சனி, 15 பிப்ரவரி, 2025

சேலத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணராவர்தன நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மற்றும் பெருஞ்சாந்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணராவர்தன நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மற்றும் பெருஞ்சாந்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணராவர்தன நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மற்றும் பெருஞ்சாந்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலம் கிச்சிபாளையம் சன்னியாசி குண்டு ராமசாமி நகர் பகுதியில் சுமார் 50 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலினை திருப்பணி செய்து புதிய வர்ணங்கள் டிடி சாலகோபுரம் விமானங்கள் அமைத்து, புதிய கடவுள்களை பிரதிஷ்டை செய்து ஆலயம்  நிறைந்த வண்ணமாய் நிறைவு பெற்று ஆடைய கும்பாபிஷேகமானது இன்று அஸ்தம் நட்சத்திரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த எட்டாம் தேதி முகூர்த்தக்கால் முளைப்பாளிகை இடுதல் கங்கணம் கட்டுதல் ஆகியவற்றுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து நாள்தோறும் மகா கணபதி ஹோமம்,  பூர்ணாஹீதி, தீர்த்தக் கூட ஊர்வலம், வாஸ்து சாந்தி, சயனாதி வாசம், உள்ளிட்டவைகளுடன் ஆகவே விதிமுறைப்படி அமைக்கப்பட்ட யாகசாலையில் முதல் கால மகா பூர்ணாஹீதி உபசாரம்,  அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதனை எடுத்து விழாவில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழாவானது இன்று காலை நடைபெற்றது.  முன்னதாக யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றதை அடுத்து விமான கும்பாபிஷேகம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ ஐயப்பன் ஆகியோருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் உட்பட கிச்சிபாளையம் சன்னியாசி குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். 
தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரங்கள் மேல் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
கும்பாபிஷேக விழாவினை தொடங்கி மண்டல பூஜை தொடர்ச்சியாக நடைபெற உள்ளதாக திருக்கோவிலின் தர்மகத்தா பூபதி தெரிவித்தார். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் நிர்வாகிகள் முருகேசன் கணேசன் ரவி லட்சுமி மணிமேகலை சசிகலா வினோதினி பிரியா மைதிலி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் லஞ்சம் லாவண்யமற்று பணியாற்றும் வணிக பிரிவு ஆய்வாளர். லஞ்சத்தில் திழைக்கும் அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொறியாளர். நேர்மையாக பணியாற்றும் நபரை பணி நீக்கம் செய்ய துடிக்கும் அலங்கோலம்.

சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் லஞ்சம் லாவண்யமற்று பணியாற்றும் வணிக பிரிவு ஆய்வாளர். லஞ்சத்தில் திழைக்கும் அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொறியாளர். நேர்மையாக பணியாற்றும் நபரை பணி நீக்கம் செய்ய துடிக்கும் அலங்கோலம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் லஞ்சம் லாவண்யமற்று பணியாற்றும் வணிக பிரிவு ஆய்வாளர். லஞ்சத்தில் திழைக்கும் அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொறியாளர். நேர்மையாக பணியாற்றும் நபரை பணி நீக்கம் செய்ய துடிக்கும் அலங்கோலம். 

