புதன், 2 அக்டோபர், 2024

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. ஆம் ஆத்மி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. ஆம் ஆத்மி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. ஆம் ஆத்மி கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை. 

நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திருவருவ சிலைக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் சரத்பாபு, செயலாளர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் முகமது அயூப், தெற்கு மாவட்ட தலைவர் தனசேகர், மேற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் மேனி மற்றும் மேட்டூர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. மக்கள் சட்ட உதவி கழகத்தின் தலைவர் ஆர் வி பாபு மாலை அணிவித்து மரியாதை.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. மக்கள் சட்ட உதவி கழகத்தின் தலைவர் ஆர் வி பாபு மாலை அணிவித்து மரியாதை.


சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. மக்கள் சட்ட உதவி கழகத்தின் தலைவர் ஆர் வி பாபு மாலை அணிவித்து மரியாதை. 

நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திருவருவ சிலைக்கு, மக்கள் சட்ட உதவி கழகத்தின் தலைவர் ஆர் வி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவர் அரவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர கலந்து கொண்டனர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி மாலை அணிவித்து மரியாதை.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி மாலை அணிவித்து மரியாதை. 

நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திருவருவ சிலைக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் உலக நம்பி மற்றும் சேலம் மண்டல எஸ் சி எஸ் டி பிரிவு தலைவர் சின்னதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தீண்டாமை மற்றும் மது ஒழிப்பிற்கு எதிரான உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். 
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா.. அவரது திருவுருவ சிலைக்கு டாக்டர் நாகா அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா.. அவரது திருவுருவ சிலைக்கு டாக்டர் நாகா அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவர் டாக்டர் நாக அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை. 

நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திருவருவ சிலைக்கு, ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனருமான டாக்டர் நாக அரவிந்தன் மற்றும் மக்கள் சட்ட உதவி கழகத்தின் தலைவர் ஆர் வி பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைப்புகளின் நிர்வாகிகள் திரளானோர கலந்து கொண்டனர்.

செவ்வாய், 1 அக்டோபர், 2024

மொடக்குறிச்சியில் வீட்டில் 204 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிய வடமாநில வாலிபர் கைது

மொடக்குறிச்சியில் வீட்டில் 204 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிய வடமாநில வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பூந்துறை சாலையில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மொடக்குறிச்சி போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, 204 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வீட்டின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சைல் தேசில் லம்பா பிடாணி என்ற ஊரைச் சேர்ந்த தேவாரம் என்பவரது மகன் பட்டேல் என்ற கேசராம் (வயது 34) என்பது தெரியவந்தது.

மேலும், கடந்த 8 மாதமாக டீக்கடை நடத்தி வரும் இவர் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, வீட்டில் இருந்த 204 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட தொழில் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

மாவட்ட தொழில் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (1ம் தேதி) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நிர்வாகம், கணக்கு, முன்னுரிமை, பதிவு மற்றும் புதுப்பித்தல், மனுக்கள், பரிந்துரைத்தல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தொழில்நெறி வழிகாட்டல், தன்னார்வ பயிலும் வட்டம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றதை பார்வையிட்டார். மேலும், முதல்வரின் முகவரி, முதலமைச்சர் தனிப்பிரிவு மனு, மனு நீதி நாள் முகாம் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனையடுத்து, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அங்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக, வரப்பெறும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் கணேசன், தொழிலாளர் உதவி ஆணையர்கள் முருகேசன் (ச.பா.தி), மு.திருஞானசம்பந்தம் (அமலாக்கம்), உதவி இயக்குநர்கள் ஆனந்தகுமார் (அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்), ரா.ராதிகா (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டி.டி.சாந்தி (தொழில்நெறி வழிகாட்டல்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
அந்தியூர் பருவாச்சியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு

அந்தியூர் பருவாச்சியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பருவாச்சி கிராமம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 13), சேத்துனாம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சிறுவன் தினேஷ்குமார் கடந்த மாதம் 16ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளான்.

தொடர்ந்து, சிறுவனது பெற்றோர் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்று பின்னர் வீடு திரும்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறுவனுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே பூனாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல் எனக்கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து கோவைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கடந்த 20ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் கடந்த 28ம் தேதி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி 30ம் தேதி உயிரிழந்தான். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அதே கிராமத்தைச் சேர்ந்த ரதி (வயது 34) என்ற பெண்ணுக்கு எலிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததால் நேற்று ஈரோடு அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.