திங்கள், 2 டிசம்பர், 2024

மறைந்த திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்.

மறைந்த திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்.


சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மறைந்த திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்.

தமிழகத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பின்னர் குணச்சித்திர வேடம் காமெடி என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை சில்க் ஸ்மிதா என்றால் அது மிகையாகாது. திரையுலகில் நன்கு வளர்ந்து வந்த காலகட்டத்தில் திடீரென அவர் உயிரிழந்தார். இது தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாகவே இருந்தது. 
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கோட்டையில் சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர்கள் ஒன்றிணைந்து நடிகை சில்க் ஸ்மிதா அவர்களின் தீவிர ரசிகர்கள் அவரது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். 
நடிகை சில்க் ஸ்மிதா ரசிகர் மன்ற தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், செயலாளர் சுரேஷ் பொருளாளர் சக்தி மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு உச்சகமாக கொண்டாடி மகிழ்ந்ததோடு ஒருவருக்கு ஒருவர் கேக்குகளை ஊட்டி மகிழ்ந்தனர்.

ஈரோட்டில் ஆட்சியர் தலைமையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஈரோட்டில் ஆட்சியர் தலைமையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (டிச.2ம் தேதி) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் எச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அருணா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) கவிதா, மாவட்ட திட்ட மேலாளர் (மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு) துரைசாமி உட்பட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பலூன் டெக்கரேசன் தொழிலை, தமிழ்நாடு அரசு சிறுதொழிலாக அங்கீகரிக்க வேண்டும்: தமிழ்நாடு பலூன் டெக்கரேசன் சங்கம் கோரிக்கை

பலூன் டெக்கரேசன் தொழிலை, தமிழ்நாடு அரசு சிறுதொழிலாக அங்கீகரிக்க வேண்டும்: தமிழ்நாடு பலூன் டெக்கரேசன் சங்கம் கோரிக்கை

பலூன் டெக்கரேசன் தொழிலை, தமிழ்நாடு அரசு சிறுதொழிலாக அங்கீகரிக்க வேண்டும்: தமிழ்நாடு பலூன் டெக்கரேசன் சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு பலூன் டெக்கரேட்டர் சங்க அறிமுக விழா ஈரோட்டில் நடைபெற்றது. தமிழ்நாடு பலூன் டெக்கரேட்டர் சங்க அறிமுக விழாவில், தமிழ்நாடு தலைவர் மணிகண்டன் பலூன் டெகரேட்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு மாவட்ட செயலாளர் அப்துல் கூறுகையில், எங்கள் தொழிலை சிறுதொழிலாக அங்கீகரிக்க வேண்டும். கடன் வசதி மற்றும் மானியம் உள்ளிட்டவற்றை அரசிடம் எதிர்பார்க்கிறோம்.

 தனியாக நலவாரியம் உருவாக்க வேண்டும். காப்பீடு, ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைவர் மணிகண்டன், திருப்பூர், கரூர், சேலம், கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட தலைவராக செல்வம், செயலாளராக அப்துல், பொருளாளராக ரமேஷ், துணை தலைவர் M.முகமது யாசின், தேர்வு செய்யப்பட்டனர்.
பவானி: அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து; 9 மாணவர்கள் காயம்

பவானி: அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து; 9 மாணவர்கள் காயம்

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 மாணவர்கள் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்ஏஎம் எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி தரப்பில் இயக்கப்படும் வாகனங்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மாணவர்களை ஏற்றி வருவது வழக்கம். அதேபோல், இன்று (டிச.2) காலை அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிக்கு சென்ற வாகனம் ஒன்னு 10க்கும் மாணவர்களை ஏற்றி சென்றுள்ளது.

இந்த வாகனத்தை அம்மாபேட்டையைச் சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பவர் ஓட்டினார். இந்நிலையில், அந்த பள்ளி வாகனம் அம்மாபேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் செல்லும் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை வழியாக சென்று கொண்டு இருந்தது.

அப்போது சாலையில் சிறிய அளவிலான வளைவில் திருப்பும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வலது புறம் சாலையை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த 6 மாணவிகள், 3 மாணவர்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர்.

இது பற்றி தகவல் கிடைத்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தங்களது குழந்தைகளை மீட்டு இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

தொடர்ந்து, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது நிலத்திற்கு செல்லும் வழி தரத்துறை ஆக்கிரமித்து தமிழ்நாடு மின்வாரியத் துறையினரால் அமைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்பார்மறை அகற்ற வேண்டி, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக SC பூபதி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது நிலத்திற்கு செல்லும் வழி தரத்துறை ஆக்கிரமித்து தமிழ்நாடு மின்வாரியத் துறையினரால் அமைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்பார்மறை அகற்ற வேண்டி, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக SC பூபதி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தனது நிலத்திற்கு செல்லும் வழி தரத்துறை ஆக்கிரமித்து தமிழ்நாடு மின்வாரியத் துறையினரால் அமைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்பார்மறை அகற்ற வேண்டி, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக SC பூபதி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

