வெள்ளி, 4 ஏப்ரல், 2025

ஈரோட்டில் 2 ஓட்டல்களில் கெட்டுப் போன 18 கிலோ இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

ஈரோட்டில் 2 ஓட்டல்களில் கெட்டுப் போன 18 கிலோ இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் அசைவ ஓட்டல்களில் விற் பனை ஆகாத இறைச்சிகளை குளிர்பதன பெட்டிகளில் வைத்து அதை மறுநாள் பயன்படுத்துவதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கராவுக்கு புகார் சென்றது. இதுகுறித்து அவர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்கு மார், சதீஷ்குமார் ஆகியோர் ஈரோடு திண்டல், பழையபாளையம் மற்றும் மாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடைகள் மற்றும் அசைவ ஓட்டல்களில் கடந்த 2 நாட்களாக 'திடீர்' சோதனையில் ஈடுபட்டனர். இதில் 2 ஓட்டல்களில் சமைக்கப்பட்ட இறைச்சி குளிர்பதன பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 ஓட்டல்களிலும் 18 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சுகாதார மில்லாமல் சமையல் கூடத்தை பராமரித்த வகையில் 2 ஒட்டல்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

அந்தியூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 44). விவசாயியான இவர், தனது விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய மேம்பத்தி (அ) கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் ஒலகடம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரை அணுகினார்.
பிரகாஷ் பட்டா மாறுதல் செய்து தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று பிரகாஷ் கேட்டதாக தெரிகிறது. அதற்கு, கதிர்வேல் மறுத்துள்ளார். இறுதியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் தந்தால் தான் பட்டா மாறுதல் செய்து தர முடியும் என்று பிரகாஷ் உறுதியாக கூறியுள்ளார்.

பணம் தர விருப்பம் இல்லாத கதிர்வேல் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி, கதிர்வேல் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை எடுத்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு நேற்று சென்றார்.

அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலர் பிரகாசிடம் கொடுத்தார். அவர் அதை அவரது அருகில் நின்று கொண்டிருந்த செல்லப்பகவுண்டன்வலசை சேர்ந்த இடைத்தரகர் அருள்ராஜா (39) என்பவரிடம் கொடுக்க சொன்னதாக தெரிகிறது. பணத்தை அருள்ராஜாவிடம் கதிர்வேல் கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் மற்றும் இடைத்தரகர் அருள்ராஜா ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர், பிரகாஷ் மற்றும் அருள்ராஜா ஆகியோரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வேம்பத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: ஈரோடு மாவட்டத்துக்கு ஏப்ரல் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை!

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: ஈரோடு மாவட்டத்துக்கு ஏப்ரல் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. புகழ் பெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி வழிபடுவார்கள்.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு குண்டம் திருவிழா வருகிற 8ம் தேதி நடக்கிறது. இதனால், அன்று ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடு முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்காக வருகிற 8ம் தேதி அன்று ஈரோடு மாவட்டத் தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதே நேரம், கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களில் ஏற்கனவே தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. இந்த விடுமுறையானது விடுமுறை செலாவணி முறி சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.

மேலும், அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 26ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்: ஈரோடு மாநகரில் இன்று (ஏப்.,5) போக்குவரத்து மாற்றம்!

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்: ஈரோடு மாநகரில் இன்று (ஏப்.,5) போக்குவரத்து மாற்றம்!

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலத்தையொட்டி, ஈரோடு மாநகரில் இன்று (ஏப்.,5) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களில் இன்று (ஏப்.,5) கம்பம் ஊர்வலத்துடன் மஞ்சள் நீராட்டமும் நடக்கிறது. இதனால், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாநகரில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி,சேலம், திருச்செங்கோடு, நாமக்கலில் இருந்து பள்ளிப்பாளையம் வழியாக வரும் பேருந்துகள் காவிரி ரோடு, கே.என்.கே. ரோடு வழியாக வ.உ.சி. பூங்கா பின்புறம் பயணிகளை இறக்கிவிட்டு செல்லவேண்டும்.

இதேபோல், கோபி, சத்தி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பாரதி தியேட்டர் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு கோபி, சத்தி ரோட்டிலேயே செல்லவேண்டும். பவானி, அந்தியூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள், அசோசியேசன் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி செல்ல வேண்டும்.

