இருக்கிறார்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய நடவடிக்கை மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்த தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு அரசு வழங்கப்பட்ட அந்த உள்ள இட ஒதுக்கீடு என்பது நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.  என்பது மட்டுமல்ல இதன் மூலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கிற அருந்ததியர் மக்கள் மீண்டும் அதை நிலை நாட்டுவதற்குரிய வாய்ப்பு இன்றைக்கு கிடைத்திருக்கிறது . ஆதித்தமிழர் பேரவை சார்பிலே நாம் இன்னும் சில கோரிக்கைகளை வைக்க இருக்கிறோம். அது என்ன கோரிக்கை என்று சொன்னால் இதுவரைக்கும் நமக்கு உள்ளட ஒதுக்கீடு 15% தில் மூன்று விழுக்காடு தான் என உள்ள இட ஒதுக்கீடு  வழங்கப்பட்டிருக்கிறது. அதையே இவர்கள் முடியாது என்று அதை எதிர்த்து  தமிழ்நாட்டில் இருக்கிற ஆதிக்க தலித்கள் எதிர்த்து பிரச்சினைகள் செய்தார்கள்.  இப்ப நாம என்ன கேட்க போறேன்னா ஒட்டுமொத்த முழு 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் கேட்டகிரி சேஷம் வகைப்படுத்துதல் ஒட்டுமொத்தமும் வகைப்படுத்த யார் முன்னேறி இருக்காங்க யார் முன்னேறில் அப்படிங்கறத இந்த அரசு மிக விரைவில சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து அதன் மூலம் கண்டுபிடிச்சு இந்த கேட்டகிரி சேஷம் முன்னேறியவர்களுக்கு இவ்வளவு பர்சன்ட் பின்தங்கி இருக்கிறவர்களுக்கு இன்னும் எவ்வளவு பெர்ஸண்டா என்பதை தமிழ்நாடு அரசு மிக விரைவிலே நிர்ணயிக்க வேண்டும். என்றும் தெரிவித்தார்.
வெறும் 3% துடன்  நிற்க கூடாது, ஒட்டு மொத்த 18% அந்த வகைப்படுத்துதலுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன்னா இப்போ தமிழ்நாட்டுல மொத்தம் மூணு ஜாதிங்க பல்லர் பறையர் மற்றும் அருந்ததியினர் 3 சாதி இருக்கிறது.  ஒவ்வொரு சாதிக்கும் ஏழு பேர் கொண்ட குழு இருக்குங்க அவங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே ஏழு பேர் தான்.  ஒரு சாதி என்ன ஏழு பேரும்தான் அது குழு அருந்ததியினருக்கு  2009 க்கு முன் தமிழ்நாட்டிலேயே யார் யாரெல்லாம் எப்படி இருந்தார்கள் எந்தந்த சாதி அவர்களுடைய நிலைப்பாடு என்ன அரசுல அவங்களுடைய பதவிகள் என்ன அதிக அரசியல்ல எம்எல்ஏ எம்பி இன்னும் பல்வேறு மேயர் இன்னும் என்னென்ன பதவிகள் இருக்கோ யார் யார் எவ்ளோ இருக்கிறார்கள் என்றும், அதேபோல அரசாங்க பதவிகள்ல எவ்வளவு ஐபிஎஸ் இருக்காங்க எவ்வளவு இருக்காங்க எவரும் டி.ஆர்.ஓ இருக்கிறாங்க எவ்வளவு தாசில்தார் இருக்காங்க எவ்வளவு நீதிபதி இருக்காங்க எவ்வளவு மருத்துவர்கள் இருக்காங்க எவ்வளவு பொறியாளர்களுக்கும் 2003 எவ்வளவு எடுத்தாங்க இப்ப 2009க்கு பிறகு எவ்ளோ எடுத்து இருக்காங்க புள்ளி விவரம் எடுத்து அதன் பிறகு மீண்டும் இதை பக்காவா வகைப்படுத்தி கொடுக்க வேண்டும் ஏன்னா இப்ப 10 புள்ளி வாங்கி கொடுக்க வேண்டும் என்று வன்னியர் சமுதாயம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அப்போ அவங்கள பார்க்கும்போது இப்ப புள்ளி ஒரு செய்தி என்ன வந்திருக்கிறது. என்று சொன்னால் அவங்க அரசாங்கத்துல 10.5க்கு மேல் இப்பவே அவர்கள் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் வந்திருக்கிறது.  ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே மீண்டும் அனுபவிக்கிற அந்த சூழல் பட்டியலிட மக்களிலும் இருக்கிறார்கள் அப்படி இருக்கிறார்கள் உண்மையிலே அனுபவிப்பவர்களே மீண்டும் மீண்டும் அனுபவிப்பதை தடுத்து பாதிக்கப்பட்டு  இருக்கிறாங்களா அவங்களுக்கு அந்த வாய்ப்பு தர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கு இந்த அரசு ஒரு கமிஷன் நியமிக்க வேண்டும். நியமிக்கும் ஒரு கமிஷன் எப்படி அன்றைக்கு உள்ளிட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாண்புமிகு ஜனார்த்தனன் கமிஷன் என்கிற ஒரு நீதிபதியை நியமித்து ஒரு அறிக்கை கொடுத்தார்கள் அதேபோல இப்போதும் ஒரு புள்ளி ஒரு எடுத்து யார் யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் இதுவரைக்கும் யார் யார் அனுபவிச்சிட்டு இருக்காங்க இதுவரைக்கும் அது தொடாதவர்கள் அந்த அரசு பெரிய பத விகளை யார் அதெல்லாம் கண்டுபிடிச்சு அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதுதான் ஆதித்தமிழர் பேரவைனுடைய கோரிக்கை என்றும் தெரிவித்தார் அதியமான். இதில் என்னன்னா விளிம்பு நிலை மக்களிடம் யார் இருக்கிறார்கள் எளிய மக்களுக்கும் அதிகாரம் அப்படின்னும் மேடையில நிறைய  தலைவர்கள் எல்லாம் பேசுனாங்க அப்ப எளிய மக்களுக்கு அதிகாரங்கள் போது இப்ப எளிய மக்கள்கிட்ட எந்த தலைவரும் நிக்கல எல்லாம் வந்து அது ஆதிக்க ஜாதி பட்டியல் இன மக்களோடு தான் அந்த தலைவர்கள் நிற்கிறார்கள். ஆக அவர்கள் மேடையில் பேசுவது ஒன்று நடைமுறையில் அவர்கள் நடந்து கொள்வது இன்னொன்று என்பதை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கு இன்றைக்கு வெளிச்சம் போட்டு இந்த நடவடிக்கைகள் காட்டி இருக்கிறது. திருமாவளவன் குறித்த கேள்விக்கு ,  உண்மை கூட்டணிக்குள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்குங்க அது அவங்க செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் இதுல வந்து கூட்டணியில் பயணித்துக் கொண்டே கூட்டணியினுடைய ஒரு அரசு ஏற்படுத்திய கூட்டணி அரசு தான். அந்த உள்ளிட ஒதுக்கீடு  கொடுத்தது அதை எதிர்த்தே ஒரு ரிவ்யூ பெட்டிஷன் போடுகிற ஒரு கூட்டணியாக அவரும் பயணிச்சிட்டு இருக்காரு அவங்களுக்கு அத பத்தி எல்லாம் கவலை இல்லைங்க,  வாய்ப்பு பார்த்துக்கிட்டே இருப்பாங்க எங்கே அதிகமான வாய்ப்பு இருக்கிறதோ அங்க போறதுக்கான ஒரு முயற்சி அவங்க எடுத்துட்டு இருப்பாங்க அவங்க விருப்பங்கள் அதை நம்ம இன்னும் சொல்ல முடியாது. எளிய மக்களுக்கும் அதிகாரம் எளிய மக்களுக்கு கூட நான் நினைக்கிறேன் எல்லாத்துக்கும் நான்தான் தலைவர் என்கிற அந்த பிம்பம் இன்றைக்கு உடைந்துவிட்டது எல்லா மக்களுக்கும் தலைவர் நிச்சயமாக கிடையாது. இங்க எல்லாம் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தலைவரும் இரண்டு மூன்று தலைவர்களும் நாலு அஞ்சு தலைவர்களோ இருக்கிறார். ஆக அவர் அப்படி இனிமேல் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இறுதியாக, தமிழக அரசு கொடுத்ததற்கும் அதை பாதுகாத்ததற்கும் மீண்டும் அதை நிலை நிறுத்தியதற்கும் எல்லாம் சேர்த்து மாற்றி தமிழகம் முதல்வர் அவர்களுக்கு அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்றி பாராட்டுகிற ஒரு விழாவை முதல்வர் அவர்களை வைத்து இந்த மேற்குத் தளத்தில் நடத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம் மிக விரைவில் அது நடக்கும் என்றும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் தெரிவித்தார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2024

