சனி, 28 டிசம்பர், 2024

பவானி: அம்மாபேட்டை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

பவானி: அம்மாபேட்டை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. நேற்று முன்தினம் (டிச.26) இரவு 10 மணிக்கு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று (டிச.27) மதியம் 2 மணி அளவில் 1 மணி நேரம் கனமழை பெய்தது. தொடர்ந்து, மாலை முதல் இரவு வரை சாரல் மழை நீடித்தது.

இந்தநிலையில், ஜரத்தல் பகுதியில் இடி-மின்னல் தாக்கியதில் வாலிபர் ஒருவர் இறந்தார். அவருடைய பெயர் கவின் குமார் (வயது 25). ஈரோடு அருகே உள்ள திண்டல் திருமலை கார்டன் பகுதியை சேர்ந்த ராமதுரை மகன் ஆவார். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று அம்மாபேட்டை அருகே உள்ள ஜரத்தல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்காக தனது குடும்பத்தினருடன் ஈரோட்டில் இருந்து காரில் சென்றார். ஜரத்தல், காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து சென்றுள்ளார்.

காரை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பெய்த லேசான சாரல் மழையில் தாக்கிய இடி-மின்னல் காரணமாக கவின்குமார் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர் அதே காரில் மயங்கி விழுந்த கவின் குமாரை ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கவின் குமாரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் மின்னல் தாக்கி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கவின்குமார் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 256வது பிறந்த நாள் விழா: மொடக்குறிச்சியில் அமைச்சர்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 256வது பிறந்த நாள் விழா: மொடக்குறிச்சியில் அமைச்சர்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் பொல்லானின் 256வது பிறந்த நாளையொட்டி, மொடக்குறிச்சியில் பொல்லானின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன் ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத் தளபதியான மாவீரன் பொல்லானின் 256வது பிறந்தநாள் விழா, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம் வடுகபட்டி பேரூராட்சி ஜெயராமபுரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று (டிச.28) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மாவீரர் பொல்லானின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், இவ்விழாவில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் என்று அனைவராலும் போற்றப்படுகிற பொல்லானின் 256வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பாக, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஜெயராமபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லானுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த டிசம்பர் 20ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், ஜெயராமபுரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைத்திட அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

விரைவாக இந்த பணி துவங்க இருக்கிறது. அடுத்த ஓராண்டிற்குள்ளாக இந்த பணிகள் முடிவடையும். இது அரங்கமாக மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் அமையவுள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அரங்கம் அமைய இடத்தினை வழங்கியவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர் பழனிச்சாமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, வடுகபட்டி பேரூராட்சி தலைவர் அம்பிகாவதி விஸ்வநாதன், மாவீரன் பொல்லான் வாரிசுதாரர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கலைமாமணி, மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சந்திரசேகர், சமூக நீதி கட்சி, பொல்லான் பேரவை நிறுவன தலைவர் வடிவேல் ராமன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்வித்துறையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ....

கல்வித்துறையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

கல்வித்துறையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ....

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 1.26 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயின்று வருகிறார்கள் இந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் கல்விக்கூறில் 1600 சிறப்பு பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பள்ளிகளில் கல்வி பயிற்சி அளித்தல் இல்லம் சார் பயிற்சி அளித்தல் பிறப்பு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல் பேச்சு பயிற்சி பெண் கல்வி ஊக்கத்தொகை போக்குவரத்து பயணப்படி மற்றும் தொழில் பயிற்சிகளுக்கு வழிகாட்டல் ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி ஆலோசனை மற்றும் வழிகாட்டல் செய்தல் உள்ளிட்ட அரசின் திட்டங்களை செய்து வரும் சிறப்பு பயிற்றுநர்கள் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் தமிழக அரசு இவர்களின் பணியை அங்கீகரித்து பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டலம் வாரியாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட மைய ஏழாம் ஆண்டு மாவட்ட மாநாடு சேலத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட மைய ஏழாம் ஆண்டு மாவட்ட மாநாடு சேலத்தில் நடைபெற்றது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட மைய ஏழாம் ஆண்டு மாவட்ட மாநாடு சேலத்தில் நடைபெற்றது. 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட ஏழாம் ஆண்டு மாநாடு சேலத்தில் நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில துணை தலைவர் திருவேரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜு மாவட்ட மகளிர் துணை குழு ஒருங்கிணைப்பாளர் காயத்ரி ஒலித்து ஒரு முன்னிலை வகித்த இந்த மாநாட்டினை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். சங்கத்தின் மாநில துணை தலைவர் சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் அர்த்தநாரி வாழ்த்துரை வழங்கிய இந்த மாநாட்டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக முன்மொழிக்கப்பட்டன. தொடர்ந்து சங்கத்தின் மாநிலத் தலைவர் திருவேரங்கன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து உரை ஆற்றினார்.
இந்த மாநாடு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நெடுங்காலமாக கேட்பாராற்று உள்ளன என்றும் இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர் வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராமநாதபுரத்தில் மாநில மாநாடு, நடத்த உள்ளதாகவும், உள்ளாட்சி அமைப்புகளை நகரமயமாக்குதலில் முனைப்பு காட்டி வருவதாகவும், இதன் காரணமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தங்களது அடுத்த கட்ட போராட்டம் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். 
இந்த மாவட்ட மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தில் ஏழாவது மாவட்டம் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பேரணியும் சேலம் மாநகரின் மையப் பகுதிகளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 27 டிசம்பர், 2024

