வியாழன், 22 ஆகஸ்ட், 2024

ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் சிவன் சன்னதி, அம்மன் சன்னதி கட்ட கால்கோள் விழா

ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் சிவன் சன்னதி, அம்மன் சன்னதி கட்ட கால்கோள் விழா

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் முருகன் குமார வடிவம் தாங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இக்கோவிலில், ரூ.3 கோடி மதிப்பில் ராஜகோபுரம் அமைக்கும் பணியும், ரூ.2 கோடி மதிப்பில், புதியதாக சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில், ஏற்கனவே ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.


இந்நிலையில், சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள் கட்டுவதற்கான கால்கோள் விழா மற்றும் ராஜகோபுரத்திற்கு நிலைக்கால் வைக்கும் விழா வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் இன்று (22ம் தேதி) நடந்தது.

இதில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கோயில் செயல் அலுவலர் சுகுமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் எல்லாப்பாளையம் சிவகுமார், வேலாயுதசுவாமி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஈரோட்டில் இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி பெண்களுக்கு அழைப்பு

ஈரோட்டில் இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி பெண்களுக்கு அழைப்பு

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் ரோடு ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகம் 2ம் தளத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 30 நாட்கள் நடக்கிறது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் 0424 2400338, 87783 23213, 72006 50604 என்ற எண்களில் முன்பதிவு செய்து இப்பயிற்சியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசை

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசை

ஈரோடு ஜீவானந்தநகர் கள்ளுக்கடை மேடு பகுதில் உள்ள  அருள்மிகு கொண்டத்து பத்ரகாளியம்மன்
ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார் பிரத்யேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலையில் பக்தர்கள் வழங்கிய பல்வேறு பொருட்களால் சிறப்பு யாகம் நடைபெற்றது. 

பின்னர் மேளதாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார்  கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை தலையில் சுமந்தவாறு, நான்கு கால பூஜைகள் யாக வேள்விகள் செய்து பூஜிக்கப்பட்ட கும்பத்திற்கு புனித தீர்த்தத்தை ஊற்றினார்.

தொடர்ந்து கும்பத்திற்கு சந்தனப் பொட்டிட்டு பட்டாடை உடுத்தி வண்ண மாலை அணிவித்த பிறகு மகா தீபாராதனையும் காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது,
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்,தொடர்ந்து ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.
அகில இந்திய கராத்தே போட்டியில் பள்ளிபாளையம் கராத்தே மாணவி தங்க கோப்பை வென்று சாதனை..!.

அகில இந்திய கராத்தே போட்டியில் பள்ளிபாளையம் கராத்தே மாணவி தங்க கோப்பை வென்று சாதனை..!.


அகில இந்திய கராத்தே போட்டியில் பள்ளிபாளையம் கராத்தே மாணவி கோகிலாசெல்வராஜ் முதல்பரிசு தங்ககோப்பையும் சேலம் மாவட்டம் ஆத்தூர் திலகவதிஉதயகுமார் தங்ககோப்பையை வென்று சாதனை படைத்தனர்.

கோவை : கணபதி கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 17 வது ஆசியன் கராத்தே அகாடமி நடத்திய இன்டர்நேஷனல் மெய்புகான்கோஜுரியு நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது 
இதில் மகாராஷ்டிரா தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, மற்றும் பல மாநிலங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றார்கள், கட்டா குமித்தே ,டீம் கட்டா ,
டீம் குமித்தே,ஓபன் கட்டா ஓபன் குமித்தே ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.


