*ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றம்...*
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்களுடன் தமிழக வெற்றிக்காக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது,
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு காலை செய்தியாளர்கள் சந்திப்பிற்கு முன்பு கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை மறைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பின் முழுவதுமாக பிளக்ஸ் போர்டு மாற்றப்பட்டுள்ளது.
அன்று காலையில் வைத்திருந்த பிளக்ஸ் போர்டில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகம் என்ற வாசகங்கள் இருந்த நிலையில் மதியம் புதிதாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என குறிப்பிடப்பட்டுள்ளது,
புதிதாக வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டில் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன, இந்த நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து நேற்று தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழக வெற்றிக்கான கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அதேபோல கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தன
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு முழுமையாக மாற்றப்பட்டுள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையனின் அலுவலகம் முன்பு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகைப்படத்துடன் முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,


