திங்கள், 9 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.10) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.10) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலைய பெரியார்நகர் மின் பாதை மற்றும் புன்செய் புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.10) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு துணை மின் நிலைய பெரியார்நகர் மின்பாதை:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈ.வி.என்., சாலை, பூசாரி சென்னிமலை வீதி, ராஜாகாடு, கோவிந்தராஜ் நகர், அசோகபுரி, பெரியார் நகர், சூரம்பட்டி நால்ரோடு, 80 அடி சாலை, மொசுவண்ண வீதி, எஸ்.கே.சி., சாலை, கருப்பண்ணசாமி கோவில் வீதி, அண்ணா நகர், ஸ்டோனி பிரிட்ஜ் பகுதி மறஙசாந்தன் கருக்கு

புன்செய் புளியம்பட்டி துணை மின் நிலையம்:

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- புன்செய்புளியம்பட்டி, ஆம்பூதி, ஆலந்தூர், காரப்பாடி, கணுவுக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம் மற்றும் வெங்கநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் பெற்ற குழந்தைகளின் மீது பெட்ரோலை ஊற்றி தீப்பற்ற வைத்த தந்தை கைது

ஈரோட்டில் பெற்ற குழந்தைகளின் மீது பெட்ரோலை ஊற்றி தீப்பற்ற வைத்த தந்தை கைது

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமலைசெல்வன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமலைசெல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா ஒரு மாதத்திற்கு முன்பாகவே குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று அங்கு சாயப்பட்டறை வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக திருமலைசெல்வன், சுகன்யாவின் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சுகன்யா மற்றும் திருமலை செல்வன் இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த திருமலைசெல்வன் தன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் நான்கு வயது சிறுவன் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை ஆனது அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சுகன்யா வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் திருமலைசெல்வனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது திருமலைசெல்வத்தை அதிரடியாக கைது செய்தனர்.
உடல் சிதறி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அரசு வழங்கிய நிலத்தை அரசே அபகரிக்கும் அவலம் சேலம் அருகே நடந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

உடல் சிதறி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அரசு வழங்கிய நிலத்தை அரசே அபகரிக்கும் அவலம் சேலம் அருகே நடந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சேலம். 

உடல் சிதறி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அரசு வழங்கிய நிலத்தை அரசே அபகரிக்கும் அவலம் சேலம் அருகே நடந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தன் இவர் ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றி கடந்த 1965 ல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போரில் உடல் சிதறி வீர மரணம் அடைந்தார். இதற்காக கருணை அடிப்படையில் ராணுவ வீரர் சித்தனின் குடும்பத்திற்கு கடந்த 25 9 1969ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 4 10 1969ல் ஓமலூர் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சாமி நாயக்கன்பட்டி கிராமத்தில் தோப்பு புறம்போக்கு நிலம் இரண்டு ஏக்கர் 92 சென்ட் நிலத்தை தங்காள் என்பவர் பெயரில் நில ஒப்படை செய்து சுவாதீனம் கொடுக்கப்பட்டது. 
அரசு வழங்கிய நாளிலிருந்து சுமார் 53 ஆண்டுகள் அனுபவம் செய்து வந்த இந்த நிலத்திற்கு பட்டா கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் 53 ஆண்டுகள் நேரடியாகவும் பதிவு தபால் மூலமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. 
தற்பொழுது வரை பட்டா வழங்கவில்லை இந்த நிலத்திற்கு 30 ஆண்டுகள் நிலவரி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்காக போராடிய தங்கவேலு அவரது மனைவி தங்காள் ஆகியோர் மறைந்து விட்ட நிலையில், வாரிசு என்ற அடிப்படையில் வசந்தகுமார் என்பவர் அரசு பட்டா கேட்டு போராடி வருகிறார். அரசு ஆவணங்கள் அனைத்தும் உள்ள நிலையில் கடந்த 16 12 2001 அன்று வட்டாட்சியர் அவர்கள் ராணுவ வீரரின் குடும்பம் வாழ்வதற்கு அரசால் வழங்கப்பட்ட நிலத்தை 53 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசுக்கு வேண்டுமென்று நிலத்தை கையகப்படுத்துவது மிகுந்த மேதத்தினையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட வசந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தார் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. 
இதுகுறித்து வசந்தகுமார் நம்மிடையே கூறுகையில் கடந்த 19 12 2002 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கை வலியுறுத்தி மண்டியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து மனு கொடுத்தோம் என்றும் இது சம்பந்தமாக இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு அதிகாரியும் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை மீண்டும் எங்கள் நிலத்தை அரசு காவல் நிலையம் அமைப்பதற்கான முயற்சி செய்து வருகிறது இதை தடுக்க சென்றால் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடுகள் என்று கூறுவதாகவும் எத்தனை முறை எத்தனை மனு எத்தனை ஆட்சி இடம் மனு கொடுத்தாலும் தங்களுக்கு எந்த பலனும் இல்லை இனி இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எங்கள் குடும்பத்தினருடன் அகிம்சை முறையில் தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து எங்களின் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 
மேலும் தமிழக முதலமைச்சர் அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் நாங்கள் குடும்பத்தோடு வேண்டிக் கொள்வது நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அல்ல ராணுவ வீரரின் உயிர் தியாகத்திற்கு அரசும் அரசு அதிகாரிகளும் எங்கள் குடும்பம் வாழ கொடுக்கப்பட்ட நிலத்திற்கான பட்டாவை கேட்டு வருவதாகவும் கருணை உள்ளம் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டா வழங்க ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சேலம் எம் பெருமாபாளையம் கரடு புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி வசிக்க தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பட்டியல் சமுதாய மக்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.

