செவ்வாய், 17 செப்டம்பர், 2024

சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தலை வெட்டி முனியப்பனாக கருதப்படும்,  புத்தருக்கு காவல்துறை பாதுகாப்புடன் பௌர்ணமி தியானத்தில் ஈடுபட்ட சேலம் புத்தா டிரஸ்ட்  அமைப்பினர். புத்தர் சிலை தான் என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்தும் தொல்லியல் துறைக்கு சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி கடும் கண்டனம்.

சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தலை வெட்டி முனியப்பனாக கருதப்படும், புத்தருக்கு காவல்துறை பாதுகாப்புடன் பௌர்ணமி தியானத்தில் ஈடுபட்ட சேலம் புத்தா டிரஸ்ட் அமைப்பினர். புத்தர் சிலை தான் என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்தும் தொல்லியல் துறைக்கு சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி கடும் கண்டனம்.

சேலம். 
S.K.சுரேஷ் பாபு

சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தலை வெட்டி முனியப்பனாக கருதப்படும்,  புத்தருக்கு காவல்துறை பாதுகாப்புடன் பௌர்ணமி தியானத்தில் ஈடுபட்ட சேலம் புத்தா டிரஸ்ட்  அமைப்பினர். புத்தர் சிலை தான் என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்தும் தொல்லியல் துறைக்கு சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி கடும் கண்டனம்.

சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே தலைவெட்டி முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. 
இந்தக் கோவிலில் உள்ளது முனியப்பன் சிலையா அல்லது புத்தரின் சிலையா என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில்,  உயர்நீதிமன்றம் இந்தக் கோவிலில் உள்ளது  புத்தருடையது தான் என்று இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பௌர்ணமி நாளன்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் புத்தருடைய சன்னிதானத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். 
அதன் அடிப்படையில், சேலம் புத்தா டிரஸ்ட் அமைப்பின் சார்பில் தலைவர் ராம்ஜி மற்றும் அவரது அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பௌர்ணமி நாளான இன்று புத்தருக்கு மரியாதை செய்து தியானம் செய்ய தலைவெட்டி முனியப்பன் கோவிலுக்கு வந்தனர்.
இதனை அடுத்து  மூலஸ்தானத்திற்கு சென்ற ராம்ஜி உள்ளிட்ட த்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தலைவெட்டி முனியப்பனாக கருதப்படும் சிலையில் இருந்து அலங்காரத்தை முழுமையாக அழித்துவிட்டு அவர்கள் தியானத்தில் ஈடுபட்டனர். 
சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி அவர்கள் தலைமையில் புத்தா டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் அங்கிருந்த புத்தர் சிலைக்கு சிறப்பு தியானத்தில் ஈடுபட்டதோடு புத்தம் சரணம் கச்சாமி என்ற சரண கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். 
இதுகுறித்து சேலம் புத்தா டிரஸ் தலைவர் ராம்ஜி நம்மிடையே கூறுகையில், இந்தக் கோவிலில் உள்ளது தலை வெட்டி முனியப்பன்  அல்ல என்றும்  புத்தர் சிலை தான் என்று தீர்ப்பு வழங்கிய பிறகும் தற்பொழுது வரை இங்கு இந்து முறைப்படி தலை வெட்டி முனியப்பனாக இங்கு வழிபாடு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த ராம்ஜி இந்த கோவில் முன்புறமாக அமைக்கப்பட்டுள்ளது தலை வெட்டி முனியப்பன் கோவில் என்று பெயர் பலகையை அகற்றிவிட்டு புத்த விகார் என்று பெயர் பலகையை வைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட ராம்ஜி சென்னை உயர் நீதிமன்றம் இந்த கோவிலில் உள்ள பிரச்சனை தொடர்பாக வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தொல்லியல் துறை செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சேலம் மாவட்ட தொல்லியல் துறை செயல்பட்டு வருவதாகவும் ஆதங்கப்பட்டார்.
தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள்ம ாலை அணிவித்து மரியாதை .

தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள்ம ாலை அணிவித்து மரியாதை .

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தந்தை பெரியாரின் திருஉருவ சிலைக்கு சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் உள்ளிட்ட பாமகவினர் மாலை அணிவித்து மரியாதை.

சேலம் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளான இன்று சேலம் மாநகர மாவட்ட செயலாளரும் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் கதிர் ராஜரத்தினம், மாநில பசுமைத்தாயக  இணைச் செயலாளர் சத்திரிய சேகர், மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம், கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் அண்ணாமலை, சின்னசாமி, சோடா சண்முகம், மாணவர் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார், மாணவரணி செயலாளர் ரஞ்சித் , மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் என பலர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி உற்சாகம்.

தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி உற்சாகம்.


சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழா. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் பகுத்தறிவு பகலவருக்கு மாலை அணிவித்து மரியாதை.

பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழா. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, அஸ்தம்பட்டி CSI பாலர் இல்லத்தில் உள்ள 100 குழந்தைகளுக்கு உணவு பொருட்களை் வழங்கபட்டது.
இந்த நிகழ்வுகளில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக சன்முகம், ரூபிணி, சுந்தரம், குமார், அருள், சுப்ரமணி ஆகியோர் பங்கெடுத்தனர்.

