வியாழன், 11 ஜூலை, 2024

ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கும் விழா சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் குமாரவலசு ஊராட்சி வெள்ளோடு அண்ணமார் திருமண மண்டபத்தில் இன்று (11ம் தேதி) நடைபெற்றது.

இந்த விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திட்டத்தை தொடங்கி வைத்து, முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். 

பின்னர், வட்ட தொழில் மையம் சார்பில் 4 பயனாளிகளுக்கு நீட் மற்றும் அண்ணல் அம்பேத்கார் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் ஒப்பளிப்பு மானியத்தினை வழங்கினார்.


தொடர்ந்து, நடைபெற்ற விழாவில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதியன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதன்முதலாக கோயம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மற்றும் ஈரோடு மாநகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துகளில் 18.12.2023 முதல் 06.01.2024 வரை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 82 முகாம்கள் நடத்தப்பட்டது.

இதில் 13 துறைகள் பங்கேற்று மனுக்களைப் பெற்றார்கள். இதில் 13,997 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 9,586 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பயன் பெற்றுள்ளனர். அதேபோல், மீதமுள்ள பகுதிகளிலும் இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரியில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை இன்று (11ம் தேதி) துவக்கி வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது ஊரக பகுதிகளுக்கான முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 214 கிராம ஊராட்சிகளுக்கு இன்று (11ம் தேதி) முதல் வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை 72 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அந்தந்த ஊராட்சிகளில் இம்முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் 15 துறைகள் பங்கேற்று, 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளது.


முகாமில் இச்சேவைகள் அல்லாது பெறப்படும் மனுக்கள் மீது, முதல்வரின் முகவரி என்ற திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்படுகிறது. இதனைத் கொண்டு, தொடர்புடைய துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் பொழுது, அங்கும் இம்மனு பதிவு செய்யப்படுகிறது. மேலும், அத்துறை சார்பாக பெறப்படும் மனுக்கள் மீது 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் காயத்ரி இளங்கோ, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவ படத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு. காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு.

சேலத்தில் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவ படத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு. காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகையை விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படத்தை ஏரித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.  இனியும் இது போன்ற விமர்சித்தால் அண்ணாமலையை கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை...

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் பட்டியலின தலைவர் செல்வபெருந்தகை அவர்களை ரவுடி என்று பொது தளத்தில் கூறி அவமானபடுத்திய  பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சேலம் கோட்டை மைதான பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.ஆர்.பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரை இழிவு படுத்தி பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் அவரது உருவ படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பாதுகாப்புக்கு கண்ணில் இருந்த காவல்துறையினர் அண்ணாமலையின் உருவ படத்தை கிளி பெறுவதைக் கண்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் இருந்த புகைப்படத்தை பிடிங்க முயற்சித்துதால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதுக்காக சேலம் கோட்டை மைதான பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. என்றாலும் காவல்துறையினரின் இந்த செயலை கண்டித்தும் அதனை மீறும் வகையிலும் மீண்டும் அண்ணாமலையின் உருவப்படத்தை கிழித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 
இது குறித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.ஆர். பி. பாஸ்கர் செய்தியாளர்களும் கூறுகையில், ஏற்கனவே நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தகுந்த விளக்கம் அளித்து இருந்த நிலையில் தேவையற்ற முறையில் பாஜக மாநில தலைவர் அதிமுக, திமுக அரசுகளையும் அதன் நிர்வாகிகளையும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவரை விமர்சித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இதே நிலையை தொடர்பு பட்சத்தில் தமிழக முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு சிறை பிடித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர்  கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குற்றவியல் திருத்த சட்டங்கள் வரவேற்கத்தக்கதே... தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசு ராம் ரவி வரவேற்பு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குற்றவியல் திருத்த சட்டங்கள் வரவேற்கத்தக்கதே... தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசு ராம் ரவி வரவேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

