திங்கள், 7 ஏப்ரல், 2025

தேசிய அளவிலான கல்லூரி மாணவ மாணவியருக்கு கலை விழா க்ரிவாஸ்-25. சோனா கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் தகவல்.

தேசிய அளவிலான கல்லூரி மாணவ மாணவியருக்கு கலை விழா க்ரிவாஸ்-25. சோனா கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் தகவல்.

சேலம் 
S.K. சுரேஷ்பாபு. 

தேசிய அளவிலான கல்லூரி மாணவ மாணவியருக்கு கலை விழா க்ரிவாஸ்-25. சோனா கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் தகவல்.

சேலம் சோனா கல்லூரியின் முதல்வர் எஸ் ஆர் ஆர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது, சோனா தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் (க்ரிவாஸ்'25)
சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் (க்ரிவாஸ்'25) வருகின்ற ஏப்ரல் மாதம் 17ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான  புகைப்படம் எடுத்தல், பாடல், ஃபேஷன் ஷோ, நடனம், குறும்படம் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்புகள் விடப்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து  1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 
 கல்லூரி மாணவர்களின் தனி திறன்களை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே இந்த வாய்பினை கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த போட்டிகளின் இறுதி நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளனர் என சோனா கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் கூறினார். 
போட்டியின் விதிமுறைகளை பற்றி முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரேணுகா எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகான (க்ரிவாஸ்'25) போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்வடிவு மற்றும் மாணவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

சேலத்தில் வேக தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசி உயிர் பாதுகாப்பை உறுதி செய்த மாமன்ற உறுப்பினர்.

சேலத்தில் வேக தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசி உயிர் பாதுகாப்பை உறுதி செய்த மாமன்ற உறுப்பினர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் வேக தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசி உயிர் பாதுகாப்பை உறுதி செய்த மாமன்ற உறுப்பினர். 

மாநகர மற்றும் நகர சாலைகளில் இருசக்கர வாகனங்கள் உட்பட கனரக வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக ஆங்காங்கே வேக தடைகள் அமைப்பது வழக்கம். இது போன்ற அமைக்கப்படும் வேகத்தடைகள் மீது  இங்கு வேகத்தடை உள்ளது என்பதை அதன் மீது வெள்ளை வண்ணம் பூசி இரு சக்கரை மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதுபோன்று ஒன்னும் பேசாமல் காணப்படும் வேகத்தை காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டு அதன் வாயிலாக உயிர் பறி ஏற்படும் அளவிற்கு அதிக சாதியை கூறுகள் உள்ளன என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட வீராணம் பிரதான சாலையில் உள்ள வாய்க்கால் பட்டறை பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தரையின் வாயிலாக நாள்தோறும் இருசக்கர வாகனங்கள் உட்பட கனரக வாகனங்களுக்கு விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இதனை அறிந்த 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம், பொதுமக்கள் உதவியுடன்,  அன்றாடும் நிகழும் சாலை விபத்துகளில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் விதமாக அந்த பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணத்தை பூசி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை மேற்கொண்டார். மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் இந்த செயல் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.
பெருந்துறை அருகே தடுப்பு கம்பி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 15 பயணிகள் காயம்

பெருந்துறை அருகே தடுப்பு கம்பி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 15 பயணிகள் காயம்

கோவையில் இருந்து சேலம் நோக்கி நேற்று ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 29 பயணிகள் இருந்தனர். கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிக்கோவில் பிரிவு அருகே அந்த பேருந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் குவியலில் ஏறியது
மேலும், அங்கிருந்த இரும்பு தடுப்பு கம்பி மீது மோதி நின்றது. இதில் பேருந்தின் முன்புற கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து சிதறியது. இந்த விபத்தில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி 15 பயணிகள் காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

