வியாழன், 27 பிப்ரவரி, 2025

சேலத்தில் புராண நிகழ்வை நினைவு படுத்தும் மயான கொள்ளை நிகழ்ச்சி. அம்மனின் வேடம் தரித்த பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளின் ரத்தத்தை பருகி ஆவேச நடனத்துடன் பக்திப்பரவசம்.

சேலத்தில் புராண நிகழ்வை நினைவு படுத்தும் மயான கொள்ளை நிகழ்ச்சி. அம்மனின் வேடம் தரித்த பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளின் ரத்தத்தை பருகி ஆவேச நடனத்துடன் பக்திப்பரவசம்.

சேலம்.
சுரேஷ்பாபு.

சேலத்தில் புராண நிகழ்வை நினைவு படுத்தும் மயான கொள்ளை நிகழ்ச்சி. அம்மனின் வேடம் தரித்த பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளின் ரத்தத்தை பருகி ஆவேச நடனத்துடன் பக்திப்பரவசம்.

தமிழ் மாதங்களில் வரும் மாசி மாதம் அங்காளம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அங்காளம்மனின் பிறப்பிடமாக கருதப்படும் மேல்மலையனூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன், பெரியாண்டிச்சி மற்றும் பேச்சாயியம்மன் உள்ளிட்ட கோவில்களில் மாசித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அங்காளம்மனின் புராண நிகழ்வினை நினைவு படுத்து விதமாக நடத்தப்படும் இந்த விழா, நேற்று முன்தினம் சக்தி அழைத்தளுடன் தொடங்கியது.
மஹாசிவராதிரியான அன்று நள்ளிரவு முகம்வேட்டு கப்பரை நிகழ்ச்சியும், தொடர்ந்து நேற்று காலை காலை சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன் ஆலையங்களிலும் நடைபெற்றது.  
இதற்காக கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக விரதம் இருந்த பக்தர்கள், அம்மனின் வேடம் தரித்து, அதற்கென்ற பிரத்த்யேக உடையணிந்தும், மயில் இறகுகளால் ஆன அலங்காரங்களுடன், பக்திப்பரவசத்துடன், சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து கோவில்களை விட்டு வெளியே வந்த பக்தர்கள், பம்பை மேள இசைக்கு ஏற்றவாறு, ஆவேசத்துடனும், பரவசத்துடனும் நடனமாடியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கும் விதமாகவும், மிரட்சியை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது.
தொடர்ந்து பல்வேறு நேர்த்திக்கடனுக்காக, பக்தர்கள் வழங்கிய ஆடு மற்றும் கோழிகளை பலிவாங்கி, அதன் ரத்தங்களை பருகியவாறு, முக்கிய வீதிகளின் வழியாக, சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள மயானத்திற்கு விரைந்தனர்.


அங்கு அம்மனுக்கு பல்வேறு விஷேச பூஜைகளை மேற்கொண்டு சுடுகாட்டு சாம்பலை சூறைவிட்டு தங்களது விரதத்தை முடிக்கும் அம்மனின் வேடம் தரித்தவர்கள், மயானத்தில் வழங்கும் பிரசாதங்களை உட்கொண்டால் திருமண மாகாதவர்களுக்கு திருமணம் ஆகும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் மயானங்களில் குவிந்தனர்.

இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக நடத்தினாலும் சேலத்தில் மட்டுமே புராண நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக தத்ரூபமாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்திப்பரவசத்துடன் செல்லும் பக்தர்களால் பொதுமக்களுக்கு எந்த விதமான அசம்பாவிதங்களும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் பலத்த காவல்துறை பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மயானக்கொள்ளை நிகழ்ச்சியின் காரணமாக ஆடு மற்றும் கோழி ஆகியவற்றின் விலையில் இருந்து கனிசமாக உயர்ந்திருந்தது.
மொத்தத்தில் ஐதீகம், நம்பிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, அங்காளஅம்மனின் புராண நிகழ்வினை நினைவு படுத்தும் விதமாக இன்று சேலத்தில் நடத்தப்பட்ட மயானக்கொள்ளை நிகழ்ச்சி, பக்தர்களையும், பொதுமக்களையும் பரவசப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பார்வையாளர்களை மிரட்சியடைய வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது என்பது மட்டும் நிதர்சனம்.
கரூர் வைசியா வங்கியின் புதிய கிளை அலுவலகம் சேலத்தில் இன்று திறப்பு. சேலம் மாநகராட்சி துணை  ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலின் செயல் அலுவலர் திருமதி அமுதசுரபி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கரூர் வைசியா வங்கியின் புதிய கிளை அலுவலகம் சேலத்தில் இன்று திறப்பு. சேலம் மாநகராட்சி துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலின் செயல் அலுவலர் திருமதி அமுதசுரபி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கரூர் வைசியா வங்கியின் புதிய கிளை அலுவலகம் சேலத்தில் இன்று திறப்பு. சேலம் மாநகராட்சி துணை  ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் செயல் அலுவலர் அமுதசுரபி ஆகியோர் துவக்கி வைத்தனர். 

