புதன், 8 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இன்று (ஜன.8) ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் 2025ல் தேர்தல் நடத்தை விதி மீறல் தடுப்பு மற்றும் தேர்தல் செலவினம் குறித்து தணிக்கை செய்ய பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு ஆகியவற்றை அமைத்து தேர்தல் நடத்தை விதிகள் அமுல் செய்யப்பட்ட நாள் முதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, இந்தக் குழுக்கள் தணிக்கையில் பறக்கும் படை, மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தி, அவர்களது நிலைகளை கண்டறியவும், பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும் கட்டுப்பாட்டு அறை அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான மரு.மனிஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 94890 93223 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


பொதுக் காப்பீட்டு துறையில் இயங்கும்  நான்கு நிறுவனங்களையும், ஒரே நிறுவனமாக மத்திய அரசு இணைக்க  வேண்டும். சேலத்தில் நடைபெற்ற JFTU மற்றும் பீமா சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற வாயிற் போராட்டத்தில் வலியுறுத்தல்.

பொதுக் காப்பீட்டு துறையில் இயங்கும் நான்கு நிறுவனங்களையும், ஒரே நிறுவனமாக மத்திய அரசு இணைக்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற JFTU மற்றும் பீமா சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற வாயிற் போராட்டத்தில் வலியுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

பொதுக் காப்பீட்டு துறையில் இயங்கும்  நான்கு நிறுவனங்களையும், ஒரே நிறுவனமாக மத்திய அரசு இணைக்க  வேண்டும். சேலத்தில் நடைபெற்ற JFTU மற்றும் பீமா சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற வாயிற் போராட்டத்தில் வலியுறுத்தல்.

மத்திய அரசுக்கு சொந்தமான பொது காப்பீடு துறையில் உள்ள ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ்,  யுனெட்டட் இந்தியா, நியூ இந்தியா,  அதிகாரிகள் ஊழியர்களின் கோரிக்கைகளை வரியுறுத்தி அகில இந்திய அளவில்  அனைத்து அலுவலகங்கள் முன்பாக இன்று 1 மணி நேர வாயிற் கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பல்நோக்கு அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பீமா சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலாளர் சரஸ்வராம் ரவி, பீமா சங்கத்தில் மாவட்ட செயலாளர் ஆர். ரத்தினவேலு, அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சுந்தரம், AIIEA அமைப்பின் கருப்பையா, GIEA அமைப்பை சேர்ந்த மணிகண்டன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச் செங்கத்தை சார்ந்த கண்ணன் மற்றும் முகவர்கள் நலச் சங்கத்தைச் சார்ந்த முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்தனர். இந்திய அளவில் சுமார் 50000 ஊழியர்கள் பங்கேற்றுள்ள வாயில் கூட்டு ஆர்ப்பாட்டம் குறித்து சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 
01-08-22 நாள் முதல் நிலுவையில் உள்ள  ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும், காலியாக உள்ள சுமார் 25000 புதிய பணி இடங்களை நிரப்பிட வேண்டும், 
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஓய்வூதியர்  குடும்ப  ஓய்வூதியத்தை 30% என  உயர்த்த வேண்டும், SC/ ST காலி பின்னடைவு ( Backlog vacancies ) 10000 பணி இடங்களை பொது காப்பீட்டு துறையில் தேர்வு செய்ய நிரப்பிட  வேண்டும், பொதுக் காப்பீட்டு துறையில் இயங்கும்  நான்கு நிறுவனங்களையும் அதாவது ஓரியண்டல் இன்சூரன்ஸ்,  நேசனல் இன்சூரன்ஸ்/,  யுனெட்டட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும்  நியு இந்தியா அசூரன்ஸ் ஆகியவற்றை ஒரே நிறுவனமாக இணைக்க வேண்டும் மற்றும் பொது காப்பீட்டு துறையில் கடைநிலை ஊழியர்களை ( sub staff ) ஒப்பந்த தொழிலாளர்கள் கொண்டு நிரப்பிடும் அவுட் சோர்ஸ் முறையை ரத்து செய்து - நிரந்தர ஊழியர்களை மத்திய அரசு நியமிக்க நிறைவேற்றிட  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர். இதன் காரணமாக சேலத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெரும் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து பீமா சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலாளர் சரஸ்ராம் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், 
தங்களது இந்த முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற செவிசைக்காத பட்சத்தில் தலைமையின் ஒப்புதல் பெற்று அனைத்து விதமான போராட்டங்களையும் மிகப் பெரிய அளவில் முன்னெடுப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நான்கு இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஊழியர்கள் என திரளானோர்  பங்கேற்றனர்.

