செவ்வாய், 26 நவம்பர், 2024

பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பதாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பதாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பதாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர். 

வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவலத்தையும் பணியிடங்களையும் பாதுகாத்திட வலியுறுத்தியும் தங்களது போராட்டம் வெற்றி அடைய வேண்டி மூன்றாம் கட்டமாக துவங்கியுள்ள இந்த போராட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற எந்த போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவர் அர்த்தனாரி கலந்துகொண்டு, தங்களது ஒன்பது அம்ச கோரிக்கைகளை குறித்து விளக்க உரையாற்றினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், சுமதி கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரபு உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், முதுநிலை வருவாய் அலுவலர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை கலைத்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் உடனடியாக வெளியிட வேண்டும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துணையினர் முழக்கங்களை எழுப்பினர்.
வருவாய் துறை அலுவலர்களின் இந்த போராட்டத்தின் காரணமாக சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை தொடர்பான அத்தனை பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுவதோடு தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் அர்த்தநாரி தெரிவித்தார்.
சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர பொறியியல் பிரிவு அடிப்படை பணியாளர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர பொறியியல் பிரிவு அடிப்படை பணியாளர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர பொறியியல் பிரிவு அடிப்படை பணியாளர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். 

சேலம் மாநகர பொறியியல் பிரிவு அடிப்படை பணியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறமாக உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட  நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வழங்க வேண்டிய பங்காதாயம் தொகையினை நிலுவையுடன் சிக்கன நாணய கூட்டுறவு சொசைட்டி மூலம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் வழங்கப்படும் வாரிசு வேலையினை ஐந்து சதவீதமாக குறைப்பு செய்ததை மீண்டும் 25 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டும் மற்றும் பேங்க் ஆபரேட்டர்கள் 24 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 
தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறாத பட்சத்தில் தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

திங்கள், 25 நவம்பர், 2024

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்தை கண்டித்து சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்..

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்தை கண்டித்து சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்..

சேலம்: 
S.K. சுரேஷ்பாபு.

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்தை கண்டித்து சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்..

அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் ராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது எனக் கூறியிருந்தார். முதல்வரின் இந்த கருத்தை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமகவின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வரை கண்டித்து கோசங்களை எழுப்பிய பாமகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீஸாருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து அருள் எம்எல்ஏ உள்பட பாமகவினர் சாலையில் அமர்ந்து ராமதாஸ் குறித்த கருத்திற்கு முதல்வர் மன்னிப்பு கோர வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகே இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.25) திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவ.25) திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, சிறுதொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை, குடிநீர் வசதி வேண்டுதல் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 327 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற ஆட்சியர் விசாரணை செய்து, உரிய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கையினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 7 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகளையும், சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 569 மதிப்பீட்டில் முதிர்வுத் தொகைக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார். 


அதனைத் தொடர்ந்து, தொழிலாளர் துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற 2 தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் பயிலுவதற்காக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்திற்கான கல்வி உதவித்தொகையினையும் அவர் வழங்கினார். 

இதையடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஈரோடு மாவட்ட மாணவியர் விளையாட்டு விடுதியில் பயிற்சி பெறும் 5 மாணவியர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பினையும், ஈரோடு மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் ஒரு நபருக்கு வீட்டில் சொந்த நூலகம் வைத்திருப்போர் விருது, ரூ.3 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கேடயம், சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.


மேலும், மாவட்ட மைய நூலகத்தில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை நூலகருக்கு டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் நல்நூலகர் விருது, மாநில அளவில் நூலக இயக்கம் வளர முனைப்புடன் சிறப்பாக பணியாற்றிய ஒரு நபருக்கு நூலக ஆர்வலர் விருது, மாநில அளவில் நூலகத்திற்கு காலிமனை மற்றும் கட்டடம் பெற்று நூலக வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியமைக்கு ஒரு நபருக்கு கேடயத்தினையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

ஈரோட்டில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு மடிகார்காலனி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் அவ்வபோது மது அருந்தும் பழக்கம் இருப்பதால் வீட்டின் அருகே உள்ள அரசு மதுபான கடையில் 250 ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவு கொண்ட குவாட்டர் பாட்டிலை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வாங்க முற்பட்டார்.

