வெள்ளி, 27 டிசம்பர், 2024

பெருந்துறை: அரசு வேலை வாங்கித் தருவதாக துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி; 5 பேர் கைது

பெருந்துறை: அரசு வேலை வாங்கித் தருவதாக துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி; 5 பேர் கைது

பெருந்துறை: அரசு வேலை வாங்கித் தருவதாக துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி; 5 பேர் கைது

பெருந்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். 
ஈரோடு மாவட்டம்‌ பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள் (வயது 51). இவர் ஆப்பக்கூடலில் உள்ள சக்தி சர்க்கரை ஆலையில் வரவு-செலவுகளை கண்காணிக்கும் வகையில் அரசு வருவாய் துறையின் மூலம் நியமிக்கப்பட்ட துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த 2022ம் ஆண்டு பெருந்துறையில் பணியாற்றியபோது, சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வாரிசு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வதற்காக அவரை அணுகியுள்ளார். அப்போது, கார்த்திகேயன் தான் காவல் துணை கண்காணிப்பாளராக உள்ளதாக தெரிவித்து, சுந்தராம்பாளின் கைப்பேசி எண்ணைப் பெற்றுள்ளார்.

இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு சுந்தராம்பாள் நம்பியூரில் பணியாற்றியபோது, வருமான வரித்துறையில் வேலை இருப்பதாகவும், அதனை தங்களது மகன் சண்முகராஜூக்கு வாங்கித் தருவதாகவும் கூறி சுந்தராம்பாளிடம் இருந்து கார்த்திகேயன் பணம் கேட்டுள்ளார்.

இதை உண்மை என நம்பிய சுந்தரம்பாள், கடந்த 2023ம் ஆண்டு முதல் கார்த்திகேயனுக்கும் அவரது கூட்டாளியான, சென்னை மாவட்டம் ரெட் ஹில்ஸ், புள்ளிலைன் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ராமதாஸ் மகன் கலைவாணன் (வயது 37) ஆகியோருக்கு 2 தவணைகளாக ரூ.55 லட்சமும் என பல தவணைகளாக சேர்த்து ரூ.2 கோடிக்கு மேல் பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் கலைவாணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் பணத்தை பங்கு பிரித்துக் கொண்டதாக தெரிகிறது. பணத்தை வாங்கிக் கொண்ட கார்த்திகேயன், கலைவாணன் கும்பல் கூறியபடி அரசுப் பணியை வாங்கித் தராமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் நம்பிக்கை இழந்த சுந்தராம்பாள் கார்த்திகேயன், கலைவாணன் ஆகியோரிடம் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டு வந்தார்.

பணம் தராமல் ஏமாற்றி வந்த கார்த்திகேயன், கலைவாணன் பணத்தை திருப்பி தர முடியாது என்றும், மீறி கேட்டால் மகன் சண்முகராஜூவை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த சுந்தராம்பாள் இதுகுறித்து, கடந்த 19ம் தேதி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கலைவாணன், திருவள்ளுவர் மாவட்டம் அம்மனபாக்கம் தெலுங்கு காலனி, பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த வினோத் (வயது 29), சென்னை ரெட் ஹில்ஸ் 5வது வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 24) , திருவள்ளுவர் மாவட்டம் காந்திநகர் நகர் அவஞ்ஜிவாக்கத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 28), திருவள்ளுவர் மாவட்டம் புள்ளி லைன் பஜனை கோயில் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கார்த்திகேயனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வியாழன், 26 டிசம்பர், 2024

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சேலம் மாணவர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் அஞ்சலி.

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சேலம் மாணவர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் அஞ்சலி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சேலம் மாணவர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் அஞ்சலி. 

இந்திய திருநாட்டின் முன்னாள் பாரத பிரதமர் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர் உட்பட பன்முகம் கொண்ட மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் உடல் நலத்துறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சியினர் எதிர்க்கட்சிகள் என நாடு முழுவதும் அவரது மறைவிற்கு தங்களது இரங்கல்களை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளதுடன் கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. 
இதன் ஒரு பகுதியாக மறைந்த பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சேலம் முள்ளுவாடி கேட்டு அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்த நிலையில், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த மலர் அஞ்சலி நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் திருமதி சாரதா தேவி உட்பட கட்சி நிர்வாகிகள், கோபி குமரன் குமரேசன் பர்வேஷ் நிசார் நாகராஜன் சஞ்சய் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பன்முகம் கொண்ட மன்மோகன் சிங் அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியை  சட்டத்திற்கு புறம்பாக விற்ற விவகாரம். பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி தமிழக அரசே அந்த பள்ளியை ஏற்று நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியை சட்டத்திற்கு புறம்பாக விற்ற விவகாரம். பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி தமிழக அரசே அந்த பள்ளியை ஏற்று நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியை  சட்டத்திற்கு புறம்பாக விற்ற விவகாரம். பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி தமிழக அரசே அந்த பள்ளியை ஏற்று நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம். 

