சனி, 18 ஜனவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.20) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.20) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.20) திங்கட்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை மற்றும் அறச்சலூர் அருகே உள்ள பழையகோட்டை துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.20) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளவாய்பேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சுக்காநாயக்கனூர், சின்னபுலியூர், சின்னாநாயக்கனூர், பெரியார் நகர், மணக்காட்டூர், காட்டூர், தளவாய்பேட்டை, கூத்தாண்டி கொட்டாய், காக்காச்சிகரடு, ஆப்பக்கூடல், வெங்கமேடு, வைரமங்கலம், கவுண்டன்புதூர், குட்டிபாளையம், ஆ.புதுப்பாளையம், சலங்கப்பாளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரியமேட்டூர், சின்னமேட்டூர், நல்லாநாயக்கனூர், சிறைமீட்டான் பாளையம், ஜம்பை, பெரியமோளப்பாளையம், சின்னமோளப் பாளையம், திப்பிசெட்டிபாளையம், கள்ளியூர், மல்லியூர், நாச்சிமுத்துபுரம், சின்னியம் பாளையம், வேலாமரத்தூர், கரட்டுப்பாளையம், பருவாச்சி, காடையம்பட்டி, துருசாம்பாளையம், சேர்வராயன் பாளையம், இரட்டைகரடு, செங்காடு, கே.ஆர்.பாளையம், எலவமலை, செங்கலாபாறை, ஐய்யம்பாளையம், மூலப்பாளையம், கரைஎல்லப்பாளையம், சு.பு.வலசு, லட்சுமி நகர், பெரியவடமலை பாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல் நகர், சின்னவடமலை பாளையம், செங்கோடம்பாளையம் மற்றும் பாலம்பாளையம்.

பழைய கோட்டை துணை மின் நிலையம் (காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் :- அறச்சலூர், வடபழனி, சில்லங்காடுபுதூர், மேட்டூர் மற்றும் கஸ்தூரிபா கிராமம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு முழு ஆதரவு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு முழு ஆதரவு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு முழு ஆதரவு. 

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி துவங்கியது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, பாஜக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது.  வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளருக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு தனது முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் V.C. சந்திரகுமாருக்கு தங்களது தேசிய தெலுங்கர்  சிறுபான்மையினர் கூட்டமைப்பு முழு ஆதரவை தருவதாகவும், தமிழக அமைச்சர் முத்துசாமி தலைமையில், தங்களது அமைப்பு பல்வேறு குழுக்கள் அமைத்து ஒரு வாரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த டாக்டர் நாக அரவிந்தன், தமிழக அரசின் நல்ல பல திட்டங்கள் குறித்தும் தமிழக அரசின் சாதனைகள் குறித்தும் பட்டியலிட்டு பிரச்சாரம் செய்வதோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வீ.சி சந்திரகுமார் அவர்களை  வெற்றி பெறச் செய்வோம் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஓஷோ முரளி, கேசவன் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஈரோட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு நாதக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் சர்பணா (வயது 19). இவர் பெருந்துறை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அவதி அடைந்து வந்தார். 

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக ஈரோடு எல்லை நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு சபர்ணா குடும்பத்துடன் வந்துள்ளார். நேற்று மீண்டும் சபர்ணாவுக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, வெளியே சென்றவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவரை பரிசோதித்து மருத்துவர் வரும் வழியிலேயே சபர்ணா இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஈரோடு தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான வரும் ஜன.26ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் இடம் தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

2025 ஜனவரி 26ம் தேதி (குடியரசு தின கிராம சபைக் கூட்டம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
காலிங்கராயன் தினத்தையொட்டி ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

காலிங்கராயன் தினத்தையொட்டி ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு மாவட்டம் ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில், காலிங்கராயன் தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், காலிங்கராயன் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


ஈரோடு மாவட்டம், வெள்ளோடு கனகபுரத்தில் பிறந்த காலிங்கராயன், பவானி ஆற்றின் குறுக்கே காலிங்கராயன்பாளையத்தில் இருந்து ஆவுடையார்பாறை வரை சுமார் ஏறத்தாழ 57 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டி கி.பி.1282ம் ஆண்டு தை-5ம் நாள் தான் உருவாக்கிய அணைக்கட்டையும், வாய்க்காலையும் உலகுக்கு அர்பணித்ததால் அந்த நாள் (தை 5) காலிங்கராயன் தினமாக கொண்டாடப்படுகிறது.

பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளை தான் வெட்டிய கால்வாயின் மூலம் இணைக்க காலிங்கராயன் முற்பட்டார். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பிற்கு வித்திட்டவர் காலிங்கராயன். இவர் நினைவாக ஈரோட்டில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகை பொதுப்பணித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும், இவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் 2018ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலிங்கராயருக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, காலிங்கராயனால் அமைக்கப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு ஆண்டு தோறும் தை 5ம் நாள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று (ஜன.18) தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார் (நீர்வள ஆதாரத் துறை) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், காலிங்கராயனின் வாரிசுதாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 17 ஜனவரி, 2025

வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் கைவினைஞர்களுக்கும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் பொங்கல் சீர்வரிசை வழங்கி மகிழ்ந்த வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன்.

வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் கைவினைஞர்களுக்கும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் பொங்கல் சீர்வரிசை வழங்கி மகிழ்ந்த வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் கைவினைஞர்களுக்கும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் பொங்கல் சீர்வரிசை வழங்கி மகிழ்ந்த வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன்.

பொங்கல் திருநாளில்
சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 
வெள்ளி கொலுசு உற்பத்தி பணியாளர்களுக்கும் & தூய்மை பணியாளர்களுக்கும் பொங்கல் சீர்வரிசை வழங்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜன் 
 சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள்  வெள்ளி மாளிகை மேலாண்மை இயக்குனர் நந்தகிரண் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டு சீர்வரிசையை வழங்கினர்.
கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: பிரபல யூடியூபர் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: பிரபல யூடியூபர் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பிரபல யூடியூபர் ராகுல் உயிரிழந்தார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் மகன் ராகுல் (வயது 27). கேலி கிண்டல் வீடியோ செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வந்துள்ளார். அதுமூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமடைந்தார். குறிப்பாக, யூடியூப் சேனலில் 3 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணி மகள் தேவிகாஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று இரவு ராகுல் இருசக்கர வாகனத்தில், ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கவுந்தப்பாடி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய இருசக்கர வாகனம், சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதில், ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.