திங்கள், 21 ஏப்ரல், 2025

ஈரோட்டில் வீட்டு பிரச்சனையில், தாய் மகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் மல்க எஸ்பியிடம் புகார்!

ஈரோட்டில் வீட்டு பிரச்சனையில், தாய் மகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் மல்க எஸ்பியிடம் புகார்!

ஈரோட்டில் வீட்டு பிரச்சனையில், தாய் மகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் மல்க எஸ்பியிடம் புகார்!

ஈரோடு ஃபயர் சர்வீஸ் பின்புறம் உள்ள ஈஸ்வரன் வீதியில் வசித்து வரும் நாகலட்சுமி இவரது மகள் இந்துமதி, இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கணவர்கள் இல்லாமல் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாக லட்சுமியும், இந்துமதியும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகார் மனு மற்றும் பாதிக்கப்பட்ட தாயும் மகளும் அளித்த பேட்டியில், இந்நிலையில், திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ரீட்டா மேரி என்பவருக்கும் வீடு சம்பந்தமான பிரச்சனை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தாங்கள் வசித்து வரும் வீடு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆரோக்கியசாமி என்பவரிடம் வாங்கியுள்ளனர். 

அந்த வீட்டிற்கு பட்டா இல்லை எனவும், பட்டாவிற்கு பதிலாக பச்சைத் தாளில் எழுதிக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என கூறியதாகவும், ஆரோக்கியசாமி தற்போது உயிருடன் இல்லை என தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரீட்டா மேரி என்பவர், எங்களது வீட்டிற்கு வந்து வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்துள்ளேன் எனக்கூறி மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரியை சரியாக கட்டுகிறீர்களா என கேட்டு, நான்கைந்து ரசீதுகள் மற்றும் ரீட்டா மேரி கூறிய தஷ்த்தவேஜ்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்று விட்டு, தற்போது அந்த வீடு என்னுடையது என ரீட்டா மேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்நிலையில்தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடியார்களுடன் நாகலட்சுமி அவரது மகள் இந்துமதி வசித்து வரும் வீட்டிற்குள் புகுந்து இந்த வீடு எனது வீடு எனக் கூறி இருவரையும் வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி சென்றுள்ளனர். துணை இன்றி வசித்து வரும் பயந்து போன நாகலட்சுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷ விஷம் குடித்த பின்னர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் "இனி எந்த பிரச்சனையும் வராது" என காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தங்களது வீட்டில் நிம்மதியாக வாழலாம் என நினைத்திருந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில், திமுக பிரமுகர் தினகரன் என்பவர் தலைமையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த கும்பல் நாகலட்சுமி, மகள் இந்துமதியிடம் பாலியல் துன்புறுத்ததில் ஈடுபட்டதுடன், பொய் கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டி வீட்டை காலி செய்யுமாறு தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.


ஈரோட்டில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய கில்லாடி பெண் கைது!

ஈரோட்டில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய கில்லாடி பெண் கைது!

ஈரோடு சூரம்பட்டிவலசு இந்திரா வீதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் புகுந்த பெண், பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணத்தை நேற்று முன்தினம் திருடி சென்றார்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவருடைய மனைவி ரமணி (34) என்பவர் நடராஜின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, போலீசார் ரமணியை கைது செய்து, அவரிடம் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், ரமணி மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சீரமைப்பதில் வனத்துறை இடையூறு பாஜகவினர் ஆட்சியரிடம் முறையீடு

சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சீரமைப்பதில் வனத்துறை இடையூறு பாஜகவினர் ஆட்சியரிடம் முறையீடு