சேலத்தை அடுத்துள்ள  நிலவாரப்பட்டி பகுதியை சார்ந்தவர் ஜான்.டி.செல்வா. இவர் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் உதவி பொறியாளராக திருமதி சாந்தி என்பவரும் பணியாற்றி வருகிறார். ரமணா திரைப்படத்தில் வரும் ஒரு டயலாக். ஒவ்வொரு அரசு துறை அலுவலகத்திலும் லஞ்சம் வாங்காமல் ஒருவன் பணியாற்றி வருவான் என்பது. 
இந்த டயலாக்கை படம் பார்த்த எவரும் தற்பொழுது தமிழக அரசின் பணியாற்றிக் கொண்டிருக்கும் 56 துறைகளை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவரும் அந்த ஒரு வசனத்தை மட்டும் மறந்திருக்க மாட்டார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் தற்பொழுதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. 
இந்த அலுவலகத்தில் லஞ்சம் லாவண்யத்தில் திளைத்து வரும் உதவி பொறியாளர் போற்றுதலுக்குரிய திருமதி சாந்தி அவர்கள் அதே அலுவலகத்தில் பணியாற்றி வரும், லஞ்சமே பெறாமல் நீதி நேர்மை நியாயம் என்று தனது பணியை மேற்கொண்டு வரும் நிலவாறு பட்டி பகுதியை சேர்ந்த வணிக பிரிவு ஆய்வாளர் ஜான்.டி.செல்வா அவர்களின் பணி தகுதி என்ன என்பதை மறந்து ஒரு பணிக்கு அமர்த்திய பணியாளரைப் போல பீரோவை துடைப்பது மேஜையை தொலைக்க வைப்பது, அது மட்டுமல்லாமல் வாகன ஓட்டியாக பயன்படுத்துவது போன்ற சில்லறைத்தனமான பணிகளை அவரை மேற்கொள்ள வைத்து அழகு பார்த்ததோடு மட்டுமல்லாமல், இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட தன்னிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்கள் அதே அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மத்தியில் அவரை அவமானப்படுத்தும் அளவிற்கு தற்பொழுதும் பெண் உதவி பொறியாளரின் கொடுமை அந்த அலுவலகத்தில் நீடித்து வருகிறது என்பது மட்டுமே உண்மை. இதன் முத்தாய்ப்பாக, தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு என்று அவர் சம்பந்தப்பட்ட பெண் உதவி பொறியாளர் அவர்களிடம் விடுமுறை கடிதம் அளித்த போது அவர் அந்த கடிதத்தை உதாசீனப்படுத்தி அங்கு பாருங்கள் இங்கு பாருங்கள் என்னால் தங்களுக்கு விடுமுறை அளிக்க முடியாது என்று கூறி அந்த கடிதத்தை முகத்தில் விட்டெறிந்ததாகவும் கூறப்படுகிறது. 
அவமானம் தாங்க முடியாத சம்பந்தப்பட்ட மின்வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ஜான் செல்வா செய்வதறியாது, தனது மனைவியின் மருத்துவ விடுமுறையை முடித்து தொடர்ந்து பணியாற்ற அலுவலகம் வந்த போது சம்பந்தப்பட்ட பெண் உதவி பொறியாளர் போற்றுதலுக்கும் மாண்புமி பொருந்திய திருமதி சாந்தி அவர்கள் அவரது விடுமுறையை ஏற்காமல் தற்பொழுது வரை இன்றைய நாள் வரை அவரை பணியில் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த இரண்டு மாத காலங்களாக மாத ஊதியம் இல்லாமல் அவரது குடும்பம் மிகுந்த மன உளைச்சலிலும் சாப்பாட்டிற்கு வழி இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பனமரத்துப்பட்டி இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு வந்த வணிக பிரிவு ஆய்வாளர் ஜான் செல்வா அவர்களிடம் நாம் பேசியபோது இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்க மறுக்கும் ஒரே நபர் நான்தான் என்று ஒரே காரணத்தை காட்டி இங்கு இந்த அலுவலகத்தில் லஞ்சத்தில் மட்டுமே திளைக்கும் இந்த மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி என்பவர் எனது பணியில் தகுதி என்ன என்று தெரிந்திருந்தும் கீழ்மட்டப் பணிகளை என்னை மேற்கொள்ள செய்ததோடு மீண்டும் என்னை பணியில் சேர்க்காமல் என்னை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டினார் ஜான் செல்வா அவர்கள். 
இது குறித்து பல அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் லஞ்சம் வாங்காத ஒரே காரணத்திற்காக என்னை பழிவாங்க துடிக்கும் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு மீண்டும் பணியை மறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நம்மிடையே அவர் கோரிக்கை வைத்தார். அதுமட்டுமல்லாமல் ஏதோ ஒரு அமைச்சரின் உதவியோடு அவர் அத்துணை அதிகாரிகளையும் தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாமல் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையே சம்பந்தப்பட்ட பெண் உதவி செயற்பொறியாளர் பணமரத்துப்பட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மறுக்கிறார்கள் என்று அவரது உச்ச வேதனையையும் பதிவிட்டார் நம்மிடையே. 
லஞ்ச லாவண்யா மற்ற அரசு இன்று கூறும் தமிழக அரசு அரசு துறை அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் பெற்றாலோ அத்துமீறி நடந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை துறை ரீதியாக எடுக்கப்படும் என்று பெயருக்கு அறிவிப்பு வெளியிடும் தமிழக அரசு சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரியத்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவி பொறியாளர் சாந்தி என்பவர் மீது நடவடிக்கை எடுக்குமா. பாதிக்கப்பட்டவர் உட்பட அந்த மின்வாரிய அலுவலகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக அணுகும் பொது மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
சேலம் 44-வது கோட்டத்திற்கு உட்பட்ட எருமபாளையம் குப்பைமேடு சுற்றுலா மையத்தில் தொலைநோக்கி அமைக்க சோதனை முயற்சி.

