புதன், 29 ஜூலை, 2026

சேலம் மாமன்ற கூட்டத்தில், திமுக மேயரால் தொடர்ச்சியாக அவமதிக்கப்படும் பெண் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம். சேலம் மாநகர மேயர் இன் அநாகரிக செயல் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் வேதனை.

சேலம் மாமன்ற கூட்டத்தில், திமுக மேயரால் தொடர்ச்சியாக அவமதிக்கப்படும் பெண் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம். சேலம் மாநகர மேயர் இன் அநாகரிக செயல் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் வேதனை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாமன்ற கூட்டத்தில், திமுக மேயரால் தொடர்ச்சியாக அவமதிக்கப்படும் பெண் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம். சேலம் மாநகர மேயர் இன் அநாகரிக செயல் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் வேதனை.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயருக்கான இருக்கையை கீழே இறக்கி போட்ட மேயரின் செயலை கண்டித்து கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் இரந்து துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக துணைமேல் திருமதி சாரதா தேவி மாணிக்கம் சென்னை சென்றுள்ள நிலையிலும் கூட, இன்றும் சேலத்தில் நடைபெற்ற மாமன்ற இயல்பு கூட்டத்தில், பெண் துணை மேயர் என்றும் பாராமல், மாமன்றத்தின் மாண்பையும் மீறி சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரனின் தூண்டுதலின் பெயரில் மீண்டும் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் அவர்களின் நாற்காலி கீழே போடப்பட்ட அவலம். 
           ( பழைய புகைப்படம் )
           ( புதிய புகைப்படம் )
இதற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உட்பட 3 மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். சேலம் மாநகராட்சி மேயரின் இந்த செயலுக்கு துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு இது சம்பந்தமாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, சேலம் மேயர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

செவ்வாய், 28 ஜூலை, 2026

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி. சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து மரியாதை

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி. சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து மரியாதை

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி. சேலம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து மரியாதை

சேலம் கன்னங்குறிச்சியை சார்ந்தவர் ராஜா என்கின்ற சிற்ப கலைஞர். இவர் பாலமுருகன் சிற்பக் கலைக்கூடம் என்ற பெயரில் அதே பகுதியில் ஸ்தாபனம் ஒன்றை நிறுவி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பஞ்சலோக சிலைகள், கோவில் திருப்பணிகள், கற்சிற்பங்கள், மரச் சிற்பங்கள் மேற்கண்ட சிற்பக்கலை சார்ந்த பணி வேலைகள் அனைத்து சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி மேற்கொண்டு முதன்மை கலைஞராக தமிழக அளவில் திகழ்ந்து வந்தவர் என்ற பெருமைக்குரியவர் ராஜாஸ்தபதி. இவரது சிற்பக்கலை திருப்பணிகளை போற்றி ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்திய திருநாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டது. 
அதன் அடிப்படையில் புது தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்திய குடியரசுத் தலைவர் மேதகு த்ரௌபதி முர்மு  பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். இந்திய திருநாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகரான சேலத்திற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் ராஜா ஸ்தபதிக்கு கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் மாணவரின் முக்கிய பிரமுகர்களும் உற்றார் உறவினர்களும் தொடர்ச்சியாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நமது செய்தி குழு நேரில் அவரை அணுகி வாழ்த்துக்களை தெரிவித்த போது, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிற்ப கலை துறையில் என்னை சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்து அதற்கான பத்மஸ்ரீ விருதையும் அறிவித்து கௌரவித்த இந்திய குடியரசு தலைவருக்கும் பாரத பிரதமருக்கும் தன்னை தேர்வு செய்த தேர்வு குழுவினருக்கும் முதற்கண் தனது  நன்றியை உரித்துதாக்குவதாக தெரிவித்துக் கொண்ட அவர், இளைஞர்கள் மத்தியில் சிற்ப கலையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்காலத்தில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள சிற்பக் கலைஞர்களின் நலனை ஊக்குவிக்க அதற்கான திட்டங்களை வகுத்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இணையும் முன் வைத்தார்.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் அஸ்தம்பட்டி விஷ்ணுகுமார் மற்றும் தொழிலதிபர் ஜான் பால் உள்ளிட்டோர் மத்திய அரசின் விருது பெற்று சேலம் மாநகரக்கு பெருமை சேர்த்த மண்ணின்  மைந்தரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். போற்றுதலுக்குரிய ஸ்தபதியை  பாராட்டுவது  முக்கிய பிரமுகர்களையும் கடந்து பள்ளி மாணக்கர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வயதில்லை என்றாலும் அவரிடம் ஆசி பெற்று சென்ற வண்ணம் உள்ளனர் என்பது மட்டும் நிதர்சனம்.