சேலம் பழைய சூரமங்கலத்தில் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு நிதி உதவி பெறும் பள்ளியாகவும், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுயநிதி மேல்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரும் இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனத்திற்கு பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் விலைக்கு விற்றதாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது அதே ரியல் எஸ்டேட் நிறுவனம் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியையும் விலைக்கு வாங்கி சட்டத்திற்கு புறம்பாக முன்னறிவிப்பு செய்யாமல் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளியை இடித்துவிட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் முயற்சியில் பள்ளி நிர்வாகமும் ரியல் எஸ்டேட் நிறுவனமும் முயன்று வருகிறது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு கட்டணம் தெரிகிறது பள்ளி நிர்வாகம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராகவும் கடந்து சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உடன் இன்று மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் புதுகோடு பேருந்து நிறுத்தம் அருகே இருந்து துவங்கிய பேரணிக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை வகித்தார். அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பிரதாபன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ஏ டி ஆர் சந்திரன், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தலைவர் பூமொழி, குரு கான்ஷீராம் அறக்கட்டளை நிறுவனர் விநாயகமூர்த்தி, மக்கள் தேசம் கட்சி மாநில செயலாளர் சுலைமான், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன், தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு மாவட்ட செயலாளர் சுசீந்திரகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த பேரணியானது அந்தப் பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக பள்ளியில் நிறைவடைந்தது. 
இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 1800 மாணவர்களை பள்ளியை விட்டு துரத்தக்கூடாது, பள்ளியை தொடர்ந்து அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பள்ளியை விற்றவர்கள் மற்றும் வாங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளையும் கோஷங்களையும் எழுப்பியவாறு ஊர்வலத்தின் போது கலந்து கொண்டனர். 
தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் பெயரில் சேவை மனப்பான்மையுடன் துவங்கிய பள்ளியை பணத்தாசையோடு பள்ளியை விற்பனை செய்து மாணவர்களை வாழ வைத்து வஞ்சித்து வேதனைப்படுத்தி மாணவர்களை பள்ளியை விட்டு துரத்தி பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் மாணவர்கள் நலன் கருதி அந்த பள்ளி தொடர்ந்து அங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்குமாறும், அந்தப் பள்ளியை சட்டத்திற்கு புறம்பாக சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் கல்வித்துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்த பள்ளி நிர்வாகத்தின் மீதும், சட்டத்திற்கு புறம்பாக விலைக்கு வாங்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சட்டத்திற்கு விரோதமாக பள்ளியை பத்திர பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரியும், அந்தப் பள்ளியை தமிழக அரசு ஏற்று நடத்துமாறும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டத்தை இணைந்து நடத்திய அமைப்புகளின் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் இன்று (டிச.26) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் தொடர்பாக துறை முதன்மை அலுவலர்களுடன் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழக முதல்வர் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அதிகபட்ச நீரேற்றும் திறன் வினாடிக்கு 250 கன அடியாக உள்ளது. இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குளம், குட்டைகளுக்கு ஒரு வருட காலத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள 1,500 மில்லியன் கன அடி நீர் குளம், குட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

மொத்தம் உள்ள 1,045 குளம், குட்டைகளில் தற்பொழுது 1,005 குளம், குட்டைகளுக்கு நீர் செல்வது உறுதி செய்யப்பட்டு, நீர் நிரப்பப்பட்டு வருகிறது. மீதமுள்ள 40 குளம், குட்டைகளுக்கும் விரைவில் நீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, வருகின்ற உபரி நீர் அனைத்தையும் எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீர் குறைவாக செல்லக் கூடிய குட்டை, குளங்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கிராம அளவில் குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அனைத்துறை துறை நலத்திட்ட உதவிகளும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார். கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், கண்காணிப்பு பொறியாளர் (அத்திகடவு அவினாசி திட்டம்) திருமலைக்குமார். செயற்பொறியாளர் அருளழகன், மாநகர பொறியாளர் விஜயகுமார் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினத்தந்தி டிவியின் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான செய்திக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து அறிக்கை

தினத்தந்தி டிவியின் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான செய்திக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்து அறிக்கை


அறச்சலூரில் தந்தை கண் முன்னே விடிய விடிய மகனை அடித்த போலீஸ், வேதனையில் பிரிந்த தந்தையின் உயிர் வெளியான செய்திக்கு ஈரோடு மாவட்ட காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி டிவியின் எக்ஸ் வலைதளத்தில் தந்தை கண் முன்னே விடிய விடிய மகனை அடித்த போலீஸ், வேதனையில் பிரிந்த அப்பாவின் உயிர் என்ற தலைப்பில் வந்த செய்திக்கு ஈரோடு மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில்,

கடந்த டிச.23ம் தேதி சுமார் மாலை 5 மணியளவில், ஈரோடு மாவட்டம், அறச்சலூர், வடுகப்பட்டி அஞ்சல், வினோபா நகர், 7வது வீட்டில் வசித்து வரும் ராஜேந்திரன்(வயது 55) என்பவர், தனது 13 வயது இளைய மகன் உடன் இருசக்கர வாகனத்தில் ஈரோடு- காங்கேயம் சாலையில் உள்ள அறச்சலூர் காவல் நிலையம் அருகே குடிபோதையில் வேகமாக சென்று அறச்சலூர் காவல் நிலையம் முன்புறம் உள்ள சாலை தடுப்புகளை மோதி தள்ளிவிட்டு நிற்காமல் சென்றார்.