சேலம் 44-வது கோட்டத்திற்கு உட்பட்ட எருமபாளையம் குப்பைமேடு சுற்றுலா மையத்தில் தொலைநோக்கி அமைக்க சோதனை முயற்சி.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் 44-வது கோட்டத்திற்கு உட்பட்ட எருமபாளையம் குப்பைமேடு சுற்றுலா மையத்தில் தொலைநோக்கி அமைக்க சோதனை முயற்சி. 

60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியின் 44 வது கோட்டத்திற்கு உட்பட்டது எருமாபாளையம் குப்பை கிடங்கு. ஒரு காலத்தில் மாநகரில் 60 கோட்டங்களிலும் சேகரிக்கும் குப்பைகளை இங்கு சேகரித்து வைப்பது வழக்கமாக இருந்தது. இந்த குப்பை கிடங்கால் வெயில் மட்டும் மழை காலங்களில் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை போக்க சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டல நிர்வாகத்தின் சார்பில் சுமார் 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பூங்காவாக மாற்றி 100 சதவீத பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இந்த நிலையில், சேலம் மாநகராட்சியின் 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவரம்பன் ஏற்பாட்டின் பேரில்,  இந்த சுற்றுலா மையத்தில் நிரந்தரமாக  தொலைநோக்கி அமைத்து சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏதுவாக சோதனை முயற்சி எருமாபாளையம் குப்பைமேடு சுற்றுலா மையத்தின் மேல் பகுதியில் நடைபெற்றது. 
சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலக உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சோதனையின் முயற்சியின் போது பிரபல தொலைநோக்கி நிபுணர் கலந்துகொண்டு தொலைநோக்கினை அமைத்து சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ முயற்சி செய்தார். இந்த முயற்சியில் முழுமையான வெற்றியும் கிடைத்தது. சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில் ஏழு கோள்களை கண்டு சுற்றுலா பயணிகள் இன்புற்றனர் என்பது நிதர்சனம். 
இதுகுறித்து சேலம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவர்மன் கூறுகையில், ஒரு காலத்தில் குப்பை மேடாக இருந்த இந்த பகுதியினை சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா மையமாக மாற்றி அமைக்கப்பட்டு தொலைநோக்கி அமைத்து சூரிய குடும்ப கோள்களை சுற்றுலா பயணிகள் காண சோதனை முயற்சி நடத்தப்பட்டுள்ளதாகவும். இந்த முயற்சி வெற்றி அடைந்தவுடன் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியோடு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தரமாக இங்கு தொலைநோக்கி அமைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த சோதனையை முயற்சியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கண்டு களித்ததோடு, நாங்கள் தொலைக்காட்சியில் மட்டுமே ஒரு குறிப்பிட்ட சேனலில் இதுபோன்ற சூரிய குடும்ப கோள்களையும் வானில் உள்ள நிலவு உள்ளிட்ட அரிய வகைகளை கோள்களை பார்த்து மகிழுந்ததாகவும் தற்பொழுது இந்த சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கியின் உதவியுடன் ஏழு கோள்களை நேரடியாக பார்த்தது பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் திருமதி. பொன்னேஸ்வரி இமயவர்மன் மகிழ்ச்சி தெரிவித்தார். 
இந்த நிகழ்ச்சியில் சேலம் அம்மாபேட்டை மண்டல அதிகாரிகள் தொலைநோக்கி நிபுணர்கள் சுற்றுலா பயணிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
புதிய அறக்கட்டளையை துவக்கிய திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம். ஏழை எளியவர்களுக்கு தொடர்ச்சியாக காலை சிற்றுண்டி விநியோகித்து மகிழ்ச்சி...