அந்த போட்டிகளில் நாமக்கல் சேலம் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த இன்டர்நேஷனல் மெய்புகான் கோஜுரியு கராத்தே பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நாமக்கல் ஈரோடு சேலம் மாவட்ட கராத்தே பயிற்சியாளர்கள் 
சென்செய் கோபால். 
சென்செய் மணிவர்மா .
சென்செய் நிவாஸ் 
சென்செய் உதயகுமார் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டு,
 10 முதல்பரிசுகள்,
13 இரண்டாம்பரிசுகள்
25 மூன்றாம்பரிசுகள் கோப்பைகளாக 
பெற்று  பெருமை சேர்த்து உள்ளார்கள்
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மும்பையைச் சேர்ந்த யூனியன் கோஜுரியு பெடரேஷன் தலைவர் தீரஜ் பவார், ஜீத்தோ கு காய் அகில இந்திய செயலாளர் சென்சாய் முத்துராஜு கோவை மாவட்ட கராத்தே சங்க தலைவர் VMC மனோகர் 
தமிழ்நாடு ட்ரெடிஷனல் அண்ட் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் 
திருச்சி செழியன், 
கர்நாடகா மாநில கராத்தே ஆசிரியர்கள் சென்செய் காஷ்யப்  
கியோஷி சசிதரன்,
ஷிஹான் பார்த்திபன் 
ஷிஹான் முத்தையா
டெக்னிக்கல் டைரக்டர் 
கராத்தே பேராசிரியர்  
ஷிஹான் K.R.மாணிக்கவாசகம்,ஆகியோர் முன்னிலையில் 
35 வயதுக்குட்பட்டவர்களுக்கான கலர்பெல்ட் கட்டா பிரிவில் முதலிடம் பெற்ற பள்ளிப்பாளையம் ஆவரங்காடு பகுதியைச்சேர்ந்த கோகிலா செல்வராஜ் மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த திலகவதி உதயகுமார் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான கலர்பெல்ட் கட்டா பிரிவில் முதல்பரிசு தங்ககோப்பையை வென்றெடுத்தார்கள், அந்த வீராங்கனைகளுக்கு  வெற்றி கோப்பைகளை சிறப்பு விருந்தினர்களும் முக்கிய பிரமுகர்களும் சேர்ந்து வழங்கினார்கள்
வரலாற்றில் முக்கியத்துவம் நிறைந்த கராத்தே போட்டி இது என்று கராத்தே ஆர்வலர்களும் பொதுமக்களும் கோகிலா + திலகவதி போன்ற 
குடும்ப தலைவிகள் கராத்தே உலகில் அடியெடுத்து வைத்திருப்பது ஆரோக்யமான பெருமைக்குரிய விஷயம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்
ஈரோடு மாநகராட்சியில் 8 ஓடைகள் தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

ஈரோடு மாநகராட்சியில் 8 ஓடைகள் தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகள் தொடக்கம்


ஈரோடு மாநகராட்சி சுண்ணாம்பு ஓடை பகுதியில், ஈரோடு மாநகராட்சி, ஒளிரும் ஈரோடு மற்றும் பொதுமக்கள் இணைந்து மாநகராட்சியில் உள்ள அனைத்து ஓடைகளையும் ஒரே நேரத்தில் தூர்வாரி மாநகராட்சி பகுதிக்குள் மழை காலங்களில் சீராக தண்ணீர் செல்லும் வகையில், புனரமைப்பு பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி இன்று (22ம் தேதி) தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில், குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில், பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வினை செய்து, வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். ஈரோடு மாநகராட்சியின் பரப்பளவு 109.52 ச.கி.மீ. மாநகராட்சி எல்லை இருந்து காவேரி ஆற்றில் கலக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் 8 ஓடைகள் உள்ளது.

மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த பணியானது, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை கருவில் பாறைவலசு முதல் காவேரி வரை, சுண்ணாம்பு ஓடை சித்தோடு 4 ரோடு முதல் காவேரி வரை, ராஜலட்சுமி மில் வழியாக செல்லும் ஓடை சித்தோடு முதல் காவேரி வரை, மோசிசீரனார் வீதி முதல் காவேரி வரை, சடையம்பாளையம் முத்துசாமி காலனி முதல் வெண்டிபாளையம் கோணவாய்க்கால் வரை, ரங்கம்பாளையம் அணை முதல் பெரும்பள்ளம் ஓடை வரை, சூரம்பட்டி அணைக்கட்டு முதல் நஞ்சை ஊத்துக்குளி வரை (குளத்து ஓடை வரை), கொல்லம்பாளையம் பெடிசியா முதல் பாலம் வரை ஏறத்தாழ 29.38 கி.மீ நீளமுள்ள 8 ஓடைகளை தனியார் பங்களிப்புடன் ஒரே கால நேரத்தில் சுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஈரோடு மாநகராட்சியின் வழிகாட்டுதலில், ஒளிரும் ஈரோடு, தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ஓடைகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாநகராட்சி மற்றும் ஒளிரும் ஈரோடு அமைப்புடன் ஒருங்கிணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளலாம். இந்த தூர்வாரும் பணிகள் நிறைவடையும் பொழுது ஓடைகள் அனைத்தும் தூய்மையாக இருக்கும். மேலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல், வெளியேறுவதற்கும், தூய்மையான தண்ணீர் வருவதற்கும் ஏதுவாக அமையும்.