செவ்வாய், 7 ஜனவரி, 2025

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியின் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியின் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியின் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். 

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் குறித்து மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று அவதூறாக பேசிய தகவல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்ட இந்திய குடியரசு கட்சியின்  சார்பில் மதிய உள்துறை அமைச்சர் அமிக்ஷாவை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில்  அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்றது. இந்த இந்திய குடியரசு கட்சியின் சேலம் மண்டல செயலாளர் பழனிசாமி  தலைமையிலும், நிர்வாகிகள் கணேசன் வடிவேல் முருகன் தலித் ராஜு ரவிக்குமார் மணிவண்ணன் மற்றும் ஜோதி ராஜன் ஆகியோர்  முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு தெரியாமல் அவர்  தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக நடத்திய பல்வேறு போராட்டங்கள் குறித்து தெரியாமல் அவர் மீது அவதூறு தகவல்களை பரப்பிய மத்திய அமைச்சர் அமித் ஷவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் மாரியப்பன் வணங்காமுடி செட்டிமணி உட்பட கட்சியிn மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளானோர் கலந்துகொண்டு மத்திய அரசு எதிராக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாநில அளவிலான கோகோ போட்டியில் வலசையூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை. வெற்றி கோப்பைகளுடன் மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா.

மாநில அளவிலான கோகோ போட்டியில் வலசையூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை. வெற்றி கோப்பைகளுடன் மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

மாநில அளவிலான கோகோ போட்டியில் வலசையூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை. வெற்றி கோப்பைகளுடன் மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா. 