கோவை, திருப்பூரில் இருந்து பெருந்துறை வழியாக வரும் வாகனங்கள் பெருந்துறை ரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா வலது புறம் திரும்பி பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பெருந்துறை சாலையிலேயே செல்லவேண்டும்.

கோவையில் இருந்து ஈரோடு வழியாக திருச்செங்கோடு, சேலம், நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள், பெருந்துறை ரோடு, திண்டல் கபே (ரிங்ரோடு), ரங்கம்பாளையம், ஆனைக்கல்பாளையம், பரிசல் துறை நால்ரோடு வழியாக பள்ளிபாளையம் செல்லவேண்டும்.

இந்த தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் நாகா.அரவிந்தன் இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் நாகா.அரவிந்தன் இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் நாகா.அரவிந்தன் இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை அவர்கள் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், மற்றும் ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரரும் சிறந்த சமூக சேவகர்மான சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா. அரவிந்தன் தலைமையில் பொருளாளர் கேசவன், அமைப்பாளர் குமார் மற்றும் துணைச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் காங்கிரஸ் பேரியக்கத்தில்  தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த சேலத்தைச் சேர்ந்த நாகா அரவிந்தன் மற்றும் நிர்வாகிகளை செல்வப் பெருந்தகை வாழ்த்தி வரவேற்றார். அப்போது அமைப்புச் செயலாளர் ராம் மோகன் கணபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா அரவிந்தன் அவர்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதனின் பொதுச்செயலாளராக அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியத் தலைவர் ஹர்ஷ்வர்தன் சக்பல் மற்றும் செல்வப் பெருந்தகை ஆகியோரின் நல்லாசியுடன் நியமித்துள்ளதாகவும் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான கர்மவீரர் காமராஜர் அவர்களின் பொற்கால ஆட்சி அமைய முதன்மை செயல் வீரராக பணியாற்றுவீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும்,  இந்திய தேசிய காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதனின் மாநிலத் தலைவர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
கட்சியில் இணைந்துள்ள நாகா அரவிந்தன் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பொறுப்புகளிலும் உள்ள மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் மாநிலத் தலைவர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

வியாழன், 3 ஏப்ரல், 2025

சேலம் ஒன்பதாவது கோட்டத்தில் நாய்களின் இனப்பெருக்கத்தை தடுப்பது மற்றும் நாய்களை பிடிப்பதில் கையாளும் புதிய யுக்திகள் குறித்தான பயிற்சி.

சேலம் ஒன்பதாவது கோட்டத்தில் நாய்களின் இனப்பெருக்கத்தை தடுப்பது மற்றும் நாய்களை பிடிப்பதில் கையாளும் புதிய யுக்திகள் குறித்தான பயிற்சி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஒன்பதாவது கோட்டத்தில் நாய்களின் இனப்பெருக்கத்தை தடுப்பது மற்றும் நாய்களை பிடிப்பதில் கையாளும் புதிய யுக்திகள் குறித்தான பயிற்சி.

நகர மற்றும் மாநகர பகுதிகளில் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனிடையே சாலையில் தனியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பெரியவர்கள் வரை ஏராளமான நாய்கள் சூழ்ந்து கடித்து குதறும் வைரல் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனை தடுக்க தமிழக அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட தான் வருகிறது. 
இந்த நிலையில் சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சேலம் மாநகராட்சி சார்பாக நாய்கள் இனப்பெருக்கத்தை தடுக்கவும், தடுப்பூசியின் அவசியம், ரேபிஸ் போன்ற கிருமிகளை எப்படி தடுப்பது, பாதுகாப்பாக எப்படி நாய்களை பிடிப்பதில் யுக்திகள் கையாளுவது என பயிற்சி  மேற்கொள்ளப்பட்டது. ஒன்பதாவது போட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகருமான தெய்வ லிங்கம் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பயிற்சி முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் ஹரி கணேஷ் மற்றும்  சுரேஷ் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கினர்.
சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.

சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.  

சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.

