சனி, 9 நவம்பர், 2024

சேலத்தைச் சேர்ந்த அரவிந்த்  ராஜசேகரன், தமிழ்நாடு முதன்மை ஒருங்கிணைப்பாளராக தேர்வு. தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிஇயக்கத்திற்காக பணியாற்ற தேர்வு.....

சேலத்தைச் சேர்ந்த அரவிந்த் ராஜசேகரன், தமிழ்நாடு முதன்மை ஒருங்கிணைப்பாளராக தேர்வு. தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிஇயக்கத்திற்காக பணியாற்ற தேர்வு.....



சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தைச் சேர்ந்த அரவிந்த்  ராஜசேகரன், தமிழ்நாடு முதன்மை ஒருங்கிணைப்பாளராக தேர்வு. 
தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிஇயக்கத்திற்காக பணியாற்ற தேர்வு.....

சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா.  அரவிந்த் அவர்கள் தன்னலன் பார்க்காமல் பிறர் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் செய்து ஏற்கனவே ஏராளமான விருதுகளை குவித்து வந்துள்ளார். தொடர்ந்து தனது பொது சேவைகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா அரவிந்த் என்கின்ற  அரவிந்த்  ராஜசேகரன், தமிழ்நாடு முதன்மை ஒருங்கிணைப்பாளராக தேர்வு தேர்வு செய்யப்பட்டு
தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி இயக்கத்திற்காக பணியாற்ற அவருக்கான பணி ஆணையினையும் அனுப்பி உள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
அந்த கடிதத்தில், 15.11.2024 முதல் 15.11.2026 வரை மனித உரிமைகள் சமூக நீதி அமைப்பின் தமிழ்நாடு முதன்மை ஒருங்கிணைப்பாளராக செய்துள்ளோம்  என்பதனை மாநில தலைமை அதிகாரி அவர்கள் அறிவித்துள்ளார்.  இந்த இயக்கத்திற்கு பணியாற்றி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என இயக்கம் கேட்டுக் கொள்கிறது, மேலும் இவரை பணி அமர்த்தியதில் சந்தோஷப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சமூகம் மற்றும் வளர்ச்சியில் தாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். பொதுமக்கள் சமூகத்தில் சிறப்பாக வாழ நாம் சில சட்ட வழிமுறைகளை வகுத்துள்ளோம். நமது இயக்கமானது கல்வி மற்றும் சமூக வளர்ச்சி போன்றவற்றில் ஆர்வமாக இந்தியா முழுவதும் உழைத்து கொண்டிருக்கிறது. மேலும் நட்புறவு போன்றவற்றை ஊக்குவிக்க உதவுகிறது. மனித உரிமைகள் சமூக நீதி அமைப்பானது இந்திய அரசியல் சட்ட அமைப்பிற்கு மனித உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை கருத்துக்கிறது. மேலும் நமது அடிப்படை முக்கிய கருத்து என்னவென்றால் மனித உரிமை, பொது உரிமை, அடிப்படை உரிமை, வயது மூத்தோர் நல உரிமை, சிறார்களுக்கான உரிமை, தொழிலாளர்கள் உரிமை, நுகர்வோர் உரிமை மற்றும் தகவல் அறியும் உரிமை ஆகியவற்றை முன்னெடுப்பதாகும். இந்த தேசிய அமைப்பின் மீது நம்பிக்கை மற்றும் பற்றுக் கொண்டிருக்க வேண்டும். மக்களது உரிமைகளை  சரியாக கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகிறது. உதவி தேவைப்படுபவர்களுக்கு எந்தவித புகார் இருக்கும் இடமின்றி உதவிட கேட்டுக்கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில், தேசிய தலைவர் மனித உரிமைகள் சமூக நீதி அமைப்பு டெல்லி, மும்பை மற்றும் H.R என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் சேலத்தை சேர்ந்த நாகா அரவிந்தன் என்கின்ற அரவிந்த் ராஜசேகரனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
  

வெள்ளி, 8 நவம்பர், 2024

ஈரோட்டில் 36 பயனாளிகளுக்கு ரூ.68.35 லட்சம் கடனுதவி வழங்கிய பால்வளத்துறை அமைச்சர்

ஈரோட்டில் 36 பயனாளிகளுக்கு ரூ.68.35 லட்சம் கடனுதவி வழங்கிய பால்வளத்துறை அமைச்சர்

ஈரோடு மாவட்டம், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் நவீன கால்நடை தீவன தொழிற்சாலையில், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், சென்னை) எஸ்.வினித் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தி நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பால் உற்பத்தி பொருட்களானது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய உணவு பொருளாகும். எனவே அதனை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து வழங்குவது அரசின் கடமையாகும்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பால் உற்பத்தி செய்யும் இடம் மட்டுமல்லாது, பால் விற்பனை செய்யும் நிலையங்களிலும் இடத்தினை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆவின் பால் கொள்முதலை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு கால்நடை தீவனம் தங்கு தடை இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவை மாவட்டத்தில் பன்னீர் உற்பத்தி ஆலை துவங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தீபாவளிக்கு கூடுதலாக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் மற்ற நிறுவனங்களை விட பால் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மூலம் நாளொன்றுக்கு 1.74 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ஆவின் பொது மேலாளர்களுக்கும் விற்பனையினை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையம், ஈரோடு பால் பண்ணை அதி நவீன பாலகம் (Hi-Tech Parlour) மற்றும் கால்நடைத் தீவனத் தொழிற்சாலை ஆகியவற்றில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, 21 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.13.86 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு பராமரிப்பு கடனுதவியும், 10 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு வங்கி கடனுதவியும், ஒரு பால் உற்பத்தியாளருக்கு ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை தொழுவம் அமைப்பதற்கு கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பீட்டில் திரவ நைட்ரஜன் சினை ஊசி குடுவை கடனுதவியும், மாவட்ட தொழில் மையம் சார்பில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 உறுப்பினர்களுக்கு ரூ.24.92 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு வாங்கி தொழில் செய்வதற்கான கடனுதவியும் என 36 பயனாளிகளுக்கு ரூ.68.35 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.

