செவ்வாய், 22 அக்டோபர், 2024

சேலம் மாமாங்கம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தில் இணைப்பு பாலம் கட்டித் தரவில்லை எனில் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவேன். NHAI திட்ட இயக்குநரிடம் கோரிக்கை மனு வழங்கிய சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள்.

சேலம் மாமாங்கம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தில் இணைப்பு பாலம் கட்டித் தரவில்லை எனில் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவேன். NHAI திட்ட இயக்குநரிடம் கோரிக்கை மனு வழங்கிய சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாமாங்கம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தில் இணைப்பு பாலம் கட்டித் தரவில்லை எனில் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவேன். NHAI திட்ட இயக்குநரிடம் கோரிக்கை மனு வழங்கிய சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாமாங்கம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி புது டெல்லியில் உள்ள மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பணிகள் ஒதுக்கீடு செய்து தற்பொழுது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதில் சேலம் ஒன்றாவது கோட்டத்திற்கு உட்பட்ட மாமாங்கம் அண்ணா நகர் 1,2, மற்றும் 3, தில்லை நகர், அமராவதி நகர், மோட்டூர், சின்ன மோட்டூர் மற்றும் ஊத்துக்கிணறு ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் கீழ் இயங்கும் செயல் ரிப்ராக்டரி காலணியும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் பாதம் திருக்கோவிலும் உள்ளது. பெரிய மாரியம்மன் திருக்கோவில் மற்றும் புகழ் பெற்ற தேவாலயம் உள்ளது. அங்கு தனியார் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட கல்லூரியில் 1200 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அழகாபுரம் திரௌபதி அம்மன் திருக்கோவில் பண்டிகையின் போது, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 100 கிணறு பகுதியில் புனித நீராடி விட்டு அதன் பிறகு தான் தீமிதி திருவிழாவில் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. 
எனவே இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், மாணவ மாணவிகள், பக்தர்கள் மற்றும் வர்த்தக வணிக நிறுவனத்தினர் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு மாமாங்கம் ஊத்துக்கிணறு அருகே VUP, பர்ன் & கோ கிராசிங் இடையே சிறய இணைப்பு பாலம் அமைத்திட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் ஸ்ரீனிவாசலு அவர்களை நேரில் சந்தித்து, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கோரிக்கை மனு வழங்கியதுடன், தயவு செய்து விரைந்து புதிய இணைப்பு பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் அமைக்காத பட்சத்தில், அங்குள்ள பொதுமக்களை திரட்டி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் தெரிவித்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையை ஏற்று விரைந்து இதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் திட்ட இயக்குனர் உறுதி அளித்துள்ளார். 
அப்போது நிர்வாகிகள் மோகன், பழனியப்பன் இளவரசன், ராமபாதம் அறக்கட்டளையின் தலைவர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திங்கள், 21 அக்டோபர், 2024

ஈரோட்டில் கனமழை: சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி

ஈரோட்டில் கனமழை: சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி

ஈரோட்டில் இன்று (22ம் தேதி) காலை முதலே கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பர்கூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளான பவானிசாகர், வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குண்டேரிப்பள்ளம் மற்றும் வரட்டுப்பள்ளம் அணைகள் பலத்த மழை காரணமாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பவானிசாகர் அணை 90 அடியை நெருங்கியுள்ளது. மேலும், ஈரோடு மாநகரப் பகுதிகளும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. 

இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் ஈரோடு மாநகர் பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. ஈரோடு வ.உ.சி. பெரிய காய்கறி மார்க்கெட் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சேரும் சகதியுமாக காட்சியளித்தது. இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருவதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். 

இந்நிலையில், இன்று காலை பெய்த கனமழை காரணமாக வ.உ.சி. மார்க்கெட்டில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால், இன்று காலை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், மொத்த வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல், ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள சின்ன காய்கறி மார்க்கெட் பகுதி முழுவதும் மழை நீர் புகுந்து குளம் போல் சூழ்ந்தது.
இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சின்ன மார்க்கெட் வளாகத்திற்குள் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கனமழை காரணமாக அம்மா உணவகத்தையும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அம்மா உணவகத்திற்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

ஈரோடு வைரபாளையத்தில் கனமழை காரணமாக 4 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மொடக்குறிச்சி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மஞ்சள் நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. 