தூய்மை பணி மேற்கொள்ளும் அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரசஸ்ராம் ரவி வலியுறுத்த

தூய்மை பணி மேற்கொள்ளும் அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரசஸ்ராம் ரவி வலியுறுத்த



சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தூய்மை பணி மேற்கொள்ளும் அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரசஸ்ராம் ரவி வலியுறுத்தல். 

விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியிலன் மாநிலத் துணைச் செயலாளர் சரஸ்ராம் ரவி தமிழக அரசு  மற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி-அரசு  மருத்துவமனை  நிர்வாகத்தின் கவனதிற்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தூய்மை பணி செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் PF/ ESI வழங்கிட வேண்டும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும்  அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும்  போனஸ் வழங்கிட வேண்டும், அனைத்து ஒப்பந்த  கூலி தொழிலாளர்களுக்கும்  4 செட் சீருடைகள்/ காலணிகள்/ குடை/ வாசிங் அலவன்ஸ் வருடம் தோறும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற வேலை வாய்ப்பை போல் தூய்மை பணியில் இட ஒதுக்கீடு அமல்படுத்து. பட்டியலினம்- அருந்த்தியர்களை மட்டும் தூய்மை பணி செய்ய 100% அமுல்படுத்துவது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளதுடன், யாரும் பணி செய்ய முன் வராத தூய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் ஊதியம் ரூ்  50,000 வழங்கிட வேண்டும், தொடர்ந்து பணியாற்றும் அனைத்து தூய்மை பணி தொழிலாளர்களுக்கும் கிராஜுடி ( GRATUITY ) வழங்கிட வேண்டும்,
தொழிலாளர் நல சட்டபடி ( 1942) அனைத்து தூய்மை ஒப்பந்த பணி செய்யும் தொழிலாளர்களுக்கு வருட விடுப்பு ( Leave ) / மருத்துவ வசதி ( Mediclaim )  / LTS / Pension வழங்கிட வேண்டும் என்றும் தமிழகம் முழவதும்  அரசு மருத்துவமனைகளின்  ஒப்பந்ததாரர் KRISTAL நிறுவன உரிமையாரை LLF தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் ஆணையர் ( Labour Commissioner )  முன்னிலையில் பேச்சு  வார்த்தை நடத்த வேண்டும்,  தமிழகம் முழவதும்  அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும்  தூய்மை பணி செய்யும் தொழிலாளர்கள் சுமார் 30,000 தொழிலாளர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்,  அவர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல்/ மருத்தும் படிப்பு படிக்க இலவச கட்டணம் அளித்திடு & தனி இட ஒதுக்கீடு கொடுத்திட வேண்டும் என்றும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி வலியுறுத்தியுள்ளார்.