ஞாயிறு, 30 மார்ச், 2025

ரமலான் பண்டிகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரமலான் பண்டிகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிறை தெரிந்ததால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம்  30-03-2025 அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது.

ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 31-03-2025 தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப் படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் திங்கட்கிழமை 31-03-2025 தேதி கொண்டாடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரோடு ஜாமிஆ மஜீத் பள்ளியில் முத்தவல்லிகள் மாவட்ட அரசு காஜி கிபயத்துல்லா மற்றும் ஜமாத்தார்கள் பிறை தகவல்கள் தெரிவிப்பதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பிறை தெரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
தெலுங்கு வருட பிறப்பை ஒட்டியும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 200க்கும் மேற்பட்டோருக்கு சமூக ஆர்வலர் நாகா அரவிந்தன் நலத்திட்ட உதவிகள்.

தெலுங்கு வருட பிறப்பை ஒட்டியும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 200க்கும் மேற்பட்டோருக்கு சமூக ஆர்வலர் நாகா அரவிந்தன் நலத்திட்ட உதவிகள்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தெலுங்கு வருட பிறப்பை ஒட்டியும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 200க்கும் மேற்பட்டோருக்கு சமூக ஆர்வலர் நாகா அரவிந்தன் நலத்திட்ட உதவிகள்.

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பாக தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு மாநில தலைவர் நாகா. ஆர்.அரவிந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமுதாய மக்கள் துப்புரவு பணியாளர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் சேலம்  தெற்கு போக்குவரத்து ஆய்வாளர் கிட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காயத்ரி மாநிலச் செயலாளர் சஞ்சய் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சித்தோடு அருகே கெமிக்கல் டேங்கர் லாரியை சுத்தம் செய்த 2 ஊழியர்கள் மூச்சு திணறி பலி

சித்தோடு அருகே கெமிக்கல் டேங்கர் லாரியை சுத்தம் செய்த 2 ஊழியர்கள் மூச்சு திணறி பலி

ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த கோணவாய்க்கால் அருகே வாகனங்களை சுத்தம் செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று (மார்ச் 30) காலை இந்த சுத்தம் செய்யும் மையத்திற்கு டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த டேங்கர் லாரியில் அலுமினியம் குளோரைடு கெமிக்கல் நிரப்பப்பட்டு கடந்த 27ம் தேதி ஹைதராபாத், ஊனாபாத் என்ற இடத்திலிருந்து திருப்பூரில் உள்ள 2 டையிங் கெமிக்கல் கம்பெனிக்கு சென்றது.
அந்த 2 டையிங் கம்பெனியிலும் அலுமினியம் குளோரைடு கெமிக்கல் இறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த கெமிக்கல் டேங்கர் லாரி சுத்தம் செய்வதற்காக ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால் பகுதியில் உள்ள வாகனங்களை சுத்தம் செய்யும் மையத்திற்கு வந்துள்ளது.

லாரியை திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கிரீஸ் கந்தராஜா (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார். டேங்கர் லாரியை சுத்தம் செய்வதற்காக மையத்தில் வேலை செய்யும் பாலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (62), அதே பகுதியைச் சேர்ந்த யுகானந்தன் (50), சித்தோடு பகுதியை சேர்ந்த செல்லப்பன் (52) ஆகிய 3 ஊழியர்களும் லாரிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யுகானந்தன், சந்திரன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லப்பன் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த யுகானந்தன், சந்திரன் ஆகிய 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாயு கசிவு ஏற்பட்டு இருவரும் இறந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா கராத்தே விளையாட்டு போட்டிகள். சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைப்பு.

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா கராத்தே விளையாட்டு போட்டிகள். சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா கராத்தே விளையாட்டு போட்டிகள். சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைப்பு. 

