புதன், 13 நவம்பர், 2024

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல்

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் அன்று வழங்க வேண்டிய இலவச வேட்டி சேலை வழங்க இயலாது ... தற்போது உற்பத்தியாகும் இலவச வேட்டி சேலைகள் வருகின்ற பிப்ரவரி இறுதியில் தான் வழங்க வாய்ப்புள்ளது என விசைத்தறி நெசவாளர்கள் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி சேலை பொங்கல் பரிசு பொருளில் சேர்ந்து வருமா என்பது ஐயம் 
நெசவாளர்களுக்கு வேலை வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்துக்காக ஏற்படுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு சில ஆண்டாக உரிய காலத்தில் நுால் டெண்டர் வைத்து வழங்காததால், முழுமையான பணி கிடைக்காமல் நெசவாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நடப்பாண்டும் அதே நிலை நீடிப்பதால், வரும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்  சுரேஷ், ஈரோடு விசைத்தறி நெசவாளர் ராஜ் ஆகியோர் ஸபா நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டியில், 
தமிழகத்தில் ஈரோடு, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், லக்காபுரம், சித்தோடு, சோமனூர் உள்ளிட்ட விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு, 6 மாத காலத்துக்கு நிரந்தர வேலை கிடைக்கும் வகையில், இலவச வேட்டி, சேலை திட்டம் உருவாக்கப்பட்டது. 

மாநில அளவில், 240க்கும் மேற்பட்ட விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம், 70,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம், தலா, 1 கோடியே 77. லட்சம் இலவச வேட்டி, சேலை உற்பத்தியாகி, பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

இத்தொழிலில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள், பிற தொழிலாளர்கள் நேரடியாக, மறைமுகமாக வாழ்வாதாரம் பெறுகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் மூலம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய, நுால் மில், சைசிங் சார்ந்த தொழிலாளர்கள், பாபின் கட்டை, கூட்டுறவு சங்கங்களில் பணி செய்யம் மடி தொழிலாளர்கள், சுமைப்பணியாளர்கள், பிரின்டிங், லாரி உள்ளிட்ட வாகன தொழிலாளர் என நீண்டு கொண்டே போகிறது.

கடந்த சில ஆண்டுக்கு முன் வரை, மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, மார்ச் - ஏப்ரல் மாதம் எண்ணிக்கை, தரம், டிசைன் போன்றவை இறுதி செய்து, ஏப்ரல், மே மாதம் நுாலுக்கு டெண்டர் விட்டு, ஜூனில் உற்பத்தி பணி துவங்கும். 6 மாதம் இலக்கு நிர்ணயித்து டிசம்பப் முதல் வாரம் முதல் பணி முடிந்து, ரேஷன் கடைகளுக்கு சென்றடையும்.

கடந்த சில ஆண்டாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட, நுால் டெண்டரை இறுதி செய்து, தரமான நுாலை வழங்காத நிலை நீடிக்கிறது, நடப்பாண்டிலும் தற்போதுதான் முழு வீச்சில் பணி துவங்கி உள்ளது. அதன்படி தற்போது பார்த்தீங்கன்னா 40% வேஷ்டிகள், 20% சேலை உற்பத்தியும் நிறைவடைந்து உள்ளது என்பதுடன்,

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் அன்று வழங்க வேண்டிய இலவச வேட்டி சேலை வழங்க இயலாது எனவும், தற்போது உற்பத்தியாகும் இலவச வேட்டி சேலைகள் வருகின்ற பிப்ரவரி இறுதியில்தான் வழங்க வாய்ப்புள்ளது என விசைத்தறி நெசவாளர்கள் தெரிவித்துள்ளதால், இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி சேலை பொங்கல் பரிசு பொருளில் சேர்ந்து வருமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
சேலம் 44வது கோட்டத்தில் பழமையான கிணறு தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை. விசிக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவர்மன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

சேலம் 44வது கோட்டத்தில் பழமையான கிணறு தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை. விசிக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவர்மன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் 44வது கோட்டத்தில் பழமையான கிணறு தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை. விசிக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவர்மன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி 44 வது கோட்டத்தில் கஸ்தூரிபாய் தெருவின் பொதுக்கிணறான நடுக்கிணறு தூர்வாருவதற்காக விசிக மாமன்ற உறுப்பினர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இந்த பூமி பூஜையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.முரளிசாமி,  காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.மொட்டையாண்டி , டிங்கர் சூரி,  விசிக கோட்ட செயலாளர் கோழி சண்முகம்,  கேபிள் முருகேசன், கதிரேசன்,   செல்வம்,  தியாகு,  சதீஸ் மற்றும் ஊர் நாட்டாமைகள் சந்திரன், ஜெகா,தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 12 நவம்பர், 2024

தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிய நடிகை கஸ்தூரிக்கு, சமுதாயத்தில் யாரையும் இழிவுபடுத்தி பேசாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கும் தீர்ப்பு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தேசிய தெலுங்கு சிறுபான்மையினர்  கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாக அரவிந்தன் சேலத்தில் வலியுறுத்தல்.

தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிய நடிகை கஸ்தூரிக்கு, சமுதாயத்தில் யாரையும் இழிவுபடுத்தி பேசாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கும் தீர்ப்பு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாக அரவிந்தன் சேலத்தில் வலியுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிய நடிகை கஸ்தூரிக்கு, சமுதாயத்தில் யாரையும் இழிவுபடுத்தி பேசாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கும் தீர்ப்பு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தேசிய தெலுங்கு சிறுபான்மையினர்  கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாக அரவிந்தன் சேலத்தில் வலியுறுத்தல்.

திரைப்பட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை இழிவு படுத்தி பேசிய விவகாரம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்து சேலத்தில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் செய்தியாளரிடம் கூறுகையில், திரைப்பட நடிகை கஸ்தூரி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகை கஸ்தூரி அவர்கள் தெலுங்கு மக்களை மிகவும் இழிவுபடுத்தி பேசியுள்ளார். அந்த செய்தி தமிழகம் தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொந்தளித்து மக்கள் அனைவரும் கஸ்தூரி அவர்களுக்கு கன்னடத்தை தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில்  இந்த சம்பவத்திற்கு முதலில் தேசிய தலைவர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு  கண்டனத்தை தெரிவித்தோம்.  அடுத்து ஒவ்வொன்றாக நடைபெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து  தமிழகத்தினுடைய டிஜிபி அவர்கள் இரண்டு தனிப்படைகளை   அமைத்து உடனடியாக நடிகை கஸ்தூரியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.அது மிக வரவேற்கத்தக்க விஷயம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.  மேலும் நேற்றைய தினம் நடிகை கஸ்தூரி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை நீதியரசர் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதியரசர் அவர்களும் இது மிகவும் கண்டனத்திற்கு உரிய பேச்சு என்று கூறியுள்ளார். மேலும் தெலுங்கு மக்கள் தமிழகத்தின் ஒரு அங்கமாக தான் உள்ளனர் என்றும் தெலுங்கு மக்களை இழிவு படுத்தி பேசியது தவறு என்று சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் நாளை தினம் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இனி இதுபோன்று எந்தவிதமான சமுதாயத்தையும் புண்படுத்தும் விதமாக யார் பேசினாலும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் மாண்புமிகு நீதி அரசர் தகுந்த நடவடிக்கை எடுத்து சரியான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம் அமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் சேலத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.14) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.14) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், புதுசூரியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் துணை மின் நிலையங்களில் நாளை (நவ.14) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பியூர் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மொட்டணம், குப்பிபாளையம், பழனிகவுண்டன்பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, இச்சிபாளையம், திட்டமலை, நம்பியூர் கோவை ரோடு, ஜீவா ரோடு, யூனியன் ஆபீஸ், நம்பியூர் டவுன், கொன்னமடை, வெங்கிட்டுப்பாளையம், காவிலிபாளையம் மற்றும் நாச்சிபாளையம் குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகள்.

புதுசூரியம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கோசணம், ஆலாம்பாளையம், தீர்த்தாம்பாளையம், செல்லிபாளையம், மூணாம்பள்ளி, கே.மேட்டுப்பாளையம், சொட்டமேடு, காமராஜர் நகர், பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம், ஓணான்குட்டை, எலத்தூர், கடசெல்லிபாளையம், கல்லங்காட்டுபாளையம், மலையப்பாளையம், ஒழலக்கோயில், சின்னசெட்டியாம்பாளையம் மற்றும் பெரியசெட்டியாம்பாளையம்.

கொளப்பலூர் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியம் பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சாணார்பாளையம், லிங்கப்பகவுண்டன் புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன் கோவில் பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி மற்றும் சொகுமாரிபாளையம்.


ஈரோட்டில் நவீன தனியார் சொகுசு ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஈரோட்டில் நவீன தனியார் சொகுசு ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஈரோட்டில் உள்ள நவீன தனியார் சொகுசு ஓட்டலுக்கு நேற்று (நவ.12) இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு சத்தி சாலையில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் வீரபத்ரா வீதியில் உள்ள மூன்று மாடி அடுக்கு கொண்ட (ரத்னா ரெசிடென்சி) தனியார் சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் தங்கும் விடுதி, மீட்டிங் அறை என உள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் விடுதிக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதில் இரவு 10 மணிக்கு சரியாக வெடிகுண்டு வெடிக்கும் என இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சம்பவம் அறிந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சொகுசு விடுதிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து ஹோட்டலில் உள்ள அறை மற்றும் மீட்டிங் ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு போலீஸார் சோதனை செய்தனர்.

தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்தவர்களை வெளியேற்றி அறைகளில் மோப்ப நாய் உதவியுடன் விடுதி முழுவதும் சோதனை ஈடுபட்டனர். அதேபோல், நேற்று காலையில் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் பள்ளி முழுவதும் சோதனை செய்த பிறகு அதுவும் புரளியாக இருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இ-மெயிலை ஆய்வு செய்தபோது. அது மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டது.

