ஞாயிறு, 3 நவம்பர், 2024

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ்  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சுந்தர் பேட்டி.

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சுந்தர் பேட்டி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அருகே தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ்  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சுந்தர் பேட்டி.

சேலம் இரும்பாலை அருகே பூச நாயக்கன்பட்டியில் இரு தரப்பினர்கள் இடையே சமூக இளைஞர்கள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடைபெற்றன மக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட தால் நடைபெற்ற இந்த தாக்குதலில் வீடுகளை சூறையாடி சதீஷ் குமார் ஜெயக்குமார் செல்வராஜ் வெங்கடாசலம் தமிழரசி உள்ளிட்டோர் மீது தாக்குதல் தாக்குதல் நடைபெற்றது இதில் காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்களை நேரில் சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழிகாட்டுதலின் பேரில், சேலம் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் டாக்டர்.சுந்தர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளிடம் கூறும் போது பூச நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒரு தரப்பு மற்றொரு தரப்பினர் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடந்த போது அங்கிருந்து கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பாளர்களை கடுமையாக தடுத்து அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் தாக்குதல் சம்பத்தில் ஈடுபட்டவர்கள் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் சேர்த்து தாக்கியுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்ட நான்கு நேரில், மூன்று பேர் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும், சாதி வெறி தாக்குதல் நடத்திய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சாதிய வன்கொடுமை சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதோடு பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட பேரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சுந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முழுவதும் ஆதிக்க சமூகத்தை அடக்கும் நிலை நீடித்து வருகிறது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் குறிப்பாக பட்டியலின மக்களின் சொத்துக்களை அழிப்பதற்காகவே இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். போலீசார் இனிவரும் காலங்களில் பட்டியல் இன சமூகத்தில் வசிக்கக்கூடிய பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கின்ற சிலர் உள்ளனர் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

பேட்டியின் போது,  சேலம் தெற்கு ,மாவட்ட பொறுப்பாளர்கள் அசோக்குமார், ஆறுமுகம்,
 அயோத்தி பட்டினம் ஒன்றிய செயலாளர் சண்முக சுந்தரம், ,ஆத்தூர் நகர பொறுப்பாளர திருமாராயர் தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் சசிகுமார் கலந்து கொண்டு ஆறுதல் கூறி சம்பந்தப்பட்ட சாதி வெறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தினர்.
தாளவாடி அருகே பீரேஸ்வரர் கோயிலில் சாணியடித் திருவிழா: ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து உற்சாகம்

தாளவாடி அருகே பீரேஸ்வரர் கோயிலில் சாணியடித் திருவிழா: ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து உற்சாகம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டு பழமையான பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் 3வது நாளில் சாணியடித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டு விழா இன்று (நவம்பர் 3) காலை துவங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள பசு மாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு, கோயிலின் பின்புறம் குவிக்கப்பட்டது. இதையடுத்து, அலங்கரிக்கப் பட்ட பீரேஸ்வரருக்கு, சிறப்பு பூஜைகள் செய்து, ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்கு சென்றனர்.

பின்னர், கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை, உருண்டைகளாக பிடித்து, ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து, கொண்டாடினர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் விழாவை ரசித்தனர். பின் அனைவரும் குளத்தில் குளித்து விட்டு, பீரேஸ்வரரை வழிபட்டனர். இந்தத் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோட்டில் ரூ‌.4 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: 5 பேரிடம் போலீசார் விசாரணை

ஈரோட்டில் ரூ‌.4 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: 5 பேரிடம் போலீசார் விசாரணை

ஈரோட்டில் பிறந்து 50 நாட்களை ஆன பெண் குழந்தை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்த புகாரில், 4 பெண் புரோக்கர்கள் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யா (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்து ஈரோடு பேருந்து நிலைய பகுதியில் தங்கி இருந்தார்.

அப்போது சந்தோஷ்குமார் என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நித்யா கர்ப்பம் அடைந்தார். சந்தோஷ்குமார், நித்யாவிடம் நமக்கு குழந்தை பிறந்தால் அதனை விற்று விடலாம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் பெண் இடைத்தரகர்களான ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த செல்வி, ராதாமணி, பானு மற்றும் ரேவதி ஆகியோர் உதவியை நாடியுள்ளார்.

அவர்களும் நித்யாவின் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசியுள்ளனர். இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு அந்தப் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்று உள்ளனர்.

இதனிடையே, பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையை விற்ற பின்னர் நித்யா குழந்தை நினைவாக இருந்து உள்ளார். குழந்தையை விற்பனை செய்தது குறித்து, நித்யா நடந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் நித்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் நடந்தவற்றை கூறினார்.

இதையடுத்து சந்தோஷ் குமார், பெண் இடைத்தரகர்களான செல்வி, ராதாமணி, பானு, ரேவதி ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கிய நாகர்கோவில் தம்பதியினரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் யாருக்கு தொடர்பு உள்ளதா எனவும், வழக்கு குறித்த முழு விவகாரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தை விற்ற விவகாரம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் சேலத்தில் நடைபெற உள்ள மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்.

