சனி, 16 நவம்பர், 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட கணபதிபாளையம், சாமிநாதபுரம்புதூர், லக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, சிறப்பு சுருக்கத்திருத்தம் 2025ன் ஒரு பகுதியாக இன்று (நவ.16) மற்றும் நாளை (நவ.17), மேலும், 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) 4 நாட்கள் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் 2,222 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

மேற்படி சிறப்பு முகாமில் பொது மக்களிடமிருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

இம்முகாமில் அனைத்து தகுதியான வாக்காளர்களும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற சேவைகளை பெறலாம்.

அதனைத் தொடர்ந்து, இன்று (நவ.16) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா மொடக்குறிச்சி வட்டம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சாமிநாதபுரம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றதை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சந்திரசேகர், துணை வட்டாட்சியர் (தேர்தல் பணி) லோகேஸ்வரன் உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று வீரபாண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் சரிபார்ப்பு சிறப்பு முகாமினை வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் பார்வையிட்டு ஆய்வு.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று வீரபாண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் சரிபார்ப்பு சிறப்பு முகாமினை வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் பார்வையிட்டு ஆய்வு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று 
வீரபாண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் சரிபார்ப்பு சிறப்பு முகாமினை வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் பார்வையிட்டு ஆய்வு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக நவம்பர் மாதம் 16 17 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு பெயர் மாற்றம் இடம் மாற்றம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு அறிவித்து இருந்தது. 
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர்  தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று நடைபெற்று வரும்  வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் சிறப்பு முகாமில் வீரபாண்டி 
ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாவரி ஊராட்சி வாக்கு சாவடி மையங்களில் உள்ள BLA-2 பணிகளை, வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் திருமதி.S.வெண்ணிலாசேகர் அவர்கள் பார்வையிட்டு ஆலோசணை வழங்கினார்.

வெள்ளி, 15 நவம்பர், 2024

சேலம் ஏற்காட்டுக்கு ரோப் கார் ஏற்படுத்த திட்டம் மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு,தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மாநில கொண்டலாம்பட்டி தங்கராஜ் நன்றி.

சேலம் ஏற்காட்டுக்கு ரோப் கார் ஏற்படுத்த திட்டம் மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு,தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மாநில கொண்டலாம்பட்டி தங்கராஜ் நன்றி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஏற்காட்டுக்கு ரோப் கார் ஏற்படுத்த திட்டம் மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு,
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மாநில கொண்டலாம்பட்டி தங்கராஜ் நன்றி. 

கடந்த 22 .10. 2024 தேதியில் நாமக்கல் மாவட்டத்திற்கு நலத்திட்டங்கள் வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சேலம் வழியாக நாமக்கல் சென்ற போது கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் ஐயா அவர்களுக்கு வரவேற்பு கொடுத்து16 அம்ச  கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது கோரிக்கையில் சேலம்  ஏற்காட்டிற்கு ரோப் கார் வசதி செய்து தர வேண்டி கோரிக்கை  கொடுக்கப்பட்டது.
விவசாயிகளின்கோரிக்கை கொடுத்த அடிப்படையில் ஏற்காட்டிற்கு ரோப்  கார் வசதி ஏற்படுத்த 16 .11.2014 தினத்தந்தி செய்தித்தாளில் இன்று ஏற்காட்டுக்கு ரோப் கார் ஏற்படுத்த திட்டம் மதிப்பீடு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றன செய்தி அறிக்கை வெளியாகி உள்ளதற்கு எங்களுடைய கோரிக்கையை மனதார ஏற்றுக்கொண்டு உடனடியாக திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  அவர்களுக்கும் சேலம் மாவட்டம் மாண்புமிகு சுற்றுலாதுறை அமைச்சர் ஐயா அவர்களுக்கும் மனதாரவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மாநில தலைவரும் திருமணிமுத்தாற்று பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கொண்டலாம்பட்டி  திரு.எம் தங்கராஜ் அவர்கள் பதிவு தபால் முதலமைச்சர் அவர்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு சங்க நிர்வாகிகள்.
சேலம் ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமினை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் நேரில் பார்வை இட்டு ஆய்வு...

சேலம் ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமினை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் நேரில் பார்வை இட்டு ஆய்வு...

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமினை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் நேரில் பார்வை இட்டு ஆய்வு...

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக நவம்பர் மாதம் 16 17 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு பெயர் மாற்றம் இடம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு அறிவித்து இருந்தது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. 
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாநகராட்சியின் 9 ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர்களுக்கான சிறப்பு சிறப்பு முகாமில் ஏராளமான வாக்காளர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள குளறுபடைகளை சரி செய்து கொண்டிருந்த சிறப்பு முகாமில் சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்ட உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டுறவு வார விழா: ஈரோடு மாவட்டத்தில் 1,193 பேருக்கு ரூ.15.85 கோடியில் கடனுதவி வழங்கிய அமைச்சர்

கூட்டுறவு வார விழா: ஈரோடு மாவட்டத்தில் 1,193 பேருக்கு ரூ.15.85 கோடியில் கடனுதவி வழங்கிய அமைச்சர்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில், கூட்டுறவுத் துறையின் சார்பில், காலத்திற்கேற்ப கூட்டுறவில் புதிய முயற்சிகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சிறந்த நிர்வாகம் என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1,193 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.


