புதன், 3 ஜூலை, 2024

சேலம் அருகே கனரா வங்கி கிளை மேலாளர் மற்றும் புரோக்கர் ஆகியோர் இணைந்து 17 லட்சம் ரூபாய் மோசடி.

சேலம் அருகே கனரா வங்கி கிளை மேலாளர் மற்றும் புரோக்கர் ஆகியோர் இணைந்து 17 லட்சம் ரூபாய் மோசடி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

கனரா வங்கி - வலசையூர் கிளையில்  வீட்டு அடமான கடன் என்கிற பெயரில் கிளை மேலாளர் & புரோக்கர் இணைந்து  17 லட்சம் பண மோசடி.
சேலம் மாநகரம் சின்ன திருப்பதி கம்பன் தெருவில் வசித்து வரும் திருமதி. தங்கம் மற்றும். ராஜேந்திரன் தம்பதிகள் தங்களது வீட்டின் மேல் அடமான கடன் பெற கடந்த 2019ம் ஆண்டு முயன்று வந்தனர்.
இந்த  சமயத்தில் , சேலம் மாவட்டம்- வலசையூர் பகுதியை சார்ந்த வங்கி ஏஜன்ட் வெ.நாராயணசாமி என்கிற அவர்களது உறவினர் தங்கம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை  அவர்களது வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்து கனரா வங்கி - வலசையூர் கிளை மேலாளர் திரு சக்திவேல் என்பவர் அவருக்கு நெருங்கிய நண்பர் என்றும் வீட்டின் மேல் அடமான கடன் உடனடியாக பெற்று தருவதாக கூறி உள்ளார்.
அதன் அடிப்படையில் தங்கம் மற்றும் ராஜேந்திரன் தம்பதிகள் புரோக்கர் நாராயணசாமி என்பவரை நம்பி கனரா வங்கி - வலசையூர் கிளை மேலாளரை சந்தித்து அனைத்து வீட்டு அடமான கடன் பெறுவதற்கான அசல் ஆவணங்களை வங்கி  கிளை மேலாளர் திரு சக்திவேல் மற்றும் புரோக்கர் நாராயணசாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கிளை மேலாளர் சக்திவேல் அறிவுறுத்திய அனைத்து ஆவணங்களிலும் திருமதி தங்கம் பெயரில் வீட்டு அடமான கடன் ஆவணங்களில் கையொப்பம் இடபட்டது.
வீட்டு அடமான கடன் கேட்டு கனரா வங்கி - வலசையூர் கிளையில் அனைத்து ஆவணங்களும் அளித்தும் கடன் குறித்து கனரா வங்கியிலிருந்து பதில் வரவில்லை என்பதால் நேரில் சென்று விசாரித்தபோது தகவல் கேட்ட திருமதி. தங்கம் மற்றும் கணவர் ராஜேந்திரன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது வீட்டு அடமான கடன் என்கிற பெயரில் ஆனத்து ஆவணங்களையும் பெற்ற கனரா வங்கி கிளை மேலாளர் திரு சக்திவேல் மற்றும் புரோக்கர் நாராயணசாமி ஆகியோர் கூட்டாக சதி செய்து தங்கம்- ராஜேந்திரன் தம்பதிகளின் வீட்டு அடமான கடன் பத்திரங்களை , ஆவணங்களை தவறாக பயன்படுத்து MSME என்கிற கடன் போலி ஆவணங்களை உருவாக்கி அதற்கான வங்கி கடன் தொகையை புரோக்கர்  நாராயணசாமி பெயரில் இயங்கி வரும்   வருனா டிரேடிங் என்கிற பெயருக்கு வங்கி மேலாளர் திரு சக்திவேல் அவர்கள்  கடனுக்கான காசோலையை கொடுத்துள்ளார்.
இது குறித்து எந்த தகவலும் அப்பாவிகளான திருமதி. தங்கம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோருக்கு வங்கி மேலாளர் @ கனரா வங்கி - வலசையூர் கிளை நிர்வாகம்  கொடுக்காமல் சுமார் 15 லட்சம் பண மோசடி செய்துள்ளனர்.
திருமதி தங்கம்,- ராஜேந்திரன் பெயரில் வங்கி  கடன்  மோசடி பல லட்சம் நடந்தது குறித்து பாதிக்கபட்ட இவர்கள் சேலம் காவல் துறை ஆணையர் மற்றும் கனரா வங்கி உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை  ஏதும் எடுக்கபடாமல் இருப்பது  ஆச்சரியமளிக்கின்றது.
இதற்கிடையில், கனரா வங்கி நிர்வாகம் கடன் தொகை தவனைகளை கட்ட தவறியதாக திருமதி.தங்கம்- ராஜேந்திரன் தம்பதிகளுக்கு வீட்டின் மேல் ஏல நோட்டீஸ் அளித்து உச்சகட்ட தொல்லை கொடுத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கபட்ட தங்கம்- ராஜேந்திரன் தம்பதிகள்  கூட்டு நடவடிக்கை குழ ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம்ரவி அவர்களிடம் அளித்த புகார் மனு மீது உடனே சட்டபூர்வ நடவடிக்கை வங்கி மேலாளர் திரு சக்திவேல் மீதும் , புரோக்கர்.நாராயணசாமி மீதும் வழக்கு தொடுக்கபட்டது.
வீட்டு அடமான கடன் என்பதை MSME கடன் என்று மாற்றிய கனரா வங்கி மேலாளர் சக்திவேல் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத்து ஏன் ?
வங்கி கடன் மீது MOD  செய்யும் போது வீட்டின் உரிமையாளரிடம்  கடன் காசோலை கொடுக்காமல் புரோக்கர் நாராயணசாமியிடம் காசோலை அளித்து கூட்டு சதி செய்த  வங்கி மேலாளர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
புரோக்கர் நாராயணசாமி நடத்தி வரும் வருனா டிரேடிங் என்கிற நிறுவனம் உண்மையா ? போலியா ? என்று விசாரிக்காமல் கடன் காசோலையை புரோக்கர் நாராயணசாமி யிடம் கடன் காசோலை கொடுத்த கூட்டு சதியில் ஈடுபட்டு , பண மோசடி செய்த  வங்கி மேலாளர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
போலி நிறுவனம் பெயரில் ( வருனா டிரேடிங் ) வங்கி கோசாலை பெற்று 15 லட்சம் கையாடல் செய்த புரோக்கர்  நாராயணசாமி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
15 லட சம் வங்கி கடன் மோசடி குறித்து கனரா வங்கி நிர்வாகம் கிளை மேலாளர் சக்திவேல் மற்றும் போலி நிறுவன இரசீது கொடுத்து கடன் காசோலை  பெற்ற புரோக்கர்  நாராயணசாமி மீதும் கனரா வங்கி நிர்வாகம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எப்படி ?
பெறாத வங்கி கடனுக்கு 17 லட்சம் கட்ட சொல்லி அப்பாவி  ஏழை குடும்பம் தங்கம்- ராஜேந்திரன்  ஆகியோருக்கு கனரா வங்கி நிர்வாகம் ஏல  நோட்டீஸ் அனுப்பியது எப்படி ?
இந்த ஊழல் , கடன் மோசடி குறித்து காவல் துறை, வங்கி துறை நிர்வாகம்  விசாரணை நடத்தி நீதி கிடைக்கும் வரை  தங்கம்- ராஜேந்திரன் அவர்களின் வீட்டின் மீதான ஏல அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி, இந்த நூதன கடன் மோசடி குறித்து விசாரணை நடத்திட மாவட்ட ஆட்சியர் , காவல் துறை ஆணையர் மற்றும் கனரா வங்கி உயர் அதிகாரிகளை  வலியுறுத்தி புகார் அளிக்கபட்டுள்ளது என்று கூறியதுடன் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் எனவும் சரசுராம் ரவி தெரிவித்துள்ளார்.



