சனி, 30 நவம்பர், 2024

கோபி அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் கைது

கோபி அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் கைது

கோபி அருகே நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த கூலித்தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பாளையம், கீரிப்பள்ளம் தோட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்லால் (வயது 55). விவசாயியான இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் தோட்டத்து வீட்டில் மோகன்லால் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ளார். இதனைக் கண்டு நாய் குரைத்துள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்த மோகன்லால் தன் வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார். 


அப்போது, தோட்டத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். திடீரென அந்த நபர் மோகன்லாலை வெட்ட வந்ததாக தெரிகிறது. இதனால் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள மோகன்லால் தான் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியால் அந்த நபரை 2 முறை சுட்டார்.

இதில் அந்த நபரின் மார்பு, வயிறு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அந்த நபர் இறந்தார். இதைக்கண்டு பயத்தில் மோகன்லால் அங்கிருந்து தலைமறைவானார். நள்ளிரவில் துப்பாக்கி சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோபி டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர், செங்கோட்டையன் காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கண்ணன் (வயது 50) என்பது தெரிய வந்தது. எதற்காக கண்ணன் நள்ளிரவில் மோகன்லால் தோட்டத்திற்கு வந்தார் என தெரியவில்லை. இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மோகன்லாலை தேடி வந்தனர்.

இதனிடையே, கண்ணன் சுட்டு கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்று (நவ.30) காலை கொளப்பலூர் ரோட்டில் உள்ள மொடச்சூர் சந்தை அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று கண்ணனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த மோகன்லாலை கோபி போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
கொடுமுடியில் துவரை நாற்று நடவுப் பணி: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

கொடுமுடியில் துவரை நாற்று நடவுப் பணி: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கொடிமுடி வட்டாரம் மூர்த்திபாளையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ், துவரை நாற்று நடவு செய்யப்பட்டிருந்ததை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கொடிமுடி வட்டாரம், மூர்த்திபாளையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பூபதி என்பவர் 1 எக்டர் பரப்பளவில் ரூ.9 ஆயிரம் மானியத்தில் CO-8 துவரை நாற்று நடவு செய்திருந்ததை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, மானியத்திட்டங்கள், ஊடுபயிர் சாகுபடி வருவாய் குறித்து பயனாளியிடம் கலந்துரையாடினார்.

மேலும், விதை, திரவ உயிர் உரங்கள், பயறு வகை நுண்ணூட்டம் வழங்கப்பட்டுள்ளது எனவும், புதிய தொழில்நுட்பமாக துவரை நாற்று நடவு செய்து வருவதாகவும், உழவு செய்தல், நாற்று நடுதல், டி-அம்மோனியம் பாஸ்பேட் தெளித்தல் போன்ற பணிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாகவும், இத்திட்டம் மிகுந்த இலாபகரமாக உள்ளதாகவும் பயனாளி தெரிவித்தார்.

தொடர்ந்து, இச்சிப்பாளையம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் கீழ் திரு.மோகன்ராஜ் என்பவர் மொத்த மதிப்பு ரூ.3.37 லட்சம் மானியமாக ரூ.87 ஆயிரத்து 500ல் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைந்திருந்ததையும் நேரில் சென்று பார்வையிட்டு, பயனாளியுடன் திட்டத்தின் பயன்கள் குறித்து அவர் கலந்துரையாடினார்.

முன்னதாக, கொடுமுடியில் பொதுப்பணித்துறையின் சார்பில் பாரம்பரியக் கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் பயணியர் மாளிகை ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) ரா.ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் யாசர் அராபத், வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் முத்துக்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


வெள்ளி, 29 நவம்பர், 2024

விருதுகளை அள்ளி குவித்து வரும் சேலத்தை சேர்ந்த சமூக சேவையாளர் உலக சாதனை .

விருதுகளை அள்ளி குவித்து வரும் சேலத்தை சேர்ந்த சமூக சேவையாளர் உலக சாதனை .

  
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

விருதுகளை அள்ளி குவித்து வரும் சேலத்தை சேர்ந்த சமூக சேவையாளர் உலக சாதனை .

சேலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் நாகா அரவிந்தன். இவர் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனராகவும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையில் தலைவராகவும் இருந்து வருவதோடு தன்னலன் பாராமல் எப்பொழுதும் பிறர் நலனுக்காக ஏராளமான சமூக சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார். இவரின் இந்த செயலை பாராட்டி ஏராளமான விருதுகள் பெற்று குவித்து வந்துள்ளார் டாக்டர் நாதா அரவிந்தன்.
இந்த நிலையில் அவரின் இந்த சிறந்த சமூக சேவை மற்றும் ஏழை எளியவர்களுக்கு உதவும் குணத்தை பாராட்டி, யு எஸ் ஏ புக் ஆப் ஓல்ட் ரெக்கார்டு நிறுவனத்தின் சார்பில் உலக சாதனைக்கான சான்றிதழ் சேலத்தை சேர்ந்த டாக்டர் நாகா.  அரவிந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
அந்தச் சான்றிதழில் நாகா.ஆர்.  அரவிந்தன் சமூக சேவை.  தமிழ்நாடு இந்தியா என்றும்,  இந்தச் சான்றிதழ் நாக ஆர்.. அரவிந்தன் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் சமூக சேவைக்கான ஏற்றுக்கொள்ளும் பங்களிப்புகளை அங்கீகரித்து, 15 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு சமூக சேவை செய்து வருகிறார். 
உங்கள் கடின உழைப்பு.  உறுதியும் பேரார்வமும் சிறந்த தரத்தை அமைத்துள்ளன.  உங்கள் சாதனைகளை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
 USA Book of World Records.28.11.2024.
 அலோக் குமார் சர்வதேச தலைவர் இந்தியா. 
டாக்டர்.  iven gacnia குரோஷியாவின் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் குடியரசு. என்றும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த சமூக சேவைக்காகவும் ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மையை பாராட்டியும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த உலக சாதனையாளர் விருது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தொடர்ந்து தன்னால் முடிந்தவரை இந்த சமூக சேவையை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் என்று டாக்டர் நாக அரவிந்தன் அவர்கள் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் திறக்கப்பட்ட அதிநவீன உடற்பயிற்சி மையத்தில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் உடற்பயிற்சி மேற்கொண்டு மகிழ்ச்சி..

சேலத்தில் திறக்கப்பட்ட அதிநவீன உடற்பயிற்சி மையத்தில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் உடற்பயிற்சி மேற்கொண்டு மகிழ்ச்சி..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் திறக்கப்பட்ட  அதிநவீன உடற்பயிற்சி மையத்தில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் உடற்பயிற்சி மேற்கொண்டு மகிழ்ச்சி.. 

சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே அதிநவீன முறையில் ஆகில்ஸ் பிட்னெஸ் என்கின்ற யுனி செக்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு  நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடனும் துவக்கப்பட்ட இந்த புதிய அதி நவீன உடற்பயிற்சி  மையத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு திறந்து வைப்பதாக இருந்தது.
அன்று வராத காரணத்தின் காரணமாக இன்று அதிநவீன உடற்பயிற்சி மையத்தினை பார்வையிட்டார் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன். இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தலைமை தாங்கினார். 
பயிற்சி பார்வையிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள அதிநவீன பயிற்சி கருவிகள் குறித்து அதன் உரிமையாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருக்கு உடற்பயிற்சி மைய உரிமையாளர் நினைவு பரிசுகளை வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார். பின்னர் உடற்பயிற்சி மையம் நன்கு வளர்ச்சி பெற தனது வாழ்த்துக்களை பதிவு செய்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர்.
சேலம் மாநகரில் எத்தனையோ உடற்பயிற்சி நிலையங்கள் இறந்தபோதிலும், தற்பொழுது சேலத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆகில்ஸ் ஃபிட்னெஸ் யூனி செக்ஸ் பயிற்சி மையத்தில், வழக்கமான உடற்பயிற்சிகளுடன், கூடுதலாககொழுப்பு குறைப்பு, கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, தசை பயிற்சி, தனிப்பட்ட பயிற்சி, உணவு திட்டமிடல் ஆகிய பயிற்சிகளும், இது போக காயம் மீட்பு, தரமான உபகரணங்கள், சிறந்த பயிற்சி, விளையாட்டு சார்ந்த பயிற்சி, அதிகரித்த உடற்பயிற்சி மற்றும் ஆற்றல் நிலைகள், பாடி பில்டர் & பவர் லிஃப்டிங் பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளதாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தெரிவித்தார். 
அதுமட்டுமல்லாமல் அதிகப்படியாக தங்களது உடலை வருத்தி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சூழல் தற்பொழுது எழுந்துள்ள நிலையில், இது போன்ற நிகழ்வு நிகழாமல் இருக்க கூடுதல் பயிற்சியாளர்களை வைத்து உன்னிப்பாக கவனம் செலுத்த உள்ளதாகவும்,  பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி நிலையம் மேற்கொள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த பயிற்சி மையத் துவக்க விழாவில் 31வது வார்டு திமுக  செயலாளர் சையது இப்ராஹிம், 32வது வார்டு செயலாளர் கபிர், திமுக நிர்வாகி ஓதூர்ரஹ்மான், கரீம், முகமது ஹாஜிம், காங்கிரஸ் நிர்வாகிகள் குமரேசன் மற்றும் யூசுப் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில்சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்த வாலிபர் கைது

