வெள்ளி, 11 ஏப்ரல், 2025

அமெரிக்கா இசை நிகழ்ச்சிக்கு ஈடாக சேலத்தில் இசை  நிகழ்ச்சி ....

அமெரிக்கா இசை நிகழ்ச்சிக்கு ஈடாக சேலத்தில் இசை நிகழ்ச்சி ....

சேலம்.
S.K.சுரேஷ்பாபு. 

அமெரிக்கா இசை நிகழ்ச்சிக்கு ஈடாக சேலத்தில் இசை  நிகழ்ச்சி ....

சேலம் மூன்று ரோடு பகுதியில் வருகின்ற 13-ஆம் தேதி எஸ் கே எஸ் மருத்துவமனை சார்பில் ஹாரிஸ் த கிங் ஆப் ஹார்ட்ஸ் எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் அமெரிக்காவில் நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஈடாக சேலத்தில் தான் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் இதில் பிரம்மாண்டமான பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அதிநவீன சிறப்பான ஒளி ஒலி அமைப்புடன் கச்சேரி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் 32 இசைக் கலைஞர்கள் இசை பாடலுடன் நடனமும் ஆடி மக்களை மகிழ்விக்க உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி எவ்விதமான பேச்சுமின்றி பாடல் மட்டும் மூன்று மணி நேரத்துக்கு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் 1960 70 ஆம் ஆண்டுகளில் கோலிவுட் ஆக திகழ்ந்த சேலத்தில் தான் இன்னிசை நிகழ்ச்சி நடத்துவது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்றும் பெருமையுடன் தெரிவித்தார் பிறிதொரு வினாவுக்கு விடை அளிக்கையில் நாம் நமது கடமையை எதிர்பார்ப்பு இன்றி சரியாக செய்தோமானால் அதற்குண்டான பலன்கள் அப்பப்போ கிடைக்கும் என்றும் இதனை தான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டதாகவும் தெரிவித்த அவர் ஒவ்வொரு பாடலுக்கு இடையேயும் மக்கள் தட்டும் கைத்தட்டல்களும் ஆரவாரமே தனக்கு மிகப்பெரிய அவார்ட் என பெருமையுடன் தெரிவித்தார்
பவானி நதி மாசுபடுவதை தடுக்க கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்: ஈரோட்டில் பவானி நதி கூட்டு இயக்கத்தினர் அமைச்சரிடம் மனு!

பவானி நதி மாசுபடுவதை தடுக்க கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்: ஈரோட்டில் பவானி நதி கூட்டு இயக்கத்தினர் அமைச்சரிடம் மனு!

பவானி நதி மாசுபடுவதை தடுக்க கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஈரோட்டில் பவானி நதி கூட்டு இயக்கத்தினர் அமைச்சரிடம் மனு அளித்தனர்.
ஈரோட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமியை இன்று பவானி நதி கூட்டு இயக்கத்தினர் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என 4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக பவானி நதி விளங்கி வருகிறது. இந்த நதி நீரை பல லட்சக்கணக்கான மக்கள் குடிநீராகவும், வேளாண்மைக்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜீவ நதியான பவானி நதி நீர், ஆலைக் கழிவுகளால் மாசடைந்து தண்ணீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசி வந்தது. இந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆளானார்கள். தமிழ்நாட்டிலேயே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள ஒன்றாக ஈரோடு மாவட்டமும் மாறி வருகிறது.

இந்நிலையில், பவானி நதியை பாதுகாக்க சத்திய மங்கலத்தில் அனைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் ஒன்று கூடி, 2023-ம் ஆண்டு பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கம் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு, 2023-ம் ஆண்டு ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினத்தில் 10 ஆயிரம் பேர், பவானிசாகரில் கூடி, ஆலைக்கழிவுகளால் பவானி நதிநீர் மாசடைவதை கண்டித்து, மாபெரும் போராட்டத்தை பவானிசாகரில் நடத்தியது.

சமீப நாட்களுக்கு முன் கோவை மாவட்டம், சிறுமுகை மற்றும் ஆலாந்துறை பகுதியில் நீரின் நிறம் ஆரஞ்சு நிறமாக மாறியதையும், கோவை மாவட்ட நிர்வாகம் குடி நீரை பயன் படுத்துவதை தடை செய்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி மீண்டும் பவானிசாகரில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், அணையில் நீர்மட்டம் குறைந்துள்ள கடந்த சில தினங்களாக, மீண்டும் பவானி நதிநீர் ஆரஞ்சு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

ஆகவே, பவானி நதி நீரை மாசு ஏற்படுத்தும் ஆலைகள் மற்றும் நகராட்சி, உள்ளாட்சிகளின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை மாதம்தோறும் கண்காணிக்க நீர்வளத்துறை, வருவாய்த் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்.

