சனி, 7 டிசம்பர், 2024

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

 
சேலம்.

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாளில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் சுந்தர் லாட்ஜ் அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவருசனைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தமிழர் யுவராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் வரதராஜன் செந்தில் முருகன் பழனிவேல் புவனேஸ்வரி சண்முகம் கோகுல் மணிகண்டன் அபுதாஹிர் நந்தகுமார் கவியரசன் ராதா மற்றும் மீனா  உள்ளிட்ட பலர் உடன் உடன் இருந்தனர்.

வெள்ளி, 6 டிசம்பர், 2024

ஈரோட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

ஈரோட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

பெங்கல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.4.34 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மினி லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

பெங்கல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மினி லாரி வாகனத்தினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரலத்துல்லா நேற்று (டிச.5) கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதில் 1,460 பிரட் பாக்கெட்கள், 3,990 குடிநீர் பாட்டில்கள், 2,420 பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் 3,600 எண்ணிக்கையில் அரிசி, பருப்பு, கோதுமை மாவு, ரவை, எண்ணெய், உப்பு உட்பட 11,470 எண்ணிக்கையில் ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறப்படும் நிவாரண பொருட்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளை மார்ச்-ஏப்ரல் 2025ல் தேர்வு எழுத விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் வரும் டிச.17ம் தேதி வரை (08.12.2024 மற்றும் 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. பவானி-638301, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை - 638052, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம்-638402, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. ஈரோடு-638001, நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி கோபிசெட்டிபாளையம் -638452, நகரவை உயர்நிலைப்பள்ளி இடையன்காட்டுவலசு, ஈரோடு-638001, ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளி கொல்லம்பாளையம், ஈரோடு-638002 ஆகியசேவை மையங்களை நேரில் அணுகி தேர்வுக் கட்டணத்தொகை மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்ற பத்திரிக்கை செய்தி நாளிதழ்களில் வெளியிட அனுமதி பணிந்து வேண்டப்படுகிறது.
ஈரோட்டில் 947 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் 947 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாவட்டம் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில், பல்வேறு துறைகளின் சார்பில் 947 பயனாளிகளுக்கு ரூ.10.05 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (டிச.,6) வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 554 பயனாளிகளுக்கு ரூ.4.93 கோடி மதிப்பீட்டிலும், வருவாய்த்துறையின் சார்பில் 125 பயனாளிகளுக்கு ரூ.95.60 லட்சம் மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.65.04 லட்சம் மதிப்பீட்டிலும், முன்னோடி வங்கி சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.15.22 லட்சம் மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.16.02 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.44 ஆயிரம் மதிப்பீட்டிலும் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

தொடர்ந்து, வேளாண்மை- பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்-உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டிலும், வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை, ஈரோடு விற்பனை குழு சார்பில் 5 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு தொழில் வணிக துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.19.54 லட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 82 பயனாளிகளுக்கு ரூ.61.17 லட்சம் மதிப்பீட்டிலும் அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கும், தொழிலாளர் துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.36.15 லட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1.94 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 947 பயனாளிகளுக்கு ரூ.10.05 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்து, மல்லிகை அரங்கில், தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக கோகுலம் மருத்துவமனையில் சிறு துளை இருதய அறுவை சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக கோகுல மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி தகவல்

சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக கோகுலம் மருத்துவமனையில் சிறு துளை இருதய அறுவை சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக கோகுல மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி தகவல்

சேலம்.

சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக கோகுலம் மருத்துவமனையில் சிறு துளை இருதய அறுவை சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக கோகுல மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி தகவல்

சேலம் ஐந்து ரோடு பகுதியில் கோகுலம் மருத்துவமனை அமைந்துள்ளது கடந்த 39 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன மருத்துவத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்து வருகிறது. 
கோகுல மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் மருத்துவர் அர்த்தனாரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது இருதய அறுவை சிகிச்சை சிறு துளை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது இது போன்ற அறுவை சிகிச்சைகள் பெரிய நகரங்கள் மட்டுமே உள்ளன குறிப்பாக சென்னை கோவை உள்ளிட்ட ஒரு சில நகரங்கள் மட்டுமே உள்ள நிலையில் சேலத்திற்கு முதன் முறையாக சிறு துளை இருதய அறுவை சிகிச்சை தொடங்கப்படவுள்ளது வருகின்ற எட்டாம் தேதி இந்த சிகிச்சை முறையை பிரிவை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகநாதன் தொடங்கி வைக்கிறார்
இந்த சிறு துளை அறுவை சிகிச்சை என்பது இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு அதிநவீன முறையில் வழி இரத்தப்போக்கு இல்லாமல் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை என்றும் இந்த அறுவை சிகிச்சை முடிந்த ஒரு சில தினங்களில் அன்றாட பணிகளுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார் குறிப்பாக மாரடைப்புக்கான பைபாஸ் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்களுக்கு சிறு துளை அறுவை சிகிச்சை மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறினார் இந்த சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் எனவும் தெரிவித்தார் பேட்டியின் போது கோகுல மருத்துவமனையில் மருத்துவர்கள் விஜய் ஆனந்த் நாகூர் மீரான் பிரபாகர் செல்லம்மாள் ராஜேஷ், ஜெயதேவ் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு தினம். பீமா சங்கம் மற்றும் சேலம் கோட்ட ஓரியண்டல் இன்சூரன்ஸ் சார்பில் நினைவஞ்சலி.

அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு தினம். பீமா சங்கம் மற்றும் சேலம் கோட்ட ஓரியண்டல் இன்சூரன்ஸ் சார்பில் நினைவஞ்சலி.

சேலம். 

அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு தினம். பீமா சங்கம் மற்றும் சேலம் கோட்ட ஓரியண்டல் இன்சூரன்ஸ் சார்பில் நினைவஞ்சலி.

இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகன்,  ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்கான போராளி அவர்களின் 68-வது நினைவு நாளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்கான போராட்ட களத்தில் முன்னின்று செயலற்ற உறுதி ஏற்போம் என்பதை வலியுறுத்தி பீமா சங்கம் மற்றும் சேலம் கோட்ட ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில், 
சேலம் கோட்ட மேலாளர் சுந்தரம் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பீமா சங்கத்தின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி உறுதி மொழியினை வாசித்தார். 
நிகழ்ச்சியில் ரத்தினவேல் தினேஷ் அருணாச்சலம் சங்கீதா இந்துமதி சசி மற்றும் புத்த ட்ரஸ்ட் அமைப்பைச் சார்ந்த போதி மாதவன் பொன்னம்பலம் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா....1307 மாணவ மாணவிகளுக்குபட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா....1307 மாணவ மாணவிகளுக்குபட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம்.

சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா....1307 மாணவ மாணவிகளுக்குபட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு 10 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 49 மாணவ மாணவிகள் மற்றும் இளநிலை பட்டதாரிகள் 994, முதுநிலை பட்டதாரிகள் 303 பேர் உட்பட 1307 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைதொடர்ந்து சிறப்புவிருந்தினர்கள் பேசும்பொழுது, சிறப்பான கல்வி சேவையை அர்ப்பனித்த பேராசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து மேலும் சிறந்த உள் கட்டமைப்பு, மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் பல விருதுகளை பெற்றுள்ளது என்றனர். மேலும் சர்வதேச தரத்தில் செயல்பட்டுவரும் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் எங்கு சென்றாலும் தனிச்சிறப்போடு விளங்கி கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத்தந்து வருகிறார்கள் என்றும் இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்குகேற்ப தங்களின் ஆற்றலை நாள்தோறும் வளர்த்து கொண்டு திறம்பட செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார். 
இந்த விழாவில் சோனா கல்விக்குழுமத்தின்  முதல்வர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.