ஈரோட்டில்சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்த வாலிபர் கைது

ஈரோடு வெண்டிப்பாளையம் பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் தினேஷ் (வயது 27). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து விட்டு ஈரோட்டில் உள்ள ஸ்வீட்ஸ் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். சமூக வலைதளம் மூலமாக தினேசுக்கு பிளஸ்-1 படிக்கும் 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி தினேஷ் அந்த சிறுவனை ஓரின சேர்க்கைக்காக வெண்டிப்பாளையம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இதை அறிந்த அந்த சிறுவன் தினேசிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு சென்றார். பின்னர் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர். அதன்பேரில் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தினேசை, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் கடைகள் அடைப்பு; ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் கடைகள் அடைப்பு; ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் கட்டிடங்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரி உயர்வு இன்று (நவ.29) முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் பதிவு பெற்ற சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று வணிகர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால் இந்த வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வில்லை.

மேலும் மாநில அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் சொத்துவரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் மின் கட்டண உயர்வால் கடும் அவதிப்படுவதாகவும், அதனை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஈரோட்டில் இன்று (நவ.29) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 75 சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி, இன்று (நவ.29) ஈரோட்டில் ஜவுளி சந்தைகள் மூடப்பட்டன. சிறிய ஜவுளிகடைகளில் இருந்து பெரிய ஜவுளி நிறுவனங்கள் வரை கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதே போல மஞ்சள் சந்தைகளும் மூடப்பட்டன. மேலும் எலக்ட்ரிக்கல் கடைகள், அரிசி மண்டிகள், நகைக் கடைகள், உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகளான பன்னீர் செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, சத்தி சாலை, ஆர்.கே.வி.சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.இதன் காரணமாக ஈரோட்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. கல்வியின் பெருமை குறித்து புகழாரம் சூட்டிய சுற்றுலாத்துறை அமைச்சர் உட்பட சிறப்பு விருந்தினர்கள்......

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. கல்வியின் பெருமை குறித்து புகழாரம் சூட்டிய சுற்றுலாத்துறை அமைச்சர் உட்பட சிறப்பு விருந்தினர்கள்......

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. கல்வியின் பெருமை குறித்து புகழாரம் சூட்டிய சுற்றுலாத்துறை அமைச்சர் உட்பட சிறப்பு விருந்தினர்கள்......

தமிழக அரசின் எத்தனையோ நல்ல பல திட்டங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விடையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தின் பயனாக லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் பயன் பெற்று வருகின்றனர் என்பது மறுக்க முடியாத ஒன்று. 
அந்த வகையில் தமிழக அரசின் இலவச விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சேலம் சாரதா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியை சேர்ந்த +1 பயிலும் மாணவர்கள் 960 பேருக்கு வழங்கும் விழாவிற்கு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தலைமை வகித்தார். விழாவில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி, சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள், சேலம் அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்த இந்த விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் பேருரை ஆற்றினார். 
அப்பொழுது பேசிய அவர், கல்வி ஒன்றே ஒவ்வொருவரையும் இந்த சமுதாயத்தில் முன்னிலைப்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள் சேலம் மாவட்டத்திற்கு வந்து சென்று இருந்தாலுமே கூட இரண்டாவது சேலம் மாவட்ட பெண் ஆட்சியர் என்ற பெருமையை டாக்டர் பிருந்தா தேவி அவர்கள் பெற்றுள்ளார் என்றும் இதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள முக்கிய அதிகாரிகளில் பெண்களுக்கு மட்டுமே அந்த பதவிகளை அலங்கரித்து வருவதாக குறிப்பிட்டவர் இதற்கு காரணம் கல்வி மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு மாணவர்களுக்கும் கல்வி எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதற்காக மட்டுமே தாய் உள்ளத்தோடு தமிழக முதல்வர் அவர்கள் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கி நாள் ஒன்றுக்கு தமிழக முழுவதும் 40 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருவதாக பெருமையுடன் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு என்று செயல்படுத்து வரும் திட்டங்கள் ஒவ்வொன்றையும் கனடா நாட்டு அதிபர் தொடர்ந்து கண்காணித்து தமிழகத்தில் நிறைவேற்ற வரும் திட்டங்கள் அனைத்தையும் அங்கு நிறைவேற்றி வருவது பெருமை கூறியது என்றும், இது மட்டும் அல்லாமல் ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி பயின்று வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலமாக ஏராளமான திட்டங்களை வகுத்துள்ள தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்தி தமிழக மாணாக்கர்கள் ஒவ்வொருவரும் கல்வியில் முன்னேறி பெற்றவர்களுக்கும் தமிழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 960 மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் இலவச விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். 
இந்த விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியின் நிர்வாக அதிகாரிகள் உட்பட பள்ளியில் தலைமை ஆசிரியை மாணாக்கர்கள் அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.