மேகதாது அணை விவகாரம். வரும் 30.07.2026 முதல், கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் பூக்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றி வரும் கனரக சரக்கு வாகனங்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கர்நாடக முதலமைச்சருக்கு கடும் எச்சரிக்கை.

மேகதாது அணை விவகாரம். வரும் 30.07.2026 முதல், கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் பூக்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றி வரும் கனரக சரக்கு வாகனங்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கர்நாடக முதலமைச்சருக்கு கடும் எச்சரிக்கை.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு. 

மேகதாது அணை விவகாரம். வரும் 30.07.2026 முதல், கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் பூக்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றி வரும் கனரக சரக்கு வாகனங்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கர்நாடக முதலமைச்சருக்கு கடும் எச்சரிக்கை.

நாளுக்கு நாள் தமிழக மற்றும் கர்நாடகா விடையே விஸ்வரூபம் எடுத்து வரும் மேகதாது அணை விவகாரத்தின் தொடர்ச்சியாக, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை அறிக்கை  ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.
அதில் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளதாவது, கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி, தமிழகத்திற்குரிய நீர் பங்கீட்டைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் கண்டித்து, இந்தச் செய்திக்குறிப்பின் வாயிலாக நான் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். அதன்படி, 30.07.2026 முதல், கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் பூக்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றி வரும் கனரக சரக்கு வாகனங்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேலும், கர்நாடகாவிலிருந்து தமிழகம் வழியாகக் கேரள மாநிலத்திற்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களையும் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார்.

ஞாயிறு, 26 ஜூலை, 2026

இந்துக் கடவுள்களை தரிசிக்க பக்தர்களை வாடிக்கையாளர்களாக பாவிக்கும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து சேலத்தில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்துக் கடவுள்களை தரிசிக்க பக்தர்களை வாடிக்கையாளர்களாக பாவிக்கும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து சேலத்தில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

இந்துக் கடவுள்களை தரிசிக்க பக்தர்களை வாடிக்கையாளர்களாக பாவிக்கும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து சேலத்தில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 

பக்தர்களின் இறை நம்பிக்கையை மதிக்காமல் பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்களாக பாவிக்கும் தமிழக இந்து சமய அற நிலையத் துறையின் போக்கை மாற்றிட இந்துக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை வலியுறுத்தி இந்து முன்னணியின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் போக்கை கண்டித்து பல்வேறு கோஷங்களை முழக்கினர். குறிப்பாக இந்துக் கடவுள்களை தரிசிக்க பக்தர்களை வாடிக்கையாளர்களாக பாதிப்பதா என்று தமிழக  இந்து சமய அறநிலைய துறைக்கு கேள்வி எழுப்ப பத்தாது. மேலும் தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் இந்த போக்கு உடனடியாக கைவிடப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தவறும் பட்சத்தில் மாநில தலைமையின் ஒப்புதல் பெற்று சேலத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக வெளிப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்று அவர் பேசும்போது, தமிழகத்தில் உள்ள கோயில்களில் தரிசனக் கட்டணம் வசூலிக்க எந்தச் சட்டப்பூர்வமான ஏற்பாடும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தரிசனக் கட்டண முறை நடைமுறைக்கு வந்தது. 1987-ல் கோயில் நிலங்கள் 5.25 லட்சம் ஏக்கர் என்று அறிவித்த தமிழக அரசு, 2019-ல் கோயில் நிலங்கள் 4.78 லட்சம் ஏக்கர் மட்டுமே என்றும், அதில் 1.23 லட்சம் ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 22,600 கடைகளும், 33,671 மனைகளும் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 800 கோடி வருமானம் கிடைக்கும்.  ரூ.1000 கோடி வரை வருமானம்
வரக்கூடிய சூழல் உள்ளது. தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. 
பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில், பக்தர்களிடமிருந்து தரிசனக் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் சபரிமலை போன்ற கேரளக் கோயில்களில் தரிசனக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. கேரளாவில் இது சாத்தியமென்றால், தமிழகத்தில் ஏன் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய முடியாது? இறைவனைத் தரிசிக்கப் பணம் செலுத்த வேண்டியிருந்தால் அது கோயிலாக இருக்க முடியாது, அது ஒரு கண்காட்சியாகவே அமையும்; எனவே, பொருளாதார ரீதியான தீண்டாமையை உருவாக்கும் கோயில் தரிசனக் கட்டண முறையைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார்.