இதேபோல் கவுந்தப்பாடி சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சூறை காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கூட்டுறவு வங்கி அருகே பொம்மன்பட்டி சாலை பகுதிகளில் மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் மின்சார கம்பிகள் மீது விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்தும் இன்று காலை மழை பெய்து வருகிறது. காலை முதல் மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், வியாபாரத்துக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதனையடுத்து, இன்று ஒரு நாள் ஈரோடு மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். இது தெரியாமல் பல்வேறு இடங்களில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவசர அவசரமாக வீடு திரும்பினர்.
ஈரோட்டில் காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆட்சியர், எஸ்பி மரியாதை

ஈரோட்டில் காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆட்சியர், எஸ்பி மரியாதை

ஈரோடு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.

பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்த போது பணியின் போது, வீரமரணம் அடைந்த காவலர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1959-ம் ஆண்டு, இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படைக் காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து, 16,000 அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூறுகிறோம்.

கடற்கரையானாலும் பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டுப் பிரிந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

மடிந்து உயிர் தியாகம் செய்த காவலர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீரத் தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன் (தலைமையிடம்), வேலுமணி (சைபர் குற்றப்பிரிவு) உட்பட காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு அருகே தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் மோதல்: 30 பேர் காயம்

ஈரோடு அருகே தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் மோதல்: 30 பேர் காயம்

ஈரோடு அருகே தனியார் பள்ளிப் பேருந்தும், தனியார் கல்லூரிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 மாணவர்கள் காயமடைந்தனர்.

ஈரோடு அடுத்த மூலக்கரை பகுதியில் தனியார் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு செல்லும் மாணவர்களை அழைத்து கொண்டு தனியார் பள்ளி பேருந்து வெள்ளோடு அடுத்த கொம்மன்கோவில் பகுதியில் இருந்து பள்ளி வாகனம் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, பெருந்துறை துடுப்பதியை நோக்கி சென்ற தனியார் பொறியியல் கல்லூரியை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி வாகனமும் தனியார் பொறியியல் கல்லூரி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அதிமுக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.
ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஈரோடு திண்டல் சைதன்யா சி.பி.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஈரோடு இணை ஆணையர் மண்டல கோயில்கள் சார்பாக 27 ஜோடிகளுக்கு இன்று (21ம் தேதி) திருமணம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்புகள் 2024-2025 அறிவிப்பு எண்.27-ன் படி பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 600 ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டு கூடுதலாக 100 ஜோடிகளுக்கு சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 35 ஜோடிகள் வீதம் 700 ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது . 

அதனைத் தொடர்ந்து இன்று (21ம் தேதி) திங்கட்கிழமை ஈரோடு மாவட்டம், திண்டல் சைதன்யா சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில், ஈரோடு இணை ஆணையர் மண்டல கோயில்கள் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய 27 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் பங்கேற்ற ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி (தங்கம் 4 கிராம்), மெட்டி, பட்டு புடவை (ஜாக்கெட், பாவாடை), பட்டு வேஷ்டி சட்டை, துண்டு, பாய், இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, பெட்சீட், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, மர பீரோ, சுவாமி படம், குத்து விளக்கு (பித்தளை). பூஜை தட்டு (பித்தளை), மணி (பித்தளை), பொங்கல் குண்டா, குங்கும சிமிழ், காபி குண்டா, வடிகட்டி, சாப்பாடு தட்டு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் நவமணி கந்தசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் துணை ஆணையர் மேனகா, ஈரோடு உதவி ஆணையர் சுகுமார், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அருள்குமார், ஈரோடு மாவட்ட செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரம்.. தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது வரை தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். சேலத்தில் நடைபெற்ற உள் ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கத்தில் தலைவர்கள் கருத்து.

அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரம்.. தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது வரை தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். சேலத்தில் நடைபெற்ற உள் ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கத்தில் தலைவர்கள் கருத்து.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரம்.. தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது வரை தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். சேலத்தில் நடைபெற்ற உள் ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கத்தில் தலைவர்கள் கருத்து. 