இந்த விழாவில், அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா காலத்திற்கேற்ப கூட்டுறவில் புதிய முயற்சிகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சிறந்த நிர்வாகம் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டது. 1904ம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டத்தில் துவக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் தொழில்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை முன்னெடுத்து செல்வதற்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக உள்ளது.


ஈரோடு மாவட்டமானது 2023-2024-ல் மாநிலத்திலேயே அதிகளவில் பயிர்கடன் வழங்கிய மாவட்டமாக திகழ்கிறது. இதில் ஏறத்தாழ 1,069 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல 1,212 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் கூட்டுறவுத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், கூட்டுறவுத்துறையின் சார்பில், இன்று (நவ.15) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அளவில் 1,193 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறுவணிக கடன், வீட்டுவசதி கடன், முத்ரா கடன், மத்திய கால கடன், சிறுவணிக கடன், பயிர் கடன், நடைமுறை மூலதன கடன், டாப்செட்கோ கடன், சம்பள கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளை வழங்கப்பட்டுள்ளது என்றார்.


தொடர்ந்து, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் புதிய கிளை அலுவலகங்கள், புதிய நியாயவிலை கட்டிடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவ சங்கங்களை நகர கூட்டுறவு கடன் சங்கங்களாக வகை மாற்றுதல், சிறு பல்பொருள் அங்காடி மற்றும் பண்மை பசுமை அங்காடிகள் திட்டம், சிறுதானியம் விற்பனை உள்ளிட்ட ரூ.82 லட்சம் மதிப்பீட்டிலான 31 புதிய திட்டங்களை துவக்கி வைத்தார்.

71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


மேலும், ஈரோடு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள், சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், த்ைதறி கூட்டுறவு சங்கங்கள், வீட்டுவசதித்துறை சங்கங்கள், சமூகநலத்துறை - தொழிற் கூட்டுறவு சங்கம், மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை கூட்டுவுறுவுகள், சிறப்பாக செயல்படும் தனிநபர்களுக்கு விருதுகளை வழங்கினார். முன்னதாக, கூட்டுறவுத்துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினையும் அவர் பார்வையிட்டார்.

இவ்விழாவின் போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர் சு.பிரகாஷ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார், கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி, இணைப்பதிவாளர் செல்வக்குமரன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் காலிதாபானு, கூட்டுறவு சார்பதிவாளர் பாலாஜி உட்பட கூட்டுறவு சங்கங்கள், துறை சார்ந்த அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 1,720 தாய்மார்களுக்கு 2,041 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கல்

ஈரோடு மாவட்டத்தில் 1,720 தாய்மார்களுக்கு 2,041 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கல்

ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு தமிழக முதல்வர் சட்டமன்ற விதி 110ன்படி பிறந்தது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமான "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தினை முதற்கட்டமாக 2002ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள 433 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 572 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு, 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தமிழக முதல்வரால் இன்று (நவ.15) தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 0-6 மாதம் வரையுள்ள தீவிர மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள 74,706 குழந்தைகளுக்கு அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார் .

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், எல்லப்பாளையம் குழந்தைகள் மையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாவட்டம் முழுவதிலும் உள்ள பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள 552 தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள மற்றும் 1,168 மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.46 லட்சத்து 23 ஆயிரத்து 266 மதிப்பீட்டிலான 2,041 ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். 

இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் நெய். புரோட்டின் பவுடர், பேரிச்சம் பழம், இரும்புச் சத்து டானிக், துண்டு மற்றும் கோப்பை உள்ளிட்ட ரூ.2 ஆயிரத்து 265 மதிப்பீட்டிலான பொருட்கள் அடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள்) பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.


பவானியில் வக்கீலை தாக்கிய பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

பவானியில் வக்கீலை தாக்கிய பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பரத் (வயது 28). மூத்த வக்கீல் ப.பா மோகனிடம் ஜூனியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வக்கீல் பரத் நேற்று மாலை பவானி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரிக்கு சென்றுள்ளார்.

அப்போது மழை பெய்ததால் தனது இருசக்கர வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்தியுள்ளார். இதை பார்த்த பேக்கரியில் வேலை செய்து வரும் குருப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது 34) என்பவருக்கும், வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார், பேக்கரி உரிமையாளர் பிரகாஷ் (வயது 34), பேக்கரியில் வேலை செய்யும் பவானி பெருமாள்புரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 35), அந்தியூர் தாமரைகரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 29) ஆகியோருடன் சேர்ந்து வக்கீலை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பவானி பார் அசோசியேஷன் சார்பில் பவானி போலீஸ் நிலையத்தில் பரத் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தி, 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.