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக 40 வது மாநில அளவிலான 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கோகோ போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது. 38 மாவட்டங்களை சேர்ந்த இந்த மாநில அளவிலான போட்டியில் சேலம் மாவட்டம் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. வெற்றி பெற்ற கோகோ அணியினரை பாராட்டும் விதமாக வலசையூர்  பகுதியில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வெண்கல பதக்கம் மற்றும் வெற்றிக்கோப்பைகளுடன் மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த பேரணி மற்றும் பாராட்டு விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலேந்திரன் தாய்மை வகித்தார். 
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வைத்தியலிங்கம் முன்னிலை வகித்த இந்த பேரணியை ஆடிட்டர் இளங்கோ கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது வலசையூர் அரூர் பிரிவு சாலையில் துவங்கி வலசையூர் பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழியாக பள்ளியில் நிறைவடைந்தது. வழி நெடுங்கிலும் பொதுமக்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த விழாவில் அயோத்தியாபட்டணம் ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், கவுன்சிலர் அருண்குமார் வலசையூர் பஞ்சாயத்து தலைவர் செல்லரசி பழனிவேல், டி பெருமாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் சேலம் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தினர் சேலம் கணேஷ் கல்லூரி நிர்வாகத்தினர் வலசைவூர் கனரா வங்கி மேலாளர் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மணிவண்ணன் வடசையூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன் எஸ் ஆர் எஸ் பாலிடெக்னிக் முதல்வர் ரவி ரோட்டரி தாமரைச்செல்வன் சந்திரசேகர் ஆசிரியர் முருகேசன் ஜே ஆர் சி சேலம் மாவட்ட கன்வினர்கள் பிரபாகரன் கீதா மணிவண்ணன் அனிதா சுரேஷ் பாபு துவக்கப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சாரணர் படை ஜே ஆர் சி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து பழியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தேசிய அளவிலான கேலோ இந்தியா கோகோ போட்டிக்கு தமிழக அனைத்து தேர்வான அஜய் குமார் என்ற மாணவருக்கும் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகின்ற முதலாவது உலக கோப்பை கோக்கோ போட்டிக்கு தமிழகத்தில் இருந்து விளம்பர தூதுவராக தேர்வு பெற்றுள்ள முன்னாள் மாணவர் கோகுல் என்பவருக்கும் நினைவு பரிசை வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் யோகநாதன் ஸ்டாலின் அன்பன் டேனியல் மற்றும் ஆசிரியர்கள் மணி மணமல்லி ரவி சுப்பிரமணி குழந்தைசாமி ரமாப்ரியா மணிவண்ணன் ருத்ர கண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஜன.10, 13, 17 தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஜன.10, 13, 17 தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று (ஜன.7) அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் நடத்தல் விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. அரசு விடுமுறை தினங்களை தவிர மற்ற நாட்களில் வருகின்ற 17ம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். அதன்படி பொங்கல் பண்டிகை விடுமுறை இருப்பதால் 10ம் தேதி, 13ம் தேதி, 17ம் தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மேலும், சி-விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 1950 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்தல் நடத்தை விதிமுறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளில் விதிமுறைகள் அமலுக்கு வராது. தேர்தலில் விதிமீறல் ஏற்படுவதை தடுக்க 3 தேர்தல் பறக்கும் படைகள். 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர் குழு, ஒரு தணிக்கை குழு என மொத்தம் 5 வகையான குழுக்கள் செயல்படுகின்றன. இதில் நிலை கண்காணிப்பு குழு மட்டும் 10ம் தேதி முதல் செயல்படும். மற்ற குழுக்கள் தற் போது இருந்தே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது. கடந்த முறை மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்குட்பட்டு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மனிஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு: நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், பள்ளப்பாளையம் பேரூராட்சிகளில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ஈரோடு: நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், பள்ளப்பாளையம் பேரூராட்சிகளில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

இதுதொடர்பாக நிர்வாகப் பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு கோட்டம், ஈரோடு அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெடுஞ்சாலை துறை சாலை மேம்பாட்டுத் திட்டம் II, திருப்பூர் கோட்டம் சார்பில் சித்தோடு -கவுந்தப்பாடி-கோபி நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு கோட்டம் ஈரோடு அலுவலகத்தின் மூலம் பராமரிக்கப் பட்டு வரும் நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், பள்ளபாளையம் ஆகிய நான்கு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் சித்தோடு கவுந்தபாடி-கோபி சாலையில் தயிர்பாளையம் அருகில் 330 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே நெடுஞ்சாலை துறையின் மூலம் அமைக்கப்பட்ட 400mm DI பிரதான குழாய்களை தோண்டி எடுத்து சாலையின் அருகில் இடமாற்றம் செய்து அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், பேரூராட்சிகளுக்கான குடிநீர் விநியோகம் சுமார் நான்கு நாட்கள் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி வருகின்ற ஜன.9ம் தேதி முதல் 12ம் தேதி முடிய நான்கு நாட்களில் மேற்சொன்ன குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ள நெடுஞ்சாலை துறையின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், பள்ளப்பாளையம் பேரூராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பேரூராட்சி நிர்வாகத்தினர், உள்ளூர் நீர் ஆதாரத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி முடிந்தபின் பவானி ஆற்று நீர் பொதுமக்களுக்கு வழங்க தக்க நடவடிக்கை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சேலத்திற்கு அருகே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியில் சீமாகருவேல மரங்கள் முளைத்து அடர்ந்த முட்புதராக காணப்படும் அவலம்.......2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சீரழித்து கொண்டிருக்கும் கருவேல செடிகளை வேருடன் அளித்து நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பனமரத்துப்பட்டி ஏரியை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.......தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு....