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா அந்த கட்சியினரால் விமர்சையாகவும் உற்சாகமாகவும் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகள் கோலப்போட்டிகள் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என எண்ணற்ற நல உதவிகளை திமுகவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட அம்மா பேட்டை பகுதி திமுக சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கராத்தே மற்றும் குத்துச்சண்டை போட்டியில் சேலம் அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக அம்மாபேட்டை பகுதி திமுக செயலாளரும், அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் மாநாடு தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து வீரர் மற்றும் வீராங்கனைகள் இடையே தமிழக அரசின் சாதனைகளை குறித்து பட்டியலிட்டார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பள்ளி கராத்தே பையிலும்  மாணாக்கர்கள் ஓடுகளை உடைத்தும், குத்துச்சண்டை வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவரும் விதமாகவே அமைந்திருந்தது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 7000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் நான்காம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும் வழங்கி பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி திமுகவினரால் வாழ்த்தி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சேலம் மத்திய மாவட்ட திமுக அவை தலைவர் ஜிகே சுபாஷ், சேலம் மாநகர திமுக செயலாளர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர்கள் தெய்வலிங்கம், மஞ்சுளா, திருஞானம் மற்றும் அசோகன் உட்பட திமுக நிர்வாகிகள் முருகன் சுரேந்தர் ஜீவா சரவணன் மற்றும் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியது,
தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், குறைத்தால் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அடிப்படையில் பாஜக நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை,
ரகசியமாக எப்படியாவது நிறைவேற்றிவிடலாம் என்ற நோக்கில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரும் செயல்பட்டு வருவது..தமிழகம் மட்டுமில்லாமல், மற்ற மாநிலங்களுக்கு தலையின் மீது தொங்கும் கத்தியாக இருந்து வருகிறது.தமிழ்நாட்டு மக்கள் மேலே நேரடியாக தாக்குதலில் மத்தியஅரசு ஈடுபட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் வட இந்திய மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கெல்லாம் தகவல் கொடுத்து கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளார்.தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் 58 கட்சிகள் பங்கேற்றது.
கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு அதன் முயற்சி அடிப்படையில்  கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநில முதலமைச்சர்கள் தமிழககூட்டத்தில் பங்கேற்றனர்.பல்வேறு மாநிலங்களின் கட்சி தலைவர்கள் பிரதிநிதித்துவக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகம் மற்றும் வட இந்திய மாநிலங்களில் சமநிலையாக மக்கள் தொகை இருந்தது. தற்பொழுது சமநிலை அல்லாமல் மக்கள் தொகையில் அமைந்திருக்கிறது. பீகார், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 20சதவீதம் வரிபகிர்வு நிதியை வாங்கிக்கொண்டு 42 சதவீத சதவீத அளவிற்கு வரிபகிர்வின் அடிப்படையில் மத்திய அரசு வழங்குகிறது.
தமிழகத்திற்கு நூறு ரூபாய் கொடுத்தால் திரும்பவும் 29 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்கள் அதேபோல் கர்நாடகாவிற்கு 100 ரூபாய் வாங்கிக் கொண்டு 14 ரூபாய் மட்டுமே திரும்ப கொடுக்கிறார்கள். ஆனால் வடமாநிலங்களில் 100 ரூபாய் நிதியை வாங்கிக்கொண்டு 425 ரூபாய் கூடுதலாக வரி பகிர்வை மத்திய அரசு வழங்குகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்திற்கு 100 ரூபாய் வாங்கிக் கொண்டு 922 ரூபாய் வரிபகிர்வு நிதியை கூடுதலாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஒரு கண்ணிற்கு சுண்ணாம்பும், மற்றொரு கண்ணிற்கு வெண்ணையும் வைப்பது போன்று ஏற்றத்தாழ்வுடன் நடந்து கொள்கிறது.வட மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதியின் எண்ணிக்கை குறைக்கிறது மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்துகிறது.
வடமாநிலங்களில் 80 சதவீதம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் போதும் மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும் என்ற சூழலை உருவாகியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தமிழகத்தை நாகரீகமற்றவர் என்று என்றெல்லாம் உரையாற்றியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. கடுமையான பாதிப்புக்கு அம்மாநில மக்கள் ஆளாகியுள்ளனர்.அந்த மாநிலத்திற்கு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது.அங்கு மக்களுடைய பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது.நாடாளுமன்ற தொகுதியின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சென்றிருப்பார்கள்.இதனால் தான் மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு செல்லாமல் இருக்கிறது. தமிழகம் முழுவதும் தொகுதி மறு வரையறை பிரச்சினைகள்
அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையில்லை; நிறுத்தி வைக்கவேண்டும் என்று கோரிக்கையை வலிமையாக வடஇந்தியாவில் இருந்து தலைவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் நிதி தமிழகத்திற்கு வர வேண்டியதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 
கல்வித்துறை,ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவைகளில் நிதி வழங்காமல் உள்ளது வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டு வருகிறது 
தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்கள் அனைத்திலும், ஒரு ஊராட்சியில் இரண்டு இடங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது .
நாடாளுமன்ற தொகுதி வரையறை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் கூட்டு நடவடிக்கை குழுவில் உள்ள முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக தமிழக முதலமைச்சர் சரியான முடிவு எடுப்பார்கள். இந்திய கூட்டணி அமைந்திருந்தால் சுங்கச்சாவடி அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்திருக்கும் என்றும் கூறினார்.
இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் மீது அக்கறையுடன் இருந்திருக்கிறார்கள். இதனை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்; இதனால் மீண்டும்  திமுக ஆட்சி மீண்டும் அமையும். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் நடைபெற்று வருகிறது என்று மத்திய அமைச்சர்  கூறி இருக்கிறார்.இதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக, அதிமுக கள்ளஉறவில் இருந்து வருகிறது என்று கூறி வந்தார். தற்போது தமிழக முதல்வர் சொன்னது நிரூபணம் ஆகி உள்ளது. திமுகவிற்கு போட்டி அதிமுக மட்டும் தான்... இரண்டாவது இடத்திற்கு மற்ற கட்சிகள் நீயா நானா என்று போட்டி போட்டு வருகிறார்கள்.
தொகுதி மறு சீரமைப்பை மோடியும் அமிர்தாவும் ரகசியமாக செயல்படுத்த திட்டம். சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் குற்றச்சாட்டு.

