சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இடிந்து விழும் நிலையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் சார்பில் அதன் மாநில தலைவர் பூமொழி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளிப்பதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாள குண்டம் சந்தைப்பேட்டை பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும் இந்த கட்டிடத்தில் முதலில் ஆசிரியர்கள் தங்கும் விடுவியாகவும் பிறகு கால்நடை மருத்துவமனையாகவும் செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது சுமார் 18 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதில் இரண்டு ஊழியர்கள் பணியாற்றுகின்றதாகவும் பால் உற்பத்தியாளர்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் பால் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சங்கத்திற்கு வந்து பால் ஊற்றி செல்வதாகவும் தெரிவித்திருந்த மனுவில் சம்பந்தப்பட்ட கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் சீதளம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளதாகவும் இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் உயிர்களுக்கும் அங்கு வந்து செல்லும் பால் உற்பத்தியாளர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக தெரிவித்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் உடனடியாக இந்த கட்டிடத்தை எடுத்து புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டுமாக தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது கட்சி நிர்வாகிகள் மாநில செயலாளர் ஐயப்பன் மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.