சேலத்திற்கு அருகே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியில் சீமாகருவேல மரங்கள் முளைத்து அடர்ந்த முட்புதராக காணப்படும் அவலம்.......2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சீரழித்து கொண்டிருக்கும் கருவேல செடிகளை வேருடன் அளித்து நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பனமரத்துப்பட்டி ஏரியை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.......தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்திற்கு அருகே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியில் சீமாகருவேல மரங்கள் முளைத்து அடர்ந்த முட்புதராக காணப்படும் அவலம்.......2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சீரழித்து கொண்டிருக்கும் கருவேல செடிகளை வேருடன் அளித்து நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பனமரத்துப்பட்டி ஏரியை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.......தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு....

மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பாக சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடந்த 1911ம் ஆண்டு ஜருகுமலை அடிவாரத்தில், 2,700 ஏக்கர் பரப்பளவில் பனமரத்துப்பட்டி ஏரியை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். ஏரி உருவாக்கப்பட்டு, நடப்பாண்டுடன் 114 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஏரியில் இருந்து நிரம்பி வழியும் நீரை, விவசாயிகள் தங்கள் பாசனத் தேவைகளுக்கும் குடிநீர் தேவைக்கும் உபயோகப்படுத்தி வந்தனர். இதனால் இந்த ஏரியை இயற்கையின் பெருங்கொடையாக விவசாயிகள் கொண்டாடினர். பனைமரத்துப்பட்டி ஏரி, அப்பெயரிலேயே அமையப்பெற்றுள்ள கிராமத்தில், இயற்கையாக அமைந்துள்ள ஒரு ஏரியாகும். சேலம் புறநகரில் உள்ள இந்த கிராமம், சேலம் நகரின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும் நீராதாரமாக இருந்தது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு, இந்த ஏரி தான் சேலம் மக்களின் குடிநீர் தேவைகளுக்கு ஆதரமாக இருந்திருக்கின்றது. இந்த ஏரி அதன் அழகான இயற்கை காட்சிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது என்பதால் இங்கு பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டது.
இதனிடையே .பனமரத்துப்பட்டி ஏரியில் பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஏரியை புனரமைத்து, பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த சுற்றுலா தலம் அமைக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்புற அடிப்படை அபிவிருத்தி நிதியகம் இணைந்து, டெல்லியில் இயங்கும் டி.எச்.ஐ., என்ற தனியார் நிறுவனத்திடம், சுற்றுலா தலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை ஒப்படைத்தது. கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல், பனமரத்துப்பட்டி ஏரி பகுதியில் தனியார் நிறுவன பொறியாளர்கள் ஒன்றரை ஆண்டாக ஆய்வு பணி மேற்கொண்டு, 25கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா தலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து வழங்கினர். 
ஆனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை செயல் படுத்தவில்லை என்பது பனமரத்துப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தினர், அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இந்த ஏரிக்கு கடந்த 2006ம் ஆண்டு வரை நீர்வரத்து இருந்தது. அதன்பிறகு இந்த ஏரிக்கான நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு, போதிய மழையின்மை, பராமரிப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களினால் நீர் வரத்து என்பது முற்றிலுமாக நின்றுவிட்டது. இதன் காரணமாக கருவேல மரங்கள் முளைத்து ஏரி முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஏரியை பராமரிக்காமல் அழிவின் விளிம்பில் உள்ள பனமரத்துப்பட்டி ஏரியில் விளைந்துள்ள சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதித்து, அடர்ந்த காடு போல இருக்கும் இந்த ஏரிக்குள்ளே இருக்கும் சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற அந்த பகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் சீமைகருவேல மரங்களை அகற்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட்டது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், 