மேலும், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், பால் கொள்முதல் திறன், உற்பத்தி திறன், பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை விவரங்களை ஆவின் உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பால் கொள்முதல் திறன், தரம் மற்றும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சென்னிமலை சாலையில் உள்ள நவீன கால்நடை தீவன தொழிற்சாலையில் ஆலையின் உற்பத்தி, தீவன ஆலை இயக்குதல் முறை, கச்சாப்பொருட்களின் விபரங்கள் ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும், தீவன ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் தானியங்கி முறை, பல்வேறு வகையான குச்சித் தீவன உற்பத்தி, குச்சி தீவன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கச்சா பொருட்களின் விபரம் ஆகியவற்றினை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சிகளில், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், பொது மேலாளர் (பொறுப்பு) / மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், துணைப் பொது மேலாளர் (கால்நடை) பி.பழனிசாமி, துணைப்பதிவாளர் (பால் வளம்) இரா.கணேஷ், உதவி பொது மேலாளர்கள்பி.சண்முகம், பி.உதயகலா (பொறியியல்), மேலாளர் (தரக்கட்டுப்பாடு) எம்.ஹரிபிரசாத் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ஈரோடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான டி.என்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் நீங்கள் நலமா, மக்களுடன் முதல்வர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் குடிநீர் திட்டப்பணிகள், குடிநீர் முறையாக விநியோகிக்கப் படுதல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் சார்பில் நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, உயர்வுக்குப் படி உள்ளிட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இத்திட்டங்களின் மூலம் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து, மழைக்காலம் என்பதால், கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பல்வேறு போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அறிவுசார் மையங்களை பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனுக்கு கிடைக்கின்ற வகையிலும் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் இருக்கின்ற வகையிலும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜன் (வளர்ச்சி), முஹமது குதுரத்துல்லா (பொது), சாந்தாமணி (வேளாண்மை), இணை இயக்குநர் (வேளாண்மை உழவர் நலத்துறை) வெங்கடேஷ், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) அம்பிகா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் உட்பட காவல்துறையினர், அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர தினவிழாவில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்/டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 20.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு (10sqm) குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது (அல்லது) குடிநீர் வரி ரசீது இடம் ஒப்பந்தப் பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில்முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

TABCEDCO, THADCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத் தொகை ரூ.1.50 இலட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில்முனைவோர் முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதி

கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் 

வியாழன், 7 நவம்பர், 2024

அந்தியூர் அருகே மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் மாரடைப்பால் மரணம்: அமைச்சர் இரங்கல்

அந்தியூர் அருகே மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் மாரடைப்பால் மரணம்: அமைச்சர் இரங்கல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் அந்தோணி ஜெரால்டு (வயது 49). இவர் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் சுண்டப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி பாத்திமாமேரி. அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் அந்தோணி ஜெரால்டு உள்ளனர்.

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் அந்தோணி ஜெரால்டு குடும்பத்துடன் வசித்தார். நாள்தோறும் வீட்டில் இருந்து பர்கூர் சுண்டப்பூருக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வழக்கம்போல் வகுப்பறையில் அந்தோணி ஜெரால்டு பாடம் நடத்தி கொண்டு இருந்தார். அப்போது திடீரென நாற்காலியில் அமர்ந்தவர் அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த மற்ற ஆசிரியர்கள் பதறிப்போய் அவரை மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அந்தோணி ஜெரால்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் அங்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :

ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது. மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று உழைத்த அந்தோணி ஜெரால்ட் வகுப்பறையிலேயே தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார்.

அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சத்தியமங்கலம் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு

சத்தியமங்கலம் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு

புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான டி.என்.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, புன்செய்புளியம்பட்டி நகராட்சி வார்டு எண் 18, ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பணியினை அவர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, புன்செய்புளியம்பட்டி நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களின் வாசிப்பு மற்றும் கற்றல் திறன் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.05 கி.மீ நீளத்திற்கு ரூ.32.02 லட்சம் மதிப்பீட்டில் அரியப்பம்பாளையம் - தபோவனம் செல்லும் சாலை வலுப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், விண்ணப்பள்ளி ஊராட்சி பாரதி நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் 36 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், பவானிசாகர் அணை நீரேற்று நிலையம், புன்செய்புளியம்பட்டி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.52.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சப்பகவுண்டன்புதூர் காலனி, கோணமூலை பகுதியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வீடு சீரமைக்கும் பணியினையும், அதே பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சத்தியமங்கலம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.03 கோடி மதிப்பீட்டில் 40 கடைகள் மற்றும் 130 திறந்த வெளி கடைகளுடன் வாரச்சந்தை மேம்படுத்தும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் இயங்கும் சத்தியமங்கலம் அரசு மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள், சுகாதாரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் அளுக்குளி - காரப்பாடி ரோடு ஜெ.ஜெ நகர் 4/0 கி.மீ நீளத்திற்கு புதிய பாலம் கட்டும் பணியினையும், கரட்டுப்பாளையம் பகுதியில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் ஜிம்னாஸ்டிக் மைதானம் கட்டப்பட்டு வருவதையும், கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், புன்செய்புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர்கள், புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.