விபத்து நடந்ததும் ஓட்டுநர் , நடத்துநர் பேருந்தில் இருந்து இறங்கி அங்கிருந்து ஓடிவிட்டனர். காயம் அடைந்த பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வாலிபரை எரித்து கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வாலிபரை எரித்து கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 25). இவர் அதே ஊரை சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த பாப்பம்மா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே கடந்த மாதம் 19ம் தேதி சக்திவேல் மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் கடந்த 26ம் தேதி பேரிகை போலீசில் புகார் செய்தனர், அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 30ம் தேதி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தியதில் எலும்புக்கூடாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாயமான சக்திவேல் என தெரியவந்தது. மேலும் சக்திவேலை எரித்துக்கொன்றதாக பாப்பம்மாவின் அண்ணன் வெங்கடேஷ் (32), அவருடைய உறவினரான ராஜேந்திரன் (48) ஆகியோரை பர்கூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த கொலையில் தொடர்புடைய குமார் என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே மறைந்திருந்த குமாரை, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
பவானியில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி 7ம் வகுப்பு மாணவி பலி!

பவானியில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி 7ம் வகுப்பு மாணவி பலி!

ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டியம்மன் கோவில் அருகே உள்ள காவிரி வீதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகள் வர்ஷினி (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், முனிராஜ் குடும்பத்தினருடன், பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று உள்ளார்.
அங்கு, முனிராஜ், வர்ஷினி மற்றும் குடும்பத்தினர் ஆட்டு இறைச்சி சமைத்து சாப்பிட்டு உள்ளனர். அப்போது வர்ஷினியின் தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கி உள்ளது. உடனே அவர் தண்ணீர் குடித்து உள்ளார். ஆனால் இறைச்சி துண்டு வயிற்றுக்குள் செல்லவில்லை. இதனால் வர்ஷினிக்கு சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனே, வர்ஷினியை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள், அரசு மருத்துவமனைக்கு வர்ஷினியை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து வர்ஷினியை பவானி அரசு மருத்துவமனைக்கு அவருடைய பெற்றோர்கள் தூக்கிக்கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வர்ஷினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் வர்ஷினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. மேலும் வர்ஷினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், 3 மணி நேரம் காத்திருந்தும் வர்ஷினியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வர்ஷினியின் உறவினர்கள் பவானி- அந்தியூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பவானி போலீஸ் துணை சூப்பி ரண்டு ரத்தினகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.

இதில், சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மாலை 6 மணி அளவில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பவானி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: வருகிற 24ம் தேதி கடைசி நாள்!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: வருகிற 24ம் தேதி கடைசி நாள்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 91 அங்கன்வாடி பணியாளர், 12 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 36 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.

வட்டாரம் வாரியாக அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும்.

விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 24ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதன்மை அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு 25 முதல் 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரை இருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதா ரர்கள் மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலி பணியிடம் உள்ள குழந்தைகள் மையம் இருக்கும் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலத்தில் திமுக மாணவரணி சார்பில் இல்லம்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சேலத்தில் திமுக மாணவரணி சார்பில் இல்லம்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் திமுக மாணவரணி சார்பில் இல்லம்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். 

சேலம் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் இல்லங்கள் தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சேலம் கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த தீவிர மாணவர் உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தார். கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில் திடலுக்கு வந்த அவர் இல்லங்கள் தோறும் நடந்தே சென்று மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை கொடுத்து சம்பந்தப்பட்ட இல்லங்களிலேயே உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். இதனை அடுத்து சேலம் கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில் திடல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை திமுக மாணவர் அணையில் இணைத்துக் கொள்ள அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரிடம் வழங்கினர். கட்சியில் புதிதாக சேர்ந்த மாணவர் அணியினரை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வாழ்த்தி வரவேற்றார்.  இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணி துணை செயலாளர் தமிழரசன், மாநகரச் செயலாளர் ரகுபதி, மாவட்ட அமைப்பாளர் கோகுல் காளிதாஸ், பேரூராட்சி செயலாளர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் பூபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.