கண்காணிப்பு குழுவை அமைக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அரசாணை இருப்பதையும், ஏற்கனவே கோவை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வருகிற 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்களில் பின்னடைவு பணியிடங்கள் 51, அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் 6 மற்றும் இதர 82 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் தகுதிகள் அனைத்தும் அறிவிப்பு வெளியிடப்படும் 09.04.2025-ஐ அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் வயது வரம்பு பழங்குடியினர் தவிர இதர அனைத்து பிரிவினருக்கும் 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

மொத்த காலிப்பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்கள் விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பப்படும். குறைவான பார்வைத் திறன் (மூக்குக் கண்ணாடி மூலம் சரிசெய்யப்பட்டது), உடல் இயக்கக் குறைபாடு (ஒரு கால்), குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளில் முழு செயல்பாட்டுத் திறன், உணர் திறன் மற்றும் செயல் திறன் உள்ளடக்கியது) மற்றும் திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான) ஆகிய குறிப்பிட்ட உடல் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இவ்வகையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்த காலிப்பணியிடங்களில் 4 விழுக்காடு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நியமனம் கோரும் மையத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி, பவானி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ள பள்ளி மையங்களின் விபரம், எண்ணிக்கை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இனச்சுழற்சி விபரம் மற்றும் விண்ணப்ப படிவ மாதிரிகள் ஆகிய விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இனச்சுழற்சி முறை பின்பற்றப்பட மாட்டாது. விண்ணப்பங்களை erode.nic.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சம்மந்தப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வரும் 28ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை சனிக்கிழமை உட்பட (அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) தொடர்புடைய மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மட்டும் விண்ணப்பம் சமர்ப்பிக்க தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்றும் விண்ணப்பங்கள் ஏதும் பெறப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தூரச்சான்று இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்கு பிறகு தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நேர்முகத் தேர்விற்கு விண்ணப்பதாரர் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.04.2025 மாலை 5.45 மணி

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மைய சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் மொத்தம் - 139

அதன் விபரம் ஈரோடு வட்டாரம் -23, மொடக்குறிச்சி வட்டாரம்- 10, கொடுமுடி வட்டாரம் -1, பெருந்துறை வட்டாரம் 9, சென்னிமலை வட்டாரம் -6, பவானி வட்டாரம் - 9, அம்மாபேட்டை வட்டாரம் - 7, அந்தியூர் வட்டாரம் 13, கோபிசெட்டிபாளையம் வட்டாரம் - 10, நம்பியூர் வட்டாரம் 11, தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம் -5, சத்தியமங்கலம் வட்டாரம் 13, பவானிசாகர் வட்டாரம் 5, தாளவாடி வட்டாரம் 6, ஈரோடு மாநகராட்சி 5, பவானி நகராட்சி - 2, கோபிசெட்டிபாளையம் நகராட்சி 3, சத்தியமங்கலம் நகராட்சி 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

எனவே, தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் 28வது ஆண்டு விழா. துரை ரீதியாக சாதித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் 28வது ஆண்டு விழா. துரை ரீதியாக சாதித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் 28வது ஆண்டு விழா. துரை ரீதியாக சாதித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லுரியின் 28வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பெருமைமிக்க சோனா கல்லூரி மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை, வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தலைவர் திரு.வள்ளியப்பா தலைமையேற்று சோனா கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று ஆண்டு அறிக்கையை சமர்பித்தார். தேர்ச்சி சதவீதத்தின் முன்னிலை, மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது குறித்தும், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் தேசிய அளவில் சாதனைகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தியதில் இந்தியாவில் முதன்மை இடம், மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது என கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் கல்லுரியின் துறைசார்ந்த நடவடிக்கைகள், மற்றும் பேராசிரியர்களின் பங்களிப்பு, மாணவ மாணவிகளின் ஆராய்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களை ஆண்டு அறிக்கையாக சமர்பித்தார்.
இந்த விழாவில் சிறப்புவிருந்தினர்களாக சென்னை ஜி.இ வெர்னோவா நிறுவனத்தின் இந்திய மனிதவளத் தலைவர் பிரபு ஜெ.பி, மற்றும் ஹுன்டாய் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தரணிஜெயபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆண்டு விழா சிறப்புரையாற்றினார்கள், மேலும் பல பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும், சிறந்து விளங்கிய கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு துறை வாரியாக பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தார்கள்.
இறுதியாக எம்.பி.ஏ துறைத்தலைவர் முனைவர்.அஞ்சனி நன்றியுரையாற்றினார். இந்த விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் இயக்குனர் வீ.கார்த்திகேயன், முதல்வர்கள் கனகராஜ், காதர்நவாஷ், கவிதா மற்றும் பேராசிரியர்கள் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பங்குனி உத்திர விழாவையொட்டி சேலம் ராஜரிஷி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி..