சேலம் எம் பெருமாபாளையம் கரடு புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி வசிக்க தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பட்டியல் சமுதாய மக்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.

சேலம். 

சேலம் எம் பெருமாபாளையம் கரடு புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி வசிக்க தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பட்டியல் சமுதாய மக்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி எம் பெருமா  பாளையம் ஆதிதிராவிடர் நீதி பகுதியில் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு வழங்க வந்திருந்தனர். அந்த மனுவில் கடந்த 20 வருடங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். மேட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் கரடு புறம்போக்கில் மற்ற உயர் ஜாதியினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மேற்படி கரண்டு புறம்போக்கு இடத்தில் பட்டாவோ வேறு எந்த ஆவணங்களோ கிடையாது. ஆனால் எங்கள் பட்டியில் என சமுதாய மக்களுக்கு மேட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் கரண்ட் புறம்போக்கு இடத்தில் நாங்கள் வீடு கட்டி வசித்து வருவதற்கு வீட்டு மனை பட்டா கேட்டு சென்றால் மேற்படி கரடு புறம்போக்கு இடத்தில் எங்களை வீடு கட்டி குடியிருக்க முடியாது என்றும் இந்த இடத்தில் பட்டியல் சமுதாய மக்களான உங்களுக்கு இடம் இல்லை என்றும் வாழப்பாடி வட்டாட்சியர் காரிப்பட்டி வருவாய் அலுவலர் மற்றும் மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மருத்து மேற்படி கரடு புறம்போக்கில் இடம் தர மருத்துவ வருகிறார்கள். 
ஆனால் மேட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் கரடு புறம்போக்கில் உள்ள இடத்தில் சேலத்தில் உள்ள கிருபா மருத்துவமனையில் உள்ள கிறிஸ்தவ சபையில் உள்ள மக்களின் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக இந்த இடத்தினை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு மேற்படி வாழப்பாடி வட்டாட்சியர் காரிப்பட்டி வருவாய் அலுவலர் மற்றும் மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்கள் உடனடியாக இருந்து வருவதாகவும் ஆனால் தங்களை போன்ற பட்டியல் இனத்தைச் சார்ந்த எங்களுக்கு மட்டும் மேற்படி இடத்தில் குடியிருக்க வீடு கொடுக்க மறுத்து வருகிறார்கள் என்றும் அந்த மனதில் குறிப்பிட்டிருந்தனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களின் மனுவிற்கு கருணையுடன் பரிசீலனை செய்து பட்டியல் இனத்தைச் சேர்ந்த எங்களுக்கு மின்வாரிய அலுவலகம் அருகில் கருட புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருவதற்காக எங்களுக்கு பட்டா வழங்கி உதவ வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டனர். இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் தங்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியரும் தங்களது மனு மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களாக பல போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி பொது மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுத்தார்.