எனவே, மாநகராட்சி முழுவதும் சுத்தம் செய்கின்ற அளவிற்கு இப்பணிகள் நடைபெறுகிறது. மாநகராட்சி சார்பாக மொத்தமாக இருந்த 947.6 கி.மீ நீளத்தில் உள்ள கால்வாய்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு ஏறத்தாழ 762 கால்வாய்களுக்கு இருபுறமும் சுவர் அமைத்து, தூய்மைப் படுத்தப்பட்டுள்ளது. மற்ற பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த கழிவுநீர் முழுமையாக வெளியேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த ஏற்பாடும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேபி வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்காலுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. எனவே பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, இந்த வாய்க்காலினை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாயக்கழிவு மற்றும் தோல் கழிவுகளை நேரடியாக திறந்து விடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும், நிலத்தடி தண்ணீருக்கும் பிரச்சனை என்றால் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அந்த அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் சாயக்கழிவு நீரினை சுத்திகரிக்காமல் வெளியேற்றக் கூடாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டக்கூடாது. முறையாக குப்பைகளை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே, மாநகராட்சி மட்டுமல்லாது பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் ஒருங்கிணைத்து இப்பணிகளை மேற்கொள்ளும்போது மிகச்சிறப்பாக நாம் பாதுகாக்க இயலும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒளிரும் ஈரோடு அமைப்பு நிறுவனர் சின்னசாமி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உட்பட தொர்புடைய துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டி சேலம் ராஜகணபதி திருக்கோவில் ஆரிய வைஸ்ய பேரவை சார்பில் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டி சேலம் ராஜகணபதி திருக்கோவில் ஆரிய வைஸ்ய பேரவை சார்பில் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்பதை வலியுறுத்தி, 108 தேங்காய்களை உடைத்து ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை நிறுவனர் Dr. நாகா. அரவிந்தன் வேண்டுதல். 

திரைப்பட நடிகரும், ரெட் ஜெயன்ட் திரைப்பட தயாரிப்பு நிறுவன உரிமையாளரும் மற்றும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவினர் இடையை வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் நிறுவனரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவருமான Dr. நாகா அரவிந்தன் சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் 108 தேங்காய்களை உடைத்து வேண்டுதல் பூஜை நடத்தினார்.
திமுகவினர் இடையே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இதற்கு ஒரு படி மேலே சென்று தமிழக அளவில் முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காக 108 தேங்காயை உடைத்த பல்வேறு விருதுகளை குவித்துள்ள  சேலத்தை சேர்ந்த சிறந்த சமூக ஆர்வலர் Dr. நாகா. அரவிந்தனின் செயல் திமுகவினர்களிடையே வரவேற்பினையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.
இந்த நிகழ்ச்சியில் வேண்டுதலை இணைந்து நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் பாபு கேசவன் குமார் மற்றும் வெங்கடேசன் கலந்து கொண்டனர்.
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் இராஜேந்திரன் பரிந்துரையின் பேரில், சேலம் 31வது கூட்டத்தில் நவீன தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் இராஜேந்திரன் பரிந்துரையின் பேரில், சேலம் 31வது கூட்டத்தில் நவீன தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் 31 வது கோட்டத்தில் கான்கிரீட் தரை தளம் அமைக்கும் பணி தொடங்கியது. 

60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. ஒவ்வொரு கோட்டத்திற்கும் மாமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், சேலம் 31வது கோட்ட திமுக பகுதி செயலாளர் சையத் இப்ராஹிம் உட்பட அந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மிகவும் பழுதடைந்துள்ள இரண்டு நியாய விலை கடைகள் தரைத்தளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலையை சீரமைத்து கான்கிரீட் தளம் அமைத்து தர வேண்டும் என்று சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இராஜேந்திரன்  அவர்களிடம் கேட்டு கொண்டனர்.
அதன் அடிப்படையில், 
சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பரிந்துரை செய்தார். 
சட்டமன்ற உறுப்பினரின் பரிந்துரையை ஏற்று, சேலம் மாநகராட்சியின் 31வது  கோட்டத்தில் உள்ள  நியாயவிலை கடைகள் எண்(AA020), (AA022) மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலை ஆகியவை
சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  நவீன கான்கிரீட் தரை தளம் போடும் பணிகள் தொடங்கியது. 
இதனை வரவேற்று, சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்  இராஜேந்திரன் மற்றும் 31வது கோட்ட திமுக செயலாளர் சையத் இப்ராஹிம் ஆகியோருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளனர். இந்த தரை தளம் அமைக்கும் பணியின் போது, 31வது கோட்ட திமுக நிர்வாகிகள் பைசில்லாத பிரபு, ஹர்ஷத், ஜாவித், யாரப், நசீர் மற்றும் நதியும் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.