சனி, 15 பிப்ரவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, வரும் 24ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைக்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 22 இடங்களிலும், தனிநபர் மூலம் நேரடியாக 14 இடங்களிலும் என மொத்தம் 36 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் துவக்கி வைக்கப்படவுள்ளது.

முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் மற்றும் டி.பார்ம் படித்தவர்கள் நேரடியாகவும் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தொழில் முனைவோர்களாக நேரடியாக முதல்வர் மருந்தகம் அமைப்பவர்களுக்கு மானியமாக தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் இரண்டு தவனணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்க உள்ளது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், புன்செய்புளியம்பட்டி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, காஞ்சிகோவில், நசியனூர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட 36 இடங்களில் துவக்கி வைக்கப்படவுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படவுள்ள நசியனூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும், முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.15) நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பவானி நகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பவானி நகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, பவானி நகராட்சி வார்டு எண் 25 கல் தொழிலாளர் வீதியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அம்ரூத் திட்டத்தின் கீழ் செயல்படும் இத்தொட்டியிலிருந்து சுமார் 821 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு நாள்தோறும் குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு, கடை கோடி வீடு வரை குடிநீர் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அனைத்து வீடுகளுக்கும் சரிவிகிதமாக குடிநீர் சென்றடைய குழாய் கட்டமைப்பினை உறுதி செய்திட வேண்டும். தேவைப்படும் இடங்களில் வால்வுகள் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையினை ஆய்வு செய்து ஒவ்வொரு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் நிலை மற்றும் விவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பவானி நகராட்சி ஆணையாளர் மோகன் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் புதிய அறக்கட்டளை துவக்கம். ஏழை எளியவர்களுக்கு உதவும் நோக்கில் துவங்கியுள்ளதாக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தகவல்.

திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் புதிய அறக்கட்டளை துவக்கம். ஏழை எளியவர்களுக்கு உதவும் நோக்கில் துவங்கியுள்ளதாக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தகவல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் புதிய அறக்கட்டளை துவக்கம். ஏழை எளியவர்களுக்கு உதவும் நோக்கில் துவங்கியுள்ளதாக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தகவல். 

சேலம்  பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் தெய்வலிங்கம். இவர் 9-வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினராகவும், இலவச அமரர் ஊர்தி சேவை உள்ளிட்ட ஏராளமான நற்பணிகளை செய்து வருகின்றார். பன்முகம் கொண்ட இவரது பொதுநல சேவைக்கு முத்தாய்ப்பாக அறக்கட்டளை ஒன்றையும் துவக்கி உள்ளார். தெய்வா என்ற பெயரில் புதிய அறக்கட்டளை துவக்கி உள்ள மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம்,  இரண்டாம் நாள் நிகழ்வாக, பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் அருகே ஏழை எளியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் அக்ஷயா டிரைவிங் பள்ளி உரிமையாளர் நந்தகுமார் அவர்களது திருமணநாளை முன்னிட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறக்கட்டளையின் நிறுவனரும் வழக்கறிஞரும் மற்றும் மாமன்ற உறுப்பினருமான தெய்வலிங்கம் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் வழக்கறிஞர் மற்றும் மாமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, ஆதரவற்ற சடலங்களை மீட்டு நல்லடக்கம் செய்து வருவதோடு, தன்னலம் பாராமல் பொது நலனுக்காக பல்வேறு சேவையில் செய்து வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக தெய்வா என்ற பெயரில் புதிய அறக்கட்டளை தொடங்கியுள்ளதாகவும் இதன் மூலமாக தடையில்லாமல் ஏழை எளிய நலிவடைந்த மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எல்லா வகையிலும் உதவும் வகையில் இந்த சேவையை தொடங்கியுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் தெய்வலிங்கம் உட்பட குடும்பத்தார் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சித்தோடு: விவசாயிகளுக்கான மானிய விலை யூரியா தனியார் குடோனில் பதுக்கி கடத்தல்: 90 டன் பறிமுதல்

சித்தோடு: விவசாயிகளுக்கான மானிய விலை யூரியா தனியார் குடோனில் பதுக்கி கடத்தல்: 90 டன் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள பேரோடு பி.மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ஈரோடு நுகர்பொருள் வாணிப கழகம் அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் நுகர்பொருள் வாணிப கழக ஆய்வாளர் சுபா மற்றும் வேளாண்மை மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அந்த குடோனில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், வெள்ளை சாக்குகளில் யூரியா 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக தயார் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த யூரியாவை பிரித்து அதிகாரிகள் சோதனை செய்ததில், அது விவசாயிகளுக்கு அரசு வழங்கிய யூரியா என்று தெரிந்தது.

