திங்கள், 24 பிப்ரவரி, 2025

சேலத்தில் 880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா..இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி.

சேலத்தில் 880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா..இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி.

சேலம்.  
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் 880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா..
இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார். பேட்டியில் கூறும் போது, சேலத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் 119 ஏக்கரில் 880 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 50 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் 7000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திருமணிமுத்தாறு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அந்த நீரை ஜவுளி பூங்காவிற்கு பயன்படுத்தப்படும். 
ஜவுளி பூங்கா மூலம் ஆண்டுக்கு ரூ.7000 கோடிக்கு ஜவுளி உற்பத்தி நடக்கும். இதில் 75 சதவீதம் ஏற்றுமதியும், 25 சதவீதம் உள்ளூர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றார்.
2 ஆண்டுகளில் ஜவுளி பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
இதில் திருமணிமுத்தாறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது
ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா மூலம் சேலத்தில் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும். 
ஏற்றுமதி வசதிக்காக சேலம் விமான நிலையம் விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது என்றார் ஜவுளி பூங்கா சேலத்தில் செயல்பட தொடங்கி விட்டால் இரும்பாலை போல மிகப்பெரிய ஒரு நிறுவனமாக இது மாறும் என்றும் சேலத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிறுவனமாக உருவாகும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
 

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

சேலத்தில் பழைமை வாய்ந்த தர்காவில் வரலாற்று சிறப்புமிக்க மினாரா அமைப்பு. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் இஸ்லாமியர்களுக்கு அர்ப்பணித்து ஏழை எளியவர்களுக்கு நல உதவி.

சேலத்தில் பழைமை வாய்ந்த தர்காவில் வரலாற்று சிறப்புமிக்க மினாரா அமைப்பு. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் இஸ்லாமியர்களுக்கு அர்ப்பணித்து ஏழை எளியவர்களுக்கு நல உதவி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் பழைமை வாய்ந்த தர்காவில் வரலாற்று சிறப்புமிக்க மினாரா அமைப்பு. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் இஸ்லாமியர்களுக்கு அர்ப்பணித்து ஏழை எளியவர்களுக்கு நல உதவி. 

சேலம் லைன்மேடு பென்சனர்ஸ் லைன் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த தர்கா உள்ளது. இந்த தர்காவில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் மினாரா என்று அழைக்கப்படும் உயரமான தூபி அமைக்கப்பட்டது. இதன் அர்ப்பணிப்பு விழாவிற்கு தர்காவில் முத்தவல்லி அப்சல் செரிப் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், திமுக பொது குழு உறுப்பினர் நாசர் என்கின்ற அமான்கான் மற்றும் சேலம் ஜாமியா மசூதியின் முத்தவல்லி அன்வர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு வரலாற்று சிறப்புமிக்க மினராவை இஸ்லாமியர்களுக்காக அர்ப்பணித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தர்காவின் நிர்வாகிகள் பேசும்போது சேலத்தில் மிகவும் பழமை வாய்ந்த இந்த தர்காவில் மினாரா அமைக்க முயற்சிக்கும் போது ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளுக்கு இடையே அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி தற்பொழுது இஸ்லாமியர்களுக்காக அர்ப்பணித்து வைத்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களை வெகுவாக பாராட்டி புகழாரம் சூட்டினார். 
அமைச்சர் ராஜேந்திரன் விழாவில் தனது சிறப்புரையில் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்களுக்கு அவர்களின் நலன் கருதி கலைஞர் கருணாநிதி அவர்களும்  திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டு பேசிய அவர்,  இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் தொப்புள் கொடி உறவாக இருக்கும் என்று கூறி தனது உரையினை நிறைவு செய்தார். 
தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஏழை எளிய பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த விழாவில் கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன் உட்பட தர்கா நிர்வாகிகள் திமுக பிரமுகர்கள் அந்த பகுதியை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சனி, 22 பிப்ரவரி, 2025

அந்தியூரில் போலீஸ்காரர்-மீன் வியாபாரி கைகலப்பு: கற்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு

அந்தியூரில் போலீஸ்காரர்-மீன் வியாபாரி கைகலப்பு: கற்களால் தாக்கி கொண்டதால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்திபாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 37). மீன் வியாபாரியாக இவர் தவுட்டுப்பாளையத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். கடம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சதீஸ்குமார் (35). இவருக்கும் பூபதிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சதீஸ்குமார் பூபதியின் கடை அருகே நின்றுகொண்டு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், பூபதியும், சதீஸ்குமாரும் மாறி, மாறி அந்தியூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கான இழப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி

தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கான இழப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி

தெருநாய் மற்றும் விலங்குகளிடம் இருந்து ஆடுகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்க, மாதிரி கால்நடை பட்டி, ஈரோடு பெரியார் நகரில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பாதுகாப்பு அம்சம் குறித்தும், ஆடு வளர்ப்பாளர்களுக்கு இந்த பட்டி பயன் உள்ளதாக இருக்குமா? என்பது குறித்தும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, விவசாயிகள் உபதொழிலாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக தெருநாய்கள் தொல்லை அதிகமாகி உள்ளது. விவசாயி கள் பட்டியில் ஆட்டை அடைத்தாலும் கூட கீழே பூமியில் குழி தோண்டி பட்டிக்குள் புகுந்து தெருநாய்கள், ஆடுகளை கடித்து கொன்று விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் (புயல், வெள்ளம்) ஆடு, மாடுகள் இறந்தால் அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. ஆனால் தெருநாய்கள், விலங்குகள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க விதிமுறை இல்லை. இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விவசாயிகளுக்கு வழங்கும் இழப்பீடு ஓரளவு நியாயமானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

தெருநாய்களை பிடிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. கோர்ட்டு பல்வேறு விதிமுறைகளை கூறி உள்ளது. அதற்கு கட்டுப்பட்டு தான் நாம் செயல்பட வேண்டி உள்ளது. தெருநாய்களை பிடித்து ஏதாவது ஒரு இடத்தில் அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தெருநாய்கள் கடித்து 400க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து உள்ளன. தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கான இழப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ சந்திரகுமார், பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
மயான கொள்ளை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்மன் குறத்தி வேடமிட்டு பக்தர்களின் இல்லங்களுக்கு சென்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு.

மயான கொள்ளை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்மன் குறத்தி வேடமிட்டு பக்தர்களின் இல்லங்களுக்கு சென்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

மயான கொள்ளை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்மன் குறத்தி வேடமிட்டு பக்தர்களின் இல்லங்களுக்கு சென்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு. 

தமிழ் மாதங்களில் வரும் மாசி மாதம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அனைத்து அங்காளம்மன் பெரியாண்டிச்சி மட்டும் பேச்சி அம்மன் ஆலயங்களில் மாசி திருவிழா வெகு விமர்சையாக பக்தர்களை நிரட்சி அடைய வைக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நடப்பாண்டிற்கான மாசி திருவிழா சேலத்தில் உள்ள அனைத்து அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயங்களில் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலம் கி அருள்மிகு ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி மாசி திருவிழா கடந்த 12ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடர்ச்சியாக அம்மன் அங்காள பரமேஸ்வரி குறத்தி வேடமிட்டு பக்தர்களின் இல்லங்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. குறிப்பாக சேலம் தாதகாப்பட்டி பகுதியில் தனது தீவிர பக்தரின் ஈழத்திற்கு சென்ற சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தலைவர் பன்னீர்செல்வம் அம்மனின் வேடம் தரித்து பக்தரின் வீட்டில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு அவர்களுக்கான அருள் வாக்கினை தெரிவித்தார்.
இதனை காண ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர். இதனை எடுத்து மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை பொதுமக்களையும் பக்தர்களையும் மிரள வைத்து மிரட்டி அடையச் செய்யும் நிகழ்வு சேலத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் நிர்வாகிகள் செல்வராஜ் மணிகண்டன் பாலசுப்பிரமணி உள்ளிட்டோ சிறப்பாக செய்திருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம்: வரும் 24ம் தேதி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம்: வரும் 24ம் தேதி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறைந்த விலையில், பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை திறக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாஃர்ம் மற்றும் டி.பாஃர்ம் சான்று பெற்றோர் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் விண்ணப்பிக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அழைப்பு விடப்பட்டது.