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களை தீர்த்து சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பாஜகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி  கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை கோமாதா பூஜை மாதாந்திர சஷ்டி பூஜை கிருத்திகை நட்சத்திர பூஜை தைப்பூச தேர்த்திருவிழா பங்குனி உத்தரவு திருவிழா மற்றும் அனைத்து முகூர்த்த நாட்களிலும் 10 முதல் 20 திருமணங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் அதுபோக சென்னிமலை முருகனுக்கு பொதுமக்கள் சார்பில் பல விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் வருடம் முழுவதும் விழாக்களை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முருகனை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் மூலமாக வந்து செல்கின்றனர். இதனால் விழா காலங்களில் போக்குவரத்து நேசர்களை குறைக்கும் வகையில் சென்னிமலை மலைப்பாதியை அகலப்படுத்தும் மணியை தமிழக அரசின் இந்து அரணைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் குறிப்பாக மலைப்பாதையில் வளைவுகளில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு சென்னிமலை மலை பாதியை அகலப்படுத்தும் பணியை தமிழக அரசு இந்து அறநிலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணிக்கு வனத்துறை ஒப்புதல் அளிக்காத மட்டுமல்லாமல் மலைப்பாதியை செப்பனிடும்  பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். இதனால் முருக பக்தர்கள் தரிசிக்க செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ள வண்டிகளை நிறுத்திடங்களில் வனத்துறை என தலையீடு அதிகமாக உள்ளது‌. இதனால் வாகன நிறுத்துவதிலும் எடுப்பதிலும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டுஉரிய நடவடிக்கை எடுத்து விரைவில் மலைப் பாதையை சீரமைக்கும் பணியை முடித்து தர வேண்டும் என தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர்.
ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 315 கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்!

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 315 கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 315 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கூட்டத்தில் தொழிலாளர் துறையின் சார்பில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாகனம், தொழில் முறை டாக்சி வாங்குவதற்கான மானியம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளரின் குழந்தைகள் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்தற்கான ஊக்கத் தொகை என 4 பயனாளிகளுக்கு ரூ.3.25 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், உதவி இயக்குநர் (தொழிலாளர் துறை) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 138 ஆடுகளின் 34 உரிமையாளர்களுக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது: ஆட்சியர் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 138 ஆடுகளின் 34 உரிமையாளர்களுக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது: ஆட்சியர் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் விவசாய மற்றும் கால்நடை விவசாயிகளின் கால்நடைகளான மாட்டினம், வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, பூனை மற்றும் இதர கால்நடைகளை தெருநாய்கள் தாக்கி உயிரிழந்தமைக்கு ஈடு செய்யும் வகையில் கால்நடைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் வரையரைகள் வரையப்பட்டுள்ளன.

இதனை கருத்தில் கொண்டு பசு, எருமை ஒன்றிற்கு தலா ரூ.37 ஆயிரத்து 500ம், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு ஒன்றிற்கு தலா ரூ.6 ஆயிரமும், கோழி ஒன்றிற்கு தலா ரூ.200ம் சிறப்பு நிகழ்வாக கருதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2025 ஜனவரி மாதம் 25ம் தேதி வரை இறந்த 138 ஆடுகளின் உரிமையாளர்கள் 34 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மார்ச் 2025 வரை இறந்த ஆடுகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, இழப்பீட்டு தொகை வழங்க முன்மொழிவு அரசுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 55 ஆடுகளின் உரிமையாளர்களான 5 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 21) வழங்கினார். மேலும், 83 ஆடுகளின் உரிமையாளர்களான 29 நபர்களுக்கு ரூ.4.98 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார். தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவக்கம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவக்கம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்யுஎஸ்ஆர்பி சப் இன்ஸ்பெக்டர் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி துவங்குகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் நாள்தோறும் சிறுதேர்வுகள், வாராந்திர தேர்வுகள், இணைய வழித் தேர்வுகள் முழு மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இந்த வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண், பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது!

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50). இவர், செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். மேலும், ஆழ்துளை கிணறு நீர்மட்டம் பார்க்கும் வேலையும் செய்து வந்தார்.
இவருக்கு, ரேவதி (34) என்ற‌ மனைவியும், சுதிக்சன் (13), கபிலேஷ் (11) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், தங்கவேல் மனைவியை தங்கவேல் பிரிந்து சூரியம்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார். ரேவதி மகன்களுடன் தாளவாடி ஜோரகாடு பகுதியில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை தங்கவேல் ரேவதியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தங்கவேலுக்கும், ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ரேவதி கணவனை கீழே தள்ளி அருகே கிடந்த கல்லை எடுத்து தங்கவேலின் தலையில் போட்டுள்ளார்.

இதில் அலறி துடித்தபடி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாளவாடி போலீசார் தங்கவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்னர