சனி, 23 நவம்பர், 2024

பசுமை ஈரோடாக மாற்ற அல்-அமீன் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஈரோடு எக்கனாமிக் சேம்பர் சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

பசுமை ஈரோடாக மாற்ற அல்-அமீன் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஈரோடு எக்கனாமிக் சேம்பர் சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

பசுமை ஈரோடாக மாற்றுவதன் ஒரு பகுதியாக அல் - அமீன் பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஈரோடு எக்கனாமிக் சேம்பர் சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 

ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் ஏராளமான தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகள் உள்ளன. 
இங்கிருந்து வெளியேறும் கழிவு நீரினால் நீர்நிலைகள் மாசுபடுவதோடு புற்றுநோயின் தாக்கமும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. 
இதனை கருத்தில் கொண்டு ஈரோடு நகரை பசுமை நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் ஈரோடு அல் அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஈரோடு எக்கனாமிக் சேம்பர் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி அவற்றை வளர்க்க வேண்டியது அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு ஈரோட்டில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டாக்டர். அப்துல்லா தலைமை வகித்தார்.
ஈரோடு மாநகராட்சியின் துணை மேயர் செல்வராஜ், மாநகர மன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும்  அல் அமீன் பள்ளி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ரியாஜ் அலி முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்வில், அல் அமின் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பள்ளப்பட்டி கவுன்சிலர் சாகுல் ஹமீது, முன்னாள் மாணவரும் எக்கனாமிக் சேம்பரின் செயலாளர் பத்ரு மைதீன், அல் அமீன் பள்ளியின் தாளாளர் ஆடிட்டர் அயூப், அல் அமீன் சங்கத்தின் செயலாளர் சுஜாத், தமிழ்நாடு ஜமாத்துல் உலமாக்கள் சபையின் தலைவர் பைஜீ ரகுமான், எக்கனாமிக் சாம்பரின் சமூக மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பிலால், எல்லப்பாளையத்தை சேர்ந்த அல் அமீன் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உலமாக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்,

மரங்களை நடுவதன் மூலம் இயற்கை வளத்தை பெருக்கி ஈரோடு நகரை பசுமையாக மாற்ற வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வாழை , தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை வளர்ப்பதன் மூலம் பொது மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏந்தி நின்றனர் .

இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. வரும் ஓராண்டிற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை ஈரோடு நகரில் நடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
உள் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை  வலியுறுத்தி, டிசம்பர் 6ல் டெல்லியில் மாபெரும் பேரணி மற்றும் கருத்தரங்கம். தமிழ்நாடு மத்திய, மாநில அரசு மற்றும்  பொதுதுறை  SC, / ST, / MBC  ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி தகவல்..

உள் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, டிசம்பர் 6ல் டெல்லியில் மாபெரும் பேரணி மற்றும் கருத்தரங்கம். தமிழ்நாடு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுதுறை SC, / ST, / MBC ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி தகவல்..

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

உள் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை  வலியுறுத்தி, டிசம்பர் 6ல் டெல்லியில் மாபெரும் பேரணி மற்றும் கருத்தரங்கம். தமிழ்நாடு மத்திய, மாநில அரசு மற்றும்  பொதுதுறை  SC, / ST, / MBC  ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி தகவல்..

பட்டியலின மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும்
தமிழ்நாடு மத்திய, மாநில அரசு மற்றும்  பொதுதுறை  SC, / ST, / MBC  ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், 
பட்டியலின மக்களின் அடிப்படை உரிமையை பறிபோவதை கண்டித்தும்,  மக்கள் தொகை புதிய கணக்கீட்டை கண்டறிந்து பட்டியலின மக்களுக்கு 25% இட ஒதுக்கீட்டை கல்வி  பொருளாதாரம் வேலை வாய்ப்பு மற்றும் அரசியலில் ( சட்டமன்றம்  பாராளுமன்றம் உள்ளாட்சி ) வழங்கிட வலியுறுத்தியும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுதுறைகளில்  துறைகளில் பட்டியலின , பழங்குடியினர் காலி பின்னடைவு ,( Backlog vacancies ) 2 லட்சத்திற்கும்  மேல் உள்ளதை உடனே நிரப்பிட வலியுறுத்தியும் ஆலோசிக்கப்பட்ட கூட்டத்தில், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான கிரீமிலேயர் திட்டத்தை  கைவிட வலியுத்தியும், இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புது டில்லியில் வரும் டிசம்பர்- 6ல் பேரணியும், தொடர்ந்து டிசம்பர்-7 ல் கருத்தரங்கம் நடத்தப்படுவது என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய பட்டியலின  பழங்குடி மக்களின்  பாதுகாவலர் டாக்டர் ஐயா. K கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில்  மத்திய.  மாநில அரசுகளின் கவன ஈர்ப்பு பேரணியும், கருத்தரங்கமும்  வெற்றி பெற  பட்டியலின/ பழங்குடி ஊழியர்களே/  வெகு ஜன மக்கள் ஆகியோர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவர் டாக்டர் A.D. விஸ்வநாத், 
( நிறுவனர்- தலைவர்- அம்பேத்கர்.ஜனசக்தி கட்சி மற்றும் ஜேசுபாதம்,  பழ.முரளிதரன், தமிழமுதன்,  ராஜசேகர் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வெள்ளி, 22 நவம்பர், 2024