இதற்கு அரசு மானியம் தனிநபர் தொழில் முனைவோருக்கு ரூபாய் 3 இலட்சம் இதில் 1.5 லட்சம் ரொக்கமாகவும், 1.5 லட்சம் மருந்துகளாகவும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூபாய் 2 லட்சம் மானியமாகவும் இதில், 1 லட்சம் ரொக்கமாகவும், 1 லட்சம் மருந்துகளாகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு துவக்கப்படும் முதல்வர் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ், பிராண்டட் மருந்துகள், சித்தா, ஆயுர்வேதம், யூனானி மருந்துகள் 20% முதல் 90% வரை மிகக்குறைந்த விலையிலும், மேலும் கூடுதலாக 25% வரை தள்ளுபடி விலையிலும் கிடைக்கும் பொதுமக்கள் அனைவரும் பெற்று பயனடையலாம்.

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 22 இடங்களிலும், தனியார் தொழில்முனைவோர் மூலம் 14 நபர்கள் என மொத்தம் 36 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது.

இம்மருந்தகங்களை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 24ம் தேதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். அதன்படி, அனைத்து மருந்தகங்களும் செயல்படும்.

ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் அவல்பூந்துறை மற்றும் சிவகிரி ஆகிய 2 இடங்களிலும், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீரப்பன்சத்திரம், காசிபாளையம், திண்டல்மலை, நசியனூர், பி.பெ.அக்ரஹாரம், லக்காபுரம்புதூர் மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 7 சங்கங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது.

அதேபோல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விளக்கேத்தி, காஞ்சிகோயில், கொளப்பலூர், கரட்டடிபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கவுந்தப்பாடி, நம்பியூர், பெரியகொடிவேரி, தூக்கநாயக்கன்பளையம், பெரியவடமலைபாளையம் மற்றும் அரியப்பம்பாளையம் ஆகிய 11 சங்கங்களிலும் திறக்கப்பட உள்ளது.

இதேபோல், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி கூட்டுறவு பண்டகம் ஆகிய 2 இடங்களிலும் திறக்கப்பட உள்ளது.

மேலும், தனிநபர் சார்பில் சோலார் புதூர், அக்ரஹார தெரு ஈரோடு, ஈஸ்வரன்தெரு ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு ஈரோடு, சத்தி ரோடு வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, சென்னிமலை, கோபிசெட்டிபாளையம், குருமந்தூர்மேடு, அத்தாணி, விநாயகர் கோவில் தெரு காசிபாளையம், ஓடத்துறை மெயின்ரோடு தாழைக்கொம்பு புதூர், சின்னமொடச்சூர் கோபி, பவானி மெயின் ரோடு சலங்கபாளையம், ஆகிய 14 இடங்களிலும் என மொத்தம் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது என ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் தெரிவித்தார்.
சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டு, நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். 
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் அமைந்துள்ள சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் தயாரிக்கப்படும் கைத்தறி துணிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு அரசு சீருடை திட்டங்கள், துண்டுகள், மேட், வேட்டிகள், சட்டைத்துணிகள், தலையனை உறைகள், ஏற்றுமதி இரகங்கள், திரைச்சீலைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், இங்கு தயாரிக்கப்படும் சங்கத்தின் ஜவுளிகள் தலைமை விற்பனை நிலையம், கோ-ஆப்டெக்ஸ், கிளை விற்பனை நிலையம், லூம் வோல்டு, முகவர் விற்பனை நிலையம், அரசு கண்காட்சி மற்றும் தனியார் கல்லூரி வளாகங்கள் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.87.24 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகிறது. சங்கத்திற்கு தேவையான நூல்கள் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், அரசு நூல் கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திடம் கைத்தறி மற்றும் துணி நூல் துறையிடம் அனுமதி பெற்று கொள்முதல் செய்யப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டு, தறி குடோனில் நெசவு மற்றும் தார்சுற்றி வரும் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது, கைத்தறி ஆய்வாளர் கா.குரு ஆதிசேசன், சங்க தலைவர் வி.சி.திருநாவுக்கரசு, மேலாளர் சி.சுப்பிரமணியம் உட்பட சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.