திங்கள், 16 டிசம்பர், 2024

ஈரோடு ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு மாவீரன் பொல்லான் பெயர் சூட்டக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு மாவீரன் பொல்லான் பெயர் சூட்டக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்திற்கு சுதந்திரப் போராட்ட மாவீரன் பொல்லான் பெயரை சூட்டக் கோரி, இன்று (டிச.16) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சமூகநீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்திற்கு தீரன் சின்னமலை மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதேபோல், தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 மாடி கட்டிடத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை என பெயர் சூட்ட வேண்டும். இதற்கான அறிவிப்பை டிசம்பர் 20ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாவீரன் பொல்லான் நினைவு அரங்க அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆதித்தமிழர் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் ஈரோடு வீரக்குமார், அறம் மக்கள் கட்சி தலைவர் கரூர் காமராஜ், திராவிட எழுச்சி பேரவை தலைவர் சக்திவேந்தன், அருந்ததியர் விடுதலை முன்னணி தலைவர் என்டிஆர், இந்திய கன சங்கம் கட்சி துணைத் தலைவர் துரைசாமி, தமிழக தொழிலாளர் கட்சி தலைவர் மாகாளியப்பன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தினகரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட நிர்வாகி சலீம், ஜெய்பீம் மக்கள் கட்சி தலைவர் அறிவழகன், மதுரைவீரன் மக்கள் விடுதலை இயக்க தலைவர் ஆறுமுகம், சமூகநீதி மக்கள் கட்சி துணைத் தலைவர் ஆறுமுகம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், மாவீரன் பொல்லான் வரலாறு மீட்பு குழுவினர் சதீஷ், பாபு, கண்ணையன், மூர்த்தி, சசிகுமார் ஆகியோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
கொலை மிரட்டல் விடுத்து சொத்தை ஏமாற்றி கிரயம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத்திறனாளி பெண் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கொலை மிரட்டல் விடுத்து சொத்தை ஏமாற்றி கிரயம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத்திறனாளி பெண் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சாலை, பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது 49).
மாற்றுத்திறனாளி பெண்ணான இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் தரையில் அமர்ந்து, அலுவலர்களிடம் மனு வழங்கி விட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த, 1998 ல் எனக்கும், மணி என்பவருக்கும் திருமணமாகி, மோகன்பிரபு என்ற மகன் உள்ளார். 

எனது கணவரின் அத்தை அலமேலுவுக்கு ஈரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி பின்புறம் கொத்துக்கார நல்லா வீதியில் உள்ள சொத்தை, எனது கணவர் மணி மற்றும் அவரது சகோதரர் கண்ணையன் ஆகியோருக்கு சாசனம் எழுதி கொடுத்தார்.

 அவ்விடத்தை அனுபவித்து வருகிறோம்.
அந்நிலத்தை விற்க ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த ஒருவரிடம் அக்ரிமென்ட் போட்டு, பல ஆண்டாக கிரயம் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சிலர் என்னை அணுகி, அந்நிலத்தை விற்று தருவதாகவும், வேறு நபர்களுக்கு போடப்பட்ட அக்ரிமென்ட்டை ரத்து செய்து தரும்படி கூறினர்.

அதை நம்பி கடந்த, நவ.,19 ல் ஈரோடு ரங்கம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நானும், எனது மகன் மற்றும் சேலத்தை சேர்ந்தவர்களும் வந்தனர். அக்ரிமென்ட் ரத்துக்கான ஆவணம் எனக்கூறி சில கையெழுத்தை பெற்று, அவர்கள் பெயருக்கு நிலத்தை மாற்றி உள்ளனர். 

என்னிடமும், எனது மகனிடமும் கத்தியை காட்டி, மிரட்டி கையெழுத்து போட வைத்து, பத்திரத்தை படித்துக்கூட பார்க்க விடவில்லை. தற்போது ஈ.சி., போட்டு பார்த்தபோது, அந்நிலம் வேறு நபர் பெயரில் உள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அந்த பத்திர பதிவை ரத்து செய்து, எனக்கு மாற்றித்தர வேண்டும் என்று கூறினார்.
உலக இசை தின விழா. கலை பண்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு இசைப்பள்ளி மாணவஉட்பட இசை வித்வான்கள்  அசத்தல்.

உலக இசை தின விழா. கலை பண்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு இசைப்பள்ளி மாணவஉட்பட இசை வித்வான்கள் அசத்தல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

உலக இசை தின விழா. கலை பண்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு இசைப்பள்ளி மாணவஉட்பட இசை வித்வான்கள்  அசத்தல். 

இசையால் மயங்காதோர் இதயம் உண்டோ என்பது முதுமொழி. 

