திங்கள், 18 நவம்பர், 2024

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் தாக்குதல்: ரவுடியாக மாறிய ஈரோடு தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி புகார்

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் தாக்குதல்: ரவுடியாக மாறிய ஈரோடு தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி புகார்



ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் பிரபா. அரசு பள்ளி ஆசிரியையான இவர் ஈரோடு மாநகராட்சி தொடக்கபள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமியிடம் தனது வீட்டை அடமானமாக வைத்து 15 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார், அசலையும் வட்டியையும் திருப்பி செலுத்திய நிலையில் வீட்டு ஆவணங்களை திருப்பி தர மறுப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் முத்துராமசாமி மீது பிரபா புகார் அளித்தார்.

இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காத, கோபிசெட்டிபாளையம் போலீசார் முத்துராமசாமி கொடுத்த பொய் புகாரில் பிரபா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாக பிரபா குற்றம் சாட்டுகிறார். 

இந்தநிலையில் கடந்த 16ம் தேதி தனது ஆட்களுடன் பிரபா வீட்டிற்கு சென்ற முத்துராமசாமி, வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி யுள்ளார். மேலும் வீட்டில் இருநத பிரபாவின் தாயார் மற்றும் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.(இது தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளன)

தனது வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பாக பிரபா கொடுத்து புகாரின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் போலீசார் முத்துராமசாமி மீது எஸ்சி எஸ்டி பிரிவு உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனிடையே தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த முத்துராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஆசிரியை இன்று புகார் அளித்தார்.

மாணவர்களுக்கு கல்வி கற்பித்து நல்வழிப்படுத்தும் தலைமை ஆசிரியர் ஒருவரே சக பெண் ஆசிரியையின் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஞாயிறு, 17 நவம்பர், 2024

சேலம் ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோயில் மண்டபம் சுபமுகூர்த்தகால் விழா. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் ராஜகணபதி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

சேலம் ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோயில் மண்டபம் சுபமுகூர்த்தகால் விழா. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் ராஜகணபதி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோயில் மண்டபம் சுபமுகூர்த்தகால் விழா. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் ராஜகணபதி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் வசந்த மண்டபம் கட்டுவதற்கான சுபமுகூர்த்தகால் நடும் விழா திருக்கோயில் வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவலர்கள் குழுத்தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். முன்னதாக காலை 7.30 மணி முதல் சிறப்பு ஸ்ரீ ராஜகணபதிக்கு சிறப்பு  பூஜைகள் நடைப்பெற்றது.  தொடர்ந்து திருக்கோயில் வசந்த்  மண்டபம் கட்டுவதற்கான  சுபமுகூர்த்தகால் விழா நடைப்பெற்றது. பின்னர் அனைத்து பக்கதர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த பணியானது சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தனது சொந்த செலவில் ரூபாய் 24.75 லட்சம் மதிப்பிட்டில் அரசு அனுமதி பெற்று திருப்பணிகள் துவக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய அறங்காவலர்கள் குழுத்தலைவர் சோனா வள்ளியப்பா ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோயில் மண்டபம் சுபமுகூர்த்தகால் விழா சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்க முழுமுயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 
மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் ஆகியோர்களுக்கு கலந்து கொண்டார்.

சனி, 16 நவம்பர், 2024

அல் அமீன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிக்கான துவக்க விழா

அல் அமீன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிக்கான துவக்க விழா

அல் அமீன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.

