வியாழன், 2 ஜனவரி, 2025

சென்னையில் கைது செய்யப்பட்ட பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணியை விடுதலை செய்ய வலியுறுத்தி சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது.

சென்னையில் கைது செய்யப்பட்ட பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணியை விடுதலை செய்ய வலியுறுத்தி சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சென்னையில் கைது செய்யப்பட்ட பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணியை விடுதலை செய்ய வலியுறுத்தி சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது.

சென்னைஅண்ணா பல்கலை கழக பெண் பாதிப்பை கண்டித்து போராட்டம் செய்யவிருந்த பசுமை தாயகத் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சேலத்தில் சட்டமன்ற உறுப்பினர் இ.ரா.அருள் அவர்கள் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போராட்ட செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். 
மாவட்டத் தலைவர் கதிர் ராஜா ரத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பு தலைவர் வக்கீல் குமார், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.பி சதாசிவம், மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் பாப்பா கணேசன், பகுதி செயலாளர்கள் சின்னசாமி, அண்ணாமலை, சோடா சண்முகம், ஏ. கே நடராஜன், சிவா, கணேசன், சமயா,   மாவட்டத் துணைச் செயலாளர் சேகர், சங்கர், செவ்வ ரவி, பூக்கடை சுந்தரம், ஆட்டோ சின்னத்தம்பி, இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார், அன்புமணி தம்பிகள் படை செயலாளர் இளவரசன் ஐயர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ஒரு நாள் மாணவியர் அனுபவம் நிகழ்வு. கல்லூரி வாழ்க்கை வாய்ப்பை இழந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்நாள் கனவினை நிறைவேற்றிக் கொண்டனர்.

சேலத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ஒரு நாள் மாணவியர் அனுபவம் நிகழ்வு. கல்லூரி வாழ்க்கை வாய்ப்பை இழந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்நாள் கனவினை நிறைவேற்றிக் கொண்டனர்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

சேலத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ஒரு நாள் மாணவியர் அனுபவம் நிகழ்வு. கல்லூரி வாழ்க்கை வாய்ப்பை இழந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்நாள் கனவினை நிறைவேற்றிக் கொண்டனர். 

சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில், ஒரு நாள் மாணவியர் அனுபவம் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் இன்று தொடங்கியது. தனித்துவமான மற்றும் அழகான அர்த்தமுள்ள இந்த நிகழ்வில் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்த 18 வயது முதல் 60 வயது உடைய பெண்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்நாள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருந்த இந்த நிகழ்வினை ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி குழுமத்தின் தலைவர் கைலாசம், தாளாளர் செந்தில்குமார், சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பங்கேற்பாளர்கள் வருகையால் கல்லூரி வளாகம் உற்சாகத்துடன் கலை கட்டியது என்றே கூறலாம்.
பலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறியது. மேலும் அவர்கள் மாணவியராக இருக்கும் மகிழ்ச்சியை மீண்டும் அனுபவித்தனர். அவர்கள் வாழ்க்கையில் நினைவில் கொள்ளத் தக்க ஒரு நாளாக இந்த நாள் அவர்களுக்கு பொன்னாலாக அமைந்திருந்தது என்பது நிதர்சனம். 
பங்கேற்பாடுகளுக்கு துடிப்பான கல்லூரி அனுபவத்தை வழங்குவதற்காக இந்த நாள் மிகவும் கவனமாக நடத்தப்பட்டது. குறிப்பாக வகுப்பறையில் கற்றல் அனுபவம், கேண்டீன் உரையாடல்கள், நூலக படிப்பு, திறன் அமர்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் முதல் நாளான இன்று  நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தற்பொழுதைய கல்லூரி மாணவர்கள் ஆகவே மாறி ஒருவருக்கொருவர் இயல்பாக பழகி தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமல்லாமல் பலருக்கு இந்த நாள் ஆசையை நிறைவேற்றுவதற்கான நாள் மட்டும் அல்ல. கற்றல் மற்றும் மகிழ்ச்சிக்கு வயது வரம்புகள் இல்லை என்ற எண்ணத்தை உண்டாக்கும் வகையில் அமைந்தது என்றே கூறலாம்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விதிகளை மீறிய 9,874 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் விதிகளை மீறிய 9,874 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டன. குறிப்பாக சாலை விதி மீறல்கள் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 1,76,940 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 கோடியே 11 லட்சத்து 15 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

11,637 ஒட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரபோக்குவரத்து அலுவலங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதில், 9,874 ஒட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் 2024ம் ஆண்டில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் மீது 8,006 அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சாலை வாகன விபத்து வழக்குகளில் 2,396 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் 2,214 வழக்குகளாக குறைக்கபட்டு சாலை விபத்துகள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வெகுவாக சாலை விபத்துகள் குறைக்கபட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதன், 1 ஜனவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக பெருந்துறை, கவுந்தப்பாடி நகராட்சிகள், முகாசிபிடாரியூர் பேரூராட்சி உருவாக்கம்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக பெருந்துறை, கவுந்தப்பாடி நகராட்சிகள், முகாசிபிடாரியூர் பேரூராட்சி உருவாக்கம்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக ஐந்து அரசாணைகள் நேற்று (ஜன.1) வெளியிடப்பட்டது.