புதிய அறக்கட்டளையை துவக்கிய திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம். ஏழை எளியவர்களுக்கு தொடர்ச்சியாக காலை சிற்றுண்டி விநியோகித்து மகிழ்ச்சி...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

புதிய அறக்கட்டளையை துவக்கிய திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம். ஏழை எளியவர்களுக்கு தொடர்ச்சியாக காலை சிற்றுண்டி விநியோகித்து மகிழ்ச்சி...

சேலம்  பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் தெய்வலிங்கம். இவர் 9-வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினராகவும், இலவச அமரர் ஊர்தி சேவை உள்ளிட்ட ஏராளமான நற்பணிகளை செய்து வருகின்றார். பன்முகம் கொண்ட இவரது பொதுநல சேவைக்கு முத்தாய்ப்பாக அறக்கட்டளை ஒன்றையும் துவக்கி உள்ளார். தெய்வா என்ற பெயரில் புதிய அறக்கட்டளை துவக்கி உள்ள மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம்,  3-ம் நாள் நிகழ்வாக, பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் அருகே ஏழை எளியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருஞானம் அவர்களின் பங்களிப்பின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறக்கட்டளையின் நிறுவனரும் வழக்கறிஞரும் மற்றும் மாமன்ற உறுப்பினருமான தெய்வலிங்கம் தெரிவித்தார். இந்த காலை சிற்றுண்டி என்னை நீண்ட வரிசையில் காத்திருந்த ஏழை எளிய பொதுமக்கள் பெற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர். இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் தெய்வலிங்கம் உட்பட குடும்பத்தார் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பெருந்துறை பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது

பெருந்துறை பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பணிக்கம்பாளையம், மேட்டுக்கடை போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருந்து வருவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த, அன்சூர் ரகுமான் (வயது 33), அஜத்துல் ஜமான் (45), ரிடாய் மிடா (29), பேஜிட் (24), சுமான் (28), முகமது அல்மாமுன் (42), முனீர் (57), முகமது ஹவுலாடர் (43), அலமின் மோரோல் (23), முகமது மிஜானூர் ரகுமான் (46), இவருடைய மனைவி ஷானா காத்தூன் (38) ஆகிய 11 பேர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 11 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அனைவரும் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க அவர்கள் 11 பேரும் சென்னை புழல் சிறைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோட்டில் பிளஸ்-2 மாணவனுக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் கைது

ஈரோட்டில் பிளஸ்-2 மாணவனுக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் கைது

ஈரோடு கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 31). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அலாவுதீன் தான் பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவனின் செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, தனிமையில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் புகார் தெரிவித்தனர்.

குழந்தைகள் நலக்குழுவினர் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவருக்கு ஆசிரியர் அலாவுதீன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அலாவுதீனை போலீசார் கைது செய்தனர்.
தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தால் இழப்பீட்டை மறுநாளே வழங்க வேண்டும்: ஈரோட்டில் எம்எல்ஏ ஈஸ்வரன் வலியுறுத்தல்

தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தால் இழப்பீட்டை மறுநாளே வழங்க வேண்டும்: ஈரோட்டில் எம்எல்ஏ ஈஸ்வரன் வலியுறுத்தல்

தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தால் அதற்கான இழப்பீட்டை மறுநாளே வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் எம்எல்ஏ ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.

ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடுகளை கடித்துக் கொள்வதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தால் அதற்கான இழப்பீட்டை, மறுநாளே மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். யாரையாவது திட்டி வாக்கு சேகரிக்க முடியும் என்ற கருத்தை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முறியடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அரசு சட்டங்களையும், தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும். தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ள விவகாரம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரியவரும்.

தேர்தல் வியூகர் நியமிக்கப்படுவது கட்சிக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமே தவிர, பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இருக்காது. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ அதிமுக மீது வைத்துள்ள விசுவாசம் என்பது யாருடனும் ஒப்பிட முடியாது.

கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது உள்கட்சி விவகாரம் என்பதால் அதில் வேறு எதுவும் கூற முடியாது. கள் இறக்க அனுமதி வேண்டி போராட்டம் நடத்தி 14 ஆயிரம் பேர் சிறை சென்றவர்கள் நாங்கள். கள்ளுக்கான தடையை நீக்கினால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.