சேலத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் சேலத்தில் நடைபெற உள்ள மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் சேலத்தில் நடைபெற உள்ள மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம். 

தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு இந்திய மூலநிவாசி காவல் படை ஆகிய அமைப்புகளின் சார்பில் வரும் டிசம்பர் 29-ம் தேதி சேலத்தில் பட்டியல், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை மீட்பு மற்றும் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் சேலம் சின்ன திருப்பதியில் உள்ள தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு அலுவலகத்தில் நடைபெற்றது. 
தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி மற்றும் தமிழ்நாடு இந்திய மூலநிவாசி காவல் படை அமைப்பின் நிர்வாகி தமிழமுதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த கூட்டத்தில், அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 
சேலத்தில் வரும் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ள உரிமை மீட்பு மற்றும் பாதுகாப்பு மாநாட்டில், தமிழ்நாடு மாநில அரசு துறைகளில் 100% இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், மத்திய மாநில அரசு துறைகளில் உள்ள 2 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பொதுத்துறைகளான இன்சூரன்ஸ், ரயில்வே, செயில், வங்கி, மின்வாரியம் மற்றும் அரசு போக்குவரத்து துறை ஆகியவற்றை தனியார் மையம் ஆக்கக்கூடாது, இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல தங்களது உரிமை மற்றும் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றுவது என இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் நாமக்கல் தர்மபுரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் MS பாபு
தமிழமுதன், முரளி, ராம்ஜி, சம்பத், செல்வகுமார், ரீஜேந்தெரன் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: ஒரேநாளில் 243.70 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: ஒரேநாளில் 243.70 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று (நவ.2) இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, ஈரோடு பேருந்து நிலையம், நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, சத்தி சாலை, கடைவீதி, காந்திஜி சாலை, காளைமாடு சிலை, சென்னிமலை சாலை, ரயில் நிலையம், மரப்பாலம், கொங்காலம்மன் கோவில் வீதி, பெரும்பள்ளம் ஓடை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
காந்திஜி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பாலத்தில் மழை வெள்ளம் குளம்போல தேங்கியது. அதுமட்டுமின்றி பாலத்தையொட்டி பெரியார் நகர் நுழைவு வாயிலின் அருகே பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் மழை வெள்ளத்துடன் சேர்ந்து குழு குபு என வெள்ளம் வெளியேறி வாகன ஓட்டிகளை அச்சப்படுத்தியது.


காளைமாடு சிலையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் ரோடு சாக்கடை எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்.

இதேபோல், கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை கவுந்தப்பாடி, கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் நேற்று மழை கொட்டி தீர்த்தது . இந்த மழையால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 2) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (நவம்பர் 3) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

ஈரோடு - 42, மொடக்குறிச்சி 2, கொடுமுடி - 12, பெருந்துறை - 6, சென்னிமலை - 12, பவானி - 1, கவுந்தப்பாடி - 4.20, அம்மாபேட்டை - 2.80, வரட்டுப்பள்ளம் அணை - 1.20, கோபிசெட்டிபாளையம் - 3.20, எலந்தகுட்டைமேடு - 3.80, கொடிவேரி அணை - 15, குண்டேரிப்பள்ளம் அணை - 54, நம்பியூர் - 19, சத்தியமங்கலம் - 22, பவானிசாகர் அணை - 41.40, தாளவாடி - 2.20 என மாவட்டத்தில் மொத்தமாக 243.70 மீ.மீ மழையும், சராசரியாக 14.34 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
தீபாவளி பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் மது விற்பனை 3 நாளில் ரூ.26.71 கோடி

தீபாவளி பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் மது விற்பனை 3 நாளில் ரூ.26.71 கோடி

ஈரோடு மாவட்டத்தில் 182 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, மது விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களா தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டன. கடந்த 30ம் தேதி ரூ.9 கோடியே 79 லட்சத்து 61 ஆயிரத்து 935க்கு பீர் மற்றும் மது வகைகள் விற்று தீர்ந்தன.

தீபாவளி தினமான 31ம் தேதி ரூ.9 கோடியே 82 லட்சத்து 6 ஆயிரத்து 495க்கும், 1ம் தேதி ரூ.7 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 265க்கும் மது, பீர் வகைகள் விற்றன. அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.26 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 695க்கு பீர், மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று (நவ.3) தடை

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று (நவ.3) தடை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். 
இந்த நிலையில், பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று (நவம்பர் 2) இரவு விடிய விடிய கனமழை பெய்ததின் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொடிவேரி அணைப்பகுதியில் பவானி ஆற்றில் வினாடிக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும், தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், அணையில் இருந்து பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுகின்றது.

இதனால், இன்று (நவம்பர் 3) ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணையை மூடி சுற்றுலா பயணிகள் வர பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.