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16ல் உலக இசை தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட கலை பண்பாட்டு துறை மற்றும் சேலம் அரசு இசைப்பள்ளி சார்பில் உலக இசை தின விழா சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவில் அருகே நடைபெற்றது. 
சேலம் மாவட்ட கலை பண்பாட்டு துறையின் உதவி இயக்குனர் நீலமேகன் மற்றும் சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த இசை விழாவில், சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இராசி. சரவணன் மற்றும் பொருளாளர் குமரவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர். கலை வளர்மணி கோவிந்தராஜ் குழுவினரின்
கிராமிய கலை தப்பாட்ட நிகழ்ச்சியுடன் தொடங்கிய உலக இசை தின விழாவில் தொடர்ச்சியாக காண இசைக் குயில் தனசொருபி. கருப்பண்ணன் அவர்களின் தேவார இசை, வடுவூர் முனைவர் தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்ற கருத்தரங்கம் உட்பட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் விழாவில் கலந்து கொண்ட அனைவரின் இசை தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் முனைவர் தினேஷ் குமார் விளக்கம் அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இசைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொருளாளர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
இசைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் மிகச் சிறந்த தொழில் அதபருமான
 இராசி. சரவணன் நிகழ்ச்சியில் பேசும் போது இசையின் சிறப்பு அம்சங்கள் குறித்து பட்டியலிட்ட அவர் இசைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் காலத்தில் நல்ல முன்னேற்றமடைந்து அரசு துறையில் அதிகாரிகளாக பணியாற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கை இணையும் முன் வைத்தார். 
தொடர்ந்து உணவு  இடைவேளைக்கு பிறகு புல்லாங்குழல் இசை மற்றும் வீணை இசை ஆகியவையும் நடைபெற்று நான்கு மணிக்கு விழா இனிதே நிறைவு பெற்றது. 
இந்த உலக இசை தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலை பண்பாட்டு துறை அதிகாரிகள், சேலம் மாவட்ட அரசு இசை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் இசை ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: ஈரோட்டில் அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: ஈரோட்டில் அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, ஈரோட்டில் அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் (டிச.14) சென்னையில் காலமானார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈரோட்டில் நேற்று (டிச.15) பல்வேறு கட்சியின் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகு தியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவுபெற்றது.

அதைத்தொடர்ந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.17) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.17) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.17) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (டிச.17ம் தேதி) செவ்வாய்க்கிழமை நடக்கிறது. 
இதனால் கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓட மேடு. கருக்கம்பாளையம், தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரையாம்பாளையம்.
60 கோட்டங்களில் சிறந்த சேவை மற்றும் மக்கள் பணியாற்றி வரும் 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பனுக்கு பாராட்டு விழா.. 44வது கோட்ட தேசிய புனரமைப்பு காலனி குடியிருப்பு தூய்மை பணியாளர் நல்வாழ்வு சங்கத்தினர் ஏற்பாடு.

60 கோட்டங்களில் சிறந்த சேவை மற்றும் மக்கள் பணியாற்றி வரும் 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பனுக்கு பாராட்டு விழா.. 44வது கோட்ட தேசிய புனரமைப்பு காலனி குடியிருப்பு தூய்மை பணியாளர் நல்வாழ்வு சங்கத்தினர் ஏற்பாடு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

60 கோட்டங்களில் சிறந்த சேவை மற்றும் மக்கள் பணியாற்றி வரும் 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பனுக்கு பாராட்டு விழா.. 44வது கோட்ட தேசிய புனரமைப்பு காலனி குடியிருப்பு தூய்மை பணியாளர் நல்வாழ்வு சங்கத்தினர் ஏற்பாடு. 