ஈரோடு அல் அமீன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் மரக்கன்றுகளை நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல் அமீன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அல் அமீன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுபையர், அல் அமீன் சங்கத்தின் தலைவர் பாரத் பிரஸ் சாகுல் ஹமீது, ஹஜரத் ஹபீப் முஹம்மத், அக்ரஹாரம் பகுதி முன்னாள் தலைவர் பேக் சேட், அல் அமீன் பள்ளியின் தாளாளர் ஆடிட்டர் அயூப், அல் அமீன் சங்கத்தின் செயலாளர் இப்ராஹிம் சாஜித், பள்ளப்பட்டி கவுன்சிலரும், அல் அமீன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினருமான ஷாகுல் ஹமித் உட்பட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தாவுதியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள், உலமாக்கள், அல் அமீன் பள்ளியின் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்,
பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் மத்தியில் மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர், 
இதனைத்தொடர்ந்து, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும், அல் அமீன் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், ஈரோடு - பவானி பிரதான சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
 தமிழ்நாடு மின்வாரியத்தில் சில அதிகாரிகள் INTUC தொழிற்சங்கத்தன் சில நிர்வாகிகள் பல ஆண்டுகளாக பட்டியலின ஊழியர்கள் மீது பொய்யான புகார்களை தயார் செய்து நிர்வாகத்திடம் தபால் மூலம் அனுப்புவது வன்மையாக கண்டிக்கிறோம்.இந்த புகார் குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் சில அதிகாரிகள் INTUC தொழிற்சங்கத்தன் சில நிர்வாகிகள் பல ஆண்டுகளாக பட்டியலின ஊழியர்கள் மீது பொய்யான புகார்களை தயார் செய்து நிர்வாகத்திடம் தபால் மூலம் அனுப்புவது வன்மையாக கண்டிக்கிறோம்.இந்த புகார் குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தில் சில அதிகாரிகள் INTUC தொழிற்சங்கத்தன் சில நிர்வாகிகள் பல ஆண்டுகளாக பட்டியலின ஊழியர்கள் மீது பொய்யான புகார்களை தயார் செய்து நிர்வாகத்திடம் தபால் மூலம் அனுப்புவது வன்மையாக கண்டிக்கிறோம் என்று தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் சரஸ்ராம் ரவி மற்றும் விஸ்வநாத் ஆகியோர் தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சரஸ்ராம் ரவி மற்றும் விஸ்வநாத் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் தமிழ்நாடு மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் நிர்வாகத்தின் சில அதிகாரிகள்  INTUC தொழிற்சங்கத்தின் சில நிர்வாகிகள் பல ஆண்டுகளாக பட்டியலின ஊழியர்கள் மீது பொய்யான புகார்களை தயார் செய்து நிர்வாகத்திடம் தபால் மூலம் அனுப்புகின்றனர்.
மின் வாரிய நிர்வாகமோ புகார் அனுப்பிய நபரை நேரில் அழைத்து விசாரணை செய்யாமலே, உண்மை நிலை கண்டறியாமல் பட்டியல் இன ஊழியர்கள் மீது நேரடியாக விசாரணை நடத்துவது ஒருவகை வன்கொடுமையே. சேலம் மாவட்டம் முழவதும் பல நூறு புகார்கள் வந்தபோதும் அவற்றை கண்டுகொள்ளாமல், விசாரணை செய்யாமல் கிடைப்பில் வைக்கும் நிர்வாகம், பட்டியலின ஊழியர்கள் மீது வரும் பொய் புகார்கள் மீது ஆர்வம் காட்டுவது நிர்வாக சீர்கேட்டை உறுதிபடுத்துகின்றது. என்று அறிக்கையின் வாயிலாக கேள்வி எழுப்பி உள்ள அவர்கள். விவசாயிகள் பண முதலாளிகள் அரசியல்வாதிகள்   வியபாரிகள் தொழில் நிறுவனங்கள் ஆகியோரிடம் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமலேயே வேலை செய்துகொடுத்து மாதம் பல லட்சங்கள் வருடம் பல கோடிகள் மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்தி வருவதை கண்டுகொள்ளாத நிர்வாகம்.
திருட்டுதனமாக டிரான்பாம் மாற்றுவது மின் இணைப்பு அளிப்பது மின்கேப்பாசிட்டி மாற்றுவது விவசாய மின்இணைப்பு உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெறாமல் கையூடு பெற்று ஊழலில் ஊறிபோவது. இவை எல்லாம் கண்டுகொள்ளாத நிர்வாகம். இதனால் மின்வாரியத்துக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுகின்றது.
இவற்றை மின்வாரிய தலைமை சென்னை நிர்வாகம் விசாரணை செய்யுமா என்று கேள்வி எழுப்பி விடுதோடு, மின்வாரிய விஜிலன்ஸ் விசாரணை மேற்கொள்ளுமா என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மிகக் கடுமையான போராட்டத்தை மின்வாரியத்திற்கு எதிராக நடத்தப்படும் என்றும் அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





ஆப்பக்கூடல் அருகே மயான வசதி கோரி சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்

ஆப்பக்கூடல் அருகே மயான வசதி கோரி சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூர், காமராஜர் நகர் பகுதியில் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக மயான வசதி இல்லாமல் பவானி ஆற்றங்கரையில் கடந்த பல வருடங்களாக இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதுமாக, எரியூட்டுவதுமாக இருந்து வந்தனர்.
இதையடுத்து, மயான வசதி வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததின் காரணமாக ஆதித்திராவிடர் நலத்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 10 ஹெக்டேர் பரப்பளவில் மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் அப்பகுதியில் மயானம் வருவதற்கு அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிலத்தை அளவிடும் பணியை வருவாய்த் துறையினர் கைவிட்டு சென்றுள்ளனர். 

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த கருப்பாயி (வயது 60) என்பவர் நேற்று (நவ.15) இறந்து விட்டார். தொடர்ந்து, இன்று (நவ.16) அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கேட்டு அவரது உடலை பவானி - சத்தியமங்கலம் சாலையில் வைத்து உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் பவானி வட்டாட்சியர் சித்ரா தலைமையிலான வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு உடன்படாத கிராம மக்கள் அரசு ஒதுக்கிய இடத்தில் மயானம் ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சாரல் மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கருப்பாயின் உடலுடன் மழையில் நடந்த படியே தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மயானம் செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லாததன் காரணமாக பாதை வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு மயானம் ஏற்படுத்தித் தருகிறோம் என வருவாய்த் துறையினர் ஊர் பொதுமக்களுக்கு உறுதி அளித்தனர். இதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு சடலத்தை கொண்டு சென்று பவானி ஆற்றங்கரையோரம் அடக்கம் செய்தனர்.

இறந்தவரின் உடலுடன் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைக் கிராம பெண்ணுக்கு பெண் குழந்தை

அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைக் கிராம பெண்ணுக்கு பெண் குழந்தை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி எலச்சிபாளையம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி சின்னமாதி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான சின்னமாதிக்கு இன்று (நவ.16) நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, தேவர்மலை 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் எலச்சிபாளையம் மலைக்கிராமத்திற்கு சென்று கர்ப்பிணி சின்னமாதியை அழைத்துக் கொண்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதாக அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்சை ஓட்டுநர் கார்த்திக் ராஜா என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, எருமைகுட்டை என்ற இடத்தில் வந்த போது, பிரசவ வலி அதிகமாகி சின்னமாதி துடித்தார். 

நிலமையை அறிந்த 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் செந்தில்நாதன் வாகனத்தை நிறுத்திவிட்டு சின்னமாதிக்கு பிரசவம் பார்த்தார். இதனையடுத்து, நள்ளிரவு 2.46 மணிக்கு, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாய், சேய் இருவரும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். குடும்பத்தினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் ஆகியோர் ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டினர்.