தொகுதி மறு சீரமைப்பை மோடியும் அமிர்தாவும் ரகசியமாக செயல்படுத்த திட்டம். சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் குற்றச்சாட்டு.

சேலம். 
S.K. சுரேஷ் பபு..

தொகுதி மறு சீரமைப்பை மோடியும் அமிர்தாவும் ரகசியமாக செயல்படுத்த திட்டம். சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் குற்றச்சாட்டு.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக தலைமை அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தத் தொகுதி மறு வரையினால் தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணிசமாக குறைந்து மக்கள் பிரதிநிதித்துவம் குறையும். இது தமிழக மக்கள் மீது நேரடியான தாக்குதல். இதனை ஒத்தி வைக்க கேட்டு தமிழக முதலமைச்சர் மற்றும் பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் தொகுதி வரையறை தொடர்பாக தமிழக முதலமைச்சர் கூட்டு நடவடிக்கை குழு அமைத்து சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் 54 கட்சிகள் மூன்று மாநில முதலமைச்சர்கள் பல மாநில தலைவர்களும் பங்கேற்றனர். குடும்பக்கட்டுப்பாட்டால் தமிழக முற்பட பெண் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் பீகார் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வரிப்பதிவு அதிக அளவில் உள்ளது. வடமாநிலங்களுக்கு வரிப்பதிவு அதிக அளவில் பகிர்ந்துள்ள மத்திய அரசு தமிழகத்திற்கு மிக குறைந்த அளவு வரி பகிர்வு அளிக்கப்படுகிறது. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். வட மாநிலங்களில் 10 மாநிலங்களில் வெற்றி பெற்றால் மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் மற்ற மாநிலங்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழக மக்களுக்கு பாதிப்பு. மோடி மற்றும் அமித்ஷா இருவரும் இது குறித்து மௌனமாக உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க வேண்டும் என முதல்வர் மற்றும் வட மாநில தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 4000 கோடிக்கு மேல் நிதி வழங்காமல் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் நேற்று தமிழக முழுவதும் ஒன்றியத்திற்கு இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வர் நிர்வாக திறமையால் அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை அமையும் என நம்பிக்கை தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன், ஏற்கனவே தமிழக முதலமைச்சர் கூறிய கூற்றின்படி அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி இன்று நிரூபணம் ஆகியுள்ளது என்றும் தமிழகத்தில் திமுகவுக்கும் அதிமுகவிற்கும் மத்தியே போட்டி என்றும் தெரிவித்தார்.

சனி, 29 மார்ச், 2025

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநில துணைத் தலைவராக நந்தகோபால் தேர்வு

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாநில துணைத் தலைவராக நந்தகோபால் தேர்வு

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் மாநில தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் துணைத் தலைவராக டாக்டர். என்.நந்தகோபால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
என்.நந்தகோபால் ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவராக உள்ளார். வீரப்பன்சத்திரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். இவரது பதவி காலத்தில் இச்சங்கத்திற்கு தமிழக அரசு 2020-2021ஆம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் சங்கமாகவும், சிறந்த நெசவாளர்கான விருதும் பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து கைத்தறி சங்கங்களின் சம்மேளனத்தில் மாவட்ட இயக்குனராகவும், ஈரோடு மாவட்ட நூல் மற்றும் சாயக் கூலி நிர்ணய குழு கமிட்டி உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசு ஜவுளி ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போது ஈரோடு, கோட்டை செங்குந்த திருமண மண்டபத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும், ஈரோடு மாவட்ட பாக்சிங் அகாடமி துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க மாநிலத் தலைவராக உள்ளார். 

மேலும் பல்வேறு தொழில் சார்ந்த அமைப்புகளில் பதவி வகித்து வருகிறார் கொரோனா காலகட்டத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் அத்யாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் வழங்கினார். மாணவ மாணவியருக்கு கல்வி உதவிகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது தொடர்ந்து செய்து வருகிறார். 

இவரது பொது சேவை மற்றும் சமூக சேவையை பாராட்டி பிராம்டன் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டி கனடா மற்றும் பாரதியார் சமூக கலாச்சார அகாடமி இணைந்து கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் சேவா ரத்னா விருது வழங்கினர். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில துணைத் தலைவராக வி. எஸ். செங்கோட்டைய முதலியார், ஜெ.சுத்தானந்தம், ஆர்.ஏ.என். முத்துசாமி முதலியார் ஆகியோர் வரிசையில் தற்போது என்.நந்தகோபால் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

என்.நந்தகோபால் மாநில துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சங்கத்தின் மாநில, மாவட்ட, மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.