60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம்  மாநகராட்சியின் 44 வது வார்டு கிச்சிப்பாளையம்  தேசியப் புணர் அமைப்பு காலனி பகுதியில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் பொது மக்களின் நலனுக்காக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியும் சொல்லாத வாக்குறுதியையும் பொது மக்களின் நன்மை பயக்கும் திட்டங்களை  சிறப்பாக செயல்படுத்தியமைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் விதமாக, 44வது கோட்ட விசிக மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ஜெ.மு. இமயவரம்பனுக்கு பாராட்டு விழா சேலம் கிச்சிப்பாளையம் தேசியப் புணரமைப்பு காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. 
தேசியப் புனரமைப்பு காலனி குடியிருப்பு தூய்மை பணியாளர்கள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கிச்சிபாளையம் பகுதி திமுக செயலாளர் ஜெய்,  44 வது வார்டு திமுக செயலாளர் செந்தில், சேலம் மாநகர தொண்டரணி அமைப்பாளர் திமுகவைச் சேர்ந்த திருமதி தேவி பாலன், முன்னாள் ஊர் நாட்டாமை சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த வகித்தனர்.
கடந்த அறுபது ஆண்டுகளில் எத்தனையோ மாமன்ற உறுப்பினர்கள் வந்து சென்று இருந்தாலும் கூட தான் பதவியேற்ற நாளிலிருந்து 44 வது வார்டு மக்களின் நலனுக்காகவே தற்பொழுது வரை பாடுபட்டு பல்வேறு நல்ல பல திட்டங்களை செய்து வரும் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இமயவரம்பன் சிறப்பு விருந்தினராக தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாமன்ற உறுப்பினரின் சிறந்த சேவையை பாராட்டும் விதமாக நினைவு பரிசு வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட 44 வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, விழாவின் சிறப்பு விருந்தினர் மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் பேசுகையில், தான் பதவியேற்ற நாளிலிருந்து தேர்தல் வாக்குறுதியின் போது கூறிய வாக்குறுதிகள் மட்டுமல்லாது சொல்லாத வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்துள்ளது தனக்கு பெருமை அளிப்பதாகவும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த இந்த வார்டு மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த பகுதியில் உள்ள ஊர் கிணறு கடந்த 50 ஆண்டுகளாக தூர் வாராமல் பராமரிப்பற்று கிடந்த நல்ல தண்ணீர் கிணற்றை தூய்மை பயன்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது, 60 ஆண்டுகளாக ஊர் மக்களுக்கு கிடைக்க பெறாமல் இருந்த பட்டாவிற்கு உரிய அலார்ட்மெண்ட் ஆர்டரை பெற்று தந்தது குறுகிய காலத்தில் பட்டா மற்றும் பத்திரம் பெற்று தர கூட்டு  முயற்சி செய்து வருவது, பெண்களுக்கு தனி கழிப்பிட வசதி பெற்று தந்தது, சுமார் 500 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் பொது குடிநீர் வசதி,  சொத்து வரி செலுத்துவதற்கு உண்டான ஆர்டர் பெற்று தந்தது, சாலை வசதி மின்விளக்கு சாக்கடை வசதி மேம்படுத்தியது, சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் வளர்ச்சிக்காக மாமன்றத்தில் அவ்வப்போது குரல் கொடுத்து பேசி வருவது என்பன உள்ளிட்டவைகள் குறித்து பட்டியலிட்டார் இமயவரம்பன். 
தொடர்ந்து பேசுகையில் தற்போது இந்த விழாவில் தன் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் மூன்று மாதத்திற்கு உள்ளாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதனை அடுத்து 50 ஏழை எளியவர்களுக்கு இலவச சேலை மற்றும் புத்தாண்டுக்கான நாட்காட்டிகளை வழங்கி இமயவரம்பன் வாழ்த்து தெரிவித்தார்.
இனிதே நிறைவு பெற்ற விழாவை  தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தேசிய புனரமைப்பு காலனி குடியிருப்பு தூய்மை பணியாளர்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கறி விருந்து வழங்கப்பட்டது.
விழாவில் தூய்மை பணியாளர் நல்வாழ்வு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சேகர் மகாலிங்கம் பழனி யுவராஜ் நாகராஜ் முருகன் ராஜா மாது உட்பட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சனி, 14 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.16) திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தளவாய்ப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (டிச.16) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
 இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளவாய்ப்பேட்டை துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சுக்காநாயக்கனூர், சின்னாநாயக்கனூர், காட்டூர், கூத்தாண்டிகொட்டாய், காக்காச்சிகாடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, சின்னபுலியூர், பெரியார்நகர், மணக்காட்டூர், தளவாய்பேட்டை, ஒரிச்சேரிப்புதூர், வைரமங்கலம், கவுண்டன்புதூர், குட்டிபாளையம், வெங்கமேடு, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரியமேட்டூர், சின்னமேட்டூர், நல்லாநாயக்கனூர், கள்ளியூர், மல்லியூர், நாச்சிமுத்துபுரம், வேலாமரத்தூர், கரட்டுப்பாளையம், காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், செங்காடு, கே.ஆர்.பாளையம், எலவமலை, செங்கலாபாறை, ஐய்யம்பாளையம், மூலப்பாளையம், சலங்கபாளையம், சிறைமீட்டான் பாளையம், ஜம்பை, பெரியமோளபாளையம், சின்னமோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், சின்னியம்பாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைக்கரடு, பெரியவடமலை பாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குப்பாளையம், கூடல்நகர், கரைஎல்லப்பாளையம், சின்னவடமலைப்பாளையம், சு.பு.வலசு, லட்சுமி நகர், செங்கோடம்பாளையம் மற்றும் பாலபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.