10-கும் மேற்பட்ட சட்ட திருத்தங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அவசியமே...மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்தங்களுக்கு முழுமையான வரவேற்பு தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு பிரத்தியேக பேட்டி. 
முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்கள் கொண்டு வந்துள்ள மத்திய அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அதனை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக உட்பட நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நீதிமன்றங்களை புறக்கணித்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வழக்கறிஞர்களின் இந்த போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வழக்கு தொடர்பாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லையே என்ற பாதிப்பில் இருந்து வருகின்றனர். 
இந்த நிலையில், விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மனிதன் அம்மிககு பதில் மிக்சிக்கு மாறுவதும்...ஆட்டுகல்லுக்கு பதில் கிரைன்டருக்கு மாறியதும்...தட்டச்சுக்கு மாற்றாக கம்புட்டருக்கு மாறுவதும் எப்படி ஏதுவோ...அதுபோல் சிறுவர், சிறுமியர் , பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை..வழக்கு விரைந்து முடிக்க கால கெடு...சாட்சியங்கள் கனணிமயம். என திருத்தி அமைக்கப்பட்டுள்ள 10 கும் மேற்பட்ட மாற்றங்கள் அவசியமே, என்றும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்தங்களில் மொழிமாற்றம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ்நாடு கூற்று நடவடிக்கையை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நம்மிடையே கூறுகையில்,  மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 
காரணம்.. 
இந்த சட்டத்தை புரிதல் இல்லாமலேயே சில அமைப்புகள் கண்டிப்பதும், அந்த சட்ட திட்டத்தை அமல்படுத்த கூடாது என கூறுவதும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு வன்மையாக கண்டிக்கிறது என்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் சரசுராம் ரவி.
காரணம் 
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்தங்களில் எந்த மாற்றமும்  செய்யவில்லை மொழி மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, உள்ளபடி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அந்த சட்ட திருத்தத்தில் பொதுமக்களுக்கு பயன் உள்ள வகையில் 100% கொண்டு வந்துள்ளனர் என்றும் இது இந்திய மக்களுக்கு பாதுகாப்பான சட்டமாக இருக்கிறது என்றும் உதாரணமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு இந்தியாவில் எந்த ஒரு மருத்துவமனையிலும் முற்றிலுமாக இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என கொண்டுவரப்பட்டுள்ளது மீறி செயல்படும் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், மேலும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதாவது 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பத்துக்கு மேற்பட்ட சட்டை திருத்தம் வரவேற்கப்படுவதாகவும் இதற்காக போராடும் வழக்கறிகளுக்கு வேலை பளு அதிகரிக்கிறது என்று கூறலாம் என்று தெரிவித்த தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி, தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் போராடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார். 
தொடர்ந்து பேசிய அவர் வழக்கறிஞர்கள் ஏன் இதை தொடர்ந்து எதிர்க்கின்றனர் என தெரியவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்ட திருத்தம் குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக எந்தவித நியாயமும் இல்லை என குறிப்பிட்ட அவர், சட்ட திருத்தம் தொடர்பாக பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்றும் முழுக்க முழுக்க நாடு முழுவதும் உள்ள கோடான கோடி மக்களுக்கு நன்மையை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கறிஞர்கள் தொடரப்பட்டுள்ள இந்த உச்சநீதிமன்ற வழக்கு நியாயம் இல்லை என்றும் பொதுமக்களுக்கு ஏதுவாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று மட்டும் நிதர்சனமான உண்மை என்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதன், 10 ஜூலை, 2024

ஈரோட்டில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய ‘நவீன கால கர்ணன்’ நடிகர் பாலா

ஈரோட்டில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய ‘நவீன கால கர்ணன்’ நடிகர் பாலா

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மாற்றுத்திறனாளி மனைவியான பிரேமா என்பவர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இதையடுத்து 3 வயது முதல் போலியோவால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து பேருந்து மூலம் வேலைக்கு செல்ல 2 கி.மீ தூரம் நடந்து சென்று பேருந்து மூலம் வேலைக்கு சென்று வருகிறார்.


60 சதவீதம் மாற்றுத்திறனாளியான இவர் அரசு சமூக நலத்துறையில் கடந்த 8 வருடங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் கேட்டு விண்ணப்பம் செய்த நிலையில் 4 முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் காலை-மாலை வேலைக்கு சென்று வருவதற்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தார். இந்நிலையில் ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்பதற்காக தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த நடிகர் பாலாவை உணர்வுகள் அமைப்பு மூலம் மாற்றுத்திறனாளி வாகனம் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து மாற்றுத்திறனாளி பெண்ணின் மனுவை பெற்று கொண்ட பாலா நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இதன் பின்னர் மாற்றுத்திறனாளி பிரேமாவும் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே நிகழ்ச்சி முடிவடைவதற்குள் நடிகர் பாலா உணர்வுகள் அமைப்பினரிடம் நிதி கொடுத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாற்றுத்திறனாளி வாகனத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். இதையடுத்து நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு நடிகர் பாலா மாற்றுத்திறனாளி பெண் பிரேமா வீட்டிற்கு நேரடியாக சென்று மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனத்தை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

இதனால் ஆனந்த கண்ணீருடன் நடிகர் பாலாவுக்கு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் கணவர் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து தனது வீட்டிற்குள் பாலாவை அழைத்து தண்ணீர் வழங்கி உபசரிப்பு செய்தார்.மாற்றுத்திறனாளி பெண் வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் சந்தோஷத்தில் திளைத்தப்படி பாலாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்தார். மேலும், இந்த வாகனம் எவ்வளவு பெரிய உதவியாக இருப்பதுடன் வாழ்க்கையை மேம்படுத்த எந்த அளவு உதவியாக இருக்கும் என்று கண்ணீர் மூலம் விவரித்தார்.


இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, அரசுக்கு அறிவுரை வழங்கும் வகையில் தகுதி இல்லை என்றும் என்னிடம் இருந்தால் உதவி செய்வேன் என்று கூறினார். பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறேன். முன்பு வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் சேவை நல்ல முறையில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என்றார். இந்த கால இளைஞர்கள் தெளிவாக இருந்து வருவதாக தெரிவித்தார்.