சேலம் கிழக்கு மாவட்ட பாஜக எஸ்சி அணி தலைவர் பூபதி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் மாசிநாயக்கன்பட்டி அருகே உள்ள காட்டுவளவு பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் தமிழக மின்வாரியத்துறை தனது அனுமதியின்றி எனது வழித்தடத்தை அத்துமீறி ஆக்கிரமித்து டிரான்ஸ்பார்மரை அமைத்துள்ளது. இது ஒரு புறம் இருக்க அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் எங்களது நலத்திற்கு செல்லும் வழித்தடத்தில் அரசு அனுமதி இல்லாமல் தேங்காய் ஓட்டினை எரித்து அதனை பவுடர் தயார் செய்யும் நிறுவனம், பிளாஸ்டிக்கை எரித்து பை தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதனை கண்டித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பாஜக நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் உள்ள நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வெறும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
தனது புகார் குறிப்பு கடந்த செப்டம்பர் 30 மற்றும் கடந்த அக்டோபர் 11 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் மட்டும் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தன்னை அலை கழித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் தனது விவசாய நிலத்திற்கு செல்ல முடியாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருந்து வரும் தனக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எனது மனுவனை கருணையுடன் பரிசீலனை செய்து அரசு அனுமதி இல்லாமல் எனது வழித்தடத்தில் கம்பெனி வைத்து நடத்தி வரும் சீனிவாசன் அவர்களின் கம்பெனியையும் அகற்றும் படியும் அல்லது மேற்படி தனது வலைத்தளத்தில் அமைத்துள்ள டிரான்ஸ்பார்மர் அகற்றி வேறு இடத்தில் அமைத்துக் கொள்ளும் படியும் எனது நிலத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மறை அகற்றியும் எனது நிலத்திற்கு நான் சென்றுவரும் வழித்தடத்தினை மீட்டு கொடுத்து உதவும்படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். 
இதை எடுத்து காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் சமூக முடிவு எட்டப்பட்டதன் அடிப்படையில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவர் பூபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். 
இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

ஈரோட்டில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு

ஈரோட்டில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு

ஈரோடு மாநகரா ட்சிக்குட்பட்ட சூளை, பாரதிநகரில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஒரு காலி இட த்தில் கடந்த சில நாட்களாக ரசாயன கழிவுகள் மருத்துவ கழிவுகளை வாகனங்களில் வந்து சிலர் கொட்டி விட்டு செல்கின்றனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடமும் இப்பகுதி மக்கள் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். 
இந்நிலையில் நேற்று இரவு ரசாயன கழிவுகளை ஏற்றி வந்த லாரி பாரதி நகர் பகுதியில் கழிவுகளை கொட்ட வந்துள்ளது. கழிவுகளை கொண்டு வந்த லாரி அங்குள்ள சேற்றில் சிக்கி நகர முடியாமல் இருந்துள்ளது. லாரியின் டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை அங்கிருந்து நகற்ற முடிய வில்லை.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை அப்பகுதி மக்கள் அந்த வழியாக சென்றபோது லாரி ஒன்று சேற்றில் சிக்கிருப்பதை பார்த்து லாரி அருகே சென்று பார்த்தபோது லாரி க்குள் கழிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் திரண்ட வந்து அந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் விஏஓ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போரா ட்டம் நடத்திய பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இனி இந்த பகுதியில் கழிவுகள் கொட்டாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். மேலும் அந்த லாரி டிரைவர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஈரோட்டில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலை வழங்கல்

ஈரோட்டில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலை வழங்கல்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழங்கிய கல்வி உதவித்தொகை காசோலை வழங்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கிய காசோலையை பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன் இன்று வழங்கினார். 

பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 40 ஆயிரமும், கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ஒரு லட்சமும், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 15,000 மற்றும் 10 ஆயிரம் மொத்தமாக 9,40,000 ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வழங்கப்பட்டு அதன் காசோலையை இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து விண்ணப்பித்த 28 மாணவ மாணவியர்களுக்கு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி ராஜன் வழங்கினார். 

இந்த காசோலையை வழங்கிய மாநில தலைவர் அவர்களுக்கு இன்று நடைபெற்ற கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் கூறுகையில்,  தமிழக அரசு பேரிடர் காலத்தில் தற்பொழுது ஏற்பாடு செய்திருக்கக்கூடிய பணிகள் மிகச் சிறப்பாகவும் பொது மக்களுக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தும் வகையில் இல்லாமல் இருந்தது பாராட்டுக்குரியது. 

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் மற்றும் அமைச்சர் பெருமக்களையும், அரசுத்துறை அதிகாரிகளையும் சுகாதாரத் துறை அதிகாரிகளையும் குறிப்பாக தூய்மை பணியாளர்களையும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பாராட்டுகின்றோம். 

இந்த கூட்டத்தில், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் குளம் எம் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எல் பி பாலசுப்ரமணியம், வட்டார தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்,

நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மாணவ, மாணவிகளோடு சேர்ந்து பெற்றோர்களும் வருகை தந்து மாநில தலைவர் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.