பங்குனி உத்திர விழாவையொட்டி சேலம் ராஜரிஷி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பங்குனி உத்திர விழாவையொட்டி சேலம் ராஜரிஷி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி..

தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக தமிழ் மாதங்களில் வரும் பங்குனி மாதம் உள்ளது. அதன் அடிப்படையில் பங்குனி உத்திர திருவிழாவினை ஒட்டி முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் உள்ள முருகப்பெருமானுக்கும் தனிப்பட்ட முறையில் உள்ள முருகப்பெருமான் திருக்கோவில்களிலும் இன்று ஆறுமுகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் பள்ளப்பட்டியில் உள்ள சேலம் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி ராஜரிஷி ஆசிரமத்தின் திருக்கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டு மூலவரான பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு பால்குட ஊர் படம் நடைபெற்று தொடர்ந்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ராஜரிஷி ஆசிரமம் நிர்வாகி சுவாமி பாபு அவர்களின் தலைமையில்  எம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு பாட தண்டாயுதபாணி  ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது திருக்கோவிலில் பிறந்த ஏராளமான பக்தர்கள் சரவண கோஷங்களை எழுப்பி முருகப் பெருமானை வழிபட்டது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது. பின்னர் உச்சிக்காத பூஜை மற்றும் திருக்கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் அன்னதானங்களும் வழங்கப்பட்டன. 
தொடர்ந்து மாலை சேலம் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் பக்தர்களின் சரண கோஷத்திற்கு இடையே வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பங்குனி உத்திர விழாவிற்கான ஏற்பாடுகளை ராஜரிஷி ஆசிரம அறக்கட்டளை நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

வியாழன், 10 ஏப்ரல், 2025

சேலம் ஏவிஎஸ் பொறியியற் கல்லூரியின் சாதனையாளர்கள் தின விழா. துரை ரீதியாக சாதனை படைத்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு..

சேலம் ஏவிஎஸ் பொறியியற் கல்லூரியின் சாதனையாளர்கள் தின விழா. துரை ரீதியாக சாதனை படைத்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஏவிஎஸ் பொறியியற் கல்லூரியின் சாதனையாளர்கள் தின விழா. துரை ரீதியாக சாதனை படைத்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு..

சேலம் அம்மாபேட்டை ஏ வி எஸ் பொறியியற் கல்லூரியின் சாதனையாளர்கள் தின விழா சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி குழுமங்களின் தாளாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏவிஎஸ் பொறியியற்  கல்லூரியின் முதல்வர் சுந்தரராஜன் ஒளிரோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் ஜோஹோ கார்ப்பரேஷன் ஹெச் ஆர் லீடர் மற்றும் பப்ளிக் ஸ்பீக்கர் சார்லஸ் காட்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துரை ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு சாதனையாளர்கள் விரதனை வழங்கி கௌரவித்து சிறப்புரையாற்றினார். திஸ் இஸ் விழாவில் கல்லூரியின் துணை முதல்வர்கள் விஸ்வநாதன் மற்றும் ஜோஷ்வா உட்பட கல்லூரியின் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஆயிரக்கணக்கான நூல் கலந்து கொண்டனர்.
ஈரோட்டை சுட்டெரிக்கும் வெயில்: நேற்று 104 டிகிரியை எட்டியதால் மக்கள் அவதி!

ஈரோட்டை சுட்டெரிக்கும் வெயில்: நேற்று 104 டிகிரியை எட்டியதால் மக்கள் அவதி!

ஈரோட்டில் கத்திரி வெயில் தொடங்கும் முன்பே நேற்று (ஏப்ரல் 10) வெயில் 104 டிகிரியை எட்டியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெப்பக்காற்றும், அனல் காற்றும் வீசி வருவதால் நேற்று (ஏப்ரல் 10ம் தேதி) வியாழக்கிழமை 104 டிகிரி வெயில் பதிவாகி சுட்டேரித்தது. 

குறிப்பாக, பகலில் காலை 8 மணி முதலே வெயில் சூட்டை உணர முடிகிறது. தொடர்ந்து, பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் தலை காட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

கடும் வெயிலால் மாவட்டத்தில் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடும் வெயில் காரணமாக இளநீர், மோர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றின் விற்பனையும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.