ஈரோடு - சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றியமைக்க ஈரோடு எம்பி கோரிக்கை

ஈரோடு - சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றியமைக்க ஈரோடு எம்பி கோரிக்கை


ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கே.ஏ.பிரகாஷ், இந்திய ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹாவை சந்தித்து 2 மனுக்களை வழங்கினார்.
அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது, ஈரோட்டில் இருந்து இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை இரவு 10 மணியாக மாற்றியமைத்து ஈரோடு மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும், கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் விரைவு ரயில் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ஜனசதாப்தி ரயில் ஆகிய இரு ரயில்களும் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று சென்றால் கொடுமுடியில் உள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோபி அருகே வழிதவறி ஊருக்குள் புகுந்த யானை: மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது

கோபி அருகே வழிதவறி ஊருக்குள் புகுந்த யானை: மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதியில் இருந்து இன்று (3ம் தேதி) அதிகாலை வெளியேறிய ஆண் யானை ஒன்று வழிதவறி கோபிசெட்டிபாளையம் - சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் எதிரே இருந்த புதருக்குள் மறைந்து நின்றது.
இந்நிலையில், யானையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் அங்கு விரைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் டி.என்.பாளையம் வனச்சரகர் மாரிமுத்து தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானை இருக்குமிடத்தை சுற்றி பாதுகாப்பினை ஏற்படுத்தினர். பின்னர், அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர்.

அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக யானை போக்கு காட்டி வரும் நிலையில், தொடர்ந்து, யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கேள்விபட்டதும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வனத்துறை அதிகாரிகளிடம் யானையை விரட்டும் பணி குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் யானை குமரகிரி முருகன் கோவில் மலை பகுதியில் இருந்து கீழே இறங்கி ஈரோடு-சத்தி சாலையை கடந்து வயல் வழியாக டி.என்.பாளையம் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சுமார் 4.30 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர்.
ஈரோடு, கோபியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் கைது

ஈரோடு, கோபியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் கைது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில முழுவதும் கலந்தாய்வு நடைபெறும் மையங்களில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், ஈரோடு காளை மாடு சிலை அருகில் மாநகராட்சி பள்ளி முன்பு ஈரோடு டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துராமசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர் - ஆசிரியைகள் தமிழக அரசு அரசாணை 243ஐ திரும்ப வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை 243-னால் தொடக்கல்விதுறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையில் பாதிக்கும் என்பதால் அரசாணை திரும்ப பெற வேண்டும். அதுவரை பொது கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற டிட்டோஜாக் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. 

அதேபோல், கோபிசெட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, கோபி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அனுமதியின்றி சாலை மறியல் செய்ய முயன்றவர்களை கோபி போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் பெருமக்களுக்கு பாதிப்பு... பாதிக்கப்பட்ட ஆசிரிய பெருமக்கள் தர்ணா போராட்டம்.....

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் பெருமக்களுக்கு பாதிப்பு... பாதிக்கப்பட்ட ஆசிரிய பெருமக்கள் தர்ணா போராட்டம்.....

சேலம்..  
S.K. சுரேஷ்பாபு.

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பின் தர்ணா போராட்டம் 

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சேலம் நான்கு ரோடு அருகே சிறுமலர் துவக்கப்பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் ஜான் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 243 அரசாணை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் இதனைத் தொடர்ந்து தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் ஜான் கூறும்போது 60 ஆண்டு காலமாக இருந்த பனி மூக்கு பட்டியலை 243 அரசாணை பயன்படுத்தி மாநில அளவில் மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் இந்த 243 அரசாணையால் தமிழகத்தில் ஆசிரியர் ஆசிரியை அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது இந்த புதிய அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் இந்த புதிய அரசாணையால் இடமிட்டு இடம் மாறுதலில் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவே பணி முகப்பு அடிப்படையில் இடமாற்றம் செய்ய வேண்டுமென்றால் அந்த அந்த ஒன்றியங்களிலேயே மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறினார் இந்த ஆர்பாட்டத்தில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பொதுப் பாதையை அபகரித்து தென்னை மரங்கள் ஜல்லிகளை கொட்டி அட்டூழியம் செய்யும் ஆக்கிரமிப்பாளர்கள். பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் கோரிக்கை மனு..

பொதுப் பாதையை அபகரித்து தென்னை மரங்கள் ஜல்லிகளை கொட்டி அட்டூழியம் செய்யும் ஆக்கிரமிப்பாளர்கள். பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் கோரிக்கை மனு..

சேலம்.
S.K. சுரேஷ் பாபு. 

பொது வழித்தடத்தில் தென்னை மரம் மற்றும் கல்லை கொட்டி வலியை மரித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .....
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றியம் தைலானூர் கிராமம் கல்ராயன் காட்டில் பொது பாதை போட்டு 25 வருடம் ஆகிறது. இரண்டு பேர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மினி டேங்க் 2 வீதி பைப் 30 வீதி லைட் உள்ளிட்டு இரண்டு முறை கான்கிரீட் ரோடு போட்டு மூன்றாவது முறையாக ஒப்பந்தமாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் சிவகுமார் தினேஷ் மூவரும் சேர்ந்து நடுரோட்டில் ஒரு லாரி கல்லைக் கொட்டி மேலும் 3 தென்னை மரங்களை நடுரோட்டில் நட்டு வைத்துள்ளனர். இவர்கள் மீது வீராணம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து ஆர்டிஓ ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மூவரும் தொடர்ந்து இன்னல் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் இடத்திலும் அளித்துள்ள மனுவிற்கு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சாகும்வரை சம்பந்தப்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக சம்பந்தப்பட்ட கிராம மக்களின் சார்பாக ஏழுமலை என்பவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 2 ஜூலை, 2024

2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரல் அகற்றி ஈரோடு ஜெம் மருத்துவமனை சாதனை

2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரல் அகற்றி ஈரோடு ஜெம் மருத்துவமனை சாதனை

ஈரோடு ஜெம் மருத்துவமனையில் 36 கிலோ எடை கொண்ட இளம்பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரல் அதிக ரத்த போக்கு இன்றி வெற்றிகரமாக அறுவை கிசிச்சை மூலம் அகற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கவுதமராஜ் (வயது 28). செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யோகாம்பாள் (வயது 28). செவிலியர். இவர்களுக்கு மூன்றரை வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். யோகாம்பாளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வயிற்றின் இடது பக்கம் கடும் வலி மற்றும் ரத்த சோகை பிரச்சனைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்து வந்தார்.


