சனி, 2 நவம்பர், 2024

சென்னை குருநானக் கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு நீதி கிடைக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு கோரிக்கை.

சென்னை குருநானக் கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு நீதி கிடைக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு கோரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சென்னை குருநானக் கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு நீதி கிடைக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு கோரிக்கை. 

சென்னை குருநானக் கல்லூரியில் படித்து வரும் மாணவி லோகேஸ்வரி 
அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்திற்கு மாறாக அதிக கட்டணம் செலுத்த முடியாது என்று கூறியதற்காக, மாணவி லோகேஸ்வரிக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்காமல் பழிவாங்கும் நோக்கில் செயல்படும் குருநானக் கல்லூரி நிர்வாகத்தால்  மனம் உடைந்து விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 29.10.2024 முதல் மூன்று நாட்களாக, சென்னை கீழ்ப்பாக்கம் 
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். 
மாணவி லோகேஸ்வரியை  ஏப்ரல் 14 இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மரியாதைக்குரிய திரு. சசிக்குமார் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து  ஆறுதல் கூறினார்  இந்நிகழ்வில் ஏப்ரல் 14 இயக்க மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி வெளியிட்டுள்ள  அறிக்கையில், அதிக கல்வி கட்டணம் செலுத்த முடியாது என கூறிய மாணவிக்கு , ஹால் டிக்கெட் வழங்காமல் பழிவாங்கும் நோக்கில் செயல்படும் குருநானக் கல்லூரி நிர்வாகத்தின் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளி, 1 நவம்பர், 2024

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்: 7 பேர் காயம்

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்: 7 பேர் காயம்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலையில் 30 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி மூங்கில்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). இதேபோல், சவுண்டப்பூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 56). இவர்களுடைய நண்பர்கள் மூங்கில்பட்டியை சேர்ந்த பெருமாள்சாமி, சரவணன், சேகர், முத்துக்குமார், குமார் ஆகிய 7 பேரும் பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரை - கர்ககேண்டி சாலையில் காரில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.

காரை முத்துக்குமார் ஓட்டினார். அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பாதையில் வேலாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக காரை முத்துக்குமார் திருப்பி உள்ளார். இதில், கார் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த 7 பேரும் காயம் அடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள், காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மணிகண்டன், கதிர்வேல் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கோபியைச் சேர்ந்த 17 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்த 21 பேர் கர்நாடக மாநிலம் கொள்ளோகால் அருகே உள்ள நொக்காரில் துக்கம் விசாரிப்பதற்காக சுற்றுலா வேனில் நேற்று காலை சென்றனர்.
இந்த வேனை கோபியை சேர்ந்த சரவணன் (வயது 44) என்பவர் ஒட்டினார். துக்கம் விசாரித்து விட்டு மீண்டும் அவர்கள் கோபிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை சாலையில் 14வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 17 பேர் காயம் அடைந்தனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பள்ளத்தில் இறங்கி விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சத்தியமங்கலம் அருகே மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் அருகே உள்ள கேர்மாளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கோட்டமாளம் வைத்தியநாதன்புரம் எருது குட்டை தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன் (வயது 60). இவர் நேற்று காலை வனப்பகுதியையொட்டி உள்ள தரிசு நிலத்தில் மாடு மேய்க்க சென்றார்.

இந்நிலையில், மாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, அவரை தாக்கியது . இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேர்மாளம் வனத்துறையினர் மற்றும் கடம்பூர் போலீசார் மாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் மாடு மேய்க்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
50 சதவீத தள்ளுபடி: ஈரோட்டில் அதிகாலையில் ஜவுளி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்த ஜவுளி கடைகள்

50 சதவீத தள்ளுபடி: ஈரோட்டில் அதிகாலையில் ஜவுளி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்த ஜவுளி கடைகள்

ஈரோட்டில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான இன்று ஜவுளி கடைகளில் 50 சதவீத தள்ளுபடி விலையில் துணிகள் வாங்க, அதிகாலையில் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் ஜவுளிக்கடைகள் ஸ்தம்பித்தது. 
ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆர்கேவி சாலையில் 10க்கு மேற்பட்ட பிரபலமான பெரிய ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளி கடைகளில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை மறுநாள் குறைந்த விலைக்கு ஜவுளிகள் விற்பனை செய்வது வழக்கம்.