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

சேலம் மாவட்ட புத்தா டிரஸ்ட் கமிட்டி கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சேலம் மாவட்ட புத்தா டிரஸ்ட் கமிட்டி கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சேலம். 

சேலம் மாவட்ட புத்தா டிரஸ்ட் கமிட்டி கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

புத்தா டிரஸ்ட், சேலம் மாவட்டம் - கமிட்டிக் கூட்டம் சேலம் சின்ன திருப்பதி பகுதியில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு டிரஸ்ட் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பினராக திரு. பந்தே போதி மாதவன் (காசி விஸ்வநாதன்) மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்க குழுச முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுரஸ்ராம் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் , புத்தா டிரஸ்ட்டின் அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், டிரஸ்டில் செயல்படாத திரு. கந்தசாமி மற்றும் திரு.ராமசாமி ஆகியோர் தத்தம் பொருப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர், சேலம் மாவட்டம் மையப்பகுதியில் அமையப்பெற்ற தலைவெட்டி முனியப்பன் கோயிலுக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்திட, பிற்படுத்தப்பட்ட ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை இக்கூட்டம் வலியுறுத்துகிறது, டிசம்பர்  இறுதிக்குள்  சேலம் மாவட்டத்தில் இந்தியா முழுவதும்  செயல்பட்டு வரும் பல்வேறு பௌத்த அமைப்புகளை அழைத்து வந்து சிறப்புக் கூட்டம் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, 
தலை வெட்டி முனியப்பன் கோயிலின் பெயரை மாற்றி அமைத்து பௌத்த அமைப்பிடம் அந்தக் கோயிலையும் அதன் சுற்று வட்ட நிலங்களையும், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி எடுத்து ஒப்படைக்க பிற்படுத்தப்பட்ட ஆணையத்தை, இக்கூட்டம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது, கல்வி, பொருளாதாரம் மேம்பாட்டு மத்திய, மாநில நிதி ஆதாரங்களை புத்தா டிரஸ்ட் அமைப்பிற்கு வழங்கிட , பிற்படுத்தப்பட்ட ஆணையத்தை இக்கூட்டம் வலியுறுத்துகிறது, இந்தக் கூட்டத்தில் தலைவராக செல்வக்குமார், செயலாளராக  சங்கமித்ரா (அமுதா), பொருளாளராக ஜெயந்தி, டிரஸ்ட் குழுவின் உறுப்பினர்களாக  இம்மான் (பிரபு), சுரேஷ் குமார்,  அன்பழகன், காமராஜ், வணங்காமுடி, சம்பத், மாணிக்கம், ரத்னவேல்,  புவனேஸ்வரி, பழ.முரளி, ஜேசு பாதம் (வேலு), ராதா கிருஷ்ணன் (விருதுநகர்), கோகிலா,  ரமேஷ்பாபு, பழனி, சந்தோஷ் குமார், ராம்ஜி, கம்பர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், இந்தக் கூட்டத்தில் புத்தா டிரஸ்ட் குழுவின் ஒருங்கிணைப்பாளசர்களாக (Co-ordinator) சரஸ்ராம் ரவி மற்றும் பந்தே போதி மாதவன் (காசி விஸ்வநாதன்) ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் டிரஸ்ட் துணைத் தலைவர் திருமதி. பொன்னம்மாள் மற்றும் ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சுரேஷ் குமார், இமான் (பிரபு), வெங்கடாசலம், K. காமராஜ், ராம் மற்றும் சங்கமித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
ஈரோடு சுற்று வட்டார பகுதியில் கடும் பனிமூட்டம்: குளிர் பிரதேசங்களைப் போல குளிருடன் பனிமூட்டமாக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு சுற்று வட்டார பகுதியில் கடும் பனிமூட்டம்: குளிர் பிரதேசங்களைப் போல குளிருடன் பனிமூட்டமாக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடும் பனிமூட்டம்... குளிர் பிரதேசங்களைப் போல குளிருடன் பனிமூட்டமாக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி

பனிப்பொழிவு காரணமாக சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி மெதுவாக செல்கின்றனர். நேற்று நள்ளிரவு ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ததது. இந்தநிலையில், அதிகாலை முதல் ஈரோடு மாநகரின் சுற்றுவட்டார பகுதிகளான சோலார், கொல்லம்பாளையம், மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது .

அதேபோல் ஈரோடு மாநகரத்தின் பல பகுதிகளில் பனிமூட்டம் நிலவி வருகின்றது. அதேசமயம், ஊட்டி கொடைக்கானலை போல குளிரும் சற்று அதிகமாகவே இருப்பதால் ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்


பவானி செல்லியாண்டியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (டிச.8) காலை கோலாகலமாக நடந்தது.

ஈரோடு மாவட்டம் திருநணா எனும் பவானியில் அமைந்து பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது செல்லியாண்டியம்மன். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகளுக்கு மேல் முடிவடைந்த நிலையில் புனரமைப்பு செய்யப்படாமல் இருந்தது. அதேபோல், இக்கோயில் அருகே மாரியம்மன் கோயிலும் அமைந்துள்ளது.

இவ்விரு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பாலாலயம் செய்து பின்னர் கோயில் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. கோயில் கோபுரங்களுக்கு வர்ணங்கள் தீட்டியும், புதியதாக கல் மண்டபம் கட்டப்பட்டும் முன்பு இருந்த தரைத்தளத்தில் இருந்த மொசைக் அப்புறப்படுத்தி புதிய கருங்கல் பதிக்கப்பட்டு கோயிலில் பல்வேறு சிற்பங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது.

இதனையடுத்து, கடந்த 4ம் தேதி கும்பாபிஷேக விழா மங்கல இசை விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 5ம் தேதி அதிகாலை ஐங்கர தோணுக்கும் நவ கோள்களுக்கும் சிறப்பு வேள்வி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ,பவானி கூடுதுறையிலிருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீரை தீர்த்த குடங்களில் எடுத்து கோயிலுக்கு வந்து செல்லாண்டியம்மனுக்கு ஊற்றி வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு ஆறு கால வேள்வி பூஜைகள் கோயில் ஸ்தாலாசார்யம் சிவ ஸரீந சிவா என்கிற சந்திரசேகர் சிவம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி கோயில் அர்ச்சகம், சிவ ஸ்தானியம் ராஜப்பா குருக்கள் தலைமையில் முதல் கால வேள்வி பூஜை முதல் ஆறு கால வேள்வி பூஜைகள் நடந்து முடிந்தது.

இதனிடையே, நேற்று (டிச.7) மாலை பவானி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோயில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோயில், பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று (டிச.8) அதிகாலை 3:30 மணிக்கு மங்கள இசை திருமுறை பண்ணிசை வாசிக்கப்பட்டது.
பின்னர் ஆறாம் கால சிறப்பு வேள்வி நடைபெற்று முடிந்தது. பின்னர் திரு குடங்கள் வேள்விச்சாலையில் இருந்து புறப்பட்டு அனைத்து விதமான கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் முன்னிலையில் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் நடைபெற்றது.

இதில், பவானி சட்டமன்ற உறுப்பினர் கருப்பணன், கும்பாபிஷேக திருப்பணிகள் குழு ஒருங்கிணைப்பாளர் பிரபாத் மகேந்திரன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், உபயதாரர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பக்தர்கள் கோபுர கலசங்களுக்கு புனித ஊற்றப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தாயே பராசக்தி, செல்லியாண்டி அம்மா, காவல் தெய்வமே என விண்ணை முட்டும் அளவில் பக்தி கோஷம் ஒலித்தது. மேலும், விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.