சேலம் மூன்று ரோடு பகுதியில் பிரபல நியூரோ பவுண்டேஷன் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மூளை,  நரம்பியல் மற்றும் தண்டுவடம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் நியூரோ பவுண்டேஷன் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்க விழா இன்று நடைபெற்றது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த அதிநவீன தீவிர சிகிச்சை மைய திறப்பு விழாவில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சிகிச்சை பிரிவினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பிரிவில் சிறப்பம்சம் குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன் சேலம் மாநகராட்சி ஆணையாளருக்கு எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன், ஹார்ட் அட்டாக் தாண்டி ஒரு பெரிய பிரச்சனை ஆயிடுச்சு போனா மக்களுக்கு வந்து அதை பத்தின பெரிய ஒரு புரிதல் இல்ல ஒரு சாதாரண வயிறு எரிச்சலா இருக்குன்னா கூட எல்லோரும் ஹார்ட் அட்டாக் பண்ணிக்கிறாங்க ஆனா ஸ்ட்ரோக் வந்து யாருக்குமே தெரியவில்லை பொதுமக்கள் மத்தியில வந்து அந்த ஒரு அவேர்னஸ் வரணும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் நூறாண்டுகள் வந்து செத்து போயிடுது. நம்ம எவ்வளவு சீக்கிரம் நம்ம ட்ரீட்மெண்ட் தர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த ரத்த ஓட்டம் அடைபட்ட பகுதிக்கு வந்து நம்ம ரத்த ஓட்டத்தை திரும்பி அனுப்புறோமோ நமக்கு ரெக்கவரி வந்துச்சு அதுக்கப்புறம் லைப் லாங் வந்து படித்தே இருக்கிறது நடக்க முடியல அப்படிங்கறது ரொம்ப கஷ்டம் அதுலயும் இப்ப நிறைய பேருக்கு 30 லிருந்து 50 வயசு கூட நிறைய பேருக்கு முன்ன மாதிரி ஏழு வயசு தான் வரும் ஸ்மோக்கிங் ஆல்கஹால் கண்ணா பின்னான்னு நிறைய சாப்பிடுவது இது வந்து ஒரு கவர்மெண்ட் ரெஸ்பெக்ட் அதெல்லாம் தாண்டி நிறைய பேக்டர்ஸ் இருக்கு சோ அத வந்து நம்ம ஏவல் வேட் பண்ணி தான் கண்டுபிடிக்கணும் ஆனா ஸ்டோப் வந்துடுச்சு அப்படின்னா அந்த சிம்டம்ஸ் வந்து எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கணும் அப்படிங்கிறது இருக்கலாம் அப்படிங்கிற ஒரு முடிவுக்கு எல்லாருமே தெரிஞ்சிருக்கணும் இது வந்து ஒரு ஃபண்டமெண்டலா இது ஸ்ட்ரோப் வந்து இருக்கா இல்லையான்னு அதுக்கு மேல வந்து நீங்க உடனடியாக ஒரு நரம்பியல் டாக்டர் பார்த்து கன்பார்ம் பண்ணிக்கணும் அவரு தான் சொல்லணும் பக்கத்துல குறைஞ்சிருக்குன்னு நினைச்சு நான் வந்து இது பண்ணிக்கிறேன் சர்க்கரை சாப்பிட்டு பார்க்கிறேன் வெயிட் பண்ணி பாக்குறேன்னு இந்த கால தாமதத்தை வந்து மக்கள் வந்து முரணாக நிறுத்தனும் ட்ரீட் பண்றது ரொம்ப சீரியசான ட்ரீட்மென்ட் அத வந்து அதற்கான தகுதி வாயில சென்டர்களில் மட்டும் தான் பண்ண முடியும் இது வந்து ஒரு டீம் ஆப் டாக்டர் செடி எஃபெக்ட் ஒரு சிங்கிள் டாக்டர் பண்றது என்கிறதும் இல்ல ஒரு சின்ன சென்டர்ல பண்றதும் கூட கிடையாது. அதுக்காக தான் நாங்க வந்து எல்லாத்தையும் இன்டர்நெட் பண்ணி சேலத்துல இந்த 100 கிலோமீட்டர் ரேடியோஸ் கார்டு மக்களுக்கு வந்து நாங்க பண்றோம் யாராக இருந்தாலும்  ஒன்றரை மணி நேரத்துக்கு மருத்துவமனைகளுக்கு அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில்  மயக்கவியல் நிபுணர் டாக்டர் சேகர், மூளை நரம்பியல் நிபுணர்கள் பிரபாகரன், பிரத்தீஷ்குமார்,
டாக்டர்.நிஷாமோல் ஆகியோர் கலந்து கொண்டனர்