இது குறித்து மாற்றுத்திறனாளி பெண் பிரேமா கூறுகையில், 44 வயது காரணமாக பேருந்தில் பயணம் செய்ய முடியவில்லை. அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலமாகவும் வாகனம் கேட்டும் கிடைக்கவில்லை. இரட்டை பெண் குழந்தைகள் வைத்து கொண்டு வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், பாலாவின் உதவி பெரும் உதவியுடன் புதிய நம்பிக்கையாக உள்ளதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்து சில மணி நேரத்தில் கோரிக்கை நிறைவேற்றிய நவீன கால கர்ணன் பாலாவின் செயல் அப்பகுதியில் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளை (12ம் தேதி) வெள்ளிக்கிழமை மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பாரதியார் நகர், வீரப்பம்பாளையம், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்குப்பாறை, சூளை, அன்னை சத்யா நகர், முதலி தோட்டம், மல்லி நகர், ஈபிபி நகர், கந்தையன் தோட்டம், விஜிபி நகர், தென்றல் நகர், பொன்னி நகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகர், ரோஜா நகர், அருள்வேலன் நகர் மற்றும் எல்விஆர் காலனி.

பெருந்துறை திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- திங்களூர். கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பாம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன் பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சி பாளையம், வீரணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூர நாய்க்கனூர், பட்டக்காரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலக, ஊத்துப்பாளையம், மல்லநாய்க்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம். எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டிதோப்பு மற்றும் ஸ்ரீநகர்.

மொடக்குறிச்சி சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு. எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத் தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, வள்ளிபுரம், இச்சிபாளையம் மற்றும் கரட்டுப்புதூர்.

சத்தி காவிலிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, வடுகபாளையம், குப்பந்துறை, லாகம்பாளையம் மற்றும் இருகாலூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கு பதிவு செய்ய முடிவு. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு. சபரீசன் அவர்களிடம் பொறுப்பு  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ. மு.இமயவரம்பன் தகவல்.

முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கு பதிவு செய்ய முடிவு. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு. சபரீசன் அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ. மு.இமயவரம்பன் தகவல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு பதிய ஏற்பாடு. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.சபரீசன் அவர்களிடம் பொறுப்பு  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ. மு.இமயவரம்பன் தகவல்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக  நீதிமன்றங்களை புறக்கணித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்  நீதிமன்றங்களை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவர்மன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்களை வாபஸ் பெரும் வரையில் தங்களது போராட்டம் தீவிர படுத்தப்படும் என்றும், நாடு முழுவதும் இந்த பிரச்சனை தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அடுத்த கட்ட போராட்டமாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்த சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அனுமதி கேட்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் காவல்துறையினர் அனுமதியை மறுத்துவிட்டனர் என்றும் மேலும் BMS, BMSS சட்டப்பிரிவுகளில் படி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை  விடுக்கப்பட்டது.
அதனையும் மீறி தடையை தாண்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என வழக்கறிஞர்கள் சங்கம் கூறியது தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கே போராடுவதற்கு உரிமை இல்லை என காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக கொடுத்த எச்சரிக்கை இந்த தடையை சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வினா எழுப்ப இருப்பதாகவும், இந்த சட்ட திருத்தம் குறித்து இருக்கின்ற பாதகமான அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடுக்க இருக்கிறோம் என்றும் ஏன் என்று சொன்னால் இந்த அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கின்ற அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்டு தான் சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்ததாக வேண்டும் என்பது விதி. அந்த அடிப்படை உரிமைகளான பேச்சு எழுத்து உரிமை வழங்கி உள்ளது. இந்த பேச்சு எழுத்து உரிமைகளை பறிக்கும் வண்ணம் நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் ஒரு வழக்கு குறித்து நீதிமன்ற அனுமதி பெறாமல் யாரேனும் செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து உள்ளனர். 
இது பேச்சு உரிமையை பறிக்கும் அராஜக போக்காக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் கருதுவதாகவும் அதுமட்டுமல்ல இதுவரை சட்டம் என்பது ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் என்றும் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்று இருந்தது. ஆனால் புதிய சட்ட திருத்தத்தில் ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்றால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அந்த நபரே இல்லாமல் வழக்கை விசாரித்து நீதி கூறலாம் என சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் எந்த காவல் நிலையத்திலும் வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். அதன் விளைவாக இடம் ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்த சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவெடுத்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. சபரீசன் அவர்களிடம்  பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தை சேர்ந்த எந்த வழக்கறிஞர் சங்கமும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்துடன்  இணைந்து  கொள்ளலாம் என்று அழைப்பும் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில  நாட்களாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சியினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று சேலம் கோட்டை பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்ட மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மாவட்ட மாணவர் அணி செயலாளர் கவியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன், மாநில பொதுச் செயலாளர் ஜெயமோகன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு  மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். 
புதிய சட்டத்தால் மக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மூன்று சட்ட திருத்தங்களையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும், சட்டத்திருத்தத்தின் மூலம் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.