872 கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் கரூர் வைசியா வங்கி தனது புதிய கிளையினை சேலம் ஏற்காடு பிரதான சாலையில் சேலம் அரசினர் இருபாலர் கலைக்கல்லூரி அருகே துவக்கி உள்ளது. வங்கியின் உதவி பொது மேலாளர் துளசி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சேலம் சேரி ரோடு கிளையின் கிளை மேலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற  இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சியும் துணை ஆணையாளர் சுப்ரமணியன், சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் செயல் அலுவலர் திருமதி அமுதசுரபி மற்றும் ரமணி குழுமத்தின் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வங்கியின் புதிய கிளையினை ரிப்பன் பெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் வங்கியில் இருப்பு அறையையும் தொடங்கி வைத்தனர். 
வங்கியின் செயல்பாடுகள் குறித்து உதவி பொது மேலாளர் துளசி கிருஷ்ணமூர்த்தி நம்மிடையே கூறுகையில், பாரம்பரியம் கொண்ட இந்த வங்கியின் 7-வது கிளை இன்று துவக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கியில் ஏழை எளியவர்கள் படிக்காதவர்கள் பயன் பெறும் வகையில் அதற்கான ஒரு தனி அலுவலர் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான படிவங்கள் பூர்த்தி செய்வது பணம் எடுத்து தருவது பணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள் என்றும், மற்ற வங்கிகளை போலவே தங்களது வங்கி ஏடிஎம்மில் ஐந்து பரிவர்த்தனைகள் இலவசமாகவும் அதன் பிறகு எடுக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கு பணப்பிடிப்பு செய்யப்படும் என்றும் கேவிபி வங்கி ஏடிஎம்மில் ஒரு நாளில் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அதேபோல தங்களது வங்கி ஏடிஎம் - ல் பணம் செலுத்தும் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். அது மட்டும் இல்லாமல் வங்கியில் வைப்புத்தொகை செலுத்தும் போது பொதுவானவர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக அரை சதவிகிதம் வட்டி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த வங்கியின் துணை பொது மேலாளர் தங்களது வங்கி சேவையை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் வங்கியின் கிளை மேலாளர் வெங்கடேஷ்வரன் உட்பட சேலம் மாநகரின் தொழிலதிபர்கள் வாடிக்கையாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

புதன், 26 பிப்ரவரி, 2025

சேலம் ஜான்சன் பேட்டையில் திருவிழா சம்பந்தமாக கோவிலை திறக்க நீதிமன்ற உத்தரவை அவமதித்த அரசு துறை அதிகாரிகள். காலம் தாழ்த்தி கோவிலை திறக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு ஊர் மக்கள் கோவிலிலை திறக்க விடாமல் தடுத்ததால் பெரும் பரபரப்பு பதற்றம்.

சேலம் ஜான்சன் பேட்டையில் திருவிழா சம்பந்தமாக கோவிலை திறக்க நீதிமன்ற உத்தரவை அவமதித்த அரசு துறை அதிகாரிகள். காலம் தாழ்த்தி கோவிலை திறக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு ஊர் மக்கள் கோவிலிலை திறக்க விடாமல் தடுத்ததால் பெரும் பரபரப்பு பதற்றம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஜான்சன் பேட்டையில் திருவிழா சம்பந்தமாக கோவிலை திறக்க நீதிமன்ற உத்தரவை அவமதித்த அரசு துறை அதிகாரிகள். காலம் தாழ்த்தி கோவிலை திறக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு ஊர் மக்கள் கோவிலிலை திறக்க விடாமல் தடுத்ததால் பெரும் பரபரப்பு பதற்றம்.