அப்போது கடை ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக 10 ரூபாய் பணம் செலுத்தி வாங்கியுள்ளார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்த கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தங்கவேல் புகார் மனு கொடுத்தார். 

அப்போது, இதுபோன்று வசூல் செய்வதால் மதுவை குடிப்பதை நோக்கமாக குடிப்பவர்கள் நிலை என்னவாகும் என்பதை எண்ணி ஒட்டுமொத்த மது குடிப்பவர்கள் நலனுக்காக மனு கொடுத்ததாக கூறினார். மேலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்ட போது கூடுதலாக மதுவுக்கு பணம் பெறப்பட மாட்டாது என துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த உத்தரவு என்னவாயிற்று என கேள்வி எழுப்பினார். 

இதனால் அரசு மதுபான கடையில் மது குடிப்பவர்கள் நலன் கருதி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கோபி அருகே வாக்காளர் சிறப்பு முகாமில் முதியவருக்கு கொலை மிரட்டல்: திமுக நிர்வாகி மீது புகார்

கோபி அருகே வாக்காளர் சிறப்பு முகாமில் முதியவருக்கு கொலை மிரட்டல்: திமுக நிர்வாகி மீது புகார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கோபியைச் சேர்ந்த முதியவரான அய்யாச்சாமி என்பவர் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் உள்ளதை அறிந்துகொள்ள சென்றார். அப்போது, அங்கிருந்த திமுகவை சேர்ந்த நிர்வாகி ஆனந்தன் என்பவர் முதியவரான அய்யாசாமியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி ஆனந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதியவர் அய்யாசாமி கோபி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகி ஆனந்தனிடம் கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 24 நவம்பர், 2024

சேலத்தில் நடைபெற்ற கவியரங்கம். திரளான எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்க.

சேலத்தில் நடைபெற்ற கவியரங்கம். திரளான எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்க.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் நடைபெற்ற கவியரங்கம். திரளான எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்க. 

சேலத்தில் யாவரும் கேளிர் தமிழ் மன்றத்தின் சார்பில் கவியரங்க ஐந்தாவது நிகழ்வு நடைபெற்றது. சேலம் சாந்தாஸ்ரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிகழ்வின் அகில இந்திய தமிழ் சங்கத்தின் தலைவர் கல்வியாளர் கோவிந்தராஜ், இளம்பிள்ளை சுவாமி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆசிரியர் மோகன்ராஜ், சேலம் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மேனாள் பொதுச் செயலாளரும் கவிஞரும் நாவல் ஆசிரியருமான ரவீந்திரபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தை என்ற கவியரங்க தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும்போது, பழைய பாடல்களில் ஏராளமான ஆழ்ந்த கருத்துக்களும் அர்த்தங்களும் நிறைந்து இருந்த காலகட்டங்களில் அந்த காலத்தினுடைய பாடல்கள் ஒருவரின் வாழ்வாதாரத்தையே மாற்றிவதை நாம் பரவலாக பார்த்திருக்கிறோம் என்றும், ஆனால் தற்பொழுது வெளிவரும் பாடல்கள் எதிலும் அதுபோன்ற கருத்துக்களும் புரிதலும் இல்லாத சூழலே நிலவி வருவதாகவும், இதற்காக குறை ஒன்றும் கூற முடியாது என்று கூறிய அவர் தற்போதைய கால கட்டத்திலும் நல்ல பல கருத்துக்கள் உடைய பாடல்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது அதனை ஆராய்ந்து நாம் கேட்டு மகிழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 
இந்த நிகழ்வில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் என திரளானோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.