வெள்ளி, 20 செப்டம்பர், 2024
வியாழன், 19 செப்டம்பர், 2024
அந்தியூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.29 லட்சம் மோசடி: அரசு பேருந்து ஓட்டுநர் கைது!
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.21) மின்தடை
சேலத்தை அடுத்துள்ள பள்ளிப்பட்டியில் நிழல் தலைவராக செயல்படும் பெண் பஞ்சாயத்து தலைவரின் சித்தப்பா. தரமற்ற திட்ட பணிகளை செய்து கல்லா கட்டும் பெண் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது சித்தப்பா. இவர்கள் மீதான புகார்கள் குறித்து கண்டும் காணாமலும் உள்ள அரசு துறை அதிகாரிகள்......
ஈரோடு மாவட்டத்தில் 18 போலீசார் பணியிட மாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய போலீசார் 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய மஞ்சுநாதன் கடம்பூர் காவல் நிலைய தலைமை காவலராகவும், ஆப்பக்கூடல் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய செந்தில்குமார் அந்தியூர் காவல் நிலைய தலைமை காவலராகவும், காஞ்சிக்கோவில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றிய பாலசுப்பிரமணியம் சித்தோடு காவல் நிலைய தனிப்பிரிவுக்கும். சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய சதாசிவம், அதே காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமை காவலராகவும், பவானிசாகர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய ரமேஷ் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய தலைமை காவலராகவும், ஆசனூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றிய மூர்த்தி, அதே காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும், கடம்பூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய கங்காதரன், அதே காவல் நிலையத்தில் தலைமை காவலராகவும், சித்தோடு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய சந்தோஷ்குமார், அதே போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராகவும், தாளவாடி தனிப்பிரிவு காவலராக பணியாற்றிய சதீஷ்குமார் பங்களாப்புதூர் காவல் நிலைய தலைமை காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல், தாளவாடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய இளங்கோ, அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகவும், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய கனகராஜ், அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவுக்கும், புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய மகாதேவன், அதே காவல் நிலையத்தில் நிலைய தனிப்பிரிவுக்கும், நசியனூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் திருமூர்த்தி காஞ்சிக்கோவில் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், பவானிசாகர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய சக்திவேல், அதே காவல் நிலையத்தில் தனிப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றிய பூபதி, கடம்பூர் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், தாளவாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய அழகேசன் ஆசனூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவுக்கும். மாவட்ட கியூ பிரிவு போலீஸ் ஏட்டு மெய்ந்தன் பங்களாப்புதூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பிறப்பித்துள்ளார்.
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோட்டைச் சேர்ந்த 3 மாத குழந்தை
புதன், 18 செப்டம்பர், 2024
பேருந்து நிலைய கழிப்பிடத்தை சுத்தம் செய்ய மனு குடுங்க..! எம்எல்ஏவிடம் சுகாதார ஆய்வாளர் பகீர்..!
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி நகராட்சி பேருந்து நிலையத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்து நிலைய இலவச கழிப்பிடம் துர்நாற்றம் வீசியது. இதனை, சுத்தமாக வைத்துக் கொள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதற்கு, சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என மிரட்டியுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி ஒவ்வொன்றையும் கோரிக்கையாக எழுதி கொடுத்தால்தான் வேலை செய்வீர்களா என சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி கூறியதாவது, நகராட்சி நிர்வாகம் நகராட்சியாக செயல்படவில்லை. சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளேன். மனுவாக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று எம்எல்ஏவான என்னயே மிரட்டுகிறார்கள். இங்கு, அதிகாரிகள் யாரும் வேலை செய்வதில்லை.
எனவே, உடனடியாக, ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து நகராட்சி ஆணையாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில், அதிமுக சார்பில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.