அதன்படி, மக்கள் தொகை, வணிகம், தொழில் வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக, ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம், 46 புதூர், லக்காபுரம் ஆகிய 4 கிராம ஊராட்சிகளையும் ஈரோடு மாநகராட்சியுடன் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

பெருந்துறை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கவுந்தப்பாடி ஊராட்சியின் மக்கள்தொகை 40% அதிகரித்துள்ளதாலும், குடியிருப்புகளின் எண்ணிக்கை 79% அதிகரித்துள்ளதாலும், விவசாய நிலங்கள் 50%-க்கு கீழே உள்ளதாலும், இந்த ஊராட்சியின் நகர்ப்புறத் தன்மையைக் கருத்தில் கொண்டு கவுந்தபாடி ஊராட்சியுடன் சலங்கப்பாளையம் பேரூராட்சியினை இணைத்து நகராட்சி மன்றமாக அமைத்து உருவாக்கவும், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி மன்றத்தின் பதவிக் காலம் முடிந்த பின்னர், அப்பேரூராட்சியினை மேற்படி கவுந்தப்பாடி நகராட்சி மன்றத்துடன் இணைக்கப்பட உள்ளது.

பவானி நகராட்சியுடன் அருகே குருப்பநாயக்கன்பாலையம் ஊராட்சி இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் இப்பகுதிக்குக் கிடைக்கும். மேலும், இவ்வூராட்சி நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புற பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே, பவானி நகராட்சியுடன் இவ்வூராட்சியினை இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது.

கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன் வெள்ளாளபாளையம், மொடச்சூர், குள்ளம்பாளையம் மற்றும் பாரியூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் இப்பகுதிகளுக்குக் கிடைக்கும். மேலும், இவ்வூராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புற பண்புகளையும் கொண்டுள்ளன. எனவே. கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன் மேற்படி 4 ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியுடன் நல்லூர் மற்றும் நொச்சிகுட்டை ஊராட்சிகள் இணைக்கப்படுவதால் நகராட்சியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள். சேவைகள் இப்பகுதிகளுக்குக் கிடைக்கும். மேலும், இவ்வூராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புற பண்புகளையும் கொண்டுள்ளன. எனவே, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியுடன் மேற்படி 2 ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது.

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சி வேகமாக நகரமயமாக்கலை நோக்கி நகரும் ஊராட்சி மற்றும் ஊரக பகுதிக்கான தன்மை மிகவும் குறைவாக உள்ள நிலை (விளை நிலங்கள் 7 சதவீதம் மட்டுமே). எனவே, முகாசிபிடாயூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதேபோல், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், படவல்கால்வாய் ஊராட்சி, அம்மாபேட்டை பேரூராட்சியுடனும், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், அக்கரைகொடிவேரி ஊராட்சி பெரியகொடிவேரி பேரூராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது.
கேப்டன் முதலாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் பகுதியில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி. 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

கேப்டன் முதலாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் பகுதியில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி. 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
.
கேப்டன் முதலாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் பகுதியில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி. 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி குருபூஜை நிகழ்ச்சி தமிழக முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேமுதிக பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் பழைய பேருந்து நிலையம் அருகே  மறைந்த பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை மற்றும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இன்று கிச்சிப்பாளையம்  பகுதி செயலாளர் எம் பி விஜய்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேப்டனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 
அப்போது அவர் கூறும் போது பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி குருபூஜை சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது மாநகரில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேப்டன் குருபூஜை முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 10 இடங்களில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் கேப்டனின் குருபூஜை நாள் அனுஷ்டிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி அன்னதானம் வழங்கப்படும் என தெரிவித்தார் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு  அன்னதானம் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் செல்வகுமார் துணைச் செயலாளர் சீனிவாசன் மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் நாராயணன் சீனிவாசன் ஆரோக்கியசாமி கேப்டன் மன்ற செயலாளர் பன்னீர்செல்வம் மாவட்ட மகளிர் அணி ஜெயலட்சுமி பகுதி செயலாளர்கள் அம்மாபேட்டை செல்வம் கொண்டலாம்பட்டி செந்தில் குகை சேகர் செவ்வாய்பேட்டை தக்காளி ஆறுமுகம் கிச்சிபாளையம் பகுதி சபரி முஸ்தபா ஆசைத்தம்பி பிரதிநிதி காசி சத்தியமூர்த்தி கதிர்வேல் வார்டு செயலாளர்கள் 32 பிஸ்வா 40 முனியப்பன் 43 மனோகரன் 44 கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 31 டிசம்பர், 2024

ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள். தங்கக் கவசத்தில் அருள் பாலித்த கோட்டை மாரியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள். தங்கக் கவசத்தில் அருள் பாலித்த கோட்டை மாரியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள். தங்கக் கவசத்தில் அருள் பாலித்த கோட்டை மாரியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை கொண்டாடும் விதமாக இன்று சேலம் மாநகரில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை ஸ்ரீ  பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, காலை முதலே பல்வேறு மங்கல பொருட்களைக் கொண்டு நவகிரக நாயகி என்றும் சேலத்தில் உள்ள 18 பட்டிகளுக்கும்  அரசு என போற்றப்படும் மாரியம்மனுக்கு புத்தாண்டை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு, தங்க கவசம் சாத்தப்பட்டது. 
தொடர்ந்து மகாதீப ஆராதனைகள் காட்டப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும்  பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த புத்தாண்டு முதல் தங்களது வாழ்வு சிறக்க வேண்டும் என வேண்டி நவகிரக நாயகியான மாரியம்மனை  வழிபட்டு சென்றனர். இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
ஈரோட்டில் நள்ளிரவில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்: வண்ண பலூன்களை பறக்க விட்டு 2025ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

ஈரோட்டில் நள்ளிரவில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்: வண்ண பலூன்களை பறக்க விட்டு 2025ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் ஒன்று கூடி வண்ண வண்ண பலூன்களை பறக்க விட்டு, ஒருவரை ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள்.
புத்தாண்டையொட்டி, ஈரோடு பிரப் நினைவு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில், சிறப்பு ஆராதனை உட்பட வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது, இங்கு 2025 ஆண்டு பிறப்பதைக் குறிக்கும் வகையில் வண்ண மின் விளக்குகளால் ஆண்டு ஒளிரச் செய்யப்பட்டது.
இதைக் காண இளைஞா்கள், இளம்பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பன்னீா்செல்வம் பூங்காவில் கூடி வண்ண வண்ண பலூன்களை பறக்க விட்டு, ஒருவரை ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தாண்டையொட்டி, ஈரோடு பிரப் நினைவு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில், சிறப்பு ஆராதனை உட்பட வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது, இங்கு 2025 ஆண்டு பிறப்பதைக் குறிக்கும் வகையில் வண்ண மின் விளக்குகளால் ஆண்டு ஒளிரச் செய்யப்பட்டது. 
மிக சரியாக நள்ளிரவு 12 மணிக்கு 2024 என்பது மறைந்து 2025 என்று ஆலய கோபுர திரையில் விளக்குகள் ஒளிா்ந்தன. இதைக் காண இளைஞா்கள், இளம்பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பன்னீா்செல்வம் பூங்காவில் கூடி, பொதுமக்கள் கொண்டு வந்த வண்ண வண்ண பலூன்களை பறக்க விட்டு மிகுந்த உற்சாகத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
புத்தாண்டு பிறந்ததும் இளைஞா்கள், இளம்பெண்கள் உற்சாகக் குரல் எழுப்பி, கேக்குகள் வெட்டி கொண்டாடினா். பட்டாசு, வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. நகரில் பல பகுதிகளிலும் இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் ஊா்வலமாகச் சென்று புத்தாண்டு வாழ்த்துகளைப் பொதுமக்களுக்கு கூறி மகிழ்ந்தனா். ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜவகர் தலைமையில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று இரவு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் இரவு 11.30 மணிக்கு புத்தாண்டு ஆராதனை தொடங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பு கொண்டாட்டம், நன்றி திருப்பலி (பூஜை) நடைபெற்றது. சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயத்தில் 11 நன்றி பிராா்த்தனை நடைபெற தொடங்கியது. தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.
ரயில்வே காலனி திரு இருதய ஆண்டவா் ஆலயம், பன்னீா்செல்வம் பூங்கா தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை உயிா்த்தெழுந்த நாதா் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு பிராா்த்தனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், ஈரோட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.