வியாழன், 12 செப்டம்பர், 2024

கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெறவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர

கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெறவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 


கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெறவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்
விவசாயிகளின் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் கள்ளுக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை பூட்டு போடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தனர்
வறண்ட பகுதிகளான தர்மபுரி கரூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் இன்றி விவசாயிகள் வேளாண் உற்பத்தி செய்ய முடியாத வேதனையில் உள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வீணாக கடலில் சென்று கலக்கும் உபரி நீரை வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து சங்கத்தின் நான்காம் ஆண்டு மாநில பேரவை கூட்டத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து சங்கத்தின் நான்காம் ஆண்டு மாநில பேரவை கூட்டத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் நான்காம் ஆண்டு மாநில பேரவை கூட்டம்.. சேலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் தொடர்பான 41 தீர்மானங்கள்  நிறைவேற்றம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள்  சங்கத்தின் நான்காம் ஆண்டு மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பேரவை கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் பரமேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேரவை கூட்டத்தில் வரவேற்பு குழு தலைவர் திருவேரங்கன் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் மாநில பேரவையை துவக்கி வைத்து உரையாடினார். தமிழக முழுவதிலும் இருந்து 38 மாவட்டங்களிலிருந்தும் 266 மாநில பேரவை பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பிருந்தா தேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கடந்த ஆண்டில் அதிக உறுப்பினர்களை சேர்த்து விழுப்புரம் சென்னை மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு கேடயம் அளித்து பாராட்டப்பட்டது ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் தொடர்பான 41 தீர்மானங்கள் இந்த பேரவை கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
சேலம் 10-வது கோட்டத்தில் மாநகரை சுத்தமாக வைத்திருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு கருவிருந்து கொடுத்து கௌரவித்த திமுக மாமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் தெய்வலிங்கம்.

சேலம் 10-வது கோட்டத்தில் மாநகரை சுத்தமாக வைத்திருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு கருவிருந்து கொடுத்து கௌரவித்த திமுக மாமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் தெய்வலிங்கம்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் பொன்னம்மாபேட்டையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம். 10-வது கோட்ட துப்புரவு பணியாளர்கள் உட்பட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் கருவிருந்து வழங்கிய அசத்திய மாமன்ற உறுப்பினர் கைவலிங்கம். 

சேலம் மத்திய மாவட்ட திமுகவின் பொன்னம்மாபேட்டை பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலம் பொன்னம்மாபேட்டை அருகே சீலாவரி ஏரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பொன்னம்மாபேட்டை பகுதி திமுக செயலாளரும், பத்தாவது கோட்டை திமுக மாமன்ற உறுப்பினருமான டைவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர். தொடர்பு நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மற்றும் புதுவை உட்பட 40 க்கு 40 ககும் வென்றதைப் போல விரைவில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மத்திய மாவட்டம் கிழக்கு மாவட்டம் மேற்கு மாவட்டம் என அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒன்றிணைந்து மூச்சுடன் பாடுபட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டன. 
இதனை அடுத்து சேலம் மாநகராட்சியை பொருத்தவரை 60 கோட்டங்களை உள்ளடக்கிய மாமன்ற உறுப்பினர்கள் இருந்த போலிதலுமே கூட பத்தாவது போட்ட மாமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த தெய்வலிங்கம் எப்பொழுதும் சற்று வித்தியாசமானவரே. காரணம் இன்று நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பத்தாவது கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தனது சொந்த செலவில் கருவிருந்து வழங்கி அசத்தியதோடு, பசியை போக்கிய உத்தமன் என்று ஒவ்வொரு தூய்மை பணியாளர்களாலும் பாராட்டுதல்களை பெற்றார்.
சேலம் மாவட்ட நீதிபதி கலந்து கொண்டு துவக்கி வைத்த வழக்கறிஞர்களுக்கான சிறப்பு கண் பரிசோதனை முகாம். சேலம் வழக்கறிஞர்கள் சங்க ஏற்பாட்டின் பேரில் ஏராளமான வழக்கறிஞர்கள் பயன்.

சேலம் மாவட்ட நீதிபதி கலந்து கொண்டு துவக்கி வைத்த வழக்கறிஞர்களுக்கான சிறப்பு கண் பரிசோதனை முகாம். சேலம் வழக்கறிஞர்கள் சங்க ஏற்பாட்டின் பேரில் ஏராளமான வழக்கறிஞர்கள் பயன்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் வழக்கறிஞர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம். நீதிபதி துவக்கி வைத்த இந்த முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் பயன் பெற்றனர்.

சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் சேரும் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும்
அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. 
வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் செயலாளர் நரேஷ் பொருளாளர் அசோக் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக நீதிபதி திருமதி சுமதி அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்து தனது கண்களை பரிசோதித்து கொண்டார். 
தொடர்ந்து நடைபெற்ற முகாமில், கண் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கண் தொடர்பான அத்தனை பரிசோதனைகளும் வழக்குரைஞர்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. 
இந்த சிறப்பு முகாமில் வழக்கறிஞர் ஐயப்பமணி உட்பட சேலம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.13) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.13) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், புதுசூரிபாளையம், மலையப்பாளையம், அத்தாணி, சிவகிரி, திங்களூர் மற்றும் சென்னிமலை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (13ம் தேதி) வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்கண்ட பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பியூர்,புதுசூரிபாளையம் மற்றும் மலையப்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மொட்டணம், குப்பிபாளையம், பழனிகவுண்டம்பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, கிச்சிப்பாளையம், திட்டமலை, சிவஜோதி மில் யூனிட் 1, 2, சுபம் டெக்ஸ்டைல், விஜயலட்சுமி மில், லாவன் டெக்ஸ்டைல், சுப பாலாஜி மில், லியோ டெக், பைன் டெக், பவர் டெக், நம்பியூர், கோவை ரோடு, ஜீவா ரோடு, பியூட்டிக், நம்பியூர் டவுன், குன்னமடை, வெங்கட்டபாளையம், காவிரிபாளையம், நாச்சியாபாளையம், கோசனம், ஆராம்பாளையம், திருச்சம்பாளையம், செல்லிபாளையம், மூணாம்பள்ளி, மேட்டுப்பாளையம், சொட்டமேடு, பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம், ஓணான் குட்டை.

அத்தாணி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அத்தாணி டவுன், கைகாட்டி பிரிவு, தம்மங்கரடு, கொண்டையம்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், அத்தாணி, பெருமாபாளயயம், குண்டுமூப்பனூார், வீரனூர், கரட்டூர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கோத்தநாயக்கனூர், டி.ஆர்.காலனி, இந்திரா நகர், செம்புளிச்சாம்பாளையம், மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டம்பாளையம், பெருமாள்கோவில்புதூர் மற்றும் அந்தியூர் நீரேற்று நிலையம்.

சிவகிரி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம். பெரும்பரப்பு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, வள்ளிபுரம், இச்சிப்பாளையம், ஒத்தக்கடை வடக்கு, தெற்கு புதுப்பாளையம், கரட்டாம்பாளையம், பெருமாள்கோவில்புதூர், கல்வெட்டுப்பாளையம் மற்றும் கரட்டுப்புதூர்.

திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், தாண்டாகவுண்டன் பாளையம், சுங்ககாரன்பாளை யம், சீனாபுரம், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம். கீழேரி பாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம், எல்லபப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர்.

சென்னிமலை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி. சக்தி நகர், பெரியார் நகர். நாமக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம் பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி மற்றும் முருங்கத்தொழுவு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 11 செப்டம்பர், 2024

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு: ஈரோட்டில் வணிகர் சங்க பேரமைப்பினர் அஞ்சலி

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு: ஈரோட்டில் வணிகர் சங்க பேரமைப்பினர் அஞ்சலி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று (10ம் தேதி) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நாளை (12ம் தேதி) அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் தாலுகா பிச்சிவிளை கிராமத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் இன்று (11ம் தேதி) நடைபெற்றது.

மாவட்டத் துணைத் தலைவர் வேலா பி.எஸ்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பொ.இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ஐயங்கார் ஏ.ஆனந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் நெல்லை ஏ.ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சி.ஞானசேகர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பி.ரியாஷ் அகமது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் தமிழரசன், மாநகரத் தலைவர் அந்தோணி யூஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாநகர செயலாளர் பாலமுருகன், மாநகர பொருளாளர் சாதிக் பாஷா, ஈரோடு கனி மார்க்கெட் அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் நூர் முகமது, மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள், கருங்கல்பாளையம் அனைத்து வணிகர்கள், காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள், பவானி நகர அனைத்து வணிகர்கள், பி.பெ.அக்ரஹாரம் அனைத்து வியாபாரிகள், மாவட்ட சங்க அலுவலர் கௌதமன் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், மறைந்த தலைவருடன் ஏற்பட்ட தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.