அதனடிப்படையில் கடந்த ஆண்டு துவங்கிய இந்த பணி, பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அந்தபகுதியை சேந்த விவசாயிகளிடம் கேட்டபோது, தங்களது கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இந்த பணி தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பணி நிறுத்தப்பட்ட பிறகு மீண்டும் சீமை கருவேல மரங்கள் முளைத்து அடர்ந்த காடு போல காட்சியளிப்பதாக குற்றம் சுமத்திய அந்தபகுதி விவசாயிகள், சீமைகருவேல மரங்களை வேருடன் அகற்றி, ஏரியை உடனடியாக தூர்வாரி நீர் வரத்திர்க்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கோபாலகிருஷ்ணன்.
இது ஒரு புறம் இருக்க, மேலும் அவர் கூறுகையில் ஏற்கனவே  இதுகுறித்து பனமரத்துப்பட்டி ஏரி பாசனம் அடிப்படையில் சேலம் முனிசிபல் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டதாகவும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் தற்போது பராதின விதியை மீறிவிட்டதால் ஏரியை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை என்று குற்றம் சாட்டியதுடன், அழியும் நிலையில் ஏரியில் வளர்ந்து பனமரத்துப்பட்டி கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை சீரளித்துக்கொண்டிருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி பனமரத்துப்பட்டி ஏரியை சுற்றுலா தளமாக மாற்ற தனியார் நிறுவனம் அளித்த ஆய்வறிக்கையை செயல்படுத்த சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை தங்களது வசம் ஒப்படைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக பனமரத்துப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார் விவசாயி கோபாலகிருஷ்ணன். 
சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இந்த ஏரிக்கு கடந்த 2006ம் ஆண்டு வரை நீர்வரத்து இருந்தது. அதன்பிறகு இந்த ஏரிக்கான நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு, போதிய மழையின்மை, பராமரிப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களினால் நீர் வரத்து என்பது முற்றிலுமாக நின்றுவிட்டது. இதன் காரணமாக கருவேலம் மரங்கள் முளைத்து ஏரி முழுவதும் ஆக்கிரமித்து விட்டது. இதன் காரணமாக இந்த பகுதியில் விவசாயம் என்பது முற்றிலுமாக பாதித்துள்ளதாகவும், பணப்பயிர்கள் பயிரிடப்பட்டுவந்த இந்த பகுதில் தற்போது மானாவாரி பயிர்கள் மட்டுமே பயிரிடும் நிலைக்கு இங்குள்ள விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக  வேதனை படுகின்றனர் இந்த பகுதி விவசாயிகள்.
அடர்ந்த காடு போல இருக்கும் இந்த ஏரிக்குள்ளே காட்டுப்பன்றி, மற்றும் நரி உள்ளிட்ட வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவ்வப்போது ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் புகும் விலங்குகளால் பயிர்ச்சேதம் கால்நடைகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவதாகவும், வீடுகள், அலுவலக கட்டிடங்களில் இருந்து மழைநீர் சேகரிக்க வேண்டும் என்ற திட்டத்தை கட்டாய படுத்திய தமிழக அரசு, சிறிய இடமாக இருந்தாலும் இந்த திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்று கூறிய தமிழக அரசு, 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சீரழித்து கொண்டிருக்கும் கருவேல செடிகளை அளித்து நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பனமரத்துப்பட்டி ஏரியை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். சிதலமடைந்து கொண்டிருக்கும் நீராதாரம், போதுமான பராமரிப்பின்மை, அடர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களினால்  பனமரத்துப்பட்டி ஏரியை மீட்டெடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து எழில் கொஞ்சும் ஏரியாக மீட்டெடுக்க வேண்டும் என்பது மட்டுமே சேலம் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பாக பனமரத்துப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வழக்கறிஞர் ராஜேந்திரன். அவர் மாவட்ட செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று பல்வேறு பெயர்களை பெற்று இருந்தாலுமே கூட அவருக்கு பணமரத்துப்பட்டி ராஜேந்திரன் என்ற ஒரு பெயரும் தற்பொழுது வரை யாருடைய மனதில் இருந்தும் நீங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. 
பலகட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகும், தற்பொழுது வரை செவி சாய்க்காத தமிழக அரசு சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்துள்ள தற்போதைய தமிழக அரசு விவசாயிகள் மற்றும் சேலம் மாவட்ட பொது மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.