ஆண்களுக்கான நவீன குடும்ப நல இருவார விழா: விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்த ஈரோடு ஆட்சியர்

ஆண்களுக்கான நவீன குடும்ப நல இருவார விழா: விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்த ஈரோடு ஆட்சியர்

ஆண்களுக்கான நவீன குடும்ப நல இருவார விழா: விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்த ஈரோடு ஆட்சியர்
ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆண்களுக்கான நவீன குடும்ப நல இரு வார விழா 21.11.2024 முதல் 04.12.2024 வரை நடைபெறுவதை முன்னிட்டு, விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்கம் சார்பில், நிரந்தர ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை விளம்பரம் இரு வார விழாவாக நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 வரை "குடும்பக் கட்டுப்பாடு பற்றி இணைந்தே பேசுவோம், அதனை இன்றே தொடங்குவோம்" என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது.

இதில் ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை இலவச சிறப்பு சிகிச்சை முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்து, குடும்ப நல விளக்கக் கையேடு மற்றும் கைப்பிரதிகளை வெளியிட்டார். இந்த விழிப்புணர்வு வாகனம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 34 ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் 5,531 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை இலக்கான 300 முழுமையாக எய்திட திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையானது, 100 சதவீதம் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாதது. மேலும், மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. கடின உழைப்பிற்கு தடையில்லாதது. கருத்தடை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு ரூ.1,100 மற்றும் உதவிக்கு வருபவர்களுக்கு ரூ.200ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்று அவதிப்படுவதைவிட பிறந்ததை காப்பாற்றி இனி பிறப்பதைத் தவிர்த்து அளவான குடும்பம் அமைத்து ஆனந்தமாய் வாழ தந்தையர்கள் இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொள்ளலாம் என குடும்ப நலத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்விழாவில், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, துணை இயக்குநர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) கவிதா, அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், மற்றும் மாவட்ட குடும்பநல செயலக மக்கள் கல்வி தகவல் தொடர்பு அலுவலர் சங்கரசுப்பு உட்பட குடும்ப நலப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளையும் , நாளை மறுநாளும் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளையும் , நாளை மறுநாளும் சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி, சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025ன் ஒரு பகுதியாக நாளை (23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24ம் தேதி) (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் 2,222 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் பொது மக்களிடமிருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற சேவைகளை பெற, இச்சிறப்பு முகாமினை வாக்காளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கபாடி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பு

தேசிய அளவில் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கபாடி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பு

தேசிய அளவில் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கபாடி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பு

தேசிய அளவில் 17 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கான கபாடி போட்டிகள் மத்திய பிரதேசம் நரசிங்கப்பூரில் கடந்த 16 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
 முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் பங்கேற்ற தமிழக அணிக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் கமல் பயிற்சியாளராகவும்,  அணியின் தலைமை மேலாளராகவும், அரசு பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் செந்திலாதிபனும் பொறுப்பேற்றிருந்தனர். 

இறுதிப் போட்டியில்,
இந்திய அளவில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் அரியானா மாநில அணியை எதிர்த்து விளையாடிய தமிழக கபாடி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்து, இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. இதனைத் தொடர்ந்து தமிழக அணியில் பங்கேற்று ஈரோடு திரும்பிய வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபாடி கழகம் சார்பில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பிற்கு தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். வீராங்கனைகளுக்கு பொன்னாடை அணிவித்தும் மலர் கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய , அணியின் மேலாளர் செந்திலாதிபன் கூறும் போது, தற்போது இரண்டாம் இடத்தை பெற்றிருந்தாலும் வரும் காலங்களில் தமிழக அணி நிச்சயமாக முதலிடம் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமெச்சூர் கபாடி கழகத்தின் துணைத் தலைவர்கள் ஆண்டாள் குமார், உத்திராஜ் மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வியாழன், 21 நவம்பர், 2024

ஓய்வூதியர்களுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

ஓய்வூதியர்களுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஓய்வூதியர்களுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயமாலை மேரி மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி உட்பட மாவட்ட நிர்வாகிகள் வைத்தியலிங்கம் செல்லதுரை மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து முழக்கமிட்ட அவர்கள் அரசாணை 343.. ஐ ரத்து செய்து ஓய்வூதிய இயக்குனரகத்தை தொடர்ந்து தனித்துறையாகவே தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும், ஓய்வூதிய இயக்குனர் அகத்தை கருவூலத்துறையோடு இணைக்கும் முதல்வர் தனது இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் மற்றும் ஓய்வூதியர் நலனுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசை கண்டிக்கிறோம் எனவும்தமிழகம் முழுவதும் நடைபெறும் தங்களது இந்த கோரிக்கையை குறித்து தமிழக அரசு செவிசாய்கள் மறுக்கும் பட்சத்தில் மாநில குழு எடுக்கும் முடிவை பொருத்து அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்று அந்த சங்கத்தில் மாநில செயலாளர் ஜெயமாலை மேரி சேலத்தில் தெரிவித்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளானூர் கலந்து கொண்டனர்.