மேலும், கடந்த ஓரிரு நாட்களில் சந்தேகப்படும் வகையில் நபர் கள் யாராவது ஓட்டலுக்கு வந்தனரா? என்று கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த இ-மெயில் எதற்காக அனுப்பப்பட்டது என்று தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.


சோனா கல்லூரியின் மாநில பள்ளி மாணவர்களுக்கான சோனா சேம்ப்ஸ்’24 என்ற பெயரில்  திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா.. இதற்கான போஸ்டர் வெளியீடு.

சோனா கல்லூரியின் மாநில பள்ளி மாணவர்களுக்கான சோனா சேம்ப்ஸ்’24 என்ற பெயரில் திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா.. இதற்கான போஸ்டர் வெளியீடு.

 சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சோனா கல்லூரியின் மாநில பள்ளி மாணவர்களுக்கான சோனா சேம்ப்ஸ்’24 என்ற பெயரில்  திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா.. இதற்கான போஸ்டர் வெளியீடு.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா (சோனா சேம்ப்ஸ்’24) என்ற பெயரில்  வருகின்ற நவம்பர் 29ம் தேதி கல்லூரியின் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான போஸ்டர் வெளியீட்டு விழா கல்லூரி நூலக அரங்கில் நடைப்பெற்றது.
இந்த விழாவில் இளம் விஞ்ஞானி, இளம் கண்டுபிடிப்பாளர், கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், வினாடி வினா, பாடல் மற்றும் இசை, பேச்சு போட்டி, பழம்/காய்கறி செதுக்குதல், மைம், நடனம் (குழு மற்றும் தனி), வேடிக்கை விளையாட்டுகள் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அழைப்புகள் விடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேலம் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில் இருந்து பங்கேற்க உள்ளனர்.   
பள்ளி மாணவர்களின் தனி திறன்களை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களது தனித்திறமைகளை திறம்பட வெளிப்படுத்த வேண்டும் என சோனா கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் போது துறைத்தலைவர் முனைவர் ரேணுகா, விழாவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்  செந்தில்வடிவு மற்றும் மாணவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வலுவாக உள்ளதால் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: ஜவாஹிருல்லா பேட்டி

திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வலுவாக உள்ளதால் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: ஜவாஹிருல்லா பேட்டி

திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வலுவாக உள்ளதால் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: ஜவாஹிருல்லா பேட்டி
ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றும் விழாவில் 
அக்கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மத்திய அரசின் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து வருகின்ற டிசம்பர் 6ம் தேதி தமிழகத்தில் 10 பெருநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

 வக்பு வாரிய சொத்துக்கள் இருக்க கூடாது என்ற நோக்கத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் அடுத்த மாதம் பெங்களூரில் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் கூட்டம் நடைபெற இருப்பதால் அந்த கூட்டத்தில் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறினார்.

திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது என்ற ஜவாஹிருல்லா 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வலுவாக உள்ளதால் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது என்றார்.

அமரன் திரைப்படம் ராணுவத்தில் பணியாற்றி மேஜர் வாழ்க்கை சித்திரிக்கும் வகையில் அமைந்துள்ளது,மேஜர் முகுந்தன் வரதாஜன் உட்பட பல ராணுவ வீரர்கள் பல தியாகங்களை செய்து இருக்கிறார்கள் ஆனால் அமரன் திரைப்படம் காஷ்மீர் மக்களின் உண்மையான துயரத்தை எடுத்துரைக்க தவறிவிட்டது.,ஒரு நுட்பமான முறையில் பாஜக அரசியல் கருத்துக்கள் எடுத்துரைக்கும் வகையில் எடுத்து கூறப்பட்டுள்ளதால் அமரன் திரைப்படத்தினை எதிர்க்கிறோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக மாவட்ட தலைவர் சித்தீக், மாவட்ட பொறுப்பாளரும் மாநில தலைமை பிரதிநிதி சுல்தான் அமீர், மாநில தலைமை பிரதிநிதிகள் முகமது ரிஸ்வான், கோவை அக்பர்அலி, மாநில தொண்டர் அணி செயலாளர் பவானி முகம்மது, மமக மாவட்ட செயலாளர் சலீம், தமுமுக மாவட்ட செயலாளர் முகம்மது லரிப், மாவட்ட பொருளாளர் சகுபர் அலி,
மாநில மமக செயற்குழு உறுப்பினர்கள் ஆட்டோ சாகுல் அமீர், அமீர்
மாநில மருத்துவ சேவை அணி துணைச் செயலாளர் பௌஜூல் ஹசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் இலியாஸ், மாவட்ட துணை தலைவர் சுல்தான் அலாவுதீன், மமக மாவட்ட துணைச் செயலாளர்கள் பெருந்துறை பாபு சாகுல் ஹமீது, தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள்
சாகுல் ஹமீது, இஸ்மாயில் 
மாட்ட மருத்துவ அணி செயலாளர் சிக்கந்தர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜீலானி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் 
சையது முஸ்தபா
ஆகியோர் கலந்து கொண்டனர்.