இருப்பினும் குணமாகவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி நகர் முத்துகருப்பண்ணன் வீதியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போது, மருத்துவமனையின் குடல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எல்.சதீஷ்குமார், யோகாம்பாளை பரிசோதித்தார்.

அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்யப்பட்டதில், யோகாம்பாளுக்கு மண்ணீரல் வீக்கத்தின் காரணமாக ரத்தத்தில் உள்ள சிவப்பணு மற்றும் தட்டணுக்கள் மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. யோகாம்பாளின் மண்ணீரலை அகற்றுவதன் மூலமாகவே அவரது நோயை சரி செய்ய முடியும் என்பதை தெரிவித்தனர்.

இதற்கு யோகாம்பாள் மற்றும் அவரது குடும்பத்தினர் உறுதி அளித்ததன்பேரில், கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி யோகாம்பாளுக்கு சுமார் இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சை செய்து, மண்ணீரல் அகற்றப்பட்டது. இதையடுத்து 4 நாள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த, யோகாம்பாள் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுகுறித்து ஈரோடு ஜெம் மருத்துவமனையின் குடல் நோய் நிபுணர் டாக்டர் கே.எல்.சதீஷ்குமார் கூறியதாவது, 28 வயதுடைய 38 எடை கொண்ட இளம்பெண், கடும் வயிற்று வலி, ரத்த சோகையால் எங்களது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரை பரிசோதித்தபோது, அவரது உடலில் சராசரி மனிதனின் உடலில் இருக்கும் மண்ணீரலை விட அதிக வீக்கத்துடன் இருந்தது.

அதாவது சராசரியாக 250 கிராம் எடையுடன் இருக்க வேண்டிய மண்ணீரல், இப்பெண்ணின் உடலில் 2.5 கிலோ எடையுடன் இருந்தது. மண்ணீரல் பணி என்பது உடலில் தேவையில்லாத ரத்த சிவப்பணுக்களை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதே ஆகும். அதேசில நேரத்தில் இதுபோல அதிக எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனையை கொடுக்கும்.

இதுபோல லட்சத்தில் 4 பேருக்கு தான் வரும். மண்ணீரல் இப்படி பலூன் போல வீக்கமாக இருந்தால், எதிர்பாரத விபத்து அல்லது கீழே விழும்போது அது உடைந்து அதிக ரத்த போக்கை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாகி விடும். இதனால், அப்பெண்ணிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மண்ணீரலின் வீக்கம் குறித்தும், அதனை அகற்றுவது மட்டுமே தீர்வு என எடுத்துக்கூறினோம்.

இதற்கு அவர்கள் ஒப்புதல் தெரிவித்ததன்பேரில், அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின்போது அதிக ரத்த போக்கினை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகள் செலுத்தி உடலை தயார் செய்தோம். மயக்கவியல் நிபுணரால் முழு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அதிக ரத்தப்போக்கு இன்றி இரண்டரை மணி நேரத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரல் அகற்றினோம்.

மண்ணீரல் செய்யும் பணியை பிற உறுப்புகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் இவருக்கு பிற தொந்தரவுகள் வராது. இருப்பினும், 5 வருடங்களுக்கு ஒரு முறை உரிய தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் எடுத்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என அறிவுறுத்தியுள்ளோம். இந்த அறுவை சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் செலுத்தி உள்ளோம். தற்போது, அப்பெண் குணமடைந்து, இயல்பாக பணிகளை செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இளம்பெண்ணின் உடலில் 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரலை அதிக ரத்தபோக்கு இன்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றிய டாக்டர் கே.எல். சதீஷ்குமார், மயக்கவியல் நிபுணர் டாக்டர் அனுஷா மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் குழுவினரை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு மற்றும் நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன்ராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் ஜெம் மருத்துவமனை 10 ஆண்டுகளாக ஜீரண மண்டலம் மற்றும் லேப்ராஸ்கோப்பி சிறப்பு சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைகள் அளித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களது ஜெம் மருத்துவமனை கோவையை தலைமையிடமாக கொண்டு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வருவதாக அம்மருத்துவமனையின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.