அப்போது, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள் சத்தம் போட, சுமார் மாலை 5.15 மணிக்கு மணியளவில் தானாக அருகில் உள்ள அறச்சலூர் காவல் நிலையத்திற்கு வந்தார். விசாரணையில் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்ததால், மது போதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவர் நிதானமான நிலையில் இல்லாததால் அவரது சகோதரர் வீரகுமாரை அழைத்து மது போதையில் உள்ள சகோதரரை அழைத்துச் செல்ல கூறப்பட்டது.
பின்னர், அவரது சகோதரர் வீரகுமார் மற்றும் ராஜேந்திரனின் 18 வயது மூத்த மகன் ஆகியோர் அறச்சலூர் காவல் நிலையத்திற்கு வந்து, மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஒத்துழைப்பு தராமலும், வாகனத்தை திரும்ப கேட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தும், கைபேசியில் புகைப்படம் எடுத்தனர்.

எனினும், பரிசோதனையில் ராஜேந்திரன் 100 மி.லி அளவில் மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டதால், குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்த பின்னர் மாலை 6.15 மணியளவில் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்படி ராஜேந்திரன் என்பவர் 24ம் தேதி அன்று அதிகாலை 2 மணிக்கு இறந்துள்ளார்.


அதனைத் தொடர்ந்து, ராஜேந்திரனின் 18 வயது மூத்த மகன் என்பவர், தனது தந்தையின் முன் தன்னை காவல்துறையினர் தாக்கியதால் மன உளைச்சல் காரணமாக தனது தந்தை இறந்து விட்டதாகவும் அதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு அளித்ததன் மீது அறச்சலூர் காவல் நிலையத்தில் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் தன்னை தாக்கியதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது எனவும், மேற்படி செய்தி அறிக்கை தவறானது எனவும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதன், 25 டிசம்பர், 2024

தை திங்கள் திருவிழாவிற்கு 25 சதவீதம் வெள்ளி கொலுசுகளுக்கு ஆர்டர். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை கைவினைஞர்கள் நலச்சங்க தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் தகவல்.

தை திங்கள் திருவிழாவிற்கு 25 சதவீதம் வெள்ளி கொலுசுகளுக்கு ஆர்டர். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை கைவினைஞர்கள் நலச்சங்க தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் தகவல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தை திங்கள் திருவிழாவிற்கு 25 சதவீதம் வெள்ளி கொலுசுகளுக்கு ஆர்டர். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை கைவினைஞர்கள் நலச்சங்க தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் தகவல். 

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான தை திருவிழாவை முன்னிட்டு வெள்ளி கொலுசு, அரைஞான்கோடி மற்றும் மெட்டிகள் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருக்கும். இதற்காக சேலம் மாவட்டம் சிவதாபுரம் பனங்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகளுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வெள்ளிப் பொருட்களுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. 
இது குறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் நல சங்கத் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் கூறுகையில், 
தமிழகம் கர்நாடகா ஆந்திரா மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வெள்ளிப் பொருட்களுக்கான ஆர்டர்கள் வருகின்றன. இந்த ஆர்டர்களை தயாரிக்கும் பணியில் பட்டறைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 25% வெள்ளி பொருட்களுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு 75% ஆர்டர்கள் கிடைத்துவிடும். தற்பொழுது 25 சதவிகித ஆர்டர்கள் மட்டுமே வந்துள்ளன. அதாவது ஒரு லட்சம் வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும் பணிக்கு ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்பொழுது 25 ஆயிரம் வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும் பணிக்கு மட்டுமே ஆர்டர்கள் கிடைத்துள்ளது. 
மழையின் காரணமாக ஆர்டர்கள் குறைந்து உள்ளது என்றாலும் எதிர்வரும் காலங்களில் மீதமுள்ள ஆர்டர்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். வெள்ளி ஒரு கிராம் 110 ரூபாய்க்கு சமீபத்தில் சென்று இருந்த நிலையில் தற்பொழுது விலை குறைந்து 95 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வெள்ளிப் பொருட்களை அதிக அளவில் வாங்க வாய்ப்பு உள்ளது. கால் கொலுசுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 2000 ரூபாய் முதல் 30000 ரூபாய் வரையும், அரைஞான்கொடி 1500 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையிலும், மெட்டி 200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையிலும், தண்டை 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தற்போது வெள்ளி ஒரு கிராம் 95 ரூபாய்க்கும் பார்வள்ளி 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் வெள்ளி கொலுசு கைவினைகள் நல சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்த ராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கலெக்டர், எஸ்பி அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல்

மறைந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கலெக்டர், எஸ்பி அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல்

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இண்டர்நேஷனல் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த டிச.14ம் தேதி உயிரிழந்தார். பின்னர், டிச.15ம் தேதி மாலை ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 48 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சென்னை முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் ஈரோடு திருமகன் ஈவெரா சாலையில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டிற்கு நேற்று நேரில் சென்றனர். அங்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.