திங்கள், 30 செப்டம்பர், 2024

கவுந்தப்பாடி ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் ராக்கிங்.?: ஆட்சியரிடம் மனு

கவுந்தப்பாடி ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் ராக்கிங்.?: ஆட்சியரிடம் மனு

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம்,  கவுந்தப்பாடியில் ஆதிதிராவிடர் மாணவியர் தங்கும் விடுதி உள்ளது. சமீபகாலமாக இந்த விடுதியில் உணவு மோசமாக உள்ளதாகவும், இங்குள்ள சீனியர் மாணவிகள் மற்ற மாணவிகளை கேலி கிண்டல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. 
இது பற்றி வார்டனிடம் புகார் அளித்தால் புகார் அளிப்பவரை மிரட்டல் தொனியில் பேசி நடவடிக்கை எடுக்காமல் இருந்து உள்ளார். இது பற்றி மனித நேய ஜனநாயக கட்சியின் மனித உரிமை அணியின் மாநில செயலாளர் திருப்பூர் கண்ணன் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தந்து உதவி கோரினர்.  

இதுகுறித்து ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, இன்று (30ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா,  சந்தித்து புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக இது குறித்து சமந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்  விசாரனை மேற்கொள்ள உத்தரவிடுவதாக உறுதியளித்தார். 

இந்நிகழ்வில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் கவுந்தி சாகுல் அமீது, மாநகர் மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது ஹாரிஸ் , கவுந்தப்பாடி கிளை அவைத் தலைவர் அப்துல் அஜீஸ், கிளை செயலாளர்  சாகுல் அமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு பேட்டரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டி வந்தார்.

தேசிய நெடுஞ்சாலை 544 சேலம் - கோவை செல்லும் ரோட்டில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பெத்தாம்பாளையம் பிரிவு அருகில் வந்த போது, லாரியின் டீசல் டேங்க் வெடித்ததால், லாரி முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. 
மளமளவென பற்றிய தீயானது லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்ததால், அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவலின் அடிப்படையில், பெருந்துறை தீயணைப்புத்துறையினர் வந்து போராடி தீயை அடைத்தனர். இதனால் மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பேட்டரி தீயில் கருகிய சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து பெருந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த தீ விபத்து நடந்த சாலையில் அதிக அளவிலான டீசல் கொட்டியுள்ளதால் தீயணைப்புத் துறையினர் மணலை கொட்டியும், தண்ணீரை பீச்சி அடித்தும் சாலையில் கொட்டிய டீசலை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சியுடன் இணையும் 7 ஊராட்சி, கோபி நகராட்சியுடன் இணையும் பேரூராட்சி

ஈரோடு மாநகராட்சியுடன் இணையும் 7 ஊராட்சி, கோபி நகராட்சியுடன் இணையும் பேரூராட்சி

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மறுவரையறை செய்யப்படுகிறது. இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி , ஈரோடு மாநகராட்சியில் புதிதாக 7 ஊராட்சிகள் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளன.
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எலவமலை, கதிரம்பட்டி, கூரப்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 46 புதூர், லக்காபுரம் ஆகிய 7 ஊராட்சிகள் ஈரோடு மாநகராட்சியோடு இணைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த 7 ஊராட்சிகள் இணைக்கப்படும் பட்சத்தில், மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 60ல் இருந்து 75ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், பவானி நகராட்சியுடன் ஆண்டிக்குளம் மற்றும் குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிகளும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியுடன் லக்கம்பட்டி பேரூராட்சி, வெள்ளாளபாளையம், கலங்கியம், மொடச்சூர், பாரியூர், குள்ளம்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளது.

இதேபோல், சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சியும், புஞ்சைப்புளியம்பட்டி நகராட்சியில் நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், நல்லூர் ஆகிய மூன்று ஊராட்சிகளும் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்துறை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி; திமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தி - தமாகா யுவராஜா கருத்து

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி; திமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தி - தமாகா யுவராஜா கருத்து

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஈரோடு கிருஷ்ணாம்பாளையம் காலனியில் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.யுவராஜா முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். பொதுமக்களுக்கு மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் மாயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் தமிழகத்தில் பழனி, ஸ்ரீரங்கம், தஞ்சை, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் வழங்கப்படும் லட்டு, பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதம் தரமாக உள்ளதா? என்று பக்தர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, கோயில்களுக்கென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு செந்தில்பாலாஜி அமைச்சராக நியமிக்கப்பட்டது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஜனநாயக ரீதியாக அவர் அமைச்சராக பொறுப்பேற்பது சரியா? அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அமைச்சராக பொறுப்பேற்றால் நியாயமான விசாரணை நடக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது. 

துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதில் எந்த குறையும் கிடையாது. ஆனால் இந்த முடிவு வருகிற தேர்தலில் பிரதிபலிக்கும். தி.மு.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், கே.என்.நேரு போன்றவர்களே அதிருப்தியில் உள்ளனர். எனவே பொதுமக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும் என கூறினார்.
ஈரோட்டில் நடைபெற்ற மராத்தானில் பங்கேற்று ஓடிய ஆட்சியர், எஸ்.பி., முன்னாள் டிஜிபி

ஈரோட்டில் நடைபெற்ற மராத்தானில் பங்கேற்று ஓடிய ஆட்சியர், எஸ்.பி., முன்னாள் டிஜிபி

ஈரோட்டைச் சேர்ந்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து 3வது பதிப்பாக ஈரோடு மராத்தான் - 2024 எனும் மராத்தான் போட்டியை ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் இன்று (29ம் தேதி) காலை நடத்தியது. 21,10 மற்றும் 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக இந்த மராத்தான் நடைபெற்றது.
இம்மூன்று பிரிவு போட்டிகளை முறையே மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இம்மராத்தானில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இம்மாரத்தான் போட்டி, மீண்டும் அக்கல்லூரியிலேயே வந்து நிறைவு பெற்றது. இம்மராத்தானில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர்.

தொடக்க விழா நிகழ்ச்சியில், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னுசாமி, முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் பாலுசாமி, பெருந்துறை சேப்டி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் ராசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவையொட்டி ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவையொட்டி ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவையொட்டி ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

கர்மவீரர், பெருந்தலைவர், பாரதரத்னா, கல்விக் கடவுள் என்று அழைக்கப்படும் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் நடைபெற்றது. காமராஜர் இளைஞர் பேரவை மற்றும் பாரதீயம் நண்பர்கள் குழு சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு அமைப்புகளின் நிர்வாகிகள் கௌதமன் ராஜா சுகுமார் மற்றும் சபரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் எழுத்தாளர் அங்கதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கவிதை, பாட்டு, பேச்சு மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டன. 
இந்த விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் ஆயிரம் பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் விழாவை இணைந்து நடத்திய அமைப்புகளின் சார்பில் சிறப்பு விருந்தினர் வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். 
இந்த விழாவில் வழக்கறிஞர்கள் சீனிவாசன் பன்னீர்செல்வம் உட்பட அருணாசலம் தர்மலிங்கம் ஜெகதீசன் மற்றும் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் கையெழுத்துப் போட்டிகள்.

தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் கையெழுத்துப் போட்டிகள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் கையெழுத்துப் போட்டிகள். 

தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பாக அழகோவியம் 2024 என்ற தலைப்பில் சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியானது சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள அண்ணா நூலக கட்டிட மாடியில் நடைபெற்றது. நம்பிக்கை வாசல் டிரஸ்டின் தலைவர் கவிஞர் ஏகலைவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் சேலம் மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் ப்ரீகேஜி, எல் கே ஜி மற்றும் யுகேஜி குழந்தைகளுக்கு பூக்கள் மற்றும் இயற்கை என்ற தலைப்பிலும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு தேசியக்கொடி தேசிய விலங்கு என்ற தலைப்பிலும், நான்கு ஐந்து ஆறு ஆகிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரமும் மனிதமும் என்ற தலைப்பிலும் மற்றும் ஏழு எட்டு ஒன்பது ஆகிய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இந்திய வரலாற்று சின்னங்கள் என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகளும் கையெழுத்துப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் ஐந்து  இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழர்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன என்றும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் அடுத்த கட்டமான போட்டிகளில் பங்கேற்க தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் ஏகலைவன் தெரிவித்தார். இந்த மாநில அளவிலான போட்டிக்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் மோகன் ஷங்கர் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.