சனி, 25 ஜூலை, 2026

மேகதாது விவகாரம் தொடர்பாக  தமிழக முதல்வர்  அனைத்து கட்சி கூட்ட வேண்டும். விவசாய சங்க பிரதிநிதிகளின்  கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம் இருந்து நிலைநாட்ட வேண்டும். தமிழகம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல்.

மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்ட வேண்டும். விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம் இருந்து நிலைநாட்ட வேண்டும். தமிழகம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல்.

நாமக்கல்,
S.K.சுரேஷ்பாபு.

மேகதாது விவகாரம் தொடர்பாக  தமிழக முதல்வர்  அனைத்து கட்சி கூட்ட வேண்டும். விவசாய சங்க பிரதிநிதிகளின்  கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம் இருந்து நிலைநாட்ட வேண்டும். தமிழகம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல். 

தமிழக விவசாயிகளின் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டிய தீருவேன் என்பது கர்நாடக அரசின் கொள்கை முடிவாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் புகார் அளித்தும் கை விரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது ஆனால் அந்தத் தீர்ப்பினை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாதில் அணை கட்டிய தீருவோம் என்பதில் உறுதியாக இருந்து அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கர்நாடக முதல்வரின் இந்த செயல் தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய எடுத்து தமிழக கர்நாடக எல்லையான ஓசூர் பகுதியில் நாள்தோறும் பதற்றமான சூழலே இருந்து வருகிறது. 
இதனையே இந்த விவகாரம் தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி ஒவ்வொரு நாளும் கர்நாடகா அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அறிவித்து அதனை முன்னெடுத்தும் நிகழ்த்தி வருகின்றார். இது ஒரு புறம் இருக்க இன்று தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க, மேதாது அணை விவகாரம் தொடர்பாகவும் காவிரியில் தமிழகத்திற்கு உண்டான பங்கீட்டு நீரை வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவிற்கு வருமாறு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் செல்ல உள்ளதாக தமிழக அமைச்சரும் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில், மேகதாது  விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்திக்கக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழக எதிர் கட்சி தலைவர், மு.க. ஸ்டாலின், பாமக தலைவர்  அன்புமணி, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எதுவும் செய்யாத நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்று ஒற்றை காலில் நிற்கும் டி.கே. சிவக்குமாரிடம் என்ன பேச வேண்டி உள்ளது என்பது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் ஒட்டுமொத்த கேள்வியாகவே உள்ளது. இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு நடைபெறக்கூடாது, இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. 
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவிக்கையில், இந்த விவகாரம்  சம்பந்தமாக தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின்  கருத்துகளை கேட்டு, அதன் அடிப்படையில் தமிழகத்தின் உரிமையை கர்நாகாவிடம்  நிலைநாட்ட வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும்  கர்நாடக முதல்வரின் செயல்பாடு குறித்தும் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை நேற்றைய தினம் தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நுகர்வோர் நீதிமன்றங்களுக்குப் பதிலாக சிறப்பு மருத்துவத் தீர்ப்பாயங்களை அமைத்தல் தொடர்பாக சேலம் முக்கிய கொள்கை சீர்திருத்தத்தை முன்னெடுத்தல் நிகழ்வு.

சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நுகர்வோர் நீதிமன்றங்களுக்குப் பதிலாக சிறப்பு மருத்துவத் தீர்ப்பாயங்களை அமைத்தல் தொடர்பாக சேலம் முக்கிய கொள்கை சீர்திருத்தத்தை முன்னெடுத்தல் நிகழ்வு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நுகர்வோர் நீதிமன்றங்களுக்குப் பதிலாக சிறப்பு மருத்துவத் தீர்ப்பாயங்களை அமைத்தல் தொடர்பாக சேலம் முக்கிய கொள்கை சீர்திருத்தத்தை முன்னெடுத்தல் நிகழ்வு.

சேலம் மத்திய சட்டக் கல்லூரி, 'மருத்துவத் தீர்ப்பாயத்தின் தேவை' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான கல்லூரிகளுக்கு இடையேயான கொள்கை வரைவுப் போட்டியை நடத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மத்திய சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன், சிறப்பு மருத்துவத் தீர்ப்பளிப்பின் அவசியத்தை எடுத்துரைத்துத் தனது தலைமை உரையை ஆற்றினார். நுகர்வோர் பாதுகாப்பு மன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளிலும் 15% மருத்துவ அலட்சியம் தொடர்பானவை என்றும், நாட்டின் மொத்த மருத்துவ அலட்சிய வழக்குகளில் 9% முதல் 11% வரை தமிழ்நாட்டில் மட்டுமே உருவாகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மருத்துவர்களின் கண்ணியத்தைக் காப்பதற்கும் இடையில் நீதி ஒரு நுட்பமான சமநிலையைப் பேண வேண்டும் என்று திரு. சரவணன் வலியுறுத்தினார். 
வழக்கமான நீதிமன்றங்களைப் போலவே கட்டமைக்கப்பட்ட மற்றும் காலவரையறைக்குட்பட்ட தீர்வை வழங்கும் ஒரு பிரத்யேக மருத்துவத் தீர்ப்பாயத்தை நிறுவுவதே இந்தச் சமநிலையை அடைவதற்கான மிகவும் பயனுள்ள வழி என்று அவர் குறிப்பிட்டார். நிறைவுரையில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினரும், வோட்டராலஜியின் நிறுவனருமான மாண்புமிகு டாக்டர் வி. ராமராஜ் அவர்கள், சுகாதார வழக்குகளில் தற்போது நிலவும் நிர்வாகத் தடைகளை எடுத்துரைத்தார். மருத்துவ அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவர்களும், ஒரே ஒரு குறைக்காக நுகர்வோர் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மருத்துவ மன்றங்கள் உள்ளிட்ட பல சிதறலான மன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த பல மன்ற அணுகுமுறை, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரும் சிரமத்தையும் தாமதத்தையும் ஏற்படுத்துகிறது. கொள்கை வரைவு போன்ற கல்விப் போட்டிகள், சட்ட மாணவர்களை விமர்சன ரீதியாக சிந்திக்கவும், பொதுநலச் சட்டங்களை வடிவமைப்பதில் நேரடியாகப் பங்களிக்கவும் ஊக்குவிக்கின்றன என்று கூறி, டாக்டர் ராமராஜ் இந்த முயற்சியைப் பாராட்டினார்.
மேலும், வழக்கமான நீதிமன்ற அமைப்புக்கு வெளியே முறையான சட்ட மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக, அனைத்து சுதந்திரமான தீர்ப்பாயங்கள் மற்றும் ஆணையங்களை (மனித உரிமைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் போன்றவை) மேற்பார்வையிட ஒரு "அரசின் ஐந்தாவது கிளையை" நிறுவுவதற்கான ஒரு தொலைநோக்கு அரசியலமைப்பு சீர்திருத்தத்தையும் அவர் முன்மொழிந்தார். சென்னை ARMA மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் எம். அருள்பிச்சை நாராயணன், தனது சிறப்புரையில், சுகாதாரச் சட்டங்கள் குறித்த பொதுமக்களின் புரிதலில் உள்ள இடைவெளியை எடுத்துரைத்தார். பொது விழிப்புணர்வின்மை, உண்மையான மருத்துவ விபத்துகளுக்கும் உண்மையான அலட்சியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை பெரும்பாலும் மங்கச் செய்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 
கடுமையாகச் சட்டரீதியான ஒரு சமநிலையான பொறிமுறைக்கு டாக்டர் அருள்பிச்சை அழைப்பு விடுத்தார். முதல்வர் டாக்டர் பேகம் பாத்திமா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, பேராசிரியர்களான செல்வி டயானின், திருமதி ஜோபி, திரு. வெங்கடேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர். இது, பொது நலனுக்காக அர்த்தமுள்ள சட்ட சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் கல்லூரியின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியது.