தமிழகத்தில் வசித்து வரும் அருந்ததிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசின் சமீபத்தில் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாள்தோறும் கண்டன போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற வனமே உள்ளன. இந்த நிலையில் அறிவு சமூகம் என்ற அமைப்பின் சார்பில் உள் ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூக அநீதி என்ற பெயரில் உள் ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம் சேலம் அன்னதானபட்டியில் நடைபெற்றது. மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, அறிவு சார் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் ராம்ஜி உள்ளிட்ட ஒரு முன்னிலை வகித்த இந்த கருத்தரங்கில் அருந்ததிய மக்களுக்கான வழங்கப்பட்ட உள்ள இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்தனர். குறிப்பாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் நாள்தோறும் பல்வேறு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையின் கூட தமிழக அரசு இதுவரை போராட்டங்கள் குறித்து எந்தவிதமான கருத்தும் தற்பொழுது வரை தெரிவிக்காத நிலையில் உள்ளது தங்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது என்றும், தமிழக அரசின் இந்த விரோத போக்கை கண்டித்து மிக விரைவில் தமிழகம் தழுவிய அளவில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இன்னொரு பிரிவும் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அந்த சூழலை உலகிற்கு மிக விரைவில் தெரியவரும் ஒரு சதவிகிதம் கூட இல்லாத அவர்கள் ஆட்சியாளரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதனை தெரிந்து திராவிட மாடதாக திகழ்ந்துவரும் தமிழக அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

சமூகநீதி பேசும் இவர்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முற்றுகையாக தான் இருப்பார்கள் என்றும் நடைபெற்ற கருத்தரங்கில் குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் எஸ்சி எஸ்டி பிரிவு மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி செய்தியாளிடம் கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டது என்றாலும் கூட பொதுமக்களிடம் அதனை எடுத்துரைத்து தங்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் உறுதிபட தெரிவித்தார் சரசுரம் ரவி. 
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 18 அக்டோபர், 2024

பெருந்துறை அருகே லிப்ட் கொடுத்த ஆசிரியையிடம் வழிப்பறி: 4 கல்லூரி மாணவர்கள் கைது

பெருந்துறை அருகே லிப்ட் கொடுத்த ஆசிரியையிடம் வழிப்பறி: 4 கல்லூரி மாணவர்கள் கைது

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியையிடம் வழிப்பறி செய்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு சென்னிமலைபாளையத்தைச் சேர்ந்தவர் சர்மா (வயது 29). பெருந்துறை மூலக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் (17ம் தேதி) மாலை பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தனியார் பொறியியல் கல்லூரி விடுதி வந்தபோது, சிறுவன் ஒருவன் கை காட்டி ஜெ.ஜெ.நகர் வரை செல்வதாக கூறி லிப்ட் கேட்டுள்ளார். உடனே சர்மா அந்த அந்த சிறுவனை ஏற்றிக்கொண்டு சென்றார். பின்னர், ஜெ.ஜெ.நகர் வந்ததும் சர்மா வாகனத்தை நிறுத்தியபோது, எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 சிறுவர்கள் சர்மாவின் வாகனத்தின் முன்பு வந்து நிறுத்தினர்.

அப்போது, அவர்கள் 3 சிறுவர்களும் லிப்ட் கேட்டு வந்த சிறுவனுடன் சேர்ந்து சர்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, செல்போனை பிடுங்கி கூகுள் பே மூலம் ரூ. 35 ஆயிரத்து 400 ரூபாயை தங்களுடைய செல்போனுக்கு மாற்றி கொண்டனர். மேலும், சர்மா விரலில் அணிந்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ½ பவுன் மோதிரத்தையும் பறித்துக் கொண்டு 3 பேர் வந்த இருசக்கர வாகனத்தில் 4 பேரும் தப்பிச் சென்றனர். பின்னர், இதுகுறித்து, சர்மா அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பெருந்துறை கொம்மக்கோவிலைச் சேர்ந்த துரைசாமி மகன் பிரகதீஸ்வரன் (வயது 18), நாமக்கல் மாவட்டம் சிவம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மைதீஸ் (வயது 19), திருமலைப்பட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் ஆசிரியை சர்மாவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலும், 2 பேர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் நாமக்கலில் உள்ள பள்ளியில் படித்த போது ஏற்பட்ட நட்பு, கல்லூரி சென்ற பிறகும் தொடர்ந்து தற்போது வழிப்பறியில் வந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.