மேலும், வெள்ளை சாக்குகளுக்கு மாற்றி வைத்து இருந்த யூரியா, கேரளாவுக்கு கடத்த முயன்றும் தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அங்கு பதுக்கி வைத்திருந்த 90 டன் யூரியாவை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து, குடோனின் உரிமையாளர் யார்?, யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்தது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது தனியார் ஒருவர் யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது சித்தோடு போலீசில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 
குத்துச்சண்டை போட்டியில் சாதனை.சேலம் மாணவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் பாராட்டு.

குத்துச்சண்டை போட்டியில் சாதனை.சேலம் மாணவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் பாராட்டு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

குத்துச்சண்டை போட்டியில் சாதனை.சேலம் மாணவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் பாராட்டு. 

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 3000க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி பல்வேறு எடை பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டியில் சேலம் குத்துச்சண்டை கிளப் வீரர் சேர்வராயன் வெள்ளி பதக்கம் வென்றார். இதே போல லோக ரட்சக சித்தார்த்தன் வெண்கல பதக்கமும் பெற்றனர். இதே போல பெண்கள் பிரிவில் ராஜராஜேஸ்வரியும், மது ஸ்ரீ என்ற வீராங்கனையும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த சாதனை மாநகர்கள் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளர் ஆனந்தகண்ணன் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் சாமிதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சாமானிய மக்களுக்கு எதிராக செயல்படும் மாஃபியாக்களை இரும்பு கரம் கொண்டு கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வருக்கு மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசை தம்பி  சேலத்தில் வலியுறுத்தல்.

சாமானிய மக்களுக்கு எதிராக செயல்படும் மாஃபியாக்களை இரும்பு கரம் கொண்டு கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வருக்கு மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசை தம்பி சேலத்தில் வலியுறுத்தல்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சாமானிய மக்களுக்கு எதிராக செயல்படும் மாஃபியாக்களை இரும்பு கரம் கொண்டு கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வருக்கு மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசை தம்பி  சேலத்தில் வலியுறுத்தல். 

சாமானிய மக்கள் வாழ முடியாத இடமாக சேலத்தை சிதைத்துள்ள மாஃபியாக்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் தேசம் கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் தேசம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அடைக்கலம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய் பீம் கிருஷ்ணன் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட அமைப்பாளர் கலைவாணன் வரவேற்புரையும், சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் வீராணம் அம்பேத் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஊனத்தூர் துரை ஆகியோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசை தம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். சேலம் மாவட்டம் உட்பட தமிழக முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுத்து அதை கள்ளத்தனமாக பாலிஷ் செய்யும் ஆலைகளை சீல் வைத்து இழுத்து மூடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல் உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், நீர் வழிகளை நஞ்சாகும் சேகோ ஆலைகள் மற்றும் சாயப்பட்டறைகளை கண்டுபிடித்து அவைகளை சீல் வைத்து இழுத்து மூடவும் அதன் உரிமையாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற மக்கள் தேசம் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு சேலம் மாநகர காவல் துறை உதவி ஆணையர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததும், ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் அவர்களை கைது செய்யும் முனைப்போடு காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மாபியாக்களை கண்டித்து சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு தங்களை அடக்க முற்பட்டதை போல, அரசு அதிகாரிகளின் ஒப்புதலோடு தமிழகத்தில் வளம் வந்து கொண்டிருக்கும் இது போன்ற மாபியாக்களை தமிழக அரசு இரும்பு கடன் கொண்டு கைது செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அளவில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசை தம்பி எச்சரிக்கை விடுத்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் சுலைமான் உட்பட மாநில மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 13 பிப்ரவரி, 2025

ஈரோடு: பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம்

ஈரோடு: பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. வழக்கமாக அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்படும் பேனரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்கள். இடம்பெறும். மேலும் இந்த பேனரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் பெரிதாகவும், அதற்கடுத்து உள்ளூர் தலைவர்களின் படங்கள் சிறியதாகவும் இருக்கும்.

இந்த நிலையில், அத்தாணி அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்ட பேனரில் வலது புறத்தில் ஜெயலலிதாவின் முழு உருவப்படமும், சிறியதாக இரட்டை இலை சின்னமும், இடது புறத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவப்படமும், சிறியதாக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் உருவப்படமும், நடுவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக செங்கோட்டையனின் புகைப்படமும் இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.