எம்பி பிரகாஷ் தலைமையில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம்

எம்பி பிரகாஷ் தலைமையில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், குழு தலைவரும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கம் ஒன்றிய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு முறையான நிதிகள் சென்று சேர்வதையும், அதன் பணிகளில் விரைவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஈரோடு மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி நகராட்சிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் கடந்த கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 35 திட்டங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வட்டாரம் வாரியாக வேலை கோரி பதிவு செய்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரமாக்கும் பணி, மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் உள்ள சாய்வு தளமானது மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அகற்றுதல், மாநகராட்சி சொந்தமான தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பவானி நகராட்சிப் பகுதியில் 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் தெருமின்விளக்குகள் அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் இருவழி சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி குறித்து துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகள், மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி, சத்தியமங்கலம் நகராட்சியில் மின்வாரிய பணியாளர்களை நியமித்து மின்பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்படாமல் செயல்படுத்துதல், மொடக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட எழுமாத்தூர், குலவிளக்கு பழமங்கலம் மற்றும் ஈஞ்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம், பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் வீட்டு இணைப்புக்கள் வழங்குதல், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குப்பட்ட பகுதியில் பழுதடைந்த நிலையிலிருந்த மின் கம்பங்கள் மாற்றியமைத்தல், பர்கூர் மலைக்கிராமங்களில் புதிதாக சமுதாயக்கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ் என், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், மாவட்ட வன அலுவலர் கு.வெ.அப்பால நாயுடு (ஈரோடு வன கோட்டம்), செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) சேகர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை தொலைந்து போன 627 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை தொலைந்து போன 627 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை தொலைந்து போன 627 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2024ம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது செல்போன் தொலைந்து விட்டதாக சிஇஐஆர் போர்ட்டலில் பதிவு செய்தும் மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரிலும் புகார் கொடுத்தனர்.


அதன் அடிப்படையில், செல்போன் தொலைந்த தேதி, இடம் மற்றும் இதர விபரங்கள் பெறப்பட்டு, ஈரோடு மாவட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் சைபர் செல் பிரிவின் மூலம் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கை மூலம் ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 666 மதிப்புள்ள 63 செல்போன்களை கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.27) நடந்தது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஜவகர் கலந்து கொண்டு சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேலுமணி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்தாண்டில் இதுவரை 627 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை சம்பவத்தை கண்டித்து ஈரோடு மாநகராட்சி கூட்ட தொடரில் இருந்து அதிமுக வெளிநடப்பு

அண்ணா பல்கலை சம்பவத்தை கண்டித்து ஈரோடு மாநகராட்சி கூட்ட தொடரில் இருந்து அதிமுக வெளிநடப்பு

ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டத் தொடர் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு அ.தி.மு.க எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து தலைமையில் கவுன்சிலர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேச தொடங்கினர். 

இதனையடுத்து, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசும்போது, 
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 

அப்போது திமுக கவுன்சிலர்கள் சிலர் பொள்ளாச்சி சம்பவம், தர்மபுரி சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா என்று கூறினார். தொடர்பாக காரசார வாக்குவாதம் நடந்தது. இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து பேசியனர்.