வெள்ளி, 24 ஜூலை, 2026

தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது, மீறினால்  டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு,தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும். இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது ஆக 3ம் தேதி தமிழக முதலமைச்சர் தீர்க்கமாக வலியுறுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது, மீறினால் டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு,தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும். இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது ஆக 3ம் தேதி தமிழக முதலமைச்சர் தீர்க்கமாக வலியுறுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

நாமக்கல், 
S.K சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது, மீறினால்  டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். 
தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு,
தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு 
காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும். இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது ஆக 3ம் தேதி தமிழக முதலமைச்சர் தீர்க்கமாக வலியுறுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி, தமிழகத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிவிப்பின் பேரில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு அதற்கு தீர்வும் காணப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழக விவசாயிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டிய தீருவோம் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தற்போது வரை முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அவர்கள் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியில் குவிந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று கர்நாடகா அணைகளில் உள்ள தண்ணீரை திறக்க போராட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டபோது, தமிழக கர்நாடக காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்திலும் கூட கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்பதாலும் குடிநீருக்கு மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று கர்நாடக அரசு கை விரித்து இருந்தது. நிலைமை எப்படி இருக்க, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தற்போது வரை மௌனம் காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்பொழுது கர்நாடக முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
இது சம்பந்தமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு, தீர்க்கமான முடிவை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வேலுச்சாமி குறிப்பிட்டு உள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களை கர்நாடகா முதலமைச்சர் மாண்புமிகு .டி.கே.சிவக்குமார் அவர்கள், தமிழ் நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக பேசுவதற்கு அழைத்துள்ளார். அது தொடர்பாக  வருகின்ற 3 ந் தேதி அனறு தமிழக முதல்வர் அவர்கள் பெங்களூர் செல்லவுள்ள நிலையில்  இரு மாநில முதல்வர்கள் சந்திப்பின் போது தமிழக விவசாயிகள் நலன் கருதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணை கட்டினால் தமிழ்நாட்டில் காவிரி தண்ணீர் வரத்து இல்லாமல் டெல்டா பாசன பகுதி முற்றிலும் வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்பதை கருத்தில் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டக் கூடாது எனவும் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு உரிமை தண்ணீரை கர்நாடகா அரசு அங்குள்ள அணைகளில் தேக்கி வைக்க எந்தவிதமான தார்மிக உரிமையும் கிடையாது, தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் முறையாக தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கர்நாடகா முதலமைச்சர் மாண்புமிகு டி.கே.சிவக்குமார் அவர்களிடம் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கு உண்டான சம்பா தாளடி பருவத்தில் பயிர் செய்வதற்கு காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெற்று தரும் வகையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு அமைய வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தீர்க்கமாக அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.