இந்தாண்டிற்கான தீபாவளி விற்பனை நேற்று (அக்டோபர் 31) வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று (நவம்பர் 1) அதிகாலை முதல் ஜவுளி கடைகள் தங்களது கடைகளில் உள்ள ஜவுளி ரகங்களை குறைந்த விலைக்கு ஜவுளிகளை விற்பனைக்கு வைத்தனர்.

இதனை வாங்க ஈரோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜவுளிகளை வாங்க குவிந்தனர். இதில் குழந்தைகளுக்கான ஆடைகள் 50 ரூபாய் முதலும், பெரியவர்களுக்கு ஆடைகள் 200 ரூபாய் என குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் கடைகளில் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு துணிகளை வாங்க மக்கள் அலைமோதியதால், ஜவுளிக்கடைகள் ஸ்தம்பித்தது. தீபாவளி பண்டிகை முந்தைய நாள் விற்பனை போன்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட போல, கடை வீதிகளில் மக்கள் அதிகரித்து காணப்பட்டது.

ஜவுளி கடைகள் குறைந்த விலைக்கு ஜவுளிகளை விற்பனை செய்ததால் தீபாவளி பண்டிகை முடிந்தும் கூட, துணிகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் அதிகாலையில் ஆர்வம் காட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சத்தியமங்கலம் அருகே கடமான் வேட்டையாடியவர் கைது

சத்தியமங்கலம் அருகே கடமான் வேட்டையாடியவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், கடம்பூரை அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள தோட்டத்தில் கடமான் ஒன்று முள்கம்பி வேலியில் கிடப்பதை பார்த்தனர். டார்ச் லைட் அடித்து அருகில் சென்று பார்த்த போது, முள்கம்பி வேலியின் அடியில் சுருக்கு வைக்கப்பட்டுள்ளதையும், சுருக்கு கம்பியில் பெண் கடமான் ஒன்று சிக்கி இறந்து கிடந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து அதே பகுதியில், வனத்துறை பணியாளர்கள் மறைந்து கண்காணித்து வந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர், சுருக்கு கம்பியில் சிக்கி இறந்து கிடந்த கடமனை அவிழ்க்க முயன்ற போது வனத்துறையினர் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பொன்னையன் (வயது 50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

வியாழன், 31 அக்டோபர், 2024

ஈரோட்டில் 'நம்ம ஈரோடை' செல்பி பாயிண்டை திறந்து வைத்த மேயர்

ஈரோட்டில் 'நம்ம ஈரோடை' செல்பி பாயிண்டை திறந்து வைத்த மேயர்

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செல்பி பாயிண்ட் வைரலாகி வருகின்றது. குறிப்பாக சென்னை, கோவை நாமக்கல், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பிரம்மாண்டமான செல்பி பாயிண்ட்டுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் காணப்பட்டாலும் இதுவரை ஈரோட்டுக்கு என்று ஒரு செல்பி பாயிண்ட் இல்லை என்ற குறை இருந்தது. இந்தக் குறையை போக்கும் வகையில் ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஈரோட்டுக்கு என்று செல்பி பாயிண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனையடுத்து, நம்ம ஈரோடை என்ற பெயர் கொண்ட செல்பி பாயிண்ட் திறப்பு விழா நடந்தது. இதில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு செல்பி பாயிண்டை திறந்து வைத்து செல்பி எடுத்து கொண்டார்.

இவ்விழாவில், பாயிண்ட்டை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மனீஷ், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி 1ம் மண்டல தலைவர் பழனிச்சாமி, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர் புவனேஸ்வரி பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.