திங்கள், 16 செப்டம்பர், 2024

ஈரோட்டில் பெரியார் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

ஈரோட்டில் பெரியார் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

பெரியார் பிறந்தநாள் விழா இன்று‌(17ம் தேதி) அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோட்டில் தந்தை பெரியார் -அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர். மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கலைமாமணி, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன்
பலர் கலந்து கொண்டனர். 

பெரியாரின் பிறந்தநாளையொட்டி பெரியாரின் பொன்மொழிகள், உரைகள் ஒலிபரப்பப்பட்டது. மேலும் பெரியாரின் இல்லம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது.
குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கிய முந்திரியை அகற்றி ஈரோடு சுதா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கிய முந்திரியை அகற்றி ஈரோடு சுதா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கிராமப்பகுதியை சேர்ந்த இளம் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 1 வயது நிறைவுபெற்று 3 மாதங்கள் ஆகிறது. 2 நாட்க ளுக்கு முன்பு குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக பெற்றோர் குழந்தையை அவர்கள் வழக்கமாக பார்க்கும் டாக்டரிடம் கொண்டு சென்றனர். அங்கு முழுமையாக பரிசோதனை செய்தபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் தொடர்ச்சியாக இருந்தது.

அதைத்தொடர்ந்து குழந்தைக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சுவாசக் குழாயின் இடது பக்க குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. 

மேல் சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சுதா பல் துறை மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுவரப்பட்டது.

உயிருக்கு போராடிய நிலையில் குழந்தை இருப்பதை அறிந்த சுதா மருத்துவமனை காது மூக்கு தொண்டை துறை குரல்வளை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.பி.கவின்குமார் விரைந்து வந்து குழந்தையை பரிசோதனை செய்தார். 

அவருடன் தலை-கழுத்து சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபக் விசாகன், குழந்தைகள் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் டாக்டர் கவுரி சங்கர், டாக்டர் ரங்கேஷ் மற்றும் மருத்துவக்குழுவினர் குழந்தையை அவசர சிகிச்சை பிரி வுக்கு கொண்டு சென்றனர்.

சுவாசக்குழாய் அடைப்பு காரணமாக நுரையீரலின் ஒரு பகுதி வீக்கம் அடைய தொடங்கி இருந் தது. எனவே சிகிச்சையை உடனடியாக தொடங்கிய டாக்டர்கள் குழுவினர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சுவாசக்குழாயில் அடைத்திருந்த பொருளை வெளியே எடுத்தனர். 

அது 15 செ.மீட்டர் நீளமுள்ள உடைந்த முந்திரி பருப்பாகும். அதை வெளியே எடுத்த பிறகே குழந்தை இயல்புநிலைக்கு திரும்பியது. சிகிச்சையின்போது மயக்க மருந்து நிபுணர் டாக்டர் பாலாஜி உடன் இருந்தார்.

இதுகுறித்து குரல்வளை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.பி.கவின்குமார் கூறும்போது, 'குழந்தை முந்திரி பருப்பை விழுங்கியதை பெற்றோர் கவனிக்கவில்லை. ஆனால் அதிர்ஷ்டவச மாக உடனடியாக டாக்டரிடம் அழைத்துச்சென்றனர். எனவேதான் சுவாசக்குழாய் அடைப்பு கண்டறியப்பட்டது. 

பொதுவாக, 9 மாதம் முதல் 5 வயது வரையான குழந்தைகள் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் உடனடியாக வாயில் போட்டுவிடும். எனவே குழந்தைகளை கண்கா ணிக்க வேண்டும். குழந்தைகள் நடமாடும் இடத்தில் ஆபத்தான பொருட்களை வைக்கக்கூடாது. அவை மிகுந்த ஆபத்தானது' என்றார்.

மருத்துவக்குழுவினருக்கு சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.சுதாகர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னிமலை அருகே திருமண கோஷ்டியினரை விரட்டி கொட்டிய தேனீக்கள்: 31 பேர் காயம்

சென்னிமலை அருகே திருமண கோஷ்டியினரை விரட்டி கொட்டிய தேனீக்கள்: 31 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முருங்கதொழுவு, கிழக்கு புதுப்பாளையம் கிராமத்தில் கன்னிமார் சுவாமி கோயிலில் நேற்று (திங்கட்கிழமை) திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சென்னிமலை 1010 நெசவாளர் காலனியைச் சேர்ந்த கார்த்திக்கும், ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகரை சேர்ந்த காயத்ரிக்கும் திருமணம் முடிந்து கோயில் அருகே உள்ள மண்டபத்தில் பந்தி நடந்து கொண்டிருந்தது.

அப்போது, கோயிலின் பின்புறம் இருந்த ஆலமரத்தில் இருந்த மலைத்தேன் கூடு கலைந்து அதில் இருந்து வெளியேறிய தேனீக்கள் திருமணத்திற்கு வந்தவர்களை சரமாரியாக விரட்டி கொட்டியது. இதில் 13 பெண்கள் உட்பட 31 பேர் காயமடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 2 தனியார் மருத்துவமனைகள் மற்றும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில், சென்னிமலையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மரத்தில் கூடு கட்டியிருந்த தேன்க்கூட்டை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழித்தனர்.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அறிவுச்சுடரை போற்றும் விதமாக ஆண்டுதோறும் சமூக நீதி நாள் ஆக கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற விதி 110ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி, தந்தை பெரியார் பிறந்த நாள் நாளை (17ம் தேதி) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று (16ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி சமூக நீதி நாள் உறுதி மொழியை வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரத்துல்லா (பொது), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.