சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கோரிக்கை. இதனை ஊக்குவிக்கும் 38 மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் மற்றும், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீதும் குண்டர் சட்டம் பதிய வேண்டும் அமைப்பின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி வலியுறுத்தல்.
தமிழகத்தில் உள்ள பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினரின் பிரச்சனைக்காகவும் அவர்களது கோரிக்கைகளுக்காகவும் மற்றும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு பட்டியலின மக்களின் போராளி என பெயர் பெற்றவர் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி. தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் மதுபான கடைகளில் நிகழும் ஏராளமான முறைகேடுகள் குறித்து அவ்வப்பொழுது அரசின் கவனத்திற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் கவனத்திற்கும் ஒரு பொழுதும் கொண்டு செல்லாமல் இல்லை. இந்த நிலையில்,
சரஸ்ராம் ரவி தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் போலி சரக்கு விற்பனை தண்ணீர் கலந்து மக்களை ஏமாற்றுவது சட்டத்திற்கு புறம்பாக தமிழகம் முழுவதும் பல லட்சம் சந்து கடைகள் வியபாரத்தை அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 3 லட்சம் சந்து கடைகளுக்கு மேலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குடிமகன்களுக்கு விடிய விடிய கள்ள மார்கெட்டில் பல கோடி ரூபாய் மதிப்புடைய மது வகைகளை விற்பனை செய்து வருவதாக டாஸ்மாக் ஊழியரகள் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அரசுக்கு எதிரான முறைகேடான சொந்த லாபத்திற்காக, சட்டவிரோத மது விற்பனையை டாஸ்மாக் விற்பனையாளர்கள் வாயிலாக ஊக்குவிக்கும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் மேலாளர்கள் மற்றும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையின் வாயிலாக தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார் சரஸ்ராம் ரவி.
அப்போதுதான் டாஸ்மாக் நிர்வாகம் சீர்படும் என்றும் தமிழக அரசின் கொள்கைகள் ஈடேறுவதுடன் டாஸ்மாக் நிறுவனங்கள் தொடர்பான அரசின் மீது உண்டான குற்றச்சாட்டுகள் முழுமையாக நீங்கும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனத் தலைவரும் வழக்கறிஞருமானசரஸ்ராம் ரவி. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் இந்த வேண்டுகோளையும் அறிவுறுத்தலையும் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிவிட்டுள்ள தனது அறிக்கையில், டாஸ்மாக் தொடர்பாக புதிய விதிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும், பொது மக்களின் நலன் கருதி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டும் என்றும்
பல கோடி ரூபாய் அளவிற்கு கல்லாக கட்டும் கள்ள சந்தை சந்து கடை ஊழலை தடுத்து தடுத்து நிறுத்துவது தமிழக அரசின் தலையாய கடமை என்றும் சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