சேலம் மாநகரம் ஜான்சன் பேட்டையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த கோவின் உரிமை மற்றும் விழா நடப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் சூர்யா ஆகிய இரண்டு தரப்பினர் இடையே கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.  இதனை அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக கோவில் திறக்கப்படாமல் திருவிழாவும் நடத்தப்படாமல் இருந்த
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் நடைபாண்டு மாசி திருவிழா நடத்துவது தொடர்பாக கோவிலை திறக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை கோவிலை திறந்து விழா நடத்திக் கொள்ள பிரகாஷ் என்பவரின் தரப்பிற்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால் காவல்துறையினர், வட்டாட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை அவமதித்ததோடு  மட்டுமில்லாமல், எதிர்தரப்பினரான ஷங்கருக்கு ஆதரவாக, மாசி திருவிழாவிற்காக நேற்று அதாவது 26 ஆம் தேதி திறக்க வேண்டிய கோவிலை நேற்று திறக்காமல் இன்று திறப்பதற்காக காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது கோவிலை திறந்து விழா நடத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் கோவிலை திறக்க வராத அதிகாரிகள் இன்று திறப்பதா என்று கூறி கோவிலில் திறக்க விடாமல் தடுத்ததால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. 
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மாசித் திருவிழா என்பது சிவராத்திரி பூஜையுடன் தொடங்கி அடுத்த நாள் மயான கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நடத்துவது வழக்கம் என்றும் ஆனால் அதிகாரிகள் தரப்பில் சிவராத்திரி பூஜை நடத்த விடாமல் இன்று வந்து பிறப்பது பலன் இல்லை என்ற காரணத்தினால் கோவிலை நாங்கள் சிறக்க அனுமதிக்க வில்லை என்று தெரிவித்தனர். மேலும் இந்த பிரச்சினையை தொடர்பாக நீதிமன்ற உத்தரவினை உதாசீனப்படுத்திய அதிகாரிகள் மீது மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் எதிர் தரப்பைச் சார்ந்த சங்கரி என்பவர் நத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் ஆனால் அவர் எப்பொழுதும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இருப்பதும் அங்கு ஓ ஏ இருப்பதாகவும் ஏமாற்றி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த கோவிலில் உரிமைக்காகவும் விழா நடத்துவது தொடர்பாகவும் ஊர் மக்களுக்கு எதிராக தாங்கள் எங்கு மனு கொடுத்தாலும் அதனை தடுத்து வருகிறார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டினார். 
நீதிமன்ற உத்தரவுபடி காலம் தாழ்த்தி கோவிலை திறக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கோவிலை திறக்க விடாமல் ஜான்சன் நகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மேற்கொண்டு பிரச்சனை ஏதும் நிகழாமல் இருக்க அங்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கோபி அருகே லாரி டிரைவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உள்பட 3 பேர் கைது

கோபி அருகே லாரி டிரைவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் உள்பட 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சேத்துகாட்டுபுதூர், வரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 43). டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் கிரஷர் தொழிற்சாலையில் டிப்பர் லாரி டிரைவராக உள்ளார்.
இவர், நேற்று முன்தினம் முறையான சான்றிதழ்களுடன் 3 யூனிட் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு நஞ்சகவுண்டம்பாளையத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே சென்றபோது லாரியை 3 பேர் மறித்தனர்.

இதனால், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய மூர்த்தியிடம் 3 பேரும், திருட்டுத்தனமாக கருங்கல் கடத்துகிறாயா? உன்னுடைய முதலாளிக்கு தகவல் கொடுத்து உடனே ரூ.1 லட்சம் கொண்டு வரச்சொல் இல்லை என்றால் உன்னையும், லாரியையும் கொளுத்தி விடுவோம் என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து, டிரைவர் மூர்த்தி உடனே கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் மூர்த்தியை மிரட்டிய 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் கோபியை சேர்ந்த ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் யுவராஜ் (46), கலிங்கியத்தை சேர்ந்த சதீஷ் (34), பவானியை சேர்ந்த தர்மலிங்கம் ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.26) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இதில் அறுவை சிகிச்சை அரங்குகள், எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், பிரசவ அறை, தாய்ப்பால் வங்கி, தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆய்வகம், பணி மருத்துவர்கள் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, அவசர சிகிச்சை பிரிவு, செயற்கை சுவாச கருவி அறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.


இதைத் தொடர்ந்து, இக்கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கருமாண்டிசெல்லிபாளையம் தேர்வுநிலை பேரூராட்சி, வார்டு 2ல் சீலம்பட்டியில் 15வது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டும் பணியினை ஆய்வு மேற்கொண்டு, தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மூங்கில்பாளையம் ஊராட்சி மூங்கில்பாளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், கோவில்பாளையம் குக்கிராமம் காவேரி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.73 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இதனையடுத்து, மூங்கில்பாளையம் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் கோவில்பாளையம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மேலும் சேர்வக்காரன்பாளையம் பகுதியில் ஊரக குடியிருப்புகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சீனாபுரம் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 701 மதிப்பீட்டில் ரூ.50 ஆயிரம் மானியத்தில் திரு.செங்கோட்டையன் என்பவர் காளான் வளர்ப்பு கூடாரம் அமைத்து காளான் வளர்த்து வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் வேளாண் பொறியில் துறையின் சார்பில், வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் திரு.கந்தசாமி என்பவர் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 30 மதிப்பீட்டில் ரூ.62 ஆயிரத்து 418 மானியத்தில் களை எடுக்கும் இயந்திரம் பெற்று 4.27 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதையும், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயனாளியிடம் கலந்துரையாடினார்.

மேலும், காஞ்சிகோவில் கிராமத்தில் விதைப்பெருக்குத் திட்டத்தின் கீழ், திரு.அருணாச்சலம் என்பவர் 1.50 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை கருவிதைப்பண்ணை அமைக்கப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விதைக்கு உற்பத்தி மானியமாக ரூ.25 வீதம் ஒரு கிலோ விதைக்கு வழங்கப்படுவதாகவும், மேலும், கொள்முதல் செய்யப்படும் விதைக்கு ஒரு கிலோவிற்கு ரூ.110 வீதம் வழங்கப்படுவதாகவும் பயனாளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தார்.


இந்த ஆய்வுகளின் போது, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பி.ரவிக